ஜோதிடத்தின் ஜோதி 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடத்தின் ஜோதி 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 டிசம்பர், 2021

ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணத்தை ஜாதக ரீதியாக விளக்க முடியுமா?

 என் பள்ளிக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த நபராக இருந்தவர பிரதமர் இராஜீவ காந்தி. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியிருந்த நேரத்தில், அதை எதிர்த்து, அவருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு, அவர் பதில் கொடுத்திருந்தார்.பக்கத்து வீட்டில் தீ பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? என்று கேள்வியெழுப்பி, அதை நியாயப்படுத்தியிருந்தார்.என் பள்ளியில், அந்த கடிதம் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது!!

அவருக்கு நேர்ந்த துர் மரணம் சொல்லமுடியா வேதனையை கொடுத்தது. உலகமெல்லாம் சுற்றியவர் முடிவு, தமிழ்நாட்டில், அதுவும் சென்னைக்கு அருகில் வேறு..

அந்த கோர படுகொலையில் சிக்குண்ட போலிஸாரின் புகைப்படங்கள் காஞ்சீபுரம் காவல் துறை தலைவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்துள்ளேன்.

இப்படி ஒரு வெடி விபத்தில் உடல் சிதறி கோரமாக மரணம் நேரும் என்பதை அவர் ஜாதகம் தான் காட்டியுள்ளதே..

சிம்ம லக்கினம், சிம்ம இராசியும் கூட.

லக்கினத்தில் சுக்கிரன், குரு, சந்திரன் என்று லக்கினம் அதிக சுபத்துவமாக உள்ளது. அதனாலேயே அரசனுக்கொப்பான வாழ்க்கையைத் தான், அவர் பிறந்ததிலிருந்து வாழ்ந்துள்ளார்.

லக்கினத்தில் உள்ள குருவை சூரியன் அஸ்தங்கம் செய்து, அதன் சுப பலனை அவரே எடுத்துக் கொள்கிறார் என்பதால ஜாதகப்படி அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் சூரியனே..சூரியன் அதி வலுத்து இருக்கும் ஜாதகர் தலைமை தாங்கும் பதவியை பெறுவார் என்ற வேத ஜோதிட அடிப்படை விதியை யொட்டி, இராஜீவ் காந்தி, யாரும்… ஏன் அவரே எதிர்பார்க்காத தருணத்தில், மக்களின் தலைவராக, பாரத பிரதமராக பதவி ஏற்றார்.

எல்லோர் வாழ்விலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இராகு தசை தான் அப்போது அவருக்கு நடந்துக் கொண்டிருந்தது. இராகு அவர் ஜாதகத்தில் 12.ம் பாவத்தில் மறைந்துள்ளார். பாவ கிரகங்கள் 3, 6,8,12ல் மறைவது நல்லது என்றாலும், 3, 11ம் பாவத்தில் மறையும் கிரகங்கள் அந்த லக்கினத்தோடு நட்பு நிலையில் இருக்கும் பாவத்தில் இருக்கும் என்பதால் நல்லதையே செய்யும்.. இராகுவுக்கு பிடித்த பாவமான கடகத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த 12ல் இருக்கும் இராகு அவரை உச்சத்தில் தூக்கி வைத்ததோடு அல்லாமல் அவர் மரணத்திற்கும் காரணமாக ஆனார். .உத்தர காலாம்ருதத்தில் மகாகவி காளிதாசர் 12-மிட ராகு ராஜயோகத்தைத் தந்து மாரகத்தையும் தருவார் என்று ஒரு சுலோகத்தில் சொல்லியிருக்கிறார்.

சிம்ம லக்கினத்தின் மாரகாதிபதி 2குடைய புதன். அதன்படியே 1991ல் அவர் இறக்கும் போது அவருக்கு இராகு தசை, புதன் புத்தி நடந்துக்கொண்டிருந்தது.

"இராகுவை போல கொடுப்பாரும் இல்லை.கெடுப்பாரும் இல்லை" என்பது தெரிகிறதா?

சுபத்துவமில்லாத பாபத்துவமான சனியின் மூன்றாம் பார்வை லக்கினத்தின் மீதும் லக்கினாதிபதி மீதும் உள்ளது. சனி ஆயுள்காரகன் அல்லவா? அதனாலேயே அவரின் பாபத்துவமான பார்வையால் இராஜிவின் ஆயுள் கெட்டு, இளம் வயதான 41 வயதிலேயே அவர் மரணமடைய வேண்டியிருந்தது.

ஒருவரின் மரணம் எப்படி நடக்கும் என்று காட்டுவது எட்டாம் பாவம்.இங்கு பாவத்துமான செவவாய் அதை பார்க்கிறார்.செவ்வாயின் தொடர்பு கொண்டதாலேயே அதன் மோசமான காரகத்துவமான வெடி விபத்தால் உடல் சிதறி, இராஜீவ் கொல்லப்பட்டார்.

மனம் அதிக வலியால் கனமாக இருப்பது போல உணரும்போது அழுகை வராது.முழு அமைதி தான் நிலவும்.

அப்படித்தான் நானும் அந்த செய்தி கேட்டபோது உணர்ந்தேன்..