நம் வாழ்க்கையும் நவகோள்களின் இயக்கமும் பின்னிப்பினைந்தது .நம் வயது ஏற ஏற முதிர்ச்சி ஏற்படுவதும், நம் ஜென்ம ஜாதகத்தில் உள்ள கோள்களின் முதிர்ச்சியை பொறுத்ததே…
குரு 16ல், 21ல் சூரியன், 24ல் சூரியன், 25ல் சுக்கிரன், 28ல் செவ்வாய், 32ல் புதன், 36ல் சனி, 42ல் ராகு, 48ல் கேது முதிர்ச்சியடையும்.
இவ்வாறு வாழ்வில் மிக முக்கியமான இந்த காலகட்டங்களில், .இந்த கிரகங்களுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடக்கும்..நீங்கள் வேண்டுமானால் உங்களின் ஜாதகத்துடன் இதை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.. மிக சரியாக இருக்கும்
ஒரு கிரகம் முழுதாக முதிர்ச்சியடையாத நிலையில் இருக்கும் போது, அதன் முழு திறனையும் கொடுக்க முடியாது.
மனித வாழ்க்கையின் தலையாய நோக்கமே சந்ததி விருத்தி தானே..
.குரு பகவான் தான் ஒருவரின் இனப்பெருக்கம் மற்றும் குழந்தைகளைப் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்துகிறது, ஜென்ம ஜாதகத்தின் படி 16 வயதில் முதிர்ச்சி அடைகிறார் என்பதாலேயே, ஒரு பெண்ணின் 16 வது வயதில் தான், அவள் உடல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைகிறது.
பெண்கள் பூப்படையும் நிகழ்வை ஒரு மங்கல விழாவாக கொண்டாடுவதன் நோக்கமும் அதுவே.
இப்போதெல்லாம் வெகு சீக்கிரம் பூப்படைகிறார்கள் என்றாலும் உண்மையில் மருத்துவர்களும் 16 வயதிற்கு மேல் தான் பெண் அதற்கு முழு தகுதியடைகிறாள் என்கிறார்கள்.
அதனாலேயே பெண்ணின் திருமண வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டது.
இப்போது இன்னமும் சற்று மேலேறி, திருமண வயதை 21க்கு உயர்த்த அரசு பரிசீலிக்கிறது.
குழந்தை பெறும் அளவிற்கு முதிர்ச்சி அடைந்தாலும், பெருவாரியாக, அவள் உடல், குழந்தை பேற்றை தாங்க முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளது என்பதால்..
அதே போல குரு" தான், ஒருவரின் நம்பிக்கை அமைப்பையும் ஆளுகிறது. 15-16 வயதிற்குள், ஒருவர் தன்னுடைய மிகவும் நீடித்த நம்பிக்கை அமைப்பை உருவாக்குகிறார் -
என் நண்பனை போல யாரும் உண்டா? என்பது இப்போது தான்!!
அப்போது தான், யதார்த்தத்தைப் பற்றிய தனது சொந்த புரிதலையும் அர்த்தத்தையும் கொண்டிருக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர் ஆகிறார் - இது , வாழ்க்கையைப் பற்றிய அவரின் கண்ணோட்டத்திற்கும் சுயமாக உண்மையைக் கண்டறிவதற்குமண மிக முக்கியமான காலகட்டம்.
அப்பா சொல்வதெல்லாம் தப்பாக தெரிவது அதனால் தான்!!
சூரியன்..பிரபஞ்சத்தின் தலைவன்.முதன்மையானவன். எனவே, ஜாதகத்தில் உள்ள சூரியன் எண் ஒன்றின் ஆற்றலைக் கொண்டுள்ளது - அதனால் தான் பெரும்பாலான கலாச்சாரங்கள், 21 வயதை ஒருவர் முழுமையாக சுதந்திரமாக மாறும் பருவமாக கருதுகின்றனர். இந்த வயதில் இருந்து, ஒருவன்…,சூரியனின் ஆளுமையில் உள்ள …தன.க்கென ஒரு நற்பெயரை உருவாக்க, உலகில் ஒரு அடையாளத்தை உருவாக்க, தன் படைப்பு நுண்ணறிவை வெளிப்படுத்த முடியும் -
இந்த வயதில் தான் அவன் சுதந்திரமாக தன் தொழில் தேர்வு செய்வது, தன் திறமைகள் குறித்து அறிந்து அதில் பிழை மாற்றங்கள் செய்வது நிகழ்கின்றன.
அதனாலேயே அவன் ஒரு குடும்பத்தை நிர்வகிக்க தகுதியானவன் என்று அவன் திருமண வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டது!!
அடுத்து வரும் சந்திரன் 24 வயதில் முதிர்ச்சியடைகிறார் - இந்த வயதில் தான் ஒருவன் உணர்ச்சி முதிர்ச்சியையும், உணர்ச்சி நுண்ணறிவின் முழுமையான அளவையும் பெறுவது.
உடலும், மனமும் தயாராகி விட்டன.அடுத்து வரவேண்டியது சுக்கிரன் தானே.!!இவர் 24 ஆம் ஆண்டு முதல் 25 ஆம் ஆண்டு வரை முதிர்ச்சி அடைகிறார், அந்த நேரத்தில் தான் ஒருவரின் ஜன்ம சுக்கிரனின் வலிமையைப் பொறுத்து முக்கியமான உறவு வளர்ச்சிகள் நிகழ்கின்றன -
காதலில் விழுவது இப்போது தான்!!
சுக்கிரன் நன்றாக இருந்தால் - அவன் தன் வாழ்வின் முக்கிய துணையை சந்திக்கலாம் அல்லது ஒரு பெரிய உறவு பாடம் பெறலாம்!!நேருக்கு நேரான உறவைப் பெறுவதற்கு நாம் முதிர்ச்சியடையும் தருணம் இது தான்.
அடுத்து வேகம் வீரியம் கொண்ட செவ்வாய் 27 ஆம் ஆண்டு முதல் 28 ஆம் ஆண்டு வரை முதிர்ச்சி அடைகிறார் -
அதுவரை அவன் தன் விருப்பத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் இயக்குவது என்று தெரியாமலும், அதை தெரிந்துக் கொள்ளும் அவ்வளவு ஆர்வமுள்ளவனாகவும் இருக்க மாட்டான்.,
அதனால் தான் அப்போது, ஒரு தலைக் காதல கொண்டு அதன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளாமல் பொங்கி எழும் சம்பவம் நடக்கும்!!
ஜாதகத்தில் செவ்வாய் பாவத்தன்மையுடன் அதாவது சுபத்துவமில்லாமல் சூட்சும வலுவின்றி இருந்தால், மோசமான விபத்து, மன அழுத்தம் அல்லது வாழ்க்கையில் திடீர் தலைகீழ் மாற்றங்களுக்கு உள்ளாகலாம் -
செவ்வாய் தனது தீவிரத்தை வெளிப்படுத்தும் சரியாக 27 முதல் 28-வயது காலக்கட்டங்களில் தான் பல இளைஞர்கள் தங்கள் உணர்ச்சி கொந்தளிப்பை அடக்கும் வழி தெரியாமல் விபரீத செயல்கள், துணிச்சலான நடத்தைகள் புரிந்து, விபரீத செயல்கள், துணிச்சலான நடத்தைகள் புரிந்து, விபத்து, இறப்புக்கு ஆளாகிறார்கள்.
ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவமான, சூட்சம வலுவுடன் உள்ளவர்கள், அந்த வயதிலேயே சில முக்கியமான முயற்சிகளைச் செய்து, தங்கள் விருப்பத்தை பெரிதாக செயல்படுத்துவார்கள்.
உணர்ச்சிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது புத்தி தெளிய வேண்டுமே?
அதை தரும் புதன் கிரகம், 31 வயது முதல் 32 வயது வரைக்குள் முதிர்ச்சி அடைகிறார் - இந்த சமயத்தில் தான், அவன் புதிய திறன்களைப் பெறுவது, நிர்வகிக்கும் திறனை மேம்படுத்துதல், ஒழுங்கமைத்தல்,திட்டமிடல், நிர்வாகம், தொடர்பு, சந்தை, எழுதுதல், பேசும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. நடக்கும்.
புதன் சகோதர காரகன் இல்லையா? உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுடனான சில முக்கியமான மாற்றங்கள் அந்த நேரத்தில் தான் பொதுவாக நடக்கும். சரியாக இந்த வயதில் தான் நிறைய பேர் தமது வணிகத்தை தொடங்குவார்கள்.
கடைசியாக வருவார் சனி அவர் தான் மெதுவான கிரகம் ஆச்சே!
இவர் 35 ஆம் ஆண்டு முதல் 36 ஆம் ஆண்டு வரை முதிர்ச்சி அடைகிறார். இந்த வயதில் தான் பொதுவாக சில முக்கியமான சனி படிப்பினைகள் நமக்கு வரும் சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, துன்பங்களை சமாளிப்பது, கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொள்வது, சில கர்ம கடனை அடைப்பது, சில கடினமான கர்மாக்களை முடிப்பது. .இந்த வயதில் தான் ஒருவர் சரியாக வயது முதிர்ந்தவராக மாறுகிறார், அதற்கு முன்வரை, ஒருவர் இளமையில் இருப்பார்.. ஜென்ம ஜாதகத்தில் சனியோடு இணைக்கப்பட்ட ஒருவரது வாழ்க்கையின் தடைப்பட்ட பகுதிகளைத் திறப்பது சனியின் முதிர்வு நேரம் தான்,
தடைபட்ட திருமணம் நடப்பது இப்போது தான்!
நிழல் கிரகங்கள் என்னும் இராகு கேதுக்கள் சூரிய சந்திரர்களையே விட்டு வைப்பதில்லை. நம்மை?
சந்திரனின் வடக்கு முனையில் உள்ளதாக சொல்லப்படும் இராகு, நம் வாழ்க்கையின் 41-42 வது ஆண்டில் முதிர்ச்சியடைகிறது. அந்த சமயத்தில் தான் , பொதுவாக இராகு இருக்கும் ஸ்தானத்தின் வாழ்க்கைப் பகுதியில், சில பெரிய திருப்பங்கள் நிகழும்.
வாழ்க்கையின் முதல் 41 வருடங்களில், இராகு இருக்கும் பாவத்தின் ஆதிபத்தியங்கள், பொதுவாக பெரிய ஏற்ற தாழ்வுகளோடு ரோலர் கோஸ்டர் சவாரியை போல இருக்கும்..இராகு மிகவும் உற்சாகமான, குழப்பமான ஒரு போகக்காரன் என்பதால், 41-42 க்கு முன் நம்மால் முழுமையாக அதை கட்டுப்படுத்த முடியாது,
. ஆனால் 42ல் இராகு முதிர்ச்சி அடைவதால் இராகுவின் சக்தியை நம்மால் கட்டுப்படுத்த முடியும்..
இராகு ஜென்ம ஜாதகத்தில், 7ம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் 41-42 ஆண்டுகளில், திருமண உறவில் மாற்றம், புதிய முக்கியமான உறவுகளில் ஆர்வம் தணிந்து, சிறந்த உறவுத் தேர்வுகளைச் செய்ய முடியும்.
இரண்டாம் திருமணம் வெற்றி பெறுவது அதனால் தான்!!
சிலருக்கு அந்த வயது வரும் போது, மூன்றாம் திருமணம் கூட ஆகிறது!
இராகு முதிர்ச்சியடைந்த அந்த வயதில் ஒரு முற்போக்கானவராகவும், வாழ்க்கையில் புதிய விருப்பங்களை கொண்டவராகவும் இருப்பார்.சுருக்கமாக, அவர் வாழ்க்கை தலை கீழ் திருப்பங்களை அதாவது 180 டிகிரி மாற்றம் கொண்டிருக்கும்..
அதன் எதிர் முனையான.. சந்திரனின் தெற்கு முனையில் உள்ள கேது - ஞானக்காரகன் இல்லையா? அது 47-48 வயதில் முதிர்ச்சியடைகிறது.
அப்போது, தான் கேது இருக்கும் பாவம் சமநிலையாகி வாழ்க்கையின் அந்த பகுதியின் சிறந்த வெளிப்பாடுகளைப் பெற முடியும். எப்படி பற்றற்று கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வது , நம் வாழ்வின் சில பகுதிகளில் அதாவது ..கேது இருக்கும் பாவத்தின் ஆதிபத்தியங்களின் எதிர்பார்ப்புகளை எப்படிக் கைவிடுவது என்பதைக் கற்றுக்கொள்கிறோம்.
பற்றை விடுத்து, நம்மிடம் இருக்கிறதா என்று கவலைப்படுவதை நிறுத்த, அப்போதுதான் நாம் அதைப் பெற முடியும்.
இந்த வழியில் மட்டுமே, வாழ்க்கையில் கேதுவின் தாக்கத்தை ஒருவர் வெளிப்படுத்த முடியும் -
சில இழப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்கப்படும் வயது இது, இருப்பினும் நாம் பற்றின்மையைக் கற்றுக்கொள்கிறோம். ஆன்மீகத்தையும் அதன் புரிதலையும் அதிகம் உணரும் தருணம் இது.
இப்படி ஒவ்வொரு கிரகமாக நம்மை செம்மைப்படுத்தி, இறைவனின் அடி சேர தயார்படுத்துகிறது..
என்னே அவன் கருணை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக