சனி, 29 மே, 2021

ஔவையார் இயற்றிய மூதுரையில் தங்களுக்கு பிடித்த வெண்பா எது? ஏன்?

 ஔவையார் ஒரு அரசனின் சபைக்கு சென்ற பொது, அங்கு நிறையப் புலர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் தங்களின் பாண்டித்யத்தை பற்றி பெருமையாகப் பேசி தன்னை தானே புகழ்ந்து கொண்டிருந்தனர். ஔவையார் ஒன்றும் பேசவில்லை. அரசன் அவரை பார்த்து யார் இவர்களில் அதிகப் புலமை பெற்றவர் எனக் கேட்டபோது அவர் இப்படி பாடினார்

"வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது."

நீங்கள் தூக்கணாங்குருவி கட்டும் கூடு பார்த்திருக்கிறோமா?

கீழ்புறமாக வழி ஏற்படுத்தி கூடு மரத்தில் கட்டும். அந்தரத்தில் கட்டும் இந்த கூட்டில் கீழ்புறமாக வழி இருந்தால், அதன் குஞ்சுகள் விழுந்து விடாதா? அது தான் அது கூடு கட்டுவதின் அற்புதம்!! அது போன்ற திறமை நமக்கு உள்ளதா ? என்றுக் கேட்டார். புலவர்கள் எல்லோரும் புழு பூசியோடு தங்களை ஒப்பிடுவதா என எதிர் கேள்வி கேட்டபோது, ஆறறிவு பெற்ற மனிதனை விட குறைந்த அறிவு பெற்ற அந்த பறவையின் திறமை நமக்கு உள்ளதா எனக் கேட்டபோது. பாதி புலவர்கள் பதில் சொல்ல முடியாமல் உட்கார்ந்து விட்டனர்.

மற்றவர்களைப் பார்த்து ஔவையார், நாம் வீடு கட்டுவதற்கு உறுதியான மரத்தினால் பயன்படுத்துகிறோமே, அதில் ஓட்டைப் போட்டு தனக்கு இருப்பிடம் ஏற்படுத்திக் கொள்ளும் கரையானின் திறமை நமக்கு உள்ளதா ?

அதே போல தான் இருக்கும் இடத்திலேயே வலையை ஏற்படுத்தி தனக்கு உணவான் பூசசிகளை தன இருப்பிடத்திற்கே வரவழைக்கிறதே அந்த சிலந்தி பூச்சியின் திறமையாவது நமக்கு உள்ளதா என்று கேட்டார் .

மீதி புலவர்களும் பதில் சொல்ல முடியாமல் அமர்ந்து விட்டனர்.

கடைசியாக ஔவையார் எல்லோரையும் பார்த்து, " எல்லாச் செயல்களையும் எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. எனவே நானே வல்லவன் என்று யாரும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடாது" என்றுக் கூறினார். அவர் பாடிய வெண்பா தான் இது

"வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது."

இந்த வெண்பா ஏன் எனக்குப் பிடித்தது , ஏன் இங்கு பதிவு செய்கிறேன் என்று் நான் காரணத்தைத தனியாகச் சொல்லத் தேவையில்லை என எண்ணுகிறேன். நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக