பெரியோர்கள எல்லாம் ஆன்மீக ரீதியாகவும் விளக்கம் அளித்தும் இந்த கேள்வி அடிக்கடி கேட்கப்படுவதாலும், சோமவாரமாகிய இன்று உபவாசம் இருக்கும் என்னை அந்த ஈஸவரனே இதற்கு விடையளிக்க உத்தரவிட்டது போல் உணர்ந்து இந்த பதில் எழுதுகிறேன். படிப்பவர்கள் தங்கள் மேன்மையான மனதில் இந்த உண்மையான தத்துவத்தை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.
எதிலும் கேள்வி கேட்கும் நாம் வெளிநாட்டினர் சொன்னால் மட்டும் உடன் ஏற்றுக்கொள்வோம். அதனால் இதனை அறிவியல் பூர்வமாக விளக்க சில நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்வேன்.
வேறெங்கும் போக வேண்டாம்.நம்முடை ய பாபா அனு ஆராய்ச்சி நிலைய வடிவமைப்பை பார்த்திருக்கிறீர்கள் தானே?
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறதா? ஏதோ காரணமின்றி இந்த வடிவத்தில் அமைக்கப்படவில்ல. வரையரயில்லா அணுசக்தியை தன்னுள்ளே இந்த வடிவம் உள்ளிருத்தமுடியும் என்பதே.
அடுத்து அனுமின்நிலையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து இயற்கையான கதிரியக்கம் உள்ள இடங்கள் எவை என்று பாருங்கள்!
அடர்த்தியான நிறம் உள்ள இடம் அதிக கதிரியக்கத்தையம் அதற்குச் சற்று குறைந்த நிறம் குறைவான கதிரியக்கத்தையும் பெறுகிறது.
அடுத்து 12 ஜோதிர்லிங்கள் இயற்கையாக அமைந்துள்ள இடங்களையும் பாருங்கள்.
ஒற்றுமை தெரிகிறதா?
ஆக்கலுக்கும் அழித்தலுக்கும் காரணமாய் சொல்லப்படும் சிவனே அனுசக்திக்கும், அணுசக்தி அறிவியலுக்கும் சிற்ப்பான உதாரணம் என்றால் பாமரனுக்கும் புரியும் தானே!!
சரி இன்னும் நம்பிக்கை வரவில்லையா? சிவன் கோயிலில் சாதரனமாய்ப் பார்க்கும் சிலவற்றைப் பார்ப்போம்
- சிவலிங்கத்தின் மேல் தொங்கும் பானையில் இருந்து சொட்டும் நீர், லிங்கத்திலிருந்து வெளிவரும் சக்தியை சாந்தப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது இல்லையா? இது எதை ஒத்து இருக்கிறது? அணுக்கத்திரியக்கத்தை உருவாக்கும் அணு உலை, கொதிப்படைவதை தணிக்க பயன்படுத்தும் தண்ணீரை போல இல்லை?
அதேபோல, பிரதட்சனை செய்யும்போது சிவ தாராவை தாண்டக்கூடாது, அந்த அபிஷேக தண்ணீரில் கதிரியக்க சக்தி இருக்கும் என்பதால் குடிக்கக்கூடாது என்று சொல்வதில்லையா?அந்த சர்வேஸ்வரனுக்கு படைக்கப்படும் வில்வஇலை, ஊமத்தை ஆகியவை அணுசக்தியை கிறகிக்கக்கூடியவை என்று தெரியும்தானே?
எனவே தான் சிவலிங்கம் அணுசக்தியை உள்ளடக்கியதாக உறுதியாகியுள்ளது.
- இன்னொரு அறிவியல்பூர்வமான காரணமும் சொல்கிறேன்.இந்த 12 ஜோதிர்லிங்கம் அமைத்த இடங்களில் சிவன் நெருப்புக்கோளமாக தோன்றினான் என்றும் ஒளிலிங்கமாகத் தோன்றினான் என்று சொல்வர். இவைகள் அமைந்த இடத்தை கோடால் சேர்த்து இணைத்தால் ஃபிபு னாசீ வடிவத்தில் அமைத்திருக்கும்(மேலே உள்ள படத்தை பாருங்கள்) இந்த ஃபிபுனாசீ என்பது இயற்கையின் ரகசிய கோட் வேர்ட் என்பர்.
முதல் வரைப்படத்தை பாருங்கள் இயற்கையான கதிர் இயக்கம் உள்ள இடங்களும் அதே முறையில் தான் அமைந்திருக்கும்.
- ஒரு ஜோதிர்லிங்கத்திற்கும் மற்றொண்றுக்கும் சக்தி அதிகமாக உள்ள இடத்தில இருந்து வெளிப்புறமாக கடத்தப்பட்டு மற்றொரு லிங்கத்தை சென்று அடைகிறது. அந்த அளவிற்கரிய சக்தியை உள்ளடக்கிய சிவலிங்கமே, மனிதனின் கடைசி புகலிடமான மோட்சத்திற்கு உண்டான அறிவை அளிக்கிறது என்பர்.
இதை விளக்கவும் தேவைப்படுவது ஆன்மிக சக்தி அல்லவா? அது சரி பெண்ணே சக்தி தானே?
நன்றி
https://resonantnews.com/2019/09/09/why-are-jyotirlinga-temples-positioned-as-per-fibonacci-series/
திருத்தம்
இந்த பதிவுக்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி.எண்ணற்ற ஆற்றலை கொண்ட அந்த இறைவன் உறைந்திருக்கும் கேதார்நாத் கோயிலைப் பற்றி படித்தது இது.நம்புவதற்கு கடினம்.ஆனால் உண்மை நிகழ்வு!!
புனிதமான பீமஷிலா
கேதர்நாத் பேரிடர் 2013ல் நடந்தபோது, ஊரே அழிந்தாலும் இந்தக் கோயில் மட்டும் எந்த சேதமும் இல்லாமல் நின்றது.எப்படி?
கோயிலுக்கு முன்னால் தெரிகிறதே இந்தப் பாறை, வெள்ளம் வந்தபோது, அதனோடு அடித்து வரப்பட்டு, கோயிலுக்கு சரியாக பின் நின்று, வெள்ளத்தின் வேகத்தை குறைத்தது. விவரிக்கமுடியாத மர்மங்களில் ஒன்று!!
உலகமே வியந்து பார்த்த ஜெய் ஜெய் மஹாதேவ்!!
அருமை. கோரா பதிலில் என்னுடைய சிவலிங்கம் பற்றிய விளக்கம் காண அழைக்கிறேன்.
பதிலளிநீக்கு