திங்கள், 31 மே, 2021

கண்ணாடி அணிவதை தவிர்க்க எதாவது வழி கூற முடியுமா?

 பழைய சினிமாப் படங்களை பார்த்திருக்கிறேன். .சில வருடங்கள் கழிந்ததுன்னு காட்ட, கதாநாயகனுக்கோ இல்லே..கதாநாயகிக்கோ🤣 கண்ணாடி மாட்டி விட்டுடுவாங்க.

அதனாலோ என்னவோ நமக்கெல்லாம். கண்ணாடி போடுறதுனாலே, அது வயசோடு சம்பந்தப்பட்டதாகிட்டது…😀

உண்மை தானே… எந்த ஹீரோயினாவது கண்ணாடி போட்டு, அவரை ஹீரோ விரும்புவது போல காட்டுறாங்க?☺️

அதனால் தானோ என்னவோ என் அக்கா பெண் கல்லூரி வரை கண்ணாடி போட்டவள், பிறகு போட மாட்டேன்,.. லேசர் சிகிச்சை செய்துக்கிறேன்னு கேட்டாள்.

இது இப்போதெல்லாம் சகஜம் ஆகி விட்டது..அதுவும் கல்யாணம்ங்கிற போது "கண்ணாடியும் வேண்டாம்..காண்டாக்ட் லென்சும் வேண்டாம்"…என்கிறார்கள்.☺️

அவள் ஆசைப்பட்டது போல "நாங்க இருக்கிறோம்..எங்க கிட்டே வாங்க"ன்னு சொன்னவங்க கிட்டேயே போய் பண்ணியாச்சு.😃 .ஒரே நாள் தான் .கண்ணாடியையும் தூரப் போட்டாச்சு..

அதுக்கப்புறம் பாருங்க…விதி எப்படி கும்மியடிச்சுதுன்னு..🤔 இவள் எழுதின போட்டித் தேர்வில் ஜெயிச்சதாவும் ..உடல் தகுதி தேர்வு (fitness டெஸ்ட்) ..

அது ஒரு formal டெஸ்ட் இருக்கும். எந்த அரசு துறையிலும் வேலைக்கு சேரும்.முன் நடத்தப்படும்

அட்டெண்ட் பண்ணிட்டு வேலைக்கு சேர இராணுவத்திலிருந்து லெட்டர் வந்தது.😃

ஆனா..

அங்கே, இந்த அறுவை சிகிச்சை செய்துக்கிட்டு லென்ஸ் போட்டதை, ஏத்துக்காம, திருப்பி அனுப்பிச்சுட்டாங்க..😣

சரி நான் அந்த மாதிரி துறை வேலைக்கு போகப் போறதில்லைன்னு சொல்றீங்களா?

ஒரு விஷயம்….கண்ணில் உள்ள லென்ஸை தூக்கிப் போட்டு புதுசா மாற்ற, இது சாதாரண விஷயம் இல்லே.

குழந்தை பிறப்பு இனி இல்லைன்னு பெண்கள் யாரும் கர்ப்பப்பையை, பிரச்சினை இருந்தால் ஒழிய, தூக்கியெறிஞ்சுறது இல்லயே..😃

உடலின் ஒரு உறுப்பு மாற்றி இன்னொன்று உள்ளே நுழைக்கப்படும் போது, அதை எந்த அளவிற்கு உடல் ஏற்றுக்கொள்கிறதுன்னு இருக்கு. அதுவும் கண் ரொம்ப சென்சிட்டிவ். ..எல்லோருக்கும் அது சரியா பொருந்துறது இல்லே.

சிலருக்கு கண்ணின் விழித்திரை அளவு சிறிதா இருக்கலாம், .இல்லே…கண் ரெட்டினாவின் வலு குறைந்து இருக்கலாம். அவர்களுக்கெல்லாம்.இந்த சிகிச்சை கண்டிப்பா பின் விளவுகளை ஏற்படுத்தும் என்ன..உண்மையா டாக்டர்களே ஒத்துக்க மாட்டாங்க. அப்படியே செய்து ஏதும் ஆச்சுன்னா, விதி வலியதுன்னு…😣

நான் சங்கர நேத்ராலயா கண் மருத்துவரை ஒரு தடவை வேடிக்கையா கேட்டேன்…

"டாக்டர் காண்டாக்ட் லென்ஸ் போடுறது..இல்லை இந்த அறுவை சிகிச்சை செய்றதுன்னு ரெண்டு வழி இருந்தா நீங்க உங்களுக்கு எதை தேர்ந்தெடுப்பீங்க?"

அதுக்கு அவர் சொன்ன பதில் தான் முக்கியமானது…

"கண்ணாடி"

பதில் வேணும்னா பிற்போக்குத் தனமா இருக்கலாம்.ஆனால் அதுக்கு அவர் சொன்ன காரணங்கள் நிறைய..

லென்ஸ் அணிந்த கண்கள் கண்ணுக்கு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிப்பதை நாம நிச்சயம் கவனத்தில் கொள்வது நல்லது.

இப்பல்லாம் முப்பது அடி தூரத்தில் வரும் வண்டியோட பெயர்ப் பலகையாகட்டும், தரையில் விழும் குண்டூசியா இருக்கட்டும், துல்லியமாகக் கண்டுபிடிக்கும் கூர்மையான பார்வைத்திறனைக் கொண்டவர்கள் நம்மில் எத்தனை பேர்? கண்ணாடியைக் கழட்டி துடைத்து மாட்டின பிறகும் சந்தேகத்தோடு அதை படித்து , கேட்டு அப்புறம் தான் அதிலே ஏறுறவங்க தான் அதிகம்….

நம்ம தாத்தா பாட்டியெல்லாம்.கண்ணாடி போடாம பேப்பர் படிப்பாங்க .கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பாங்க..கீரை, காய்கறிகள்னு கண்ணுக்கு பலம் சேர்க்கிறதை அதிகமா எடுத்துக்குவாங்க.

ஆனா நாம . swiggy zomota இல்லாம லாக் டவுனில் தவிச்சவங்க எத்தனை பேரு தெரியுமா..😄 கீரை செய்ய நேரமில்லை..காய்கறி கட் பண்ண நேரமில்லை..அப்படியே நேரம் இருந்தாலும் அதுல நிறைய நமக்கு பிடிக்காது..

இப்போ முக்கால்வாசி பேருக்கு பஸ் நம்பர் தெளிவாத் தெரியிறதில்லை. பத்து வயசுக் குழந்தை கூட, கண்ணாடி போட்டு இருக்கு..

குழந்தைகளை தாக்கக்கூடிய மையோப்பியா என்று சொல்லக்கூடிய கிட்டப்பார்வை குறைப்பாட்டை ஆரம்பத்திலேயே சரி செய்யமுடியும். பார்வை குறைபாட்டின் மோசமான பின்விளைவுகளை தெரிந்துக் கொள்ளாமல், காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தையின் பார்வைத்திறனை மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகும் என்று கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

கண்ணுக்கு தான் இப்போ நிறைய வேலை இருக்கே.. கணினி பயன்பாடு, புத்தகம் படிப்பது, அதிக வெளிச்சம் இருக்கிற திரைகளைக் கொண்ட டெக்னாலஜிகள் ..இது எல்லாம் கண்களைக் கூச வைக்குது . இப்படி கண்பார்வைக்கு வேட்டு வைக்கிற செல்ஃபோன், டீவி, கம்ப்யூட்டர் கேம்ஸ்னு தூங்கும் நேரம் போக, மத்த நேரத்தில் கண்ணுக்கு வேலை கொடுக்கிறோம். சொல்லப்போனால், கண்ணுக்கு வேலை கொடுத்துக்கொண்டே, தூங்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்கிறோம்.

கல்லீரல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றாலும் கண்ணில் குறைபாடு உண்டாகும்.

கண்ணாடி, லென்ஸ், அறுவை சிகிச்சை என்று இழந்த பார்வையை மீட்கும் சிகிச்சைகளைத் தொடர்ந்தாலும் இயற்கை கொடுத்த பொலிவான கண்களில் மீண்டும் சரியான வெளிச்சத்தைக் பார்க்க முடியாது என்பது தான் உண்மை!!.

உணவில் சத்தில்லை; கண்ணுக்கு ஓய்வில்லை. இதுதான் இன்னிக்கு கண்ணான பிரச்சினை! !☺️

என்ன செய்யலாம்?

  • நல்ல காற்றோட்டமான வெளிச்சமான இடத்தில் வேலை செய்யும்போது வெளிச்சம் நேரடியா கண்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இருளான இடத்தில் இருக்கும்போது, ரொம்ப வெளிச்சம் உள்ள திரைகளை கண்ணுக்கு பக்கத்தில் வைத்து பார்ப்பதைF நிறுத்துவது நல்லது.
  • டிவி , கம்பியூட்டர் முன்னால ரொம்ப நேரம் இருக்காமல் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டும் பார்க்க வேண்டும். குறிப்பா 8 அடி தொலைவில் தள்ளி அமர்ந்து பார்க்க வேண்டும். முக்கியமா குழந்தைகள்…
  • கம்ப்யூட்டரையோ, டீவியையோ, செல்ஃபோனையோ கண்சிமிட்டாமல் பார்ப்பதைத் தவிர்த்து அவ்வப்போது கண்களைச் சிமிட்டுவதும், கண்களில் குளிர்ந்த நீரால் கழுவுவதும் கண்களைப் பாதுகாக்கும்.
  • கண்ணில் குறைபாடு இருந்து டாக்டர் கண்ணாடி போட சொன்னால் கூச்சமில்லாமல் போட்டுக் கொள்ளுங்கள். நல்லது தானே அது ‘ஒருத்தர் கண்ணைப் பாத்தே அவன் நல்லவனா, கெட்டவனானு சொல்லிடலாம்’ என்பார்கள். .அப்படி கண்டு பிடிக்காம தடுக்கிற மாதிரி கண்ணை ஷோகேசுக்குள்ளே வச்சுக்கிறது…😚
  • மருத்துவக் கட்டுரைகள் படிச்சாலே சத்தான ஆகாரமில்லாததாலும், உணவு முறைகளை மாற்றியதாலும் தான் இந்த கண் பார்வைக் குறைவு வரக் காரணம்ன்னு தெரியும்.
  • ஆரம்பத்தில் கண்டுபிடிச்ச மைனஸ், ப்ளஸ் வித்தியாசம் போகப்போக சத்தான உணவால் சரி செய்யப்பட்டு விடும்.
  • கண்களைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ அதிகமுள்ள கேரட், பீட்ரூட், பூசணி, வெண்டைக்காய், பசும்பால், மோர், தயிர், முளை கட்டிய தானியங்கள், கொத்துமல்லி... தின சாப்பாட்டில் இதில் ஏதாவது ஒன்று இருக்கனும். அதே போல, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, பழங்களில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, பேரிச்சை, நெல்லிக்காய், ஆப்பிள் நிறைய சேர்த்துக்கொள்ளனும் .

இதெல்லாம் இப்ப யாரு கடைப்பிடிக்கிறா…யாரு சொல்லிக் குடுக்குறாங்கன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது 😁

இத போன்ற ஒரு பயிற்சியைத் தான் .பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தோடும் மருத்துவமனையோடும் இணைந்த The School for perfect eye sight, கண்ணாடியை போடாமலேயே கண் பார்வையை சீராக்க கொடுக்கிறார்கள்.

The School for perfect eye sight,

அதற்கு முன்பதிவு உண்டு.குழந்தைகளுக்கு முன்னுரிமை உண்டு. அங்கேயெ ஒரு வாரம் தங்கி பயிற்சி எடுக்க வேண்டும்.குழந்தையுடன் ஒருவர உடன் இருக்க அனுமதி உண்டு.

என் பெண்ணிற்கு இப்படி தான் கண்ணாடி போட வேண்டியதாகியது. நாங்கள் அங்கு போய் அப்படி ஒரு வாரம் தங்கி அவர்கள் சொல்லிக் கொடுக்கும் எளிய பயிற்சிகசளை தொடர்ந்து செய்ய, அந்த வார இறுதியில் அவளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனைக்கு பிறகு கண்ணாடியை கழற்றி விட்டாள்.🤣

அவள் சிறு வயது என்பதாலும், குறை கண்டவுடன் சென்று பயின்றதாலும் சரியானது என்றார்கள்.நிறைய பேருக்கு கண்ணாடி பவரில் பெரிய மாற்றமே ஏற்பட்டது என்றார்கள்

எவ்வளவு விரைவாக அதை செய்ய தொடங்குகிறோமோ அந்த அளவிற்கு பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது என்றார்கள்.எந்த மாத்திரை,மருந்தும் கிடையாது. இயற்கையோடு ஒன்றிய கண் பயிற்சி மட்டுமே.முக்கியமாக அவர்கள் இந்த சேவைக்காக பணம் எதுவும் கேட்டுப் பெறுவதில்லை.நாமாக. நம் விருப்பத்திற்கு அங்கிருக்கும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தலாம்.

இது எங்கள் சொந்த அனுபவம். நீங்களும் முயன்று பாருங்கள்…

கண் மருத்துவரது ஆலோசனையின்படி கண்களுக்கு கொடுக்க வேண்டிய பயிற்சிகளைத் தவறாமல் செய்யுங்கள். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் மட்டுமல்ல குழந்தைகள் முதல் அனைவருமே வருடத்துக்கு ஒருமுறை கண்பரிசோதனை செய்து கொள்வது நல்லது…

அதே சமயம் நம்ம பார்வை பொறுத்து கவனம் ரொம்ப முக்கியம்ன்னு சொல்றேனில்லை😁.

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

நன்றி விகடன் ஜோக்ஸ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக