சனி, 29 மே, 2021

திருமணம் ஆன ஆண்கள் பெரும்பாலும் புலம்புவது ஏன் ? நட்பு வட்டத்தில் கூட பார்த்து இருக்கிறேன் எவ்வளவு சொல்லியும் விடாமல் புலம்பும் அவர்களுக்கு ஊக்கம் வர வாய்ப்பு உள்ளதா ? (ஊக்க உளவியல் நேர்மறை முறைகளை கூறவும்)

 ஒரு திருமனத்தை எதிர்நோக்கும் ஆணும் பெண்ணும், எதிர் பாலிடம் முன்று அம்சங்களை எதிர்பார்க்கின்றனர்

  1. கண்ணுக்கு நிறைவாய்.
  2. மனதுக்கு இனிமையாய்
  3. புத்திசாலியாய்

இன்னாருக்கு இன்னார் என்று நிச்சயம் ஆனதிலிருந்து, பரஸ்பரம் கவர , மூன்று அம்சங்களிலும் தான் சிறந்ததாக இருப்பதாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். உண்மையை சொல்ல போனால், வெகு சிலரே இந்த மூன்று அம்சத்திலும் சிறந்தவராக இருக்க முடியும்..

ஆனால் அரிதாரம் பூசாத நடிகராக இவர் காட்டிய அன்பில் திளைத்துப் போன பெண், அவனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பிக்கிறாள்.

இதற்குள் அவனுக்கே உள்ள இயல்பான குணமான "ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்" முடிந்து, அவன் கைக்கு கிடைத்து விட்ட பொருளின் மீது இருந்த கவனம் தீர்ந்து, அடுத்ததில் பாய்கிறது

இதை வேலை என்றும் கொள்ளலாம்.அல்லது..😃

அங்கே ஆரம்பிக்கிரது பிரச்சினை..அழகை மட்டுமே குறி வைத்து, தான் மணந்தவளின் மற்ற குறைகள் இப்போது தான் கண் முன் தெரிகிறது.. வேலைக்கு போகும் பெண் என்றால், வீட்டை நிர்வகிப்பதில் உள்ள சிரமம், புரிகிறது..ஒப்பீடு ஆரம்பிக்கிறது..அமைதி கெடுகிறது..

பெண்ணை பொறுத்த வரையோ, திருமணம் ஆன புதிதில், தன்னை அப்படி கவனித்துக் கொண்டவனின் பாரா முகம் வித்யாசமாக படுகிறது..ஆசை ஆசையாய் அவனுக்கு பிடிக்கும் என்று சமைத்த உணவை ஒன்றுமே பேசாமல் தின்று விட்டு போகும் கணவனை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது..

"இடிச்ச புளி போல தின்னுட்டு போறாரே.. அந்த புளியை கரைச்சதுக்கு பதிலா இதையே கரைச்சு ஊத்தியிருக்கலாம்"

அவன் புத்திசாலித்தனம் எத்தனை வீசைன்னும் தெரிஞ்சு போகுது!!

ஹாப்பி ஹனிமூன் முற்றுப் பெறுகிறது!!

இதில் கணவன் தன் நண்பனிடம் வீட்டில் நடப்பதை சொல்கிறாரோ..அவன் பார்வையே சரியில்லையென்னு"☺️ அந்த நபர் வீட்டுக்கு வர 144 போட வேண்டியதாகிறது!!

ஒரே உறைக்குள்ளே இருக்கிற இரண்டு வாள் மாதிரி அடிக்கடி உரசல், தீப்பொறி..😀

சரி இதற்கு என்ன தீர்வுன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு யோசிச்சாலும் ஒண்ணும் தெரியலையேன்னு புலம்புறவங்களுக்கு இதை சொல்லலாம்…

எந்த ஆணும் பெண்ணும் கண்ணுக்கு அழகாவும், புத்திசாலியாகவும் அதே சமயம் ஆசைஆசையாய் உருகிக்கிட்டு இருக்க மாட்டாங்க..ஒண்ணு இருந்தா, இன்னொன்னு இருக்காது…எது இருக்கோ அதை ஆராதனை செய்யப் பழகிக்கணும்…😃

உங்களுக்கு தெரியாது…குழந்தை பெற்று, அதனால் ஒல்லியான உடல் வாகு போய் குண்டாகி போன பெண்ணால், மனது வைத்தால், திரும்ப அழகி போட்டியில் ஜெயிக்கக்கூடிய அளவிற்கும் மாற முடியும் இந்த தீக்க்ஷா மாலிக் போல..!!☺️

அதற்கு வேண்டியது கணவனின் அன்பு மட்டுமே!!

அன்பு என்பது

ஒரு வழி பாதை அல்ல..

பெறலாம்…

கொடுக்கக்கூடாது என்பதற்கு..!!

அப்படி செய்யும்போது

அந்தக் குடும்பத்தின் இன்றியமையாத அம்சம் ஆவீர், …

ஹங்கேரியில் உள்ள இந்த முதலாம் உலக போர் நினைவுச் சின்னம் போல!!

படித்தமைக்கு நன்றி

ஸ்ரீஜா.

படங்கள் உதவி ஆங்கில கோரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக