வெள்ளி, 28 மே, 2021

அனைவருக்குமான கல்வியை கொடுத்த மெக்காலேயை பார்ப்பனர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

 மெக்காலே யார்?

அவருக்கு ஏன் இந்திய கல்வி முறையில் திருத்தம் செய்யும் எண்ணம் ஏற்பட்டது? என்று தெரிந்துக் கொண்டால் தால் அவர் கொண்டு வந்த கல்விமுறையை பற்றி பேச முடியும். அவர் ஹீரோவா வில்லனா என்று தெரிந்து போகும்.

இது பற்றி டாக்டர் ஷாலினி எழுதிய "மறைக்கப்பட்ட இந்து மதம்". தொகுப்பிலிருந்து;

அதற்கு சற்று பின்னோக்கி வரலாறை பார்த்தால், வணிக நோக்கில் வந்த இந்த கிழக்கிந்திய கம்பனி, அப்போதிருந்த டெல்லி பேரரசுக்கு வருடம் தோறும் பணம் கட்டியது.

1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி,இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று? என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை

அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி, சமஸ்கிரிதம் வளர்க்கவும், மதராசாவில் அரபிக் கற்பிக்கவும் தான் செலவாயிற்று என தெரிய வந்தபோது அது பிரிட்டிஷ்ஷாருக்கு அதிருப்தியை தந்தது.

காரணம் பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது. எல்லா மனிதருக்கும் பொதுவானது. முக்கியமாய் பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப் பட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பெண்களை விடுங்கள், பிராமணரை தவிற வேறு எந்த வர்ணத்தை சேர்ந்த ஆண்களுமே கல்விகற்கவே கூடாது என்கிற விதி இருந்தது.

மனுஸ்மிரிதி!!

இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்கலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.

யார் இந்த தாமஸ் மெக்கலே?

அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தளர், பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி.

இந்த லார்ட் மெக்கலே இந்தியாவிற்கு விஜயம் செய்தார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார். அவருக்கு ஏற்கனவே கிரேக்கமும், லத்தீனும் அத்துப்படி என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் என்பதால் அதுவும் கற்றார்.

பிறகு அவர் வெளியிட்ட குறிப்புகள் Minute on indian Education எனும் உரை, பிறகு Macaulay's Minutes என்று பிரசித்தி பெற்றது.

அதில் மெக்காலே சொன்னது என்னவென்றால்?

1. சம்ஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகளைஅனைத்தையும் ஒன்று திரட்டிப்பார்த்தாலும், அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி நூல்களை விட குறைவான தகவலே கொண்டுள்ளன.

2. இந்தியாவில் இது வரை சமஸ்கிருதத்திலும் அரபிக்கிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்ததாக இல்லை

3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான,காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்

4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு. அது அனைவருக்கும் போய் சேரவில்லை.

மெக்காலேவின் எண்ணம் எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

இந்தியர்கள் அனைவரும் வெளிதோற்றத்தில் பழுப்பு நிறத்தவராய் இருந்தாலும், எண்ணத்திலும் நாகரீகத்திலும், நேர்த்தியிலும், ரசனையிலும் பிரிட்டிஷாரை போல முற்போக்காய் இருக்க வேண்டும். சமத்துவ நிலையை அடைய வேண்டும். அதற்கு ஆகும் செலவை மனிதாபிமான அடிப்படையில் பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு என்றே அவர்கள் நினைத்தார்கள். ஆனால் தாம்ஸ் மெக்கலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர். மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்கமுடியவில்லை.

இதற்கு இடையில் 1833ரில் இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது வரை சில பிரெசிடென்சிகளை மட்டுமே ஆண்டுவந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பை ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டது. லார்ட் வில்லியம் பெண்டிங் ஒருகிணைந்த இந்திய பிரதேசத்தின் முதல் கவர்னர் ஜெனரலான பொருப்பேற்றார்.

அவர் பொருப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்: பெங்கால் சதி தடை சட்டம்.

ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது "சதி ஏறுதல்" எனும் மிகவும் கொடூரமான சம்ப்ரதாயம்.

இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால், மனைவி விரும்பினால் மறுமணம் செய்துக்கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.

ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால், அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின்சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.

பிள்ளைகுட்டி இருக்கிற பெண், இப்படி பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதிப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அந்த பெண் உயிரோடு இருந்தால் தானே அவள் குழந்தைகளுக்கு அனுகூலம்! அப்போது தானே அவள் மரபணுக்களுக்கு லாபம். அவள் கணவனுடைய மரபணுக்களுக்கும் லாபம். இதை விட்டுவிட்டு ஆரோகியமான ஓர் இளம் பெண் இறந்து போவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்??

ஆனால் லாபம் இருப்பதாகவே இந்தியர்கள் நம்புவிக்கப்பட்டார்கள்! என்ன லாபம் தெரியுமா?

கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவமும் போய், அடுத்த ஜென்மத்தில் புனித க்ஷேத்ரமான காசியில், புனித நதியான கங்கையின் கரையில், புனியாத்மாவான பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான். அதனால் தன் கணவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம்!!

அந்த பெண்ணுக்கு வலிக்குமே?

ஆங்! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது!

எல்லாருக்கும் கிடைக்குமா இந்த பாக்கியம்! அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!..... என்று சொல்லி, அழகு போட்டி என்று சொல்லி பெண்களை அரைநிர்வானமாய் நிற்க வைத்து ஆண்கள் கண்களாலேயே வேட்டையாடுவது போல, கற்புக்கரசிக்கான போட்டி- கற்புள்ளவளுக்கு வலிக்காது என்று கதைகட்டிவிட்டார்கள்கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை எல்லாம் இந்தியாவில் படிப்பறிவில்லாத முட்டாள்கள் நம்பி, ஷத்திரிய பெண்களையும், வைஷிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுவிட்டார்கள்!

ஆனால் சூத்திர பெண்கள் அதிகமாக உடன்கட்டை ஏறவில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள். உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்ற தயாராக இல்லை. பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கே எடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிற வேறு யாருக்கும் எந்த இழப்பும் தெரிந்திருக்கவில்லை.

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு அறசீற்றம் பீரிட்டது. அவர்களுக்கு கங்கை புனித நதி இல்லை, காசி புனித தளம் இல்லை, ஈரேழு ஜென்மம் எனும் நம்பிக்கை இல்லை. பிராமணர் உயர்ந்தவர் என்றோ, பிராமணருக்கு தக்ஷனை கொடுத்தால் தான் புண்ணியம் என்றோ அவர்கள் நம்பவில்லை.

பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலதை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த அப்பட்டமான சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது. இந்த சமஸ்கிருதம் வளர்க்க நாம் வேறு இருபது ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற காட்டம்! சதியை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்கலேவின் அறிவுரையின்படி, அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்: இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க,ஆங்கிலமே கல்விக்கான மொழி! ஒரே ஒரு சாராருக்கான சமஸ்கிருதத்தை இனி ஊக்குவிப்பதில்லை, எனும் ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது.

இதனோடு, நீதி துறையின் அலுவல் மொழியாக அது வரை இருந்த அரபிக்கை நீக்கி, ஆங்கிலத்தையே சட்ட துறையின் அலுவல் மொழியாக அறிவித்தார்.

குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும் மத கல்விக்கு அதற்கு மேல் பிரிட்டிஷ் காசு செல்வழிக்காமல், நேரடியாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாய், பிரிட்டிஷ் தரத்தோடு, பிரிட்டனில் இருக்கும் அதே பாட திட்டத்தோடு இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு இலவசமாய் கிடைக்க ஆரம்பித்தது. 1835தில் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி, அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம், 1847ழில் ருர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி. 1848ல் கல்கத்தாவில் பெண்களுகாண பிரத்தியேக தனிப்பள்ளி

1835 முதல் ஆங்கில பள்ளிகளில் கற்றுந்தேர்ந்த மாணவர் கல்லூரிக்கு போக வேண்டுமே?

அதனால் 1858டில் கல்கத்தா, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவக்கப்பட்டன......

இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது.

இப்போது சொல்லுங்கள், இத்தனைக்கும் காரணமான அந்த தாம்ஸ் பாபிங்டன் மெக்காலே ஹீரோவா வில்லனா?!

நன்றி டாக்டர் ஷாலினி!!

கேள்விக்கான விடை கிடைத்துருக்குமே!!

4 கருத்துகள்:

  1. Yes Mechale is definitely a villan
    The fact is Indian education was more scientific had more advanced facts than Europeans . Education was not denied to any one . There was gurukulam where anyone can study srijaa has twisted all facts. This was a ploy to split and rule the country. She may be sympathy with pseudo selrespect movement who are slaves of Britishers even today and not interested in unity of India.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா23 மே, 2022 அன்று 6:39 PM

    ஒரு தேசம் மற்றோரு தேசத்தின் மீது படையெடுத்தபோது தோல்வியுற்ற தேசத்து அரசர்களின் மனைவிகளை பிள்ளைகளை தனது அந்தப்புரத்துக்கு வரச்சொல்வது தில்லித் துருக்கர்களின் சுல்தான்களின் வழக்கமாயிருந்து.நம் தலைவர்கள் போல எச்சலையில் சோறு திங்கிற பயல்வ. ஷாஜஹானும் தன் படைத்தலைவனின் மனைவியை அபகரித்து வாழ்ந்து தாஜ்மஹால் கட்டினான். துளசிதாசரின் சரித்திரத்திலிருந்து இந்த விஷயம் அறியப்படுகிறது. மேலும் நாதத்துவாரகாவில் வசித்த மீராவின் பாட்டைக்கேட்க அக்பர் பாதுஷா தான்சேனுடன் வந்தது மீராவுக்கு தெரியவில்லை. ராணாவின் சகோதரருக்கு தெரிந்தாலேயே மீராவுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. இவன்க வள்ளல் தெரிந்தாலேயே அன்றைய ராஜபுத்திர பத்தினிகள் உடன்கட்டை ஏறினர். சித்தாளு வயல்ல வேலை செய்தவளை ஏன் அபகரிக்கவில்லை என கேட்பது அபத்தம் ஷாலினி இன்னும் படிக்க வேண்டும். வேலைக்காரிய தொட்டுட்டு சொத்தெழுதிக்கொடுத்தவன தலைவனாக பார்த்தால் இது தெரியாது. இந்த பழக்ககம் சத்ரபதி சிவாஜியால் தான் ஒழிக்கப்பட்டது என்பது வரலாறு. நாய்க்கன் பின்னால நின்னு யோசிச்சா பூரீயாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா23 மே, 2022 அன்று 11:06 PM

      சதி உடன் கட்டை ஏறுதல் சாமானிய மக்களுக்கும் பரவி இருந்தது பல பிரிட்டிஷ் ஆய்வுகள் மூலமாக தெரிகிறது. இஸ்லாமிய அரசர்கள் பலதார மன்னர்கள் என்பது யாரும் அறிந்ததே.அந்த பலதாரமுறைதான் இந்தியாவில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை கொண்டு வந்தது என்கிறீர்களா? இது அபத்தமானது. ஒரு தனி சாதியின் சொத்தாக இருந்த கல்வியை எல்லோருக்கும் கிடைக்க செய்தது ஆங்கிலேயர். அதன் நாயகன் மெக்காலே.

      நீக்கு
    2. அந்தளவிற்கு, இந்த ஈனப்பிறவிகளான பிராமணன்கள் மிருகத்தை விட கேவலமான சட்டங்களை உருவாக்க இந்திய ப்பெண்களை உடன்கட்டை ஏறுதல் என்றவரைமீறைய செயற்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர் என்பதை இந்தக்கட்டுரை மூலமாக அறியமுடிகிறது இந்த ப்பிரபஞ்சமே ஆங்கிலேயர் வடிவத்தில் வந்து இந்த பாதிக்கப்பட்ட இந்தியப் இதர பெண்களைக் காப்பாற்றியது.

      நீக்கு