தன்னுடையதை தவிர யார் உடலின் மீதும் யாருக்கும் அதிகாரம் இல்லை. இது சட்டப்படி மட்டுமல்ல தர்மப்படியும் இதே நிலை தான்.
ஏனெனில் கணவன் மனைவி இருவர அல்ல, ஒன்றாக கலந்தவர்கள் அதாவது ஆணின் சரி பாதி என்கிறது சாஸ்த்திரம். அவனுக்கே அவன் உடலின் மீது அதிகாரம் இல்லை.. தன் உடல் தானே என்று "ஆத்ம ஹத்யா" எனப்படும் தற்கொலை செய்து கொள்வதை அது கண்டிக்கிறது..
அதனால் தான் இறைவனே ஆனாலும், இராமனுக்கு தனி கோவில் இல்லை!
சட்டப்படியும், ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில், தன் உடலின் மீது, ஏகபோக உரிமை உள்ளதா? என்றால் இல்லை. அவர் உயிருடன் இருக்க தேவையில்லை என் மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தால் தண்டணை உண்டு. " என் உடல் என் உரிமை " என்று கோஷம் இட முடியாது.
அதே போல, இரத்த தொடர்புள்ள பிள்ளைகளின் உடலின் மீதே ஒருவருக்கு உரிமையில்லை என்னும்போது,, திருமண உறவின் மூலம் வரும் சொந்தங்கள் உடலின் மீது? அது குறித்த பதிவு இதோ.
ஆனால், தன்னுடைய உடலின் மீது அதிகாரம் செலுத்தும் நிலையை அவர் இழக்கும் போது, அதாவது மனநிலை பாதிப்பு அடைந்தோ உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னோ, அவர் வாரிசுகளுக்கு முக்கியமாக மனைவிக்கு, அந்த உடலின் மீது எல்லா உரிமையும் உண்டு.
மனைவிக்கு கணவனின் உடலின் மீதான உரிமை அளவிற்கரியது..அவருடைய பெற்றோரை விட முன்னுரிமை கொண்டது.
ஆனால் அதிலும் வரையறை நிர்ணயிக்க முடியும். இறந்த பின் தன் உடலை என்ன செய்ய வேண்டும், யார் ஈமக்கிரியை செய்யவேண்டும் என்று வகுக்க அவருக்கு அதிகாரம் உண்டு.
அந்த சமயம் அவர் உணர்வுக்கு மதிப்பு அளித்து நடப்பவரும உண்டு. மிதிப்பவரும் உண்டு. ஏனெனில் கேள்வி கேட்க அவர் இல்லை.
அதே போல, பெண்ணுக்காவது அவள் உடலின் மீது முழு உரிமை உண்டா என்றால், அதுவும் கிடையாது.
வயிற்றில் குழந்தை முழு உரு கொண்டு 12 வாரம் வளர்ச்சி அடைந்த பின் அதை கலைக்கும் அதிகாரம் சுமக்கும் அந்த பெண்ணிற்கே இல்லை. ஏனைய நாடுகளில், கரு கலைக்கும் உரிமை பெண்ணுக்கு உள்ளபோது, இங்கு இன்னமும் அது மருத்துவரின் கையில் உள்ளது.
அப்படியானால், மனைவியின் உடல் மேல் கணவனுக்கும், கணவனின் உடல்மேல் மனைவிக்கும் உரிமையே இல்லையா என்றால்,
கணவன் மனைவி தாம்பத்யத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாவிடில் மறுக்கும் உரிமை மேலை நாட்டில் உண்டு.மீறி நடக்கும்போது, அதை "மாரிட்டல் ரேப்" என்று குற்றமாக பார்க்கும் தன்மை அங்கு உண்டு..ஆனால் இந்தியாவில் இன்னும் அப்படி சட்டமாக்கப்படவில்லை.. அதற்கு பதிலாக குடும்ப வன்முறை சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
முன்னர் பெண் பண்டமாற்று முறையில் தான் கையாளப்பட்டாள்.அதனால் தான் கன்னிகா "தானம்" என்ற ஒரு சடஙகு திருமணத்தில் இருந்தது. தன் பெண் மீது தனக்கிருக்கும் உரிமையை மாப்பிள்ளைக்கு விட்டுக்கொடுத்து "தாரைவார்த்து கொடுக்கும்" நிகழவு அதில் இருந்தது. அவளை பாதுகாக்கும் கடமை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கை மாறியது.
இன்று நிலை மாறிவிட்டது.
ஆனாலும் உடும்புப்பிடியாய் அந்த சடஙகை காரனேமேயில்லாமல் செய்து வருகிறார்கள்.அதுவும் 27, 28 வயதுடைய பெண், தன் தகப்பன் மடியில் அமர்ந்து??!!
கணவனுக்கும் மனைவிக்கும் உரிமையோடு சேர்ந்த கடமைகளும் உண்டு…
ஆனால் தாம்பதயம் என்பது உணர்வு ரீதியானது. நீதிமன்றம் கூட, அவர்களை சேர்ந்து வாழ உத்தரவிடமுடியுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது!
அப்படியானால் என்ன தான் செய்யலாம்?
கணவனுக்கு உண்டான கடமை என்று, வீட்டிற்கு தேவையான உப்பு, புளி, மிளகாய் வாங்கிக் கொடுப்பதோடு முடிந்து விட்டது என்றில்லாமல் அவளை உணர்வு ரீதியாக அணுக வேண்டும். அதற்கு சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்..!!💐
கால புருஷனின் கடைசி வீடான மீனம் தான் அவன் படுக்கையறை..சுக்கிரன் அங்கு உச்சம்..புத்தியை கொடுக்கும் புதன் அங்கு நீச்சம்..அறிவு பூர்வமாக யோசிக்கும் ஆண் அதை ஒதுக்கி வைத்தால் மட்டுமே இன்பம் காணமுடியும் என சூட்சமமாக உணர்த்தும் !!
உண்மை தான்..பெண்ணும் சுக்கிர கிரகத்தில் இருந்து வந்தவள் தான். ஆயிரம் உறவுகள் இருந்தும், நாள் முழுதும் அவர்களுடன் உறவாடி கலந்தாலும், அலுத்து சலித்து, உடல் சோர்வுற்று படுக்கையில் சாயும்போது, துணையிருப்பவள் மனைவி/கணவன். அலையின் வேகம் குறைந்தாலும், அது கரையோடு தான் தொடர்பில் இருக்கும்..!!
அங்கு காதல் முதலில் உள்ளே நுழைந்தால், பின்னாலேயே காமமும் வரும். கேளாமலேயே வாரி வழங்கும் அமுதசுரபி அவள்…நெருப்பு போல ஏரிந்துக் கொண்டிருக்கும் காமத்தீயை அணைக்கவல்ல ஆழிப்பேரலை !! நெருப்போடு வாழ்ந்தாலும் அன்பின் ஈரத்தால் வாழ்விப்பாள் அவள்..
இல்லறத்தில் இறங்கி குளித்த தடயம் பின்னாளில் வந்தாலும், ஒருவரிடம் மற்றவர் கொண்ட தேடல் முற்றுப்பெறாமல் இருப்பதே சுகம்!!
காமத்திலிருந்து தானே கடவுளையே கண்டறிய முடியும்!!
வாழ்க வளமுடன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக