வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 23...கன்னி லக்னம் பற்றி கூற முடியுமா?

 ஒருவருக்கு வேண்டிய மரியாதை, ஆளுமை, தொழில் போண்றவற்றை அருளும் சூரியன் நாளைய தினம், கன்னி இராசிக்குள் பிரவேசிக்கிறார். அசைவத்தை ஒரு பிடி புடிப்பவரை கூட அதை ஒதுக்கிவைக்க வேண்டிவரும் எல்லோருக்கும் பிடித்தமான(!!) புரட்டாசி மாதம் தொடங்குகிறது!!

மற்ற எல்லா இலக்கினங்களை விட கன்னி ரொம்ப ஸ்பெஷல் ஆனது .

எனக்கும் தான். என்னுடைய ஜாதகத்தில் புதன் பகவான் சுபத்துவமாக இருப்பதால் தான், கணிதத்தில் பட்டத்தை முதல் வகுப்பிலும், சட்டத்தின் சாராம்சம், அதில் உள்ள நெளிவு சுளிவுகள், வாதப் பிரதிவாதங்கள், நுணுக்கங்கள், சமயோசித புத்தி , இன்று ஜோதிடத்தில் ஓரளவு புரிந்துக் கொள்ளும் ஆற்றலை அந்த பரம்பொருள் அனுமதித்து உள்ளதற்கும் காரணமானவர் அல்லவா?!

மிதுனம் புத்திகாரகனின் ஞானம் தரும் இலக்கினம் என்றால் கன்னி அறிவை, முக்கியமாக ஜோதிட அறிவை தரும் இலக்கினம் ஆயிற்றே!!

  • இலக்கினாதிபதி ஆட்சி செய்யும் வீட்டில் உச்சம், மூலத்திரிகோணம் அடையும் ஒரே கிரகம் புதன் மட்டுமே..அந்த சிறப்பு பெற்றது கன்னி மட்டுமே!!

குருவின் பார்வை கிடைத்து, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது இதற்கு தன்!! ..அந்த புத்திகாரகனின் வீடான கணனியை இலக்கினம் /இராசியாக பெற்றவர் அதிர்ஷ்டம் பெற்றவர்கள்!!

இவர்களின் குணத்தை பார்த்துவிடலாம்.

  • எப்போதும் ஏதேனும் ஒன்றை தெரிந்துக் கொள்ளும் ஆர்வதிலேயே இருப்பார்கள்.அகல உழுவதில் ஆர்வம் கொண்டவர்கள்!!.என் பெண்ணை போல!!
  • .மூளையால், அறிவால், வாக்கால் உழைப்பவர்கள் ..அதனாலேயே பிறரை ஆளுகின்றனர்.. கற்பூர புத்தி என்பார்களே அது இவர்களுக்கு பொருந்தும். 
ஆனால் கேந்திர ஆதிபத்திய  தோஷம் இருந்தால் பலன் அப்படியே ரிவர்ஸ்!
  • புதன் அருள் பெற்றவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தான், தன் சுகம், தன் காரியம் என்பதில் குறியாக இருப்பார்கள்
  • தன் உணர்வை வெளிப்படையாக அவர்களாக உணர்த்தினால் தான் உண்டு..கல்லுனிமங்கன் இவர்கள் தான்!!.பாபத்தொடர்பு உள்ள புதன் ஜாதகத்தில் கொண்டவர்கள், பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்வார்கள். இடத்திற்கு தக்கவாறு, நேரத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள்.
  1. புத்திசாலியை தோற்கடிப்பது கடினம் ஆயிற்றே!! 
  • தனித்த புதன் தான் சுபர். அவரே 6, 8, 12 ஆம் அதிபதிகளின் சேர்க்கை, பார்வை, சாரம் பெற்று நீச்ச அம்சத்தில் இருக்கும்போது வாழ்க்கைப் பாதை மாறி விடும். எவ்வளவு பவித்திரமாக கோவில், சத்சங்கம் என்று இருந்தவர், இப்போது மது, மாது, சூது என்று மாறி விட்டார் என்பார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு நபர், பயங்கர புத்திசாலி.காலையில் விடிந்தும் விடியமலும், பூஜை, புனஸ்காரம் என்று பக்தி சிரத்தையாக இருப்பார்..மாலையில் அந்தி சாயும் நேரம், சந்தி சிரித்து விடும்..இவரை பார்த்து!

  • புதன் வலுவாக இருந்தால் எந்த துறையிலும் ஜொலிக்கச் செய்யும் ஆற்றலும் வெளிப்படும்.

இதோ இந்த விடையை படிக்கும் உங்களுக்கும் புதனின் அருள் இருந்தால் மட்டுமே அது முடியும்!!

ஆனாலும் புதனை இரண்டுங்கெட்டாம் கிரகம் என்பர்.ஏன்? மற்ற கிரகமெல்லாம் ஒன்று ஆண் கிரகம் என்றும் பெண் கிரகம் என்றும் சொல்லப்படும் போது, ?

"நவக்கிரகங்களின் இளவரசன்" எனப்படும் இவர், சேரும் கிரகத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வார்!

ஒருவருக்கு வாழ்க்கை அமைவது அவர் விதி, மதி, கதியை பொறுத்து என்பர்!

விதி என்பது இலக்கினம்.மதி என்றால் சந்திரன் நிற்கும் இடம்..கதி என்பது சூரியனின் நிலை.

புதனை லக்கினாதிபதியாக கொண்ட கன்னி இலக்கினக்காரருக்கு விதி பலமாக இருந்தும் இந்த மதி இருக்கிறதே அதில் தான் சிறு பிரச்சினை.

மனோகரகனான சந்திரனின் மகன் தான் புதன்.இவருக்கு அம்மாவை பிடிக்காது..ஆனால் அம்மாவுக்கோ இவர் மீது பிரியம் அதிகம்..ஒரு வித்தியாசமான உறவுமுறை.இதனால் சமயத்தில் மனமும் புத்தியும் வெவ்வேறு திசையில் செல்லும்போது, ஜாதகர் நிலை மேலே சொன்ன நபரை போன்று வித்யாசமான நடவடிக்கை இருக்கும்.

புத்தி வேலை செய்யடவேண்டுமாயின், மனது தெளிவாக இருக்கவேண்டும்…அதற்கு சந்திரனின் துணை வேண்டும்! மாதா அல்லவா செய்யாமல் இருப்பாரா? புதனின் வீடான மிதுனம் கன்னியில் இருக்கும் சந்திரன் பவுர்ணமியை நெருங்கும் நிலையில் இருக்கும்போது, ஜாதகரை அதிபுத்திசாலியாக்குவார்!!

ஆனால் புதனின் நட்சத்திரத்தின் சாரத்தில் சந்திரன் இருக்கும் போது, வேண்டிய பலனை செய்யாமல் புதன் தடுப்பார்..குரிப்பாக கேட்டை நட்சத்துரத்தில் அமரும் சந்திரன் விருச்சிகம் என்னும் நான்காம் வீட்டில் அமர்ந்து சுபத்துவமாக இருந்தும், தாய்க்கு பிள்ளையை பிடிக்காத, பிள்ளைக்கு தாயை பிடிக்காத நிலையை ஏற்படுத்துவார்!

கதியை ஏற்படுத்தும் சூரியனுடன் புதன் கொண்ட உறவும் வித்தியாசமானது…

புதனுக்கு சூரியனுக்கு அதி நெருக்கமான நண்பர்..ஆனால் சூரியனுக்கு அப்படியல்ல!!

அவருக்கு சந்திரனும், செவ்வாயும் மிக நெருக்கம்.!! செவ்வாய் பார்த்தாலே புதனுக்கு ஆகாது!!

அப்படிப்பட்ட சூரியன், கன்னி வீட்டில், வசதியாக இருப்பார்..ஆனால், அதுவே, அவர் உச்சமடையம் மேஷத்தில் நின்றாலோ, கன்னி இலக்கினத்தினரை படுத்திவிடுவார்!!

ஆனாலும் அவர் கன்னி இலக்கிணக்காரருக்கு 'அவயோகி' கிடையாது .அவர் அம்பயராக தான் இருப்பார்.

அம்பயரே இப்படியென்றால், அவயோகிகள் எனன செய்வார்களோ என்று எண்ணத் தோன்றுகிறதா? அவர் பாவத்துவமாக இருக்கும்போது தான் அப்படி!!

புதனுக்கு நட்பு என்றால் அவர் டீமின் தலைவர் சுக்கிரன் மற்றும் சனி. இவர்கள் தசையுடன் , புதன் தசை தொடர்ந்து வந்தால் கன்னி இலக்கினக்காரர்களுக்கு யோகம் தான்!!.

அவயோகர்கள் கல்லை தூக்கி தலையில் போட்டால், யோகர்கள், இலக்கினதாரரை தூக்கிவிடவே முயற்சி செய்வார்கள்!!

ஆனாலும், ஒன்று பார்த்தீர்களா.புதன் உச்சத்தில் இருக்கும் கன்னியில் சுக்கிரன் நீசசமாவதும், சுக்கிரன் உச்சத்தில் இருக்கும் மீனத்தில் புதன் நீசமாவதும், புத்தி இருக்கும் இடத்தில் கேளிக்கைக்கு இடமில்லை என்பதை!!

சமீபத்தில் நான் படித்த ஒரு மருத்துவர் சொன்ன ஆசிரியர் தின செய்தி!!

அந்த படிப்பு ஆற்றலை இயல்வாகவே பெற்றிருக்கும் கன்னி இலகிணக்காரர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக