சகட" என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர்
வாழ்க்கை இன்பமும், துன்பமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது என்பதுதான் சகடயோகம் உணர்த்தும் உண்மை
குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால்,
அது சகட யோகத்தைக் கொடுக்கும்
- . ஜாதகரின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும்.
ஜாதகர் ஒரு இடத்தில் இருக்க மாட்டார். தன்னுடைய வேலை காரணமாக அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பார் அல்லது அலைந்து கொண்டே இருப்பார். - சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி வருவதைப் போல, சகடயோக ஜாதகக்காரர்கரின் அதிர்ஷ்ட நிலைமை தடைப்படுவதும், தடை நீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
- ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில்
இருப்பது நல்லதல்ல. அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள். எட்டாம் பொருத்தம் என்பார்கள்
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின்
ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது
அதே சமயம், அந்த யோகத்தை ரத்து செய்யும் அமைப்பும், சில ஜாதகருக்கு இருக்கும்:
- சகடயோகச் சந்திரன், ஜாதகரின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில்
- சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில்
- சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில்
- சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர் நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும்
யோகம் பறி போனதே என்ற கவலை வேண்டாம். அது நல்லதுதான். இது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே😀
அப்படியும் ஆகவில்லை எனில்,
பரிகாரம்
- சகடயோக ஜாதகக்காரர், தன்னுடைய வாழ்க்கையை அதற்குத் தகுந்தபடி
அமைத்துக்கொள்ள வேண்டும்.தன் தொழிலால் குடும்பமும், குடும்பத்தால் தொழிலும் பாதிக்காதவகையில் இரண்டையும் அனுசரித்து வைத்துக்கொள்ள
வேண்டும்.Travelling agent,Travelling salesman, Medical representative, Railway Guards, Drivers போன்ற தொழில்களை ஏற்கலாம். - சகட யோகம், ஜாதகத்தில் உள்ள மற்ற ராஜ யோகங்களைத் தடுக்காது.
அந்த யோகங்கள் பலமாக இருந்தால், இது வளைந்து கொடுக்கும்! - சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது. வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பூரண விடுதலை உண்டு.
ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினசரி காலையில் நூற்றி எட்டுமுறை சொல்லி வாருங்கள். அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி தவிடு, மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள். மனதிற்கு அமைதிக் கிட்டும்.
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
மிகவும் சரி
பதிலளிநீக்கு