ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

ஆண் பிள்ளைகள் இல்லாமல் பெண் பிள்ளைகள் மட்டும் உள்ள வீடு எப்படி இருக்கும்?

 தேவதையை பார்த்திருக்கிறீர்களா?

ஒன்று இருந்தாலே கண் கொண்டு பார்த்து தீராது!!

இதில் ஒன்றுக்கும் மேல் என்னும் போது…

தோள் கண்டேன்.. தோளே கண்டென்னு பாடிக்கிட்டே இருக்கலாம்.!

நந்தவனத்தில் எத்தனை பூக்கள் என்றாலும் அழகு தான்!

அதுவும் நடுநடுவே க்ரோடன்ஸ் போன்ற அலங்கார செடிகள் இல்லையெனில் ?என்ன பெரிய குறை?

இன்னமும் உவப்பு தான்..

அது ஆண் குழந்தைகள்னு எடுத்துக்கிட்டா நான் பொறுப்பு இல்லே!

ஆஸ்திக்கு பையன் என்றாலும் "ஆசைக்கு ஒரு பெண்" என்று தான் சொல்வடையே உண்டு!!

‘அம்மா என்றால் ஓர் அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, என்று தனித்தனி அம்மாக்கள் கிடையாது" என்று ல.ச.ரா. "சிந்தா நதி"யில் எழுதுவார்..

ஆனால் எல்லா அப்பாகளுக்கும்ம், அவர் தன் பெண் குழந்தை தான் "குட்டி அம்மா"💐 அதுவே இரட்டிப்பானால், இனிப்புக்கு அளவு ஏது?

அதுவும் காரம் (!) பக்கத்தில் இல்லாத போது!!

அவளே வளரும்போது, "அக்கா " ஸ்தானத்தை ஏற்றவள் எப்போதும் "இரண்டாவது அம்மா" தான்

அதுவே "தங்கை" என்னும்போது, திருமணம் ஆகிப் போகும்போதும் அண்ணனை விட்டு கொடுக்காதவள்

"அணில் வால் மீசை கொண்ட அண்ணன் உன்னை விட்டு புலி வால் மீசை கொண்ட புருசனோட போய் வரவா?°

இதை அனுபவிக்க கொடுப்பினை இல்லாதவர் அனாதை தானே!!

குழந்தையாயிருந்தாலும் சரி குமரியானாலும் சரி பெண்ணின் பார்வைக்கு தான் எத்தனை மதிப்பு!!

இந்த "பார்வை " படாதா என்று ஏங்குபவர் யார் தான் இல்லை?☺️

இதே போல, இன்னொருவரின் பார்வைக்கும் நாம் ஏங்கி நிற்பவர்கள்.தான்..எனன.அவர் ஒரு ஆண்..

அவர். ஜோதிடத்தில் மதிப்பு வாய்ந்த கிரகம் என்னும் குரு தான்.

ஒவ்வொரு வருடமும் அவர் ஒரு ராசியிலிருந்து இன்னொன்றுக்கு பெயர்ந்து வரும் போது, அவர் பார்வை தன் மேல் விழாதா அதனால் தன் வாழ்க்கை ஏற்றம் பெறாதா என்று ஏங்குபவர் எத்தனை?

"பார்வை" என்று எதை சொல்கிறோம் .அதிலிருந்து வெளிப்படும் ஒளிவீச்சை தானே!!

ஒன்பது கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பார்வையை ..ஒளிவீச்சை கொடுத்தாலும் ஏன் குருவின் பார்வைக்கு மட்டும் மதிப்பு ?

ஏன் என்றால் அந்த பார்வையால் நாம் பெறும் சுபத்துவம் !!

பெண்ணும் அப்படியே ..அவள் இருக்கும் வீட்டில் தான் சுபத்துவம் பொங்குவதால், தான், அவள் தெய்வங்களோடு ஒப்பிடப்படுகிறாள்…

அவள் புகும் வீட்டில், மஹாலக்ஷ்மி என்று வரவேற்கப்படுகிறாள்..

உங்களுக்கு தெரியுமா?

வானவெளியில் உள்ள கிரகங்களில் குரு மட்டுமே தான் சூரியனிடம் இருந்து பெறும் ஒளியை இருமடங்காக திருப்பி கொடுக்கக் கூடியவர்…

இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை…

எனன காரணம்?

தெரியாது!

வானவெளியின் அறியப்படாத ராகசியங்களுள் இதுவும் ஒன்று.

பெண்ணும் ஆணை பொறுத்தவரையில் அறியமுடியா புதிராகத் தான் இருக்கிறாள்..

அது மட்டுமா? தான் பெறுவதை இருமடங்காக திருப்பி கொடுக்கக்கூடியவள்!

அது அன்பாக இருந்தாலும் சரி ஆஸ்தியாக இருந்தாலும் சரி.

"சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு செஞ்சு பக்குவமா அம்மா கையிலே குடுத்து போடு சின்னக்கணணு.அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க"

நீங்கள் கேட்கலாம்.குரு, .சூரியனிடம் இருந்து பெறும் ஒளி தானே..அப்படியானால் சூரியன் தானே குருவை விட சுபத்துவம் பெற்றவர் என்று..

ஒரு நாளில் பாதி நேரம் பூமி இருளில் மூழ்கி அதன் ஒளியை பெற முடியாமல் போகிறதே..அதனால் சூரியன் அரை பாபர்.

அப்படியானால் சந்திரன்..அதன் ஒளிக்கு ஈடாக குருவின் ஒளி வருமா? என்பீர்கள்.

உண்மை தான்.பவுரணமி சந்திரனின் ஒளி வெள்ளத்துக்கு முன் குருவின் ஒளி சற்று மட்டு தான்.ஆனால் அதுவே தேய்ந்து மறையும் போது?

அதிலும் ஒரு கறை உண்டே?!

ஆனால் குருவின் ஒளி வெள்ளத்திற்கு குறையே கிடையாது.அது நீச்சத்தில் இருந்தாலும் ஒளியின் அளவு குறையுமே தவிர, இல்லாமல் போவதில்லை..

ஒளியை அதிகம் பெறுவதால், என்ன நன்மை?

.இந்த ஒளியை அதிகமாக கொடுக்கும் கிரகங்களின் செயல்பாடுகள் தான் ஒருவனின் வாழ்க்கையில் நன்மை செய்கிறது

பெண்ணும் அப்படியே..

அவளை எத்தனை கவலைகள் பிரச்சினைகள் சூழ்ந்தாலும், தன்னை அண்டியவரை தன் அன்பெனும் ஒளிவெள்ளத்தில் பாதுகாப்பதில் வல்லவன்!!

அதனாலேயே மனைவியை "மந்திரி" என்றும் "துணைவி" "இல்லத்தரசி" என்றும் மரியாதை செய்கிண்றனர்..

இப்படி கூட சொல்லலாம்..நவககிரகங்களிலேயே அதிக பாவ கிரகமான சனி கூட, குருவின் பார்வைக்கும், இணைவுக்கும் மட்டும் தான் கட்டுப்படுவார்!!

சில ஆண்களை போல!!

இத்தகைய சுபத்துவம் மிக்கவன், ஏனைய உறவுகளை விட முக்கியமானவள் ..அல்லவா? நவக்கிரகங்களில் 'குரு' முக்கியமானது போல!!

குரு தான், உள்வாங்கும் ஒளியில் 33.3 சதவீதம் பிரதிபலிக்கிறதாம்.

சுக்கிரன் கிட்டத்தட்ட 40 சதவீத ஒளியை, பிரதிபலித்தாலும் அதை சுபத்துவம் கொடுக்கும் கிரகத்தின் வரிசையில், குருவுக்கு அடுத்த இரண்டாம் நிலையில் தான் நம் ரிஷிகள் வைத்தனர்…!!

காரணம். சுக்கிரன் இருப்பது சூரியனின் வெகு அருகில்..ஆனால் குருவோ பூமியின் வெளிவட்டப் பாதையில் வெகு தொலைவில் இருந்தும் ஒளி வெள்ளத்தை இரட்டிப்பாக கொடுப்பதால்!!

பெண்ணும் அப்படியே..அவள் அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும், தன்னை சுற்றியுள்ளோருக்கு பிரகாசமான ஒளியை அள்ளி வழங்குபவள்.!!

அதை வழங்கும் அவள் பிரகாசமான முகத்தை தான் " லக்ஷ்மிக்ரமன முகம்" என்று குருவுக்கும் தனத்திற்கும் உள்ள தொடர்பை அவளுடன் இணைந்தனர்!

ஒன்று கவனித்தீர்களா..குரு பிரதிபலிப்பது அதன் 33.3 சதவீத ஒளியையே..

பெண்ணிற்கும் 33% ஒதுக்கீடு மட்டுமே கொடுத்தாலும், அவள் தன் பங்கை இரட்டிப்பாக கொடுக்கிறாள் தானே!!😬

எந்த விதத்திலும் தன் ஒளியை அதிக அளவில் கொடுக்கும் கிரகம் தான் சுபத்துவம் கொண்டது என்கின்ற வேத ரிஷிகள் குருவை முதன்மை சுபத்துவம் வாய்ந்ததாக முன்நிலைப்படுத்துகிண்றனர்.

அது போலவே, வாழ்க்கைப் பாதையில் துணையாய் வந்து வழி காட்டுபவளும் "குரு' தானே!!

சொத்தில் சமயுரிமை கொடுத்த பின்பு, கூட பிறந்தவளை "பங்காளி" யாக பார்க்கும் காலம் வந்த பிறகு,

"தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரிய கண்டு" என்று அண்ணன் ஒருவன் வாடப்போவதில்லை என்னும் போது, அவன் தன்னுடன் பிறக்கவில்லை என்று ஏன் அவள் கவலை கொள்ளவேண்டும்??

ஏன் பெண்களை பூக்களோடு ஓப்பிடுகிறார்கள் தெரியுமா?

வாசனை தருவதால் என்பீர்கள் சிலர். .இன்னும் சிலரோ. அதை முகர்ந்து பார்த்து கசக்கி எறிபவர்.

அவர்க்கு தெரியாது..

"வேர் என்பது

கண்ணுக்கு தெரியாத

மரத்தின் பூ.

பூ என்பது

கண்ணுக்கு தெரியும்

மரத்தின் வேர்

(வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் தாகூர் கவிதை இது!)

பூக்கள் இருக்கும் இடம் எப்படி இருக்கும் என்று நான் சொல்லித் தானா உங்களுக்கு தெரியவேண்டும்??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக