செவ்வாய், 4 மே, 2021

பெண்களின் வித்தியாசமான குணங்களை பட்டியலிட முடியுமா?

 


  1. பிரசவத்தின் போது சாவின் விளிம்பிற்கே சென்று மீள்பவள், மீண்டும் தாய்மையடைய தயாராவது.
  2. இயல்பிலேயே இருக்கும் அன்பு, பாசம், கருணை.
  3. தனித்து விடப்பட்டாலும் குடும்பத்தையே தூக்கி நிறுத்தும் நெஞ்சுரம்.
  4. குடும்பத்தின் ஆணிவேரே தான் தான் என்றாலும், குடும்பத்து ஆண் செய்யும் அலம்பல்களை அமைதியாய் அனுமதிப்பது.
  5. ஒரு பக்கம் தன்னை தெய்வமாய் வர்ணித்துக் கொண்டே, மறு பக்கம், ஆண் செய்யும் ஆபாச விமர்சனஙகளை/ பாலியல் பலாத்காரங்களை எதிர்த்து பொங்கி எழாமல் மவுனம் காப்பது..

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு .அல்ல… ஐந்து சோறு பதம்"☺️

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக