ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 அக்டோபர், 2021

செல்வி ஜெயலலிதாவிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் என்னென்ன?

 அவர் வெறும் "செல்வி ஜெயலலிதா" அல்ல..ஜெகத்தை ஆண்ட "மகத்"தின் இராணி!!

முன்னர் எல்லாம், நிறைய மகான்களின் படங்களை பார்க்கும்போது, அவர்கள் தலைக்கு பின்னே ஒரு ஒளிவட்டம் காட்டப்படுவது பற்றி நானும் யோசித்ததுண்டு .

ஆனால் ஒளிவெள்ளத்திற்கும் மாபெரும் தலைவர்கள், ஞானிகளுக்கு உள்ள சம்பந்தம் அறியும்போது ஆச்சரியம் தான்!!

அது போன்ற அமைப்பு அவர்களுக்கு பிறவியிலேயே இருக்கும், பெரும்பாலும் பவுர்ணமியை ஒட்டி அவர்கள் பிறப்பு இருக்கும் என்பதை நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மாபெரும் தலைவி ஜெயலலிதா காட்டினாரே!!

கலைஞர் இறக்கும் இரு வாரத்திற்கு முன் சந்திரனுக்கு கிரகணம் பிடிக்கவில்லை?!!

  • அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ் இருக்கிறதே.., பவுர்ணமி சந்திரன்" தான் அமர்ந்த மகம் நட்சத்திரத்தின் ஒளியையும் பெற்றுக்கொண்டு கூடவே உச்ச குருவின் ஒளி பொருந்திய பார்வையையும் வாங்கிக்கொண்டு, அந்த ஒளிவெள்ளத்தில் பிறந்ததாலேயே அவர் காலம் முழுதும் Limelightலேயே இருந்தாரா?!!
  • இளம் வயதிலேயே கலைத்துறையில் பெரும் புகழ்!!

சுக்கிரன் உச்சமல்லவா?!!

  • அது மட்டுமா?..ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண்களை மண்டியிட வைத்தது எது?

வாலி கூட எதிரில் இருப்பவரின் சக்தியில் பாதியைத் தான் கவர்ந்துகொள்வானாம்.

ஆனால் ஜெயலலிதா எதிரில் நிற்கும் நபர் தன்னையறியாமல் தலை வணங்கக்கூடிய பேராற்றல் ..

பார்க்கும் கிரகத்தையும் உடன் இருக்கும் கிரகத்தையும் அப்படியே கவர்ந்துவிடும் சாயாக்கிரகம் எனப்படும் இராகுவை தான் நினைவுபடுத்துகிறது..

அவர் முதல்வராக ஆனதும் நீடித்ததும் இராகு தசையில் தான்..

இராகுவை போலவே அவர் வளர்ச்சியும் "பிரமாண்டம்."

  • அதே போல தான் பிரமாண்டமான விலங்கான யானைக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்த வைத்தது..அவரின் இந்த, பிராணிகளுக்கு அன்பு காட்டும் நிகழ்வை, குரு தசையில் ஒரு பரிகாரமாக செய்தார் என்று சொல்பவர் இருக்கலாம். ஆனால் கோயில்களில் முடங்கி கிடந்த அவைக்கு தன் தாயகம் திரும்பும் புத்துணர்ச்சியை கொடுத்ததென்னவோ நிஜம்!!
  • அவருடைய வார்த்தைகளில் இருந்த கூர்மை, அதில் இருந்த சிக்கனம், வாக்கு வன்மை அபரிதம்.இதற்கு அவரின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இருந்த சனி மட்டும் காரணமல்ல…அதிக உலக ஞானம் கொண்டவரின் வார்த்தைகlள் சுருங்கும் என்பதைத் தான் காட்டியது.

அவருக்கா ஞானம் இருந்தது என்கிறீர்கள்? இருந்திருந்தால் சொத்துகுவிப்பு வழக்கில் உள்ளே போவாரா என்பீர்கள்…

உண்மை தான் ..எத்தனை பெரிய மகானாக ரமணர் இருந்தும் புற்று நோயால் வாடவில்லையா? கர்ம வினை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் வருமே..இவருக்கு "உடன் பிறவாமல் " வந்தது.!!

அத்தோடு ரிஷபத்தில் இருக்கும் இராகு..அதுவும் இராசிக்கு லாபஸ்தானத்தில் வேறு இருக்கிறார்..மறைமுக தன லாபத்தை கொட்டத் தான் செய்வார்!!

  • ஆனாலும் ஜெயலலிதா எடுத்த மடிப்பிச்சை சற்றென்று இப்போது நினைவுக்கு வருகிறது. "பிச்சைக்காரன்" படத்தில் வந்த விஜய் ஆண்டனி செய்தது தானே!!

அதை அவர் பரிகாரமாக செய்தார் என்றும் கொள்ளலாம்.

  • "டான்சி இராணி" என்று விமர்சனம் செய்தவர்கள், "திருடன் திருப்பி கொடுத்துவிட்டால் அது திருட்டாகாதா?" என்றார்கள்.

இன்று நீதி விசாரணையில் இருப்பதிலும், வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியதாக புகார் கொடுத்தவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டோம் என்று வாதாடுகிறார்கள்..ஆனால் ஒரு எதிர்க்குரல் வந்ததா? பெண் என்றால் மட்டும் எத்தனை ஏளனம்? எப்போது சறுக்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது?

எப்படியோ அதிலும் முன்மாதிரி!!

வளர்ப்பு மகன் திருமணம் போல

  • அவர் உடலில் எத்தனையோ உபாதைகள் இருந்தும், உணவுக் கட்டுப்பாடு கொள்ளவில்லை என்பதும் அவரின் திடீர் மறைவுக்கு காரணம் என்கிறார்கள்.

ஆனால் அந்தந்த நேரத்தில் அததை அனுபவிக்க முடிந்தவரை.முயற்சித்தார் என்று தான் தோன்றுகிறது!

…ஓன்றை தவிர..

ஜென் தத்துவமும் இதைத் தானே சொல்கிறது!!.

  • "உணர்வு மிகுந்தால் அறிவு கெடும்.அறிவு மிகுந்தால் உணர்வு கெடும் " இல்லையா அதனால் தான் அறிவும் உணர்வும் மிகுந்த அவருக்கு நிகரான துணை கிட்டவில்லை!!
  • ஹெவியான உணவுக்கு பின் டீ குடித்தால் அஜீரணம் இருக்காது என்பார்கள். ஆனால் ஒரு "டீ பார்ட்டியால் "நிறைய பேருக்கு வயிற்றுப்போக்கே ஏற்பட்டது!!
  • ஒரு சிங்கத்தின் மீது அம்பு எய்தால், எய்தவனை நோக்கி பாயும். நாயின் மீது எதையாவது வீசி எறிந்தால் எறியப்பட்ட பொருளை நோக்கியே ஓடும், .எய்தவனை பற்றி கவலைப் படாது.

அது போல கஷ்டங்களை எதிர்நோக்கும் போது அதை தீர்க்கும் வழியை கண்டுபிடித்து தீர்க்க முனைந்தாரே தவிர, நாயைப் போல பிரச்சினையின் பின் ஓடவில்லை..

அது டெல்லியே என்றாலும்!!

  • மர்மங்கள் நிறைந்த அவர் வாழ்க்கை மர்மமாகவே முடிவு பெற்றதும் அதிர்ச்சியே

இட்லியை பார்த்தாலே நினைக்கத் தோணுதே!!

"அம்மா" போய் "தாய்" (?!) வந்ததைப் பார்க்கும்போது, "அம்மு" இப்படி அன்பிற்காக ஏங்கி, அறம் பிறழ்ந்திருக்கக்கூடாது என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை!!

அன்றைக்கே சொன்னாளே அவ்வைபாட்டி

"கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?"

இருக்கும்போதும் சரி..இறக்கும்போதும் அவர், நமக்கு "போதிக்காமல் போகவில்லை..

நாம் தான் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் கொள்ளவேண்டும்!

புதன், 22 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 25...கடக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்க என்ன காரணம்? ஏன் கேட்கிறேன் என்றால் நான் கடக ராசியில் பிறந்தவள்.

 கடக இலக்கின/இராசியின் சிறப்பு தெரிந்தால் இப்படி கேட்க மாட்டீர்கள் …):

மற்ற இலக்கினங்களுக்கு இல்லாத தலையாய விசேஷம கடகத்துக்கு என்ன என்று தெரியுமா ?

ஒரு ராஜ தர்பாரில் அரசனின் வலப்பக்கம் அரசி வீற்றிப்பது போல தான் ஜோதிடத்தின் இராசிக்கட்டங்களில் சிம்மமும் கடகமும் அமைந்திருக்க, இரண்டு புறத்திலும் மற்ற கிரகங்களின் இராசிக்கட்டங்கள் வரிசையாக இருக்கும்.

இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமாகிய சூரியனும் அதன் ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் சந்திரனும் அம்மையப்பனாக தான் மதிக்கப்படுகிறார்கள்!!

அதுவும் சந்திரன் தான், மற்ற கிரகங்களின் தேவையில்லாத ஒளியை வடிகட்டி பூமிக்கு அனுப்புகிறாள்… உலகத்துகெல்லாம் தாய் அல்லவா . …

.அந்த மாதாகாரகன் என்னும் சந்திரன் ஆட்சி செய்யும் இலக்கினம் கடகம்.

  • அப்புறம், 'மனம்' என்ற ஒன்று ்இயங்குவதால் தான் ஒருவன் மனிதன் ஆகிறான். ..அந்த மனதை ஆளும் மனோகாரகன் தான் இந்த சந்திரன். எத்தனை பெரிய புத்திசாலியாய் இருந்தால் என்ன ..மனம் சரியாய் இருந்தால் தானே புத்தியும் வேலை செய்யும்!!
  • அதனால் தான், யாரின் பார்வை படாதா என்று எல்லோரும் ஏங்குகிறார்களோ, அந்த 'குரு இங்கு தான் உச்சமாவார்!!
  • அந்த குருவும் பதிமூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் தன இருப்பை மாற்றி , அருள் செய்கிறார். ஆனால் சந்திரனோ ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி சந்திரனாக இருக்கும் போதும், அதற்கு முன்னும் பின்னும் இருக்கும் நாட்களில் தன பூரண சுபத்துவத்தை நமக்கு வழங்குகிறார்.
  • ஒரு முக்கிய அம்சம் பார்த்தீர்களா…இறைவனுக்கு உகந்த பெருவிழாக்கள் எல்லாம் பவுர்ணமியை ஒட்டி தான் இருக்கும்!!
  1. சித்ரா பவுர்ணமி - அனுமன் ஜெயந்தி
  2. வைகாசி பவுர்ணமி - நரசிம்ம ஜெயந்திபுத்த பூர்ணிமாவைகாசி விசாகம்
  3. ஆனிப் பவுர்ணமி - சாவித்திரி விரதம்
  4. ஆடிப் பவுர்ணமி - குரு பூர்ணிமா, ஹயக்ரீவ ஜெயந்தி
  5. ஆவணிப் பவுர்ணமி - ரக்சா பந்தன்ஓணம்ஆவணி அவிட்டம்
  6. புரட்டாசி பவுர்ணமி - உமா மகேசுவர விரதம்பித்ரு பட்சம்
  7. ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
  8. கார்த்திகைப் பவுர்ணமி - கார்த்திகை விளக்கீடு
  9. மார்கழிப் பவுர்ணமி - திருவாதிரைதத்தாத்ரேய ஜெயந்தி
  10. தைப் பவுர்ணமி - தைப்பூசம்
  11. மாசிப் பவுர்ணமி- மாசி மகம்
  12. பங்குனிப் பவுர்ணமி - ஹோலிபங்குனி உத்திரம்

இறைவனுக்கே உகந்தது என்னும்போது நமக்கு??

  • மற்ற கிரகங்களுக்கு எல்லாம் ஒன்றுக்கொன்று பகை பாராட்டும்போது, பகை என்று மற்ற எந்த கிரகத்தையும் ஒதுக்காத தன்மை சந்திரனுக்கு உண்டு. உண்மை..புதன தன தாயான சந்திரனை பகையாக நினைத்தாலும், புதனை சந்திரன் பிள்ளையாக பாசம் காட்டுவது இல்லையா!!, அது தான் தாய்மையின் பூரண தன்மை!!
  • அதுவும் கடக ராசி ஒரு நீர் ராசி. ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது. அதாவது இயங்கிக் கொண்டே இருப்பது.அது போலத்தான் இந்த இராசிக்காரர்களும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், விருச்சிகமும் மீனமும் நீர் ராசிகள் தான். ஆனால் விருச்சிகத்தின் தன்மை ஒரே நிலையில் இருக்கும் நீரை குறிக்கும் என்றால், மீனம் கடலை குறிக்கும். அங்கே ஓட்டமும் இருக்கும். நிலைத்த நிலையும் இருக்கும்..அதனால் கடகமே நீர் இராசிகளில் வலிமையானது..சர இராசி இல்லையா!!
  • அது போல முரட்டுத்தனத்துக்கு சொந்தக்காரனான செவ்வாய், இங்கு வலு இழந்து நீச்சமாகிறது…பின்னே…நீரிடம் நெருப்பு அணைந்து தானே போக வேண்டும்!!
  • நீரின் முக்கியம் நான் சொல்லியா தெரிய வேண்டும்..தாரை வார்த்துக் கொடுப்பதற்கும் தண்ணீர் தானே வேண்டும்.!!

சுக்கிரன் அரை குருடு ஆன கதை உங்களுக்கு தெரியும் தானே!!

எல்லாம் சரி..ஆனால் கஷ்டம் மட்டும் தானே நான் பார்க்கிறேன் என்கிறீர்களா?

'யாருக்கு தான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ..

ஆனால் பொறுமையின் சின்னமான அன்னை ஆட்சி செய்யும் இராசியாயிற்றே…எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டான்னு கடவுள் நினைக்கிறார்ணா, நம்மை வேறு எதற்கோ தயார்ப்படுத்துகிறார் என்று தானே பொருள்??

உளியின் வலியை தாங்காத கல்,, கடவுள் சிலையாக ஆசைப்படமுடியுமா??

தானாகவே கிடைக்கும் எதற்கும் மதிப்பு தான் உண்டா?

பெயர் பெற்ற அரசர்களின் சரித்திரம் படிக்கும்போது நமக்கு தெரிவது என்ன? ஜெயிக்கவேண்டும் என்றால் எதிரி என்று ஒருவன் இருக்க வேண்டும்…அவனை வெற்றி கொண்டவன் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறான்…

அப்படியின்றி ஆண்ட எத்தனையோ மன்னர்கள் பெயர் தெரியாமலேயே போனார்கள்!!

நமக்கு வரும் தடைகளும் அப்படி தான்…

ஆனாலும் இத்தனை தடைகளை தாண்டியும் வந்துவிடுவோம் என்று தானே மனதை ஆளும் கடக இராசிககாரருக்கு கடவுள் கொடுத்திருக்கிறான்….

அந்த இலக்கை அடைய நம்மை நாமே செதுக்கி கொள்ள கிடைத்த வாய்ப்பாகவே இதையும் கடந்து வருவோம்!!

இதோ தலை சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் நீங்கள் கற்ற பத்து பாடங்கள் என்ன என்று கேட்டபோது அவர் சொன்னவை:

  1. உங்கள் ஆர்வத்தை தொடருங்கள்.
  2. விடாமுயற்சி மதிப்பில்லாதது.
  3. நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்
  4. கற்பனை விலைமதிப்பில்லாதது.
  5. தவறுகள் செய்யுங்கள்.
  6. நிகழ்காலத்தில் வாழுங்கள்
  7. மதிப்பை உருவாக்குங்கள்.
  8. வேறு முடிவை எதிர்பார்க்காதீர்கள்
  9. அனுபவததிலிருந்துதான் அறிவு வருகிறது
  10. விதிகளை கற்றுக்கொண்டு மற்ற எவரையும் விட சிறப்பாக செயல்படுங்கள். .

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

சனி, 17 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி 05... ஒரு ஜாதகத்தில் எட்டாம் இடம் ஏன் துர்ஸ்தானம் எனப்படுகிறது? எட்டாமிடம் வலுப்பெற்றால் அந்த ஜாதகரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

        எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ, இப்போ எந்த எட்டில் நீயும் இருக்கே தெரிஞ்சிக்கோ" பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது…

வாழ்க்கையை எட்டு எட்டா பிரிக்கிறோமோ இல்லையோ நம்ம உடம்பை எண் சான் உடம்புன்னு தான் சொல்றாங்க. அதற்கு தேவையான பயிற்சி கூட பாருங்க ….எப்படியிருக்குன்னு…

ஆனாலும் இந்த எட்டாம் நம்பர் நம்மை ரொம்பத் தான் பயமுறுத்துது இல்லே?!

நம்ம பெயர், குடியிருக்கிற வீடு, வண்டி எண் இப்படி முடிஞ்ச வரைக்கும் இந்த எண் வர்றதை தவிர்துக்கிட்டு தான் வர்றோம்…

ஏன்?

அது ஒரு ராசியில்ல்லாத நம்பர்ன்னு மனசிலே பதிஞ்சுடுச்சு…இல்லையா?!

இந்த ஜாதகத்தில் இருக்கும் எட்டாம் பாவமும், அதாவது கட்டம், சாதரணமானது இல்லீங்க.

அது ஜாதகரின் ஆயுளை குறிக்கிறது. அதனால் தான் அதை ஆயுர் பாவம் என்கின்றனர். அதை துர்ஸ்தானம் என்று சொல்ல முடியாது.. ஏனென்றால் அவரவரின் கர்மவினைகேற்பவே அவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்கப்பட்டு பிறக்கிறார்..

உண்மை தான் நம்முடைய எக்ஸ்பையரி தேதியுடன் தான் பிறக்கிறோம்.. அது புதிராக இருக்கும் வரை நமக்கு கவலை இருக்காது. தெரிஞ்சா..அப்புறம் நிம்மதி இருக்குமா?

ஆனாலும் ஒரு புதிர்னு வந்துட்டா அதுக்கு விடை தேடாம விட மனசு வருமா?

ஒருவருக்கு அல்பாயிசா, மத்திய ஆயிசா அல்லது பூரண ஆயுசான்னு அவரோட ஜாதகத்தை பார்த்தே சொல்ல முடியும்…அதாவது கணித்து சொல்ல முடியும்..

நிறைய ஜோதிடர்கள் இந்த 'கணிப்பு'லே தான் தவறிடுறாங்க. ஜோதிடம் ஒரு கணக்கும் அறிவியலும் கலந்த கலை. 'கணக்கு என்றால் பிணக்கு 'ன்னு சொல்பவர்கள் ஜோதிடத்தை கணிப்பதை விட்டு சற்று அப்பால் நகர்வது நல்லது!!

இப்போ நமக்கு சக்தி இல்லே. அல்லது சக்தி குறைஞ்சு போயிருக்கு. அல்லது பிடிக்காத, எதிரின்னு நினைக்க கூடிய வீட்டுக்கு கட்டாயமா போக வேண்டியிருக்கு. இல்லே அவரோட பார்வை படுற இடத்திலே இருககிறோம்னு வையுங்க. அப்பநம்ம வலிமை குறையும் இல்லையா ..

அது போத் தான், எட்டாம் பாவத்தின் அதிபதி, எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறாரோ அதன் அதிபதி, பகை வீட்டில் இருந்தாலோ, பார்வை பெற்றோலாலோ,அல்லது நீச்சம் அடைந்தாலோ, ஜாதகருக்கு அற்பாயிசு என்கிறது நாடி ஜோதிடம்.

அதுவும் அந்த பாவத்தில் பாவக்கிரகங்கள் எனப்படும், செவ்வாய், சனி, இராகு, கேது இருந்தால், பூர்வ ஜென்ம பாவம் இருக்கும் எனப்படுகிறது. நிற்கும் கிரகத்திற்கு ஏற்றார்போல இறப்பு ஏற்படும். உதாரணமாக இராகு அந்த ௮ம் பாவத்தில் இருந்தால், இறப்பிற்கு முன்னால்இறப்பு உடலில் வலியுடன் ஏற்படும்.

இந்த அற்ப ஆயுசு என்று எப்படி கணக்கு போடுவது என்றால், வேத கால ஜோதிடத்தின் படி ஒருவரின் ஆயுள் காலம் 12௦வருடங்கள்.என்று கணக்கிட்டுள்ளார்கள். . அதை வைத்து கணக்கு போடுங்க..

இதுவே அந்த அதிபதி நட்பு வீட்டில் இருந்தால், ஜாதகர் 66 வயது வரை வாழ்வார் என்பர். அதே சமயம், லக்னத்திர்கான பாப கிரகங்களில் ஏதேனும் ஒன்று, பார்த்தாலோ, கஇணைவு பெற்றாலோ, அந்த 66 வயது முடியும் முன்னே இறப்பு ஏற்படும்.

அந்த அதிபதி உச்சமும் இல்லாத நீச்சமும் இல்லாத மத்தியமான வீட்டில் இருக்கிறார் என்றால், அதாவது உதாரனத்திற்க்கு குரு, புதன் லக்கின கேந்திரத்திலும், சந்திரன், சுக்கிரன் ௪ம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கும் மத்திய ஆயுள்.

பொதுவா இந்த அதிபதி சர ராசிகளில் இருந்தால், ஆயுள் காலம் கூடும். மாறாக உபய ராசிகலிலோ சத்திர ராசிகழிலோ இருந்தால் ஆயுள் குறையும்.

மேலே சொன்னது எதுவும் பாலரிஷ்ட ஜாதகத்துக்கு பொருந்தாது.

பாலரிஷ்டா தோஷம் தெரியுமில்லையா? பால கண்டம் எனப்படும் இது பொதுவாக, சந்திரன் எட்டாம் வீட்டிலோ , ஜென்ம ஜாதகத்தில் இருந்தால் 12 வயதுக்கு முன்னர் இறப்பு நிகழும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் சுப கிரகங்களின் பார்வை பெறும்போது, அந்த கண்டதிலிருந்து மீண்டு வருவர்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சின்ன வயதில் , டைபாய்டு காய்ச்சல் வந்து நான் படுத்த படுக்கையாய் கிடந்தது. நான் பிழைக்கமாட்டேன் என்று டாக்டர்கள் கை விரித்துவிட்டார்களாம். வீட்டிற்கு வெளியே ஐஸ் வண்டி போகும்போது, அந்த ஜுரத்திலும், குச்சி ஐஸ் வேண்டும் என்று அழுதிருக்கிறேன். என்ன செய்ய என்று தெரியாமல் அம்மா முழிக்க, அப்போது வீட்டிற்கு வந்த டாக்டர்,போற குழந்தை கேட்பதை வாங்கி கொடுக்க" சொல்லியிருக்கிறார்!!

ஆனாலும் பிழைத்துவிட்டேன். !!

இப்படி எழுதியே உங்களையெல்லாம் சாகடிக்கவா"ன்னு கேட்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது ):

சரி சரி…..ரொம்ப கொடுமையா போயிட்டு இருக்கில்லே..

இப்போ பூர்ண ஆயுசை பத்தியும் பாப்போம்..

அந்த அதிபதி தான் உச்சம் பெறக் கூடிய வீட்டில் இருந்தாலோ அலது சொந்த வீட்டில் இருந்தாலோ …கேட்கவே வேண்டாம். பூரணாயுசு தான்…!!

ஆனாலும், அவர் உச்சம் பெறும் வீட்டில் இருந்தால் கிடைக்கும் ஆயுளை விட, சொந்த வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் ஆயுள் சற்று குறைவு தான்.. . என்ன. அங்கே இருந்தா அவர் 77 வருடம் மேலே கூட வாழவார்கள். ஒரே கண்டிஷன் எந்த பாவ கிரகங்களும் அவரோடு தொடர்பில் இருக்க கூடாது…அதாவது ஒரே வீட்டில் கூட இருப்பது, பார்வை பெறுவது…இப்படி..

இந்த பார்வைக்கு இருக்கிற மதிப்பை பாருங்களேன்….பின்னே…சைட் அடிக்கிறது என்ன சும்மாவா?! ):

ஆனாலும்…ஏழாம் வீட்டிலிருந்து இந்த 'ராகு' பார்த்தாலும் வீட்டிலே ஒத்துக்குருவாங்க… நம்ம வீட்டுக்கு ஏழாம் வீட்டில் இருக்கும் 'ரகு' பார்த்தா தான்…….. !!! )::

நிறைய பேருக்கு மரணம் என்ற வார்த்தையை கேட்டாலே பயம் வந்துரும்.

ஆனா..அதை மறைச்சு வச்சுக்கிட்டு இருப் பதாலேயே அது இல்லாம போகுமா என்ன?

'நமக்கு இரண்டு வாழ்க்கை உண்டு. எப்போது நமக்கு ஒரு வாழ்க்கை தான் உள்ளது என்று உணர்கிறோமோ அப்போது தான் அந்த இரண்டாம் வாழ்க்கை தொடங்குகிறது' என்றார் கண்புயுசியஸ்.

உண்மை தான் இந்த வாழ்க்கை இப்படித் தான் முடியும், நமக்கு நேரம் அதிகம இல்லை என்று உணரும்போது தான், இருக்கும் காலத்திற்குள் எல்லோருடனும் அன்பு பாராட்டவும், விருப்பு வெறுப்புகளை அகற்றவும் கற்று கொள்வோம். அந்த விதத்தில் எட்டாம் பாவம் நமக்கு காட்டுவது ஞான ஒளி தான்!!

வலியை உணர்பவர் தான் உயிருடன் இருக்கிறார்….அடுத்தவர் வலியை உணர்பவர் தான் மனிதன் ஆகிறார்…என்றார் லியோ டால்ஸ்டாய்.

நாமும் அதையனர்ந்து நடக்கும்போது, சொர்க்கம் நம் கண் முன்னே விரியும்!!                                                                               

ஞாயிறு, 30 மே, 2021

ஜாதகத்தில் சகட யோகம் என்றால் என்ன?

 சகட" என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர்

வாழ்க்கை இன்பமும், துன்பமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது என்பதுதான் சகடயோகம் உணர்த்தும் உண்மை

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால்,
அது சகட யோகத்தைக் கொடுக்கும்

  1. . ஜாதகரின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும்.
    ஜாதகர் ஒரு இடத்தில் இருக்க மாட்டார். தன்னுடைய வேலை காரணமாக அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பார் அல்லது அலைந்து கொண்டே இருப்பார்.
  2. சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி வருவதைப் போல, சகடயோக ஜாதகக்காரர்கரின் அதிர்ஷ்ட நிலைமை தடைப்படுவதும், தடை நீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
  3. ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில்
    இருப்பது நல்லதல்ல. அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள். எட்டாம் பொருத்தம் என்பார்கள்
    திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின்
    ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது

அதே சமயம், அந்த யோகத்தை ரத்து செய்யும் அமைப்பும், சில ஜாதகருக்கு இருக்கும்:

  1. சகடயோகச் சந்திரன், ஜாதகரின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில்
  2. சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில்
  3. சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில்
  4. சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர் நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும்

யோகம் பறி போனதே என்ற கவலை வேண்டாம். அது நல்லதுதான். இது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே😀

அப்படியும் ஆகவில்லை எனில்,

பரிகாரம்

  1. சகடயோக ஜாதகக்காரர், தன்னுடைய வாழ்க்கையை அதற்குத் தகுந்தபடி
    அமைத்துக்கொள்ள வேண்டும்.தன் தொழிலால் குடும்பமும், குடும்பத்தால் தொழிலும் பாதிக்காதவகையில் இரண்டையும் அனுசரித்து வைத்துக்கொள்ள
    வேண்டும்.Travelling agent,Travelling salesman, Medical representative, Railway Guards, Drivers போன்ற தொழில்களை ஏற்கலாம்.
  2. சகட யோகம், ஜாதகத்தில் உள்ள மற்ற ராஜ யோகங்களைத் தடுக்காது.
    அந்த யோகங்கள் பலமாக இருந்தால், இது வளைந்து கொடுக்கும்!
  3. சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது. வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பூரண விடுதலை உண்டு.

ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினசரி காலையில் நூற்றி எட்டுமுறை சொல்லி வாருங்கள். அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி தவிடு, மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள். மனதிற்கு அமைதிக் கிட்டும்.

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

சனி, 29 மே, 2021

மனிதனுக்கு உள்ள ஐந்து விரல்களின் பயன்கள் என்னவென்று கூறமுடியுமா?

 ஒரு நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு..திடீரென்று என் விரல் நகம் பட்டுப் போக ஆரம்பித்தது.என்ன ஆனதென்றே தெரியாது.முழுதுமாக நகமே இல்லாமல் போனது..சோதனை மேல் சோதனையாக…அடுத்து இருந்த விரல்களுக்கும் அதே நிலை.பத்து விரல்களிலும் நகம் இல்லாமல் .நினைத்து பாருங்கள்..

கொடுமையான காலம் அது. .

கீழே ஒரு பேப்பர் விழுந்தால் கூட எடுக்க முடியாது.அதுவாவது பரவாயில்லை.. யார் முன்னிலையிலும் கைகளை தெரியும்படி காட்டிவிட முடியாது..பரிதாபம் காட்டும் முகத்தோற்றம், உச்சு கொட்டுதல், விளக்கம் கேட்பது எண்ற போர்வையில் வரும் கேள்வி அம்புகள்…நொந்து போன தருணம் அது.

அதன் பிறகு பட்டுப்போன நகங்கள் புதிதாக முளைத்து, ..

வெறும் நகம் தானே என்றில்லாமல், இப்போது அவற்றை ஆசை ஆசையாக பார்த்துக்கொள்கிறேன்.😀

ஏன் சொல்கிறேன் என்றால் , ஒன்றின் இழப்பின் போதே அதன் அருமை தெரிகிறது!!

விரல் மட்டுமல்ல விரலின் நகமும் பயனுள்ளது என்பதையும் தெரிந்துக்கொள்வோம்!!

இதோ இந்த விரல்களையே எடுத்து கொள்ளுங்களேன்..

ஆண்களை விட பெண்களின் விரல்கள் மிகவும் அழகானது..ஒரு காய்கறிக்கே அதன் பெயர் வைக்கும் அளவிற்கு..😀

உங்களுக்கு தெரியுமா கைரேகை சாஸ்திரப்படி,

பொதுவாக இந்த நான்கு விரல்களும் சற்று நீளமானவையாக இருந்தால்,

அந்த விரல்களுக்கு உடையவர்

  • நல்ல பொறுமைசாலியாக இருப்பார்..
  • தூய்மையான பழக்கம் கொண்டவர்.
  • எதையும் பதற்றம் இன்றி நிதானமாக செயல்படுபவர்
  • அதனால் நீண்ட காலம் உயிர் வாழக்கூடியவர்
  • எதையும் நுணுக்கமாக கவனிப்பவர்
  • முன்னெச்சரிகையுடன், எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்.
  • தனிமை விரும்பி
  • லேட்டானாலும் லேடஸ்ட்டா செய்யனும்னு நினைக்கிறவர்
  • கடமை கண்ணியம், அப்புறம் அந்த இன்னொன்னு என்ன…ஆங்..அதென்ன …கட்டுப்பாடு (..அதையும் சேர்த்துக்கோங்கா).கொண்டவர்கள்
  • பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பவர்
  • தோல்வியுற்றவருக்கு பரிவு காட்டுபவர்.
  1. செக் பண்ணி பாருங்க.கரெக்ட்டா பொருந்தும்..ஏன் சொல்றேன்னா..எனக்கு பொருந்துதே...🤣 

ஒவ்வொரு விரலுக்கும் ஒரு பெயர் உள்ளதே…முதலில் கட்டை விரல் என்னும் பெருவிரல்..அதை அடுத்து ஆட்காட்டி விரல் என்னும் சுட்டு விரல், நடு விரல், அதை அடுத்து மோதிர விரல், அடுத்து சுண்டு விரல் எனப்படும் சிறு விரல்..இவை தான் அந்த ஐந்து விரல்கள்..

ஆனால் கை ரேகை சாஸ்திரத்தில், இந்த சுட்டு விரல் எனப்படும் "குரு"விரல் நடு விரல் எனப்படும் "சனி"விரல் அல்லது 'பாம்பு" விரல், "சூரிய" விரல் என்னும் மோதிர விரல், "புதன்" விரல் என்னும் சுண்டு விரல் ஆகியவற்றின் தன்மை கொண்டே ஒருவரின் குணநலன்கள், எதிர்காலம் குறித்தும் கணிக்கலாம்..

உதாரணமாக இந்த குரு விரல், சூரிய விரலை காட்டிலும் நீளமாக இருந்தால், அவர் தன்மானம் உள்ளவர், ஒழுக்க சீலர், எவ்வளவு பெரிய பொறுப்பையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக்கொள்பவர்,.

அதேபோல சனிவிரல் , மற்ற விரல்களை விட சற்று நீளமாக இருக்கும். அதை விட கூடுதலாக இருந்தால், அவர் தன் நலன் பெரிதும் பார்ப்பவராக இருப்பார்.

இதே போல் ஒவ்வொரு விரலும், அதன் அங்குலாஸ்திகளும் அவர் வரலாறையே சொல்லக்கூடியவை.

இந்த விரல்கள் ஒவ்வொன்றின் பயனும் தனித்தன்மையானது…கட்டை விரலை பற்றி தனி கட்டுரையே எழுதலாம்..

அதனால இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்…நண்பர்களே..😁

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா