ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி 1 6 ...திருமண தடங்கல், திருமண தடை இந்த இரண்டும் ஒன்றா? இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

 நான் அறிந்த வரையில் தடங்கல் என்பது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வை இடையில் நிறுத்துவது. அது பின்னர் தொடரவும் செய்யலாம். கீழே காண்பவை அது போன்ற ரகத்தில், செய்திகளில் வந்தவை.

பாதியில் நின்ற பந்தல் பணிகள் !! மணப்பெண் கிடைக்காததால் திருமணம் ரத்து !!

சேலை கட்ட மறுத்த பெண்..! பாதியில் நின்ற திருமணம்..!

திருமணத்தில் துப்பாக்கியால் சுட்ட மாப்பிள்ளை வீட்டார்...

மணமகளின் மாமா காயம்... பாதியில் நின்ற திருமணம்...

ஆனால் தடை என்பது, அந்த நிகழ்வே நடக்கவிடாமல் செய்வது.கீழே உள்ளது போல...

இப்போது புரிந்திருக்கும் இந்த வித்யாசம்...}}:: இன்னும் கொஞ்சம் விளக்கம் வேண்டுமானால் ...

திருமணத் தடங்கல் என்பது புனர்பூ தோஷம் உள்ளவருக்கு நிகழும வாய்ப்புகள் உண்டு. அதாவது நிச்சயித்த பெண் திருமணத்திற்கு மறுப்பது, ஏதோ காரணத்தினால், அந்த திருமணம் நடக்காமல் போவது, அல்லது அந்த மனப்பந்தலிலேயே வேறொரு பெண்ணை மணமுடிப்பது ஆகியவை இதில சேர்த்தி.

"புனர் பூ" என்று எதையெல்லாம் சொல்வர்?

ஒளி பொருந்திய சந்திரனும் இருள் கிரகமான சனியும் ஏதேனும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதால் ஏற்படுவது இது. சனியும் சந்திரனும் ஒரே இராசிக் கட்டத்தில் சேர்ந்து நின்றாலோ, அல்லது சம சப்தமாக பார்த்துக்] கொண்டாலோ, சந்திரன் வீட்டில் சனி அமர்ந்தும் சனியின் வீட்டில் சந்திரன் அமர்ந்தும் அல்லது சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, ஹஸ்தம் திருவோணம் ஆகிய ஏதேனும் ஒன்றில் சனி சாரம் வாங்கியிருந்தும் சனியின் நட்சத்திரங்களான அனுஷம், -பூசம், அனுஷம் உத்திரட்டாதி யில் ஏதேனும் ஒன்றில் சந்திரன் அமர்ந்தாலோ புனர்பூ ஏற்பட்டது என்பர்.

மற்ற கிரகங்கள் எல்லாம் ஒன்றுகொன்று தொடர்பு கொள்ளாமலா இருக்கின்றது..இவை தொடர்பு கொண்டால் மட்டும் என்ன? அது எப்படி திருமணத்திற்கு தடங்கல் ஏற்படுத்துகின்றது ??

சனியை பொதுவாக யாரும் விரும்புவதில்லை என்றாலும் அவனே ஆயுள்காரகன். மற்ற யோகங்கள் இருந்தும் ஆயுள் இல்லையென்று போனால், என்ன பயன்?

அதே சமயம் ஒருவர் வாழ்வின் ஏற்றத்தாழ்விற்கு அவரின் எண்ணங்களே காரணம். அதை ஆளும் மனோகாரகன எனப்படும் சந்திரன் தான்..இவை இரண்டையும் தொடர்பில் இருக்குமாறு ஆனால்?

இரண்டும் முரண்பாடுகளின் உச்சம்...ஒன்று இரண்டரை நாளில் ஒரு இராசியை கடந்து முப்பது நாளில் அனைத்து இராசிக் கட்டங்களை தாண்டி விடுவது. இன்னொன்று சனி, பெயருக்கேற்றது போல மந்தன்... மெதுவாக ஒரு இராசியில் இருந்து மாறவே இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்வது. மொத்தத்தையும் சுற்றி வர முப்பது வருடங்கள் எடுத்துக் கொள்கின்றது..

சூரியனை பித்ரு காரகன் எனபடுவது எல்லோருக்கும் தெரியும். சூரியன் அதே இடத்தில் தான் உள்ளார் என்றாலும் அவர் ஒளி இரவில் பூமிக்கு கிடைப்பதில்லை. அதனால் சனியை இரவு நேரத்தின் பித்ரு காரகன் என்றும் சொல்வர். அதே போலத் தான் பகலில் சந்திரன் தெரிவதில்லை. அதனால் சூரியனுக்கு அருகில் இருக்கும் சுக்கிரன் பகலின் மாத்ருகாருகன். எனப்படுகிறார்.

எனவே இருளின் காரகன் ஆன சனியும் மாத்ருகாரகனாகிய சந்திரனும் தொடர்பு கொள்ளும்போது, உடல் ஓய்வு எடுக்கும் நேரமான இரவில் தான். உடல் தான் ஓய்வு எடுக்கும்..ஆனால் உள்ளமோ?? உணர்ச்சிகள் கொந்தளிக்கும் நேரமான இரவில் இரண்டு ஆற்றல் மிக்க கிரகங்கள் இணைவது தான் "புனர்பூ" இதை பெரும்பாலும் தோஷம் எனப்படுகிறது.

ஆனால் , இது தோஷமா அல்லது யோகமா என்பதை அந்தந்த கிரகங்கள், சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் என்ன நிலையில் உள்ளன என்பதை பொறுத்து தான் சொல்லவேண்டும்.

குருஜி சொல்லுவது போல, ஜோதிடமே ஒளி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த தொடர்பை தோஷம் என்கின்ற குற்றம் என்று சொல்பரும் உண்டு. பொதுவாக இரண்டு முரண்பட்ட தன்மை உள்ள கிரகங்களின் ஆளுகையில் உள்ள ஜாதகர் எண்ணத்தினால், , எடுக்கும் தடுமாற்றமான முடிவுகளால் அவர்களுடைய செயல்களில் நிலை இருக்காது இது அவர்கள் குணநலனை பாதிக்கும். . அதனால் இவர்களுக்கு திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படும். அப்படியும் திருமணம் நடந்தால், . இரண்டு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் குழம்பிய குட்டையில் என்ன நடக்கும்? விட்டுக்கொடுக்காமை, ஈகோ மோதல், போன்றவையால் இவர்கள் பிரிந்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பர்

ஆனால் இதை சற்று அறிவியல் பூர்வமாக நோக்கினால், , இந்த 'தோஷம்' எனப்படும் குற்றத்திற்கு ஒளி குறைபாட்டினால் ஏற்படும் நிலையே காரணம் என்பதை உணரலாம். .

ஒளி பொருந்திய சந்திரனின் ஒளி வீச்சை, அருகில் இருந்தோ, அல்லது நேருக்கு நேராக பார்த்தோ பெறுவதால் சனிக்கு பலம் கூடும்.. ஆனால் அதே சமயம் ஒரு பாப கிரகத்திற்கு தொடர்பில் இருந்து தன ஒளியை இழக்கும் சந்திரன் தான் பலத்தை இழப்பார். அதனால் இந்த தொடர்பினால் சனிக்கு தான் பலம் கூடும்.சந்திரனுக்கு குறையும்.

இந்த மாதிரி நிலையில், எந்த கிரகத்திற்கு இது நல்லது? என்பதைக் கொண்டு தான் இது ஜாதகனுக்கு தோஷமா அல்லது யோகமா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக மகரம், கும்ப லக்கினக் காரர்களுக்கு, லக்கினாதிபதியான சனி வலு பெறுவதும் அவர்கள் அவயோகரான சந்திரன் வலு குறைவதும் நல்லது தானே??.

அதே சமயம், கடக லக்கினகாரர்கலுக்கு லக்கினாதிபதியான சந்திரன் இந்த தொடர்பினால் வலு குறைவது தோஷம். அதாவது குற்றம்.. எனவே இந்த சனி சந்திர இணைவை எல்லோருக்கும் தோஷம் என்று சொல்லிவிட முடியாது.

சரி. நாம் சட்டத்தில் பார்ப்பது போல, விதி என்று ஒன்று ஒன்று இருந்தால் விதிவிலக்கும் இருக்கும் தானே...

அந்த வலு குறைந்த சந்திரனை , இயற்கை சுபரான குரு பார்த்தாலோ அல்லது இந்த நவக்கிரக நாயகனான சூரியன் இந்த சனி சூரியனுக்கு இடையில் நின்றாலோ அதாவது கடகத்தில் சனி இருக்க, மகரத்தில் சந்திரன் இருக்கும்போது, மேஷத்தில் உச்சத்தில் இருக்கும் சூரியன் இந்த தோஷத்தை நீக்கிவிடும்.

அதே போல, சந்திரன் வலு குறைந்தால் மனோபலம் குன்றும் இல்லையா" ஆனால், அதையே, வீரத்தையும், தைரியத்தையும் அருளும் செவ்வாயின் நான்கு, எட்டாம், பார்வை கிட்டினாலோ, இழந்த வலுவை சந்திரன் மீண்டும் பெறலர்

.இந்த மாதிரி அமைப்பில் உள்ள ஜாதகத்தில் 'புனர்பூ' தோஷம் இல்லை எனலாம்.

சில சமயம், திருமணத்தில் ஏற்படும் தடங்கல் என்பது தோஷமா அல்லது யோகமா என்று பார்க்க வேண்டும். நல்ல குணம் இல்லாத வரனை சரியாக விசா ரிக்காமல் நிச்சயம் வரை வந்து, பின்னர் உண்மை தெரிந்து எத்தனை திருமணம் நின்று விடுகின்றன? அதெல்லாம் அந்த வரனுக்கு யோகம் தானே ?!

பொதுவாக திருமணத்திற்கு தடையாக உள்ளது என்று செவ்வாய் தோஷத்தையும், பாவ கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் இராசியிலும், மற்றும் திருமணத்தை குறிக்கும் ஏழாம் பாவத்திலும், மாங்கல்யம் பற்றி சொல்லும் எட்டாம் பாவத்திலும், குடும்பத்தை பற்றி சொல்லும் இரண்டாம் பாவத்திலும் தொடர்பு கொள்வதால், திருமணத்திற்கு வரன் அமைவதில் தடை, தாமதம் ஏற்படும்.. ஆனால் அதுவே கொல்சாரத்தில் மாறும் நிலை ஏற்படும் பொது அந்த தடை விலகி, ஜாதகர்க்கு திருமணன் நடக்கலாம். ஆனாலும் சில கிரக இணைவு கொண்ட ஜாதகர்களை திருமணம் மூலமாக ஒன்றிணைக்க தடை உள்ளது. இந்த தடை மற்றும் தாமதம் என்பதும் ஒரு விதத்தில் நல்லது தான். ஜாதகருக்கு திருமண தடங்கல் மற்றும் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் மன முதிர்ச்சி, தடை நீங்கப் நடக்கும் திருமண பந்தத்தை நீடிக்க வைத்து,, மணமுறிவில் இருந்து காப்பாற்றுகிறது.

இதே போன்ற திருமணத் தடையை சட்டமும் ஏற்படுத்துகிறது.

இணையக்கூடாத இரத்த சம்பந்தம் உள்ளவர்கள்,மற்றும் ஏற்கெனவே திருமணம் நடந்து அந்த மனைவி அல்லது கணவன் உயிருடன் இருத்தல், போன்றவர்கள் திருமணம் செய்துக் கொள்ள தடை உள்ளது. மீறி திருமணம் செய்தாலும், அது சட்டத்தின் கண்களில் அப்படி ஒரு திருமணம் நடக்காத ஒன்றாகவே பார்க்கப் படுவதில்லை.

ஆனால் ஓ ன்று கவனியுங்கள். ஒரு மதத்தில் தடுக்கப்பட்ட உறவுமுறை, இன்னொரு மதத்தில், அங்கீகரிக்கபடுகிறது. உதாரணத்திற்கு, இஸ்லாம் மதத்தில் அக்காளின் மகளை மணக்க தடை உள்ளது. அதுவே தன அண்ணியின் தங்கை மகளை மணக்க தடை இல்லை. அதனால் நான் அடிக்கடி சொல்வது போல, சட்டங்களும் நீதியும் மாறக்கூடியது, இடத்திற்கு ஏற்றார் போல. ஆனால் தர்மம் என்று நிலைக்க கூடியது .

சனியை தர்ம கர்ம காரகன் என்பர். அதனால் அவரால் தடங்கல் ஏற்படுகிறது என்பது நல்லதுக்கு என்றே கொள்ள வேண்டும். சனிக்கிழமை என்றாலே சிலர் முகத்தை சுளிப்பார். ஆனால் தர்மகர்மவாதியானை சனியின் ஆதிக்கத்தில் தொடங்கும் எந்த காரியத்தையும் நன்றாகவே நடத்தி தருவான் என்பதாலேயே சிலர் அந்த நேரத்தில் தொடங்குவதும் உண்டு.

வாழ்வின் முக்கிய நிகழ்வான திருமண ஏற்பாட்டின்போது, இந்த தோஷம், தடை, தடங்கல் எல்லாம் ஏற்படும்போது என்ன செய்வது? எப்படி அதை நீக்க பெறுவது ?

தேவர்களின் பகல்பொழுது எனப்படும் உத்தராயண காலத்தின் ஆரம்பமான தை மாதத்தில் வரும் , பவுர்ணமி தினத்தில், சிவ அம்சமான சூரியன், சனியின் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் தன்னுடைய கடக ராசியில் சனியின் பூச நட்சத்திரத்தில் ஆட்சி பெற்று இருக்க சூரிய சந்திரர்கள் பூமியின் இருபுறமும் நேர்கோட்டில் இருக்க, அமைந்த தை பூச திருநாளில் , தேவர்களின் சேனாதிபதியும், செவ்வாயின் அதிபதியுமான முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது இந்த தோஷ நிவர்த்திக்கான நல்ல பலனை தரும்.

இந்த நன்னாளில் தான் சிவசக்தி ஐக்கியம் ஏற்பட்டதாகவும், இந்த பிரபஞ்சமே ஸ்ரிஷ்டிக்கப்பட்டு இயக்கம் தொடங்கியது என்றும், பூமியில் உயிர்கள் தோன்றக காரணமானபஞ்ச பூதங்களில் முதலில் தோன்றிய நீர், அடுத்தடுத்து நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் தோன்றியன என்பதாலேயே அந்த நாள் சிறப்பாக கொண்டப்படுகின்றது.

அது மட்டுமா ? எந்த மனக் கலக்கத்தின் காரணமாக சந்திரன் பங்கம் அடைகிறாரோ அதை சரி செய்யும் ஆற்றல் கொண்ட குரு, பூச நட்சத்திரத்தின் தேவதை. இந்த பூச நட்சத்திரத்தை புஷ்யம் என்றும் சொல்வார்கள். சமஸ்க்ரிதத்தில் புஷ்டி என்றால் பலம். சிறப்பு வாய்ந்த நட்சத்திரங்களில் ஒன்றான இதன் அதிபதியாக மட்டுமல்ல குரு, அறிவுக்கும் அதிபதி. இந்த தை பூசத் தினத்தில் இறைவன் நடராஜ கோலம் கொண்டு பதாஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதர் முனிவருக்கும் காட்சி தந்ததும வாயு பகவானும் வர்ண பக வானும் அக்னி தேவனும் இறைவனின் அதீத சக்தியை உணர்ந்ததும் , இயற்கையை கட்டுப் படுத்தும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு என்று உணர்ந்ததும அன்றே.

மேலும் 'தொட்டது துலங்கும் நாள்" அன்றே என்பதால் தான், அன்றைய தினம் திருமண பேச்சுகள் அன்று ஆரம்பிக்கும் வழக்கமும் உள்ளது.

"தை பூசத் திருநாளிலே மாமன் பெண் பார்க்க வந்தானடி " பாட்டு நினைவுக்கு வருகிறதா?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக