"கணக்கு எனக்கு பிணக்கு" என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர்கள் இப்போது அதிகம்.
அதனாலெல்லாம் பாரதியாராக ஆகி விட முடியாது !!😆
அதுவும் இந்த கால்குலேட்டர் வந்த காலத்திலிருந்து மனக்கணக்கு என்பதே எல்லோருக்கும் மறந்த கணக்கு ஆகி போனது!!
ஆனாலும் இந்த கணக்கி்ற்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பும் இருக்கிறதே அது மிக அற்புதம் .!!
அதுவும் இந்த எண் 120 இருக்கிறதே , அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பை பாருங்களேன் அசந்து தான் போவோம் .!!.
- மனித மூளையில் மொத்தம் 1,200 கோடி நரம்பு செல்கள் இருக்கிறதாம். !!
- இரத்த அழுத்தம் 120 க்கு கீழ் என்றால் நார்மல் என்கிறார்கள் .
- அது மட்டுமா …இந்த உடலுக்கு இருக்கும் ஆயுள் காலமும் 120 வருடங்கள் என்று பராசர மகரிஷி .கணித்தார்.
- இதை எப்படி கணித்தார் என்று எந்த குறிப்பும் இல்லை.மூல நூல்கள் ஒரு அஸ்திவாரத்தை தான் காட்டும். அதற்கு மேல் கட்டிடடம் எழுப்பும் பணியை நாம் தான் செய்யவேண்டும்…அந்த பரம்பொருள் அனுமதித்தால்,...
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்,நாழிகை ஒன்றுக்கு 360 (15X24) மூச்சும் ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டது.
இந்த மூச்சுகளுக்கும் தமிழ் எழுத்துககளான உயிர் எழுத்துகள்12ம் மெய் எழுத்துகளான 18 எழுத்துகளையும் ஒன்று சேர்த்து கிடைக்கும் உயிர் மெய் எழுத்துக்கள் 216, இவற்றுக்கும் இந்த 21,600 மூச்சுகளுடன் உள்ள தொடர்பை கவனியுங்கள்.
இந்த ஒவ்வொரு உயிர்மெய் எழுத்தையும் சொல்லும்போது அத்தோடு பத்து ஆத்ம சக்திமூச்சும் வெளிப்படுகிறது என்று கண்டுகொண்டார்கள் நம் ஞானிகள். .
ஓம் என்ற எழுத்தில் உள்ள அ, உ, ம என்பதில், 8 =அ, 2= ௨காரமாகவும் ம் = 6 தமிழ் எழுத்துக்களில் குறிக்கபடுவது நமக்கு தெரியும். இந்த எண்களை கூட்டினால் அ =8 உ=2 மொத்தம் 10 , ,இவற்றை ம் = 6 உடன் பெருக்கும்போது கிடைப்பது 60 என்பதை ஒட்டியே காலக்கணிதம் அறுபது நாழிகை என்று கணக்கிடப்பட்டது
அதனால் தான் ஒவ்வொரு உயிர் மெய் எழுத்தினுடைய உச்சரிப்பும் 100 மூச்சு பலன்களை தரக்கூடியது என்றும் மொத்த தமிழ் எழுத்தும் 216 *100 = 21600 மூச்சுகள் கொண்டது என்றும் மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். என்றனர்.
மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!
அதே போல 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை சொல்லுவதால் வாழும் காலம் நீடிக்கிறதாம் !!
இதை ஒப்புநோக்கியே, , இந்த பிரம்மம் எனக்கு அளித்துள்ள ஆசியின் படி, உயிர் எழுத்துகள உச்சரிக்கும் போது வெளிவரும் 180 உயிர் ஆத்ம சக்தி மூச்சு மற்றும் மெய் எழுத்துகளை உச்சரிக்கும் போது வெளிவரும் 120 மெய் ஆத்ம சக்தி மூச்சு யையும் கணக்கிட்டு பார்த்தே, இந்த ;மெய்' என்னும் உடல் வாழக்கூடிய ஆயுள் காலம 120 வருடங்கள் என்று கணக்கிட்டார் மகாபுருஷர் பராசரர் என்று ஊகிக்கிறேன்.
இப்படி 21,600 மூச்சுகளை வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். என்று கணித்தனர் நம் வேத கால ரிஷிகள் ..
நந்தனார் கீர்த்தனையில் "எட்டும் இரண்டுமறியாத மூடன் " என்கிறார்.
.8 =அ, 2= ௨ இல்லையா? 8 X 2 = 16 இடது புற மூக்குத்துவாரதிலிருந்து வரும் சந்திர கலையை தான் குறிப்பிடுகிறார்.
அந்த சந்திர கலையை சுருக்க சுருக்க ஆயுள் கூடுமாம் !!!
அண்டமும் பிண்டமும் ஒன்று என்று முன் காலத்து ரிஷிகள் சும்மா சொல்லவில்லை. அதனுடன் இணைந்த கணக்கு தான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது!!
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று சும்மாவா சொன்னார்கள் சான்றோர்!!
- நவக்கிரகங்கள் வான மண்டலத்தில் வலம் வருவதாக சொல்லப்படும் நீள் வட்டபாதையின் அளவு 360 பாகைகள் அல்லது டிகிரி என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை மேலும் 12 இராசிககட்டங்களாக கற்பனையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு இராசிக்கும் 30 பாகைகள் என்றும் வகுப்பட்டுள்ளது இல்லையா? இதில் அஸ்வினி முதல் ஆயில்யம் நட்சத்திரம் வரை இந்த நவக்கிரகங்களின் ஆளுகை கொண்ட ஒரு பகுதியின் அளவும் இந்த 120
- . இது போன்ற மூன்று பகுதிகளை ஒட்டுமொத்தமாக சேர்த்த நம் இராசி சக்கரத்தின் மொத்த அளவு தான் 360 டிகிரி
- இன்னோன்று பார்த்தீர்களா? பூமி சூரியனை சுற்றி வரும் சுற்று பாதையின் அளவான 360 மற்றும் ஒன்பது நவக்கிரகங்களையும் பெருக்கி இந்த 27 நட்சத்திரங்களுடன் வகுத்தால் கிடைப்பது இதே 120 .தான் . (360x9)/27=120.
- நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை மிக துல்லியமாக கணித்து காட்டக்கூடிய தசா காலத்திற்கும் இந்த எண் 120 என்பதை தான் மகரிஷி பராசர ர் பயன்படுத்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு கிரகமும் நம் மேல் செலுத்தும் ஆட்சியின் காலத்தையும் மிக துல்லியமாக கணக்கிட்டுள்ளார்!!
சூரியன் 6 ஆண்டுகள்
சந்திரன் 10 ஆண்டுகள்
செவ்வாய் (குஜன்) 7 ஆண்டுகள்
புதன் 17 ஆண்டுகள்
வியாழன் (குரு) 16 ஆண்டுகள்
சுக்கிரன் 20 ஆண்டுகள்
சனி 19 ஆண்டுகள்
ராகு 18 ஆண்டுகள்
கேது 7 ஆண்டுகள்
மொத்தம் 120 வருடங்கள் .
ஆனால் இவை எப்படி கணக்கிடப்பட்டன என்று இதுவரை நமக்கு தெரியாது!!.
- மகா புருஷர் காளிதாசர் தமது "உத்தர கலா ம்ருதம்" என்னும் நூலில் "கிரக களா பரிணாமம்" என்ற தலைப்பில் மற்ற கிரகங்களில் இருந்து பூமிக்கு கிடைக்கும் ஒளியின் அளவை கணக்கிட்டு கொடுத்துள்ளதாக ஆதித்ய குருஜி அய்யா அவர்கள் குறிபிட்டுள்ளார்,
இதில் சூரியன் 30, சந்திரன் 16, புதன் 8, சுக்கிரன் 12 , செவ்வாய் 6 , குரு 10, சனி 1 .
- இந்த கிரகங்கள் சூரியனிலிருந்து எத்தனையோ கோடி லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்போது, எந்த வித தொலைநோக்கியும் இல்லாத வேத காலத்தில், கிரகங்களின் கதிர் வீச்சு அளவை அவர்கள் அளவிட்டு சொல்லியுள்ளது அவர்களின் அளப்பறியா ஞானத்தை காட்டுகிறது!!
- இந்த கதிர் வீச்சுளவில், ஒரு ஆதிபத்தியம் கொண்ட சூரியன் சந்திரனை விட்டுவிட்டு மற்ற இரு ஆதிபத்தியம் கொண்ட "குஜாதி குஜர்கள்" எனப்படும் ஐந்து கிரகங்களின் ஒளி வீச்சு அளவை இரட்டிப்பாக மாற்றி மொத்தமாக கூட்டும்போது வருவதும 120 தான் !!
நம் பிறப்பும் இறப்பும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவை தான் என்பதும் இடைப்பட்ட காலத்தில் அவரவர் கர்மாவிற்கேற்ப அவரவர் வாழ்வு நடக்கின்றது என்பதும் எல்லாமே ஒரு கணக்குப்படியே இயங்குகின்றன, இயக்கப்படுகின்றன என்பதை அறியும் போது ஆச்சரியம் மட்டுமல்ல மெல்லிய திகைப்பும் ஏற்படுவதை மறைக்க முடியாது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக