செவ்வாய், 26 அக்டோபர், 2021

செல்வி ஜெயலலிதாவிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் என்னென்ன?

 அவர் வெறும் "செல்வி ஜெயலலிதா" அல்ல..ஜெகத்தை ஆண்ட "மகத்"தின் இராணி!!

முன்னர் எல்லாம், நிறைய மகான்களின் படங்களை பார்க்கும்போது, அவர்கள் தலைக்கு பின்னே ஒரு ஒளிவட்டம் காட்டப்படுவது பற்றி நானும் யோசித்ததுண்டு .

ஆனால் ஒளிவெள்ளத்திற்கும் மாபெரும் தலைவர்கள், ஞானிகளுக்கு உள்ள சம்பந்தம் அறியும்போது ஆச்சரியம் தான்!!

அது போன்ற அமைப்பு அவர்களுக்கு பிறவியிலேயே இருக்கும், பெரும்பாலும் பவுர்ணமியை ஒட்டி அவர்கள் பிறப்பு இருக்கும் என்பதை நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மாபெரும் தலைவி ஜெயலலிதா காட்டினாரே!!

கலைஞர் இறக்கும் இரு வாரத்திற்கு முன் சந்திரனுக்கு கிரகணம் பிடிக்கவில்லை?!!

  • அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ் இருக்கிறதே.., பவுர்ணமி சந்திரன்" தான் அமர்ந்த மகம் நட்சத்திரத்தின் ஒளியையும் பெற்றுக்கொண்டு கூடவே உச்ச குருவின் ஒளி பொருந்திய பார்வையையும் வாங்கிக்கொண்டு, அந்த ஒளிவெள்ளத்தில் பிறந்ததாலேயே அவர் காலம் முழுதும் Limelightலேயே இருந்தாரா?!!
  • இளம் வயதிலேயே கலைத்துறையில் பெரும் புகழ்!!

சுக்கிரன் உச்சமல்லவா?!!

  • அது மட்டுமா?..ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண்களை மண்டியிட வைத்தது எது?

வாலி கூட எதிரில் இருப்பவரின் சக்தியில் பாதியைத் தான் கவர்ந்துகொள்வானாம்.

ஆனால் ஜெயலலிதா எதிரில் நிற்கும் நபர் தன்னையறியாமல் தலை வணங்கக்கூடிய பேராற்றல் ..

பார்க்கும் கிரகத்தையும் உடன் இருக்கும் கிரகத்தையும் அப்படியே கவர்ந்துவிடும் சாயாக்கிரகம் எனப்படும் இராகுவை தான் நினைவுபடுத்துகிறது..

அவர் முதல்வராக ஆனதும் நீடித்ததும் இராகு தசையில் தான்..

இராகுவை போலவே அவர் வளர்ச்சியும் "பிரமாண்டம்."

  • அதே போல தான் பிரமாண்டமான விலங்கான யானைக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்த வைத்தது..அவரின் இந்த, பிராணிகளுக்கு அன்பு காட்டும் நிகழ்வை, குரு தசையில் ஒரு பரிகாரமாக செய்தார் என்று சொல்பவர் இருக்கலாம். ஆனால் கோயில்களில் முடங்கி கிடந்த அவைக்கு தன் தாயகம் திரும்பும் புத்துணர்ச்சியை கொடுத்ததென்னவோ நிஜம்!!
  • அவருடைய வார்த்தைகளில் இருந்த கூர்மை, அதில் இருந்த சிக்கனம், வாக்கு வன்மை அபரிதம்.இதற்கு அவரின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இருந்த சனி மட்டும் காரணமல்ல…அதிக உலக ஞானம் கொண்டவரின் வார்த்தைகlள் சுருங்கும் என்பதைத் தான் காட்டியது.

அவருக்கா ஞானம் இருந்தது என்கிறீர்கள்? இருந்திருந்தால் சொத்துகுவிப்பு வழக்கில் உள்ளே போவாரா என்பீர்கள்…

உண்மை தான் ..எத்தனை பெரிய மகானாக ரமணர் இருந்தும் புற்று நோயால் வாடவில்லையா? கர்ம வினை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் வருமே..இவருக்கு "உடன் பிறவாமல் " வந்தது.!!

அத்தோடு ரிஷபத்தில் இருக்கும் இராகு..அதுவும் இராசிக்கு லாபஸ்தானத்தில் வேறு இருக்கிறார்..மறைமுக தன லாபத்தை கொட்டத் தான் செய்வார்!!

  • ஆனாலும் ஜெயலலிதா எடுத்த மடிப்பிச்சை சற்றென்று இப்போது நினைவுக்கு வருகிறது. "பிச்சைக்காரன்" படத்தில் வந்த விஜய் ஆண்டனி செய்தது தானே!!

அதை அவர் பரிகாரமாக செய்தார் என்றும் கொள்ளலாம்.

  • "டான்சி இராணி" என்று விமர்சனம் செய்தவர்கள், "திருடன் திருப்பி கொடுத்துவிட்டால் அது திருட்டாகாதா?" என்றார்கள்.

இன்று நீதி விசாரணையில் இருப்பதிலும், வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியதாக புகார் கொடுத்தவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டோம் என்று வாதாடுகிறார்கள்..ஆனால் ஒரு எதிர்க்குரல் வந்ததா? பெண் என்றால் மட்டும் எத்தனை ஏளனம்? எப்போது சறுக்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது?

எப்படியோ அதிலும் முன்மாதிரி!!

வளர்ப்பு மகன் திருமணம் போல

  • அவர் உடலில் எத்தனையோ உபாதைகள் இருந்தும், உணவுக் கட்டுப்பாடு கொள்ளவில்லை என்பதும் அவரின் திடீர் மறைவுக்கு காரணம் என்கிறார்கள்.

ஆனால் அந்தந்த நேரத்தில் அததை அனுபவிக்க முடிந்தவரை.முயற்சித்தார் என்று தான் தோன்றுகிறது!

…ஓன்றை தவிர..

ஜென் தத்துவமும் இதைத் தானே சொல்கிறது!!.

  • "உணர்வு மிகுந்தால் அறிவு கெடும்.அறிவு மிகுந்தால் உணர்வு கெடும் " இல்லையா அதனால் தான் அறிவும் உணர்வும் மிகுந்த அவருக்கு நிகரான துணை கிட்டவில்லை!!
  • ஹெவியான உணவுக்கு பின் டீ குடித்தால் அஜீரணம் இருக்காது என்பார்கள். ஆனால் ஒரு "டீ பார்ட்டியால் "நிறைய பேருக்கு வயிற்றுப்போக்கே ஏற்பட்டது!!
  • ஒரு சிங்கத்தின் மீது அம்பு எய்தால், எய்தவனை நோக்கி பாயும். நாயின் மீது எதையாவது வீசி எறிந்தால் எறியப்பட்ட பொருளை நோக்கியே ஓடும், .எய்தவனை பற்றி கவலைப் படாது.

அது போல கஷ்டங்களை எதிர்நோக்கும் போது அதை தீர்க்கும் வழியை கண்டுபிடித்து தீர்க்க முனைந்தாரே தவிர, நாயைப் போல பிரச்சினையின் பின் ஓடவில்லை..

அது டெல்லியே என்றாலும்!!

  • மர்மங்கள் நிறைந்த அவர் வாழ்க்கை மர்மமாகவே முடிவு பெற்றதும் அதிர்ச்சியே

இட்லியை பார்த்தாலே நினைக்கத் தோணுதே!!

"அம்மா" போய் "தாய்" (?!) வந்ததைப் பார்க்கும்போது, "அம்மு" இப்படி அன்பிற்காக ஏங்கி, அறம் பிறழ்ந்திருக்கக்கூடாது என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை!!

அன்றைக்கே சொன்னாளே அவ்வைபாட்டி

"கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?"

இருக்கும்போதும் சரி..இறக்கும்போதும் அவர், நமக்கு "போதிக்காமல் போகவில்லை..

நாம் தான் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் கொள்ளவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக