திங்கள், 26 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி 03 ....காலம் என்பதை எப்படி புரிந்து கொள்வது?


காலம் ...

தன முன் நடந்ததை, நடந்துக கொண்டிருப்பதை, ஒரு சாட்சி பாவமாக மட்டும்  அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.  

 எண்ணிபபார்க்கவே இயலாத ஆச்சரியங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் பிரம்பஞ்சத்தின் ரகசியம் அறிந்தது...

முடிவேயில்லாத இந்த காலம மற்றும்  பிரபஞ்சத்திற்கும் அதே போன்ற முடிவேயில்லாத இந்த எண்களுக்கும் தான் எத்தனை பொருத்தம்.!! 

ஒன்றுக்குள் ஒன்று  பின்னிப் பிணைந்து இவைகள் ஆடும் கண்ணா மூச்சி தான் எத்தனை எத்தனை!!

இந்த காலத்தை மட்டுமா கணக்கிட்டனர் நம் ரிஷிகள்... கணிதத்தையும் தானே...

கணிதத்தின் மூலம்,  ஆரம்பம் எனப்படும் ' ௦' என்பதை மட்டும் இந்தியா கண்டுபிடிக்கவில்லை.   இந்த '௦ ' க்கும் தாண்டி -1, -2, -3  என்றும, அந்த பக்கம் 1, 2.,3 .... போய்க்கொண்டே இருந்து கடைசியில் இந்த எண்ணிலடங்காததை 'முடிவிலி' என்ற வார்த்தை கொண்டு விளக்கவில்லையா..?.

அதையே தானே இன்று வானவியளர்களும், இந்த பிரபஞ்சம் முடிவேயில்லாத பல கோடி பால் வெளிகளை கொண்டுள்ளது என்று சொல்லவில்லை?

இந்த முடிவேயில்லாதது தான் பிரம்மம் என்னும்  இறைவன் என்கின்றனர் வேத ரிஷிகள்.

ஈர்ப்பு சத்தியின் வீச்சைக் கொண்டு இந்த பிரபஞ்ஜத்தில்  கிரகங்கள்  ஆளுமை செய்வதை கணித்தவர்கள் அதை கொண்டே காலத்தை பிரித்தனர்.




அதன்படி ஹோரை எனப்படுவது இரண்டரை நாழிகை என்றும், (ஹோரை  என்பது 'Hour" என்பதை ஒத்து இல்லை? 

60 விகாடிகாக்கள் =.. 1 காட்டிகா 

 2 1/2 நாழிகை  =  1 மணி நேரம் = 1 நாழிகை -24  நிமிடம் என்றும் கணக்கிட்டனர்.   

இந்த ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒவ்வொரு கிரகம் தன ஆட்சியை செலுத்துவதையும் கணக்கிட்டு பகலும் இரவும் கொண்ட ஒரு நாளை இந்த மணித்துளிகள் கொண்டஇந்த ஹோரை  என்ற ஒவ்வொரு மணி நேரமாக  கணக்கிடப்பட்டு, ஈர்ப்பு சக்தியின் நாயகனான சூரியனின் பெயரிலேயே முதல் நாள் காயிற்று கிழமை ஆ னது.  

முன்னர் தான்பூமியை சுற்றி தான் அனைத்து கிரகங்களும் வலம் வருகின்றன என்று நினைத்தோம்..ஆனால் சூரியனை மையமாக வைத்து,    தான் அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன என்று பின்னர்     விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்..

ஆனாலும் ஜோதிடத்தில்சூரியன் தான் சுற்றி வருவதாக உள்ளது என்பதால் அதன் கணக்கு சரியில்லை என்பார்கள்ஆனால் உண்மை நிலையென்னவேகமாக ஓடும் வண்டியின்  உள்ளே உட்கார்ந்திருக்கும் நபருக்கு வெளியே காணும் காட்சிகள் எப்படியிருக்கும்?   தான் அமர்ந்திருக்கும்வண்டி தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று   அவருக்கு தெரியும்..ஆனால் அவர் காண்பது என்னவோவெளியில்   தெரியும் மரங்களும் கட்டிடங்களும்அனைத்துமே நகர்கிறது  போல..  அந்த அடிப்படையில் தான் இதையும் பார்க்கவேண்டும்..சூரியன் சுற்றுவதாக காட்டும் இடத்தில் பூமியை வைத்து பார்க்க வேண்டும் 


சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான உட்சுற்றுக் கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன் ஒருபுறமும். வெளிச் சுற்றுக் கிரகங்களான செவ்வாய், குரு, சனி ஒருபுறமும் அமைந்திருக்கும்  இருப்பை கவனியுங்கள்..  


பூமியை/சூரியநினை   சுற்றி வரும் கோள்களின் நேரத்தை கணக்கிட்டால்

சந்திரன் ...27 நாட்கள்

 புதன்= 88 நாட்கள்

சுக்கிரன் =225  நாட்கள்

பூமி =3\65 நாட்கள் 

செவ்வாய் 11/2 வருடங்கள்

வியாழன் 13 வருடங்கள்

சனி 30 வருடங்கள்.

இதை கொண்டு வரிசையாக ஒரு நாளின் நேரத்தை சுக்கிர ஹோரை, புதன் ஹோரை, சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசைப்படுத்தினால், மறுநாள் ஆதவன் உதிக்கும் போது சந்திர ஹோரை உதயமாவதைக் கண்டு அன்று திங்கட்கிழமை ஆனது. அதே போல கணக்கிட்டு வரும்போது காலை சூரிய உஷயதின்போது வரும் ஹோரை நண்பகல் ஒரு மணிக்கும் பின்னர் இரவு எட்டு மணிக்கும் நள்ளிரவு 3  மணிக்கும் வருவதை கண்டனர். 


அதேபோல திங்கட்கிழமை அன்று சூரியன் உதிக்கும்போது, சந்திர ஹோரை துவங்கியதால், இரண்டாம் நாள் திங்கட் கிழமையாகி,  சனி, குரு, செவ்வாய் ஹோரைகள் தொடர, மறு நாள் சூ ரிய உதயத்தின் போது செவ்வாய் ஹோரை ஆரம்பித்ததால் அது செவ்வாய்கிழமை ஆனது. இப்படியே புதன் வியாழன், வெள்ளி, சனிக்கிழமை என்று நம் வாரம அமைந்தது.

அதுபோலவே சனிக்கிழமையில் ஹோரை வரிசை துவங்கி மறு நாள் ஞாயிற்றுகிழமை சூரிய உதயத்தின்போது சூரிய ஹோரை என்று, ஒரு வளையம் போன்று ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து, காலம் என்றாகி, நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்ர அதிசயத்தை பார்த்தீர்களா?


அதே போல இந்த கிழமைகளின் வரிசையைப் பாருங்களேன்...., 

ஒன்று நமது பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் உள்ள  உட்சுற்றுக் கிரகத்தின் கிழமையாகவும் அடுத்தது  நமக்கும் சனிக்கும் நடுவிலான  வெளிசுற்றுக் கிரகத்தின் கிழமையாகயும் வரும். அதாவது, ஞாயிறை அடுத்த திங்களின் நாயகன் சந்திரன் நமக்கும் சூரியனுக்கும் நடுவே உள்ள உட்சுற்று கிரகம். அடுத்த செவ்வாய் நமக்கு அடுத்தபுறம் உள்ளது. புதன் நமக்கு உட்புறம் இருக்கும். குரு, செவ்வாய்க்கு அடுத்த வெளிப்புறக் கோள். அடுத்த சுக்கிரன் சூரியன் அருகில் உள்ள உள்சுற்று கிரகம். சனி வெகு தொலைவில் உள்ள வெளிச்சுற்று கிரகம்.

என்ன ஒரு கணிப்பு!!

இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் தங்கியிருக்கும் காலத்தையும் கணக்கிட்டனர் 

 சூரியன்  ..ஒரு மாதம்

 சந்திரன். ..2 ¼  நாட்கள் 

 செவ்வாய் …1 ½ மாதங்கள் 

 புதன்…. 1 மாதம் 

 குரு….1 வருடம் 

 சானி. …2 ½ ஆண்டுகள் 

 ராகு கேது …1 ஆண்டுகள் 


  

2.  நாம் இயற்கையை வழிபாடு செய்தவர்கள்..பஞ்சபூதங்களையும் கடவுளாக  நாம்.  சூரியன்வருணன் என்று விழா எடுத்துக் வழிப்பட்டவர்கள் நாம்.. 

நமக்கு சூரியன் தான் பிரதானம்..அவனின் இரண்டு விதமான பயணங்கள், வடக்கு மற்றும் தெற்கு நோக்கியது  

அயனங்கள்  எனப்பட்டன. 


 உத்தராயணம் மற்றும் தட்சிணாயணம்..ஒவ்வொன்றும்  ஆறு மாதங்கள் காலம். 

 சூரியன் மகர ராசியில் நுழையும்போதுஉத்தராயணம் தொடங்குகிறது . அவர் கடகத்தில் நுழையம்போதுஉத்திராயனம் முடிந்து   தக்ஷாயணம் தொடங்கும் ,மீண்டும் அவர் மகரத்தில் நுழையும் போதுதட்சிணாயணம் முடிந்து   உத்தராயணம் தொடங்குகிறது. 

 

அதே போல காலங்களையும் ஆறாக பிரித்து, 12 மாதங்களையும் பருவ நிலைக்கேற்ப பிரித்துஅதை 12 ராசிகளில் அடக்கினர் நம் முன்னோர் .. 

 1. வசந்த ரூத்து …மேஷம்  மற்றும் ரிஷபம் – ஏப்ரல், மே ஜூன் 

 2. கிருஷ்ம ரூத்து – மிதுனம்,  கடகம் – ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்ட். 

 3. வருஷ ரூத்து – சிம்மம்கன்னி -  ஆகஸ்ட்,செப்டம்பர் அக்டோபர். 

 4.  ஷரதா ரூத்து – துலாம், விருச்சிகம் _ ஆக்டோபர்நவம்பர், டிசம்பர். 

 5. ஹேமந்தா ரூத்து …தனுசுமகரம் -டிசம்பர் , ஜனவரிபிப்ரவரி 

 6. சசி-ரூத்து – கும்பம்,  மீனம் - பிப்ரவரி,மார்ச்  ஏப்ரல். 

 

இந்த 12 ராசிகளுக்கும் உரிய தமிழ் மாதங்கள் மற்றும் ஆங்கில மாதங்கள் 

          `                     

சித்திரை

ஏப்ரல்-மே

 

மேஷம் 

வைகாசி

             மே-ஜூன்  

ரிஷபம்

ஆனி

 

ஜூன் ஜூலை 

மிதுனம்

ஆடி

 

ஜூலை ஆகஸ்ட் 

கடகம்

ஆவணி

ஆகஸ்ட் செப்டம்பர் 

சிம்மம்

புரட்டாசி

செப்டம்பர்அக்டோபர் 

கன்னி

ஐப்பசி

அக்டோபர் நவம்பர் 

துலாம்

கார்த்திகை

 

நவம்பர்-டிசம்பர் 

விருச்சிகம் 

 

 

 மார்கழி 

 

டிசம்பர் - ஜனவரி 

தனுசு

தை

 

 ஜனவரி பிப்ரவரி 

 

மகரம் 

 

 மாசி 

 பிப்ரவரி-மார்ச் 

 

 

 

கும்பம்

பங்குனி

மார்ச்-ஏப்ரல்  

 மீனம் 

 

    

 

அந்த மாதங்களையும்  வாரங்களாக

1.        பானு வாரம்

2.       ஸோம வாரம்

3.       மங்கல வாரம்

4.       சௌமிய வாரம்

5.       குரு வாரம்

6.       சுக்கிர வாரம்

7.       சனி வாரம்

இந்த ராசி வெளி 360°  சுற்றளவு கொண்டது 12 ராசிக்குமாக ஒவ்வொன்றும் 30° கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது.. 

1.     மேஷம்  Aries 

 2.  ரிஷபம். Taurus 

 3. மிதுனம்..Jemini! 

 4. கடகம்…Cancer 

  5. சிம்மம்..Leo 

 6. கன்னி…Virgo 

 7.  துலாம்..Libra 

 8. விருச்சிகம்…Scorpio 

 9. தனுசு…Saggitarius 

 10.மகரம்… Capricorn 

 11. கும்பம்…Aquarius 

 12.  மீனம்…Pisces 

  

ராசியை 12 ஆகப் பிரிக்கும் வரைபடம்அவை இருக்கும் கா அளவோடு..(இது தோராயமானதுஒவ்வொரு அட்சரேகை பொறுத்து மாறக்கூடியது) 

. 

   12 

மீனம் 

330°_360° 

4.15 கடிகை 

          I 

மேஷம் 0°_30° 

4.15 கடிகை 

      2 

 ரிஷபம் 

30°_60° 

4.45 கடிகை 

   3 

மிதுனம் 

  60°_90° 

5.15 கடிகை 

      11 

கும்பம் 

  300°_330° 

4.45 கடிகை 

 

      4 

கடகம் 

  90°_120° 

5.30 கடிகை 

      10 

மகரம் 

270°_300° 

5.15 கடிகை 

 

     5 

சிம்மம் 

  120°_150° 

5.15 கடிகை 

          9 

தனுசு 

  240°_270° 

5.30 கடிகை 

      8 

விருச்சிகம் 

  210°_240° 

5.15 கடிகை 

       7 

துலாம் 

  180°_210° 

5.00 கடிகை 

   6 

  கன்னி 

 150°_180° 

5.00 கடிகை 

 

 அதைப்போல சந்திரனின் வயதைப் பொறுத்து 15 வகையாக திதிகள் உண்டு. 

திதிகள் 

பிரதமை  

துவதியை   

திரிதியை  

பஞ்சமி  

சஷ்டி  

சப்தமி  

அஷ்டமி  

நவமி  

தசமி  

ஏகாதசி 

 துவாதசி  

திரயோதசி  

சதுர்த்தசி  

அமாவாசை  

பவுர்ணமி 

 

அறுபது ஆண்டுகளின் சுழற்சி 

பிரபவ 

விபவ 

சுக்ல 

ப்ரமோத 

பிரஜாபதி 

அங்கிராச 

ஸ்ரீமுகா 

பாவ  

யுவா 

தத்ரூ 

ஈஸ்வர 

 பாஹு- 

தன்யா 

  பிரமதி 

  விக்ரம 

  விருஷா 

 சித்ரபானு  

 சுபானு 

 தரனா 

 பார்த்திவா 

 வியாயா 

சர்வஜித் 

சர்வதாரி  

விரோதி 

விக்ருதி 

காரா 

நந்தனா 

விஜயா 

ஜெயா 

மன்மதா 

துர்முகா 

ஹெவிலம்பி 

 விளாம்பி 

 விகாரி 

 சர்வரி 

 பிளேயா 

 சுபகிருத் 

 சோபகிருத் 

 க்ரோலி 

 விஸ்வ வாசு 

 பரபவ 

 பிளாவங்கா 

 கீலகா 

சவுமியா 

 சாதரனா 

 விரோடோட்கிருத் 

 பரிதவி 

 பிரமாடி 

 ஆனந்தா 

 ராட்சசன் 

 அனலா 

 பிங்கலா 

 கலாயுக்தி 

 சித்தார்தி 

 ரவ்தரி 

 துர்மதி 

 டண்டுப்பி 

 ருதிரோட்கரி 

 ரக்தக்ஷ 

 க்ரோதானா 

 அக்க்ஷயா. 

 

அதே போல.  தாமச குணம் கொண்டவை  அஸ்வினி, மகம் முலம் , ஆருத்ரா(திருவாதிரை சுவாதி, சதாபிஷா (சதயம்)     மிருகசீரிடம்சித்தாதனிஷ்டா  பூசம்அனுராதா,    உத்திரட்டாதி  நட்சத்திரங்களும், 

  ராஜசிக் குணம் கொண்ட   கிருத்திகை உத்தரம் உத்தராடம்,  ரோகிணி, ஹஸ்தம்திருவோணம்,பரணி, பூரம்புணர்பூசம் 

சாத்வீக குணம் கொண்ட  புனர்வாசு, விசாகம்பூரட்டாதி,, ஆயில்யம்கேட்டைரேவதி  என்ற இந்த 27  நட்சத்திரங்களும்  4 பாதங்களாக பிரிக்கப்பட்டு, 108ம் 12 இராசிகளுக்குள் அடக்கப்பட்டன. . 

இத்தோடு மனிதனின் ஆயுட் காலத்தை 120 வருடங்களாக கணககிட்ட பராசர மகரிஷி, அந்த காலத்தில் இந்த ஒன்பது கிரகங்களும் ஆட்சி செய்யும் காலத்தை தசா காலமாக பிரித்து, அவற்றிற்குள்  இந்த கிரகங்களின் ஆட்சியை புத்திகளாக பிரித்து அதிலும் இன்னுமும் ஒன்பதாக பிரித்து.......இப்படியே நாள் ,நாழிகை வரையும் கணக்கிட்டுள்ளார்.

இந்த தசாகாலங்களை எப்படி கணக்கிட்டார், மனிதனின் ஆயட் காலம்  120 வருடங்களாக எப்படி கணக்கிட்டார்  என்பது இதுவரை அறியப்படவில்லை. 

பிரம்மத்தோடு ஐக்கியமாகும் மகாரிஷிகளுக்கு  மட்டுமே தெரிந்த தேவரகசியம் இது !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக