சனி, 15 மே, 2021

என் மாமியார் என் மீது மிகவும் பொறாமை படுகிறார். இதை கணவரிடம் கூறினால் அவர் நம்ப மறுக்கிறார். என்ன செய்வது?

 இது இரண்டு பெண்களின் உரிமைப் போராட்டத்தில் எழும் உணர்வு..அதை உங்கள் இருவருக்குள்ளும் தான் தீர்க்க முடியும்.

ஒன்று தெரியுமா?

பெருமாளின் நாபியிலிருந்து தோன்றியவன் பிரமன் என்பதால், அவர் மகன்..சரஸ்வதி லஷ்மிக்கு மருமகள் ஆகிறாள்..அதனால் தானோ என்னவோ..லக்ஷ்மி இருக்கும் இடத்தில் பொதுவாக சரஸ்வதி இருக்கமாட்டாள்.. சரஸ்வதி இருக்கும் இடத்தில் லஷ்மி இருப்பதில்லை..!!

சாமி கிட்டேயே மாமியார்_மருமகள் பிரச்சினை உண்டு போல..!!..😀

பொதுவாக பெண், தன் கனவு நாயகனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் தன் கணவனில் இல்லாமல் போவதில் ஏமாற்றம் கொள்ளும் உள்ளுணர்வு தான், தன் ஏக்கத்தை தீர்க்கக்கூடிய விதமாக, தன் மகனை வளர்க்க வைக்கிறது. தன்னுடைய அன்பு, பாசம் மொத்தத்தையும் கொட்டி வளர்க்க, அவனும் இவள் பால் இயல்பாகவே ஈர்க்கப்படுகிறான்.

அவனுக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று தேடும் அவள், வரும் பெண் தனக்கும் தன் மகனுக்கும் இடையே எந்த இடைவெளியும் ஏற்படுத்தாதவளாகத் தான் தேர்ந்தெடுக்கிறாள். அவள் உள்ளுனர்வ் தடுக்கும் இடங்களை , மற்ற விஷயங்கள் ஒத்துப்போனாலும், நிராகரிக்கவும் செய்கிறாள். கடைசியில் மகனுக்கென்று ஒருத்தி வருகிறாள்.

தன்னையே இத்தனை நாள் சுற்றி வந்த மகன், மனைவியை தேடும் போது, இயற்கையிலேயே இருக்கும் "தனது" என்பது அவளுள் தலை தூக்குகிறது..புதிதாக வரும் பெண்ணிற்கோ, கணவனின் அன்பு முழுதும் தனக்கே முழுதும் வேண்டும் என்ற ஆசை, காதல்..தாய்க்கோ அது ஒரு பரிதவிப்பு..

உண்மையில் குழந்தைகள் பிறந்த பிறகு, அவளுக்கே கணவனிடம் கொண்ட பிரியம், தன் பிள்ளைகளிடம் மாறியிருக்கும்.அத்தோடு கணவன் மேல் கொஞ்சம் நிராசையும் ஏற்பட்டிருக்கும்..😀 அவள் தன் ஆசைக் கேற்ப தன் பிள்ளைகளை வளர்க்க துவங்குவாள்!!

வாழ்க்கை ஒரு வட்டம்!!

இந்த இடைப்பட்ட காலத்தில், இருவருமே தத்தம் நிலை புரிந்து கொண்டு நடந்தால், அடுத்து வரும் காலங்களில், இருவருக்கும் இடையே நல்ல அந்நியோனியம் ஏற்பட்டுவிடும்.. இது அனுபவபூர்வமான உண்மை.!!

ஆனால், அந்த இடைப்பட்ட காலத்தில் தான், ஆண், தன் பங்குக்கு இருவரையும் நிறையவே காயப்படுத்தி விடுகிறான்.

எந்த காலத்திலும், தாயின் இடத்தை, மனைவியால் நிரப்ப முடியாது.

"தன் அம்மா மாதிரி மனைவியால் என்னிக்கும் சமைக்க முடியாது!!

அது போல, அவன் குடும்பம் என்று வரும்போது, மனைவிக்கே முதலிடம்.அடுத்தே தாய் வருகிறாள்.

வாழ்க்கை 'துணை' என்பவள் அவள் தானே!!

.இரண்டு பேரையும் அவரவர் நிலைக்கேற்ப தான் தாங்க வேண்டும்.

அந்த ஸ்ரீ இராஜராஜேஸ்வரி போல!!

ஆனால்..பாவம்..

இங்கே அவனும் கோட்டை விடுகிறான்.

தான் பார்த்து வந்த தாயே வேறு விதமாக தெரியும் போது…, அதுவும், புதிதாக வந்தவளை புரிந்து கொள்ள முயலும் சமயம்..😀

ஒரு பெண்ணின் மனதே, ஆணால் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்று..!!

Men are from Mars.Women are from Venus!!இதில் இரண்டு பெண்களை!!

இங்கே தான் ஆண் நிலை படு பரிதாபம்.

அதனால் உங்கள் கணவர், இதில் உதவுவார் என்பதை விடுங்கள்!!

நமக்கு முந்தைய தலைமுறையான உங்கள் மாமியார், உங்களை புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை விட , நீங்கள் அவரை புரிந்துக் கொள்ள முயலுங்கள்!!.

ஏனென்றால் அவர் ஆதாரமாக பற்றிக்கொண்டிருக்கும் அவர் மகனை, நீங்கள் பிடுங்க நினைத்தால், அவர் தவறி விழும் வாய்ப்பு அதிகம்!!

நீங்கள் உங்களை முதலில் விரும்ப ஆரம்பியுங்கள்.அப்படி செய்ய தொடங்கும் போது, நம் மகிழ்ச்சிக்கு யாரின் உதவியும் தேவைப்படாமல் போகிறது.

.நாம் ஒருவரை மாற்ற முயலுகிறோம் என்றாலே, அவரின் ஒரு பகுதியை நாம் வெறுக்கிறோம் என்று தானே பொருள்? "உன்னைப் பிடிக்கும்..ஆனால் உன் முகத்தை பிடிக்காது " என்பது போல!!

உள்ளது உள்ளபடியே நீங்கள் உங்கள் கணவர், மாமியாரிடம் அன்பு செலுத்த தொடங்கும்போது, எந்த வித பயமும் இல்லாமல் அவர்களும் தங்கள் பிரியத்தை உங்களிடம் தயக்கமில்லாமல் பகிர ஆரம்பிப்பர்!!

நினைவில் கொள்ளுங்கள்..அன்பு யாரையும் மாற்ற முயற்சிக்காது..

ஆனால் மாற்றி விடும்.. யாருக்கும் தெரியாமல்.மொட்டு ஒன்று மலர்வது போல!!

நீங்கள் விரும்பியது போல!!😀😁

என்ன இருந்தாலும் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை தயாரித்தவர் உங்கள் மாமியார் தானே !!😀😁

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக