ஞாயிறு, 30 மே, 2021

உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுகிறார்கள்?

 உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுறாங்கன்னு விஜய் மதுர படத்துல கலாய்ப்பார். ..😀

என்னங்க இது கூட தெரியாதா எனக்கு.

வடையை பிடிச்சுக்கிறதுக்கு தானே அந்த ஓட்டை,,,?☺️

எங்க பக்கத்து வீட்டு மாமி குடுக்கிற வடையிலே ஒட்டையே இருக்காது..🤣

எனக்கு ஓட்டை போடாத அந்த "வஸ்து"வை , வடைன்னு சொல்லவே மனசு வராது.

பின்னே என்னங்க. மெது வடையோட அழகே அந்த ஓட்டை தானே. அப்படி ஓட்டைக்குள்ளே கையை விட்டு தூக்கி நிற்கும்போது, ஏதோ சக்ராயுதத்தை கையிலே வச்சுக்கிட்டு நிற்கிற கிரிஷ்ணரே ஞாபகம் வரலை…😆

அதுவும் இல்லாம ஓட்டை இல்லாத அதை, வடையிலேயும் சேர்க்க முடியாம, போண்டாவிலும் சேர்க்க முடியாம பாவம் "அனாமிகா" மாதிரி நிக்கும்..😂

சரி சரி..கேள்விக்கு வருவோம்.

பருப்பு வடையில் ஏன் ஓட்டை போடலை, மெதுவடையில் ஓட்டை போடக் காரணம்.... உளுந்து மாவு பிசுபிசுப்பா இருக்குறதாலயும் கொஞ்சம் தடிமனா வடை பொறித்தால் சீக்கிரத்துல வேகாது. அதனால, சீக்கிரம் வேக வடை தட்டும்போது ஓட்டை போடுவாங்க. அது வழியாவும் எண்ணெய் உள்ள போய் சீரா வேகும்......

அந்த ஓட்டை போட்டு வடை சுடுறதுங்கிறது சாதாரணம் இல்லீங்க..அதுலே ஒரு டெக்னீக் இருக்கு..

  • வடைக்கு மாவு அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது.
  • அதிகமாக எண்ணெயும் இழுத்து விடும்.
  • மாவில் அதிகம் தண்ணீர் சேர்ந்து விட்டால் சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.
  • வடை தட்டும் போது ஒரு சின்ன வாழை இலை அல்லது ஒரு கவரை எடுத்து, அதில் மாவை வைத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.
  • கையில் மாவு ஒட்டாமல் இருக்க சிறிது தண்ணீரை தொட்டுக்கலாம்

இந்த ஓட்டை மெதுவடையிலே என்ன ஸ்பெஷல்னா…

ரசம், சாம்பார், தயிர்ன்னு எதுல போட்டாலும் அதோட ருசியை தனக்குள் இழுத்துக்கிட்டாலும் வடை, தன் ருசில இருந்து மாறாது.

நம்மை சுற்றி இருக்கும் எல்லாத்தையும் உறிஞ்சு எடுத்துக்கிட்டு பல ரோல் ப்ளே பண்ணினாலும் நம் தனித்தன்மையை மாத்திக்கக் கூடாதுன்னு சொல்லாம சொல்லுது இந்த வடை..

பாருங்க வடை வாய்க்குள்ளே போனவுடனே, எவ்ளோ அரிய தத்துவம்லாம் வருது😃

இப்பேர்ப்பட்ட மெதுவடைக்கு நான் மட்டும் ரசிகை இல்லேங்க..

கோயிலுக்கே காவல் காரர் அந்த பைரவரும் தான்.

தேய்பிறை அஷ்டமி திதி, அதிலும் செவ்வாய்க்கிழமை வரும் போது, செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, இந்த உளுந்து வடையோட பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டா அவரு குஷியாயிடுவாரு..

அப்புறம் என்ன.. மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி, கையில் காசு புரளும். . தடைபட்ட சுபகாரியங்கள் கூடிவரும்.

பாருங்க இந்த மெதுவடையோட பெருமையை !!

சொல்ல முடியாது..யாராவது இதை தேர்தலில் அவங்க சின்னமா வாங்கினாலும் வாங்குவாங்க😄

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக