"காதலொருவனை கை பிடித்து" என்று காதல் மணம் புரிபவருக்கு ஜாதகம் தேவையில்லாமல் போகலாம். ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை நம் வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு??
தாய், தந்தை, சகோதர சகோதரிகள் போன்ற இரத்த சம்பந்த உறவுகள் நாம் முன்கூட்டியே திட்டமிடாமல் நமக்கு அமைபவை. ஆனால் திருமணத்தின் மூலம் ஏற்படும் உறவுதான் நாமே ஏற்படுத்திக்கொள்வது. அது தான் நம் இரத்த சம்பந்த உறவுகளான பிள்ளைகளை தரக்கூடியது. இருப்பதிலேயே அழுத்தமான உறவு அது... அதனால் நமக்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கும் நபராக அவர் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமே ...
அப்படியென்ன ஜாதகம் சொல்லிவிடும் என்பவர்கள் பாவம் ..அந்த தேவ ரகசியம் பற்றி அறியும் அனுமதியை பரம்பொருள் தரவில்லை என்றே சொல்லலாம்.
நாம் யார் என்பதை நம் முகக்குறிப்பில் , உடல் மொழியில் மறைத்து வெளிப்படுத்தாமல் மறைக்கலாம். ஆனால் நம் ஜாதகம் நம் வாழ்க்கையின் அத்தனை ரகசியத்தையும் போட்டு உடைத்து விடும்....
அதனால் தான் "உன் ஜாதகமே என் கையில் இருக்கு" என்ற பேச்சு வழக்கு கூட வந்தது!௧
இந்த காரநத்தினால் தான் பிரபலமானவர்கள் தங்கள் ஜாதகத்தை வெளியிடாமல் காத்துக்கொள்வர்... இல்லையென்றாலும் அவர்களுடையது என்று சொல்லி, இணையத்தில் நான்கைந்து விரவி கிடக்கும், பிரதமர் நரேந்திர மோடியினுடையது போல...
"நான் யார்? " என்ற கேள்வியை முன்வைத்தே அந்த தேடலில் ஆன்மிகத்தின் முதல் படி தொடங்குகிறது...
ஆனால் அந்த கேள்விக்கான பதிலை ஒவ்வொருவருடைய ஜாதகமும் அவருக்கு சொல்லிவிடும்...!!
இதோ முதல் பாவமான லக்கினம் நம் குண நலன்கள் என்ன என்று சொல்லிவிடும்போது, இரண்டாம் பாவம் நம் குடும்பம், தனம், நம் வாக்கு சுத்தம் எல்லாவற்றையும் கோடு போட்டு இல்லை... ரோடு போட்டே காட்டும்.!!
அது மட்டுமா... ஏழாம் பாவமும் எட்டாம் பாவமும. நமக்கு வர இருக்கும் வாழ்க்கை துனையை பற்றி சொல்லக்கூடியவை.
இந்த இடங்களில் செவ்வாய் என்னும் கிரகம் இருந்தால் அதை செவ்வாய் தோஷம் என்று ஒதுக்கும் நிலையும் உள்ளது.
செவ்வாயின் குண நலன் என்ன? ஒரு ஷத்ரிய அரசனுக்கு இருக்கும் வீரம், தீரம், கோபம், போன்றவை செவ்வாயின் குண நலன்கள். இந்த குனநலன் உள்ள பெண், "கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருஷன்" என்று இருக்க மாட்டாள் தானே!!
இன்றைய சமுதாயத்திற்கு, ஏற்றவளாக ஒரு பெண் இருக்கவேண்டும் என்றால் இது போல, வீறு கொண்டவளாக இருக்கவேண்டியதும் அவசியம் தான் ...அதுவும் அவள் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்துவிட்டால்... இந்த குணங்கள் அவளிடம் ஒரு கால்வாசியாவது இல்லையென்றால் அவ்வளவு தான்...
ஆனால் செவ்வாய் ஒரு பாப கிரகம் ஆச்சே...முழு பாபர் இல்லையென்றாலும் முக்கால் பாபர்...அதனால் அவர் சுப தொடர்புகளான {அப்பா, அம்மா, சகோதர, சகோதரி ??!!) உடன் இருந்தாலோ பார்த்துக்கொண்டிருந்தாலும் சூட்சும வலு ( அது தான் படிப்பு, வேலை, நகை, சீர்) போன்றவற்றுடன் இருந்தால் யோகம் தான்...எந்த கெடுதலும் இல்லை!!
ஆனால் அப்படி எதுவும் இல்லையென்றால் கேடு பலன்தான்...
{அது யார் மூலம் வரும் என்று நான் சொல்ல தேவையில்லை}வண்டி தாறுமாறாக ஓடத்துவங்கும். நேரே காவல் நிலையத்திலோ அல்லது குடும்ப நல நீதிமன்றத்தில் போய் நிறுத்தி வைக்கும்...
இதில் ஒரு சிக்கல் உண்டு....இந்த வீர தீர பெண்ணுக்கு, ஒரு அம்மாஞ்சியான கணவனும், அல்லது அப்படியே மாற்றி கிடைத்து விட்டால் பரவாயில்லை..
அதுவே வரும் வாழ்க்கை துணையும் அதே போன்ற குணத்துடன் இருந்தாலும் சரி தான்....
நாமே பார்த்திருப்போம். சில கணவன் மனைவி பயங்கரமாக சொற்களால் தாக்கிக்\ கொள்வர். ஆனால் அன்று மாலையே ராசியாகி பேசிக்கொள்வதை பார்த்தால், இவர்களா காலையில் அப்படி சண்டை போட்டது என்று நினைக்க தோன்றும். அதற்கு காரணம் இரண்டு பேரின் ஜாதகத்திலும் உள்ள அந்த பாவத்தின் தொடர்புள்ள கிரகங்கள் சம சப்தமாக இருக்கும்.
அதாவது இது போன்ற செவ்வாய் தோஷத்தில் உள்ளவருக்கு அதே போன்ற பாவத்தில் சனி இருக்கும் ஜாதகியை திருமணம் செய்து வைக்கலாம். ஜோடி பொருத்தம் சரியாக இருக்கும்...
இப்படி இரட்டை மாட்டு வண்டியில் பூட்டிய மாடுகள் சரியான இணையாக இருந்தாலே, வாழ்க்கை வண்டி சரியாக பயணிக்கும்!!
இரண்டாம் பாவம குடும்பத்தை பற்றி மட்டுமா சொல்கிறது? அவள் எவ்வளவு கொண்டு வருவாள் என்று பார்க்கவும் முடியுமே.....]];;
நமக்கு யோக ஜாதகம் இல்லையென்றால், வருபவருக்காவது இருக்கிறதா என்று பார்க்கலாம். நிறைய வீடுகளில் பெண் கொண்டு வரும் தனத்தால் தானே வண்டியே ஓடுகிறது!!
அந்த யோகம் எத்தனை காலம் நமக்கு கிடைக்கும் என்பதை தான் எட்டாம் பாவம் காட்டுகிறது!!
இப்படி கூட்டிக் கழித்து கணக்கு போட்டு சேர்த்தாலும், சேர்ந்துக் கொண்டாலும், இன்னின்னாருக்கு இன்னினார் தான் என்று ஏற்கெனவே போட்ட பிரம்ம முடிச்சு தான் அது!!
என்ன...நாமே அதை கண்டுபிடித்தார் போல பெருமை பட்டுக்கொள்ளலாம்!!
ஜோதிடம் என்பது இந்த பிரபஞ்ச ரகசியத்தின் ஒரு சிறு துளி மட்டுமே...
மேடு பள்ளமான, ஏற்ற தாழ்வு நிறைந்த வாழ்க்கை பயணத்தில் உடன் சேர்ந்து பயணிக்க போகும் சக பயணியை , நண்பனை அல்லது தோழியை, வாழ்க்கையை பங்கு போட்டுக்கொள்ளும் பங்குதாரரை அடையாளம் காட்டும் அற்புதம் அது....
"நீ என்ன நினைகிறாயோ அதையே அடைவாய்" என்பது பிரபஞ்ச ரகசியம்...
நம் எண்ணத்திற்கேற்ற வண்ணமே நமக்கு அனைத்து,ம கிட்டும்..வாழ்க்கை துணை உட்பட....
அவரை எப்படி நடத்தவேண்டும் என்றும் ஜாதகம் சூட்சமாக நமக்கு உணர்த்துகிறது.....அந்த ஏழாம் பாவத்தின் மூலம்...
ஒரு நண்பனாக, வாழ்க்கை பங்குதாரராக இனிய துணையாக....
நம்மை மற்றவர் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ , அது போலவே அவரை நாம் நடத்தினால்...
தெள்ளிய நீரோடை போல சுகமாக ஓடும் நதியாகும் வாழ்வு!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக