நம்மில் நிறைய பேர் , உடல் அழுக்கு நீக்குவது என்பதையே குளித்தல் என நினைக்கின்றனர். அதனாலே தான் வேலை முடிந்து வீடு திரும்பும்போது உடல் அசதி தீர குளிக்கிறோம் என்கின்றனர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் காலையில் பெண்கள் என்றால் வீட்டு வேலையையும் வயலுக்கு போவதையும் முடித்துவிட்டு மதிய உணவையும் உண்டுவிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்து குளிக்கப்போகிறார்கள். காட்டு வேலைக்கு போய் விட்டு மாலையில் வந்து குளிப்பதை, நாளடைவில் குளிப்பதையே மாலை என்று ஆக்கி விட்டனர்.
"குளிப்பது" என்றால் என்னன்னு தெரிஞ்சால் தான் எப்போது குளிக்கலாம், எப்போது உடலை கழுவலாம்ன்னு தெரியும்.
நம்ம உடல் இரவு வேளையில் தான் ஒவ்வொரு உறுப்பும் சுத்தப்படுத்தும் வேலையை செய்யும்னு படிச்சுருக்கோம்.இந்த இரவு 11 மணியிலிருந்து 3 மணி வரை ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்த சுத்தம் செய்யும் பணியால் உஷ்ணமடைந்து இருக்கும். அதை குளிர்விப்பதை தான் "குளித்தல் " என்றார்கள். அது கூட எப்படி செய்யவேண்டும் என்றும் நம் பெரியவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
ஊரில் ஆற்றில் குளிக்க இறங்கும்போது, உடனே ஆற்றில் இறங்கிவிட மாட்டார்கள். முதலில் காலை நனைப்பார்கள் பார்த்திருக்கிறோம் . இதனால் உடலில் உள்ள சூடு மேல்நோக்கி நகர்ந்து துவாரங்கள் வழி வெளியேறும். பிறகு சிறிது தண்ணீரை எடுத்து உச்சந்தலையில் தெளித்துக் கொள்வார்கள் இப்படி செய்வதால் அங்கிருக்கும் உஷ்ணம் காது கண் நாசி மூக்கு வழி வெளியேறும். அதற்கு பிறகு தான் தண்ணீருக்குள் இறங்கி ஒரு முழுக்கு போடுவார்கள்.
தலையிலிருந்து கால் வரை தண்ணீர் ஊற்றப்படுவதால் உடல் குளிர்ந்து, உஷ்ணம் குறைக்கப்படுகிறது.
இப்படி குளிப்பதிலும் ஒரு முறையை கடைபிடித்ததால் தான், உடம்பில் உள்ள பஞ்சபூத்ங்களும் சம நிலையில் இருக்குமாறு பார்த்து கொண்டார்கள்.
இந்த பஞ்சபூதத்தில் ஒன்று அதிகமாகி ஒன்று குறைந்தாலும் பிரச்சினை தான் . அதிகாலை 6 மணிக்குள் குளிக்கும்போது, தான் நம் உடலில் உள்ள பஞ்சபூதங்கள் சமநிலைப்படுகிறது.
அடுத்து ஒரு சந்தேகம் வரும்.தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பது தான்குளியல் என்றால், தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா?
படிமப்புரவு கூகிள்
உண்மையில் தினமும் தலைக்கு குளிப்பது என்பது நல்லதல்ல. அப்படி தினமும் குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி, முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிப்பது தான் சிறந்ததும் கூட.
அப்படியென்றால் தலையை நனைக்காமல் மற்ற உடல் பகுதிகளில் நீர் ஊற்றப்படுவதை உடல் கழுவுதல் என்ற அர்த்தத்திலேயே கொள்ளவேண்டும் .அது குளியல் கிடையாது.
அதனால், காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் உடலில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் சொல்வதையும் உடல் கழுவுதல் என்ற முறையிலேயே பார்க்கவேண்டும்.
இரவில் உடல் கழுவுவதால் என்னென்ன நன்மை ?
- முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம்.
- பருவகால அலர்ஜிகளை எதிர்க்கும்
- மிதமான வெப்பம் டென்ஷன் மற்றும் பதட்டத்தை தடுக்கும்,
- உளவியல்ரீதியாக வும் அமைதியை ஏற்படுத்தும்.
- சூடான நீரில் குளிப்பது நாள் முழுவதும் செய்த வேலைக்கு மருந்தாக இருக்கும்.
- இரவில் குளித்து விட்டு தூங்கும் போது தூக்கத்தின் தரம் பலமடங்கு அதிகரிக்கும்.
- ஆரோக்கியமான சருமம்
அதனால் மிதமான வெதுவெதுப்பான நீரில் மாலையில் அல்லது இரவில் உடல் கழுவலாம்.
சிலர் சொல்வதுண்டு."நான் இரண்டு மூன்று முறை தினமும் தலை குளித்தாலும் ஒன்றும் ஆனது இல்லை" என்று.
ஒவ்வொருவரின் உடலும் வித்யாசப்பட்டது. வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும்
வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.
பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.
கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’
என்று வள்ளுவரே சொல்லியுள்ளார்
வாதம், பித்தம் கபம் என்ற இந்த மூன்றும் உடலுக்கு ஏற்ப மாறுபடும். கப உடம்பு கொன்டோர் அடிக்கடி குளித்தால் சளி இருமல் தொல்லை ஏற்படும்.
அதனாலே அவரவர் உடலில் இதில் எது மிகுதியாக உள்ளது என்று பார்த்து அதற்கு ஏற்ப அவர் உடலை குளிர்சிப்படுத்துவதும் அதற்கேற்ப உணவு உண்பதும் நன்மை தரும்.
நன்றி.
ஸ்ரீஜா.