அக்கா தம்பி பாசத்தை பற்றி நிறைய சொல்லலாம்.ஆனால் அக்காவுக்கு திருமணம் ஆனவுடன் தம்பிக்கும் அக்காவிற்கும் இடையில் வந்து நிற்பார் அக்காள் கணவர்.!!
இல்லையெண்றாலும் தம்பிக்கு வாய்த்தவள், இரண்டு பேரையும் சேர விடமாட்டாள..☺️
ஆனால் இங்கே நிலைமையே தலைகீழ. ..அக்காவிற்கும் தம்பி மனைவிக்கும் ஒரே இராசி .
ஜாதகத்தில், லக்கினம் தான் முதன்மைஎனது..ஒருவரின் குணம் லக்கினத்தையும், அதன் அதிபதியை பொறுத்தே இருக்கும் என்றாலும், இரண்டு பாதிகள் என்று இலக்கினத்தையும் இராசியையும் சொல்லலாம்..அதனால் ஒரு பாதியான இராசியின் தன்மை கொண்டும் ஒருவர் குணம் அறியலாம்.
கடகத்தின் அதிபதி சந்திரன் என்றால் மகரத்தின் அதிபதி சனி. இரண்டுக்கும் ஜென்ம பகை.
அதுவும் சந்திரன் எவ்வளவு ஒளி பொருந்தியது..மற்ற கிரகங்களுக்கு கூட தன் ஒளியை பிரதிபலித்து சுபத்துவப்படுத்தக்கூடியது..அதை "மாதாகாரகன்" என்று தாய்க்கு ஈடாக சொல்வர். அப்பேர்ப்பட்ட சந்திரனையே மறைத்து விடக்கூடியது இருள் கிரகமாகிய சனி!!
ஒளியின் முன்னால் இருள் தொலையும் என்றாலும் ஆழமான இருட்டின் உள்ளே ஒளி அமிழ்ந்து போகும்..
அது மட்டுமா தன்னை சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வர சந்திரனுக்கு இரண்டேகால் நாட்கள் தான் ஆகும்..ஆனால் சனிக்கு ஒரு சுற்று முடிக்க 30 வருடங்கள்…எவ்ளோ மெ..து..வா..ய..
இரண்டு கிரகங்களின் காரகத்துவங்கள் முற்றிலும் முரணானது..
அதனால் தானோ என்னவோ எதிர் எதிர் நிலைகள் கொண்ட சந்திரனும் சனியும் ஜென்ம பகைவர்கள்!
இத்தனைக்கும் சனியை சூரியனின் பிள்ளை என்பர்..சனி சந்திரணுக்கு மட்டுமல்ல சூரியனுக்கும் ஜென்ம பகை..பெற்றோருக்கு ஆகாத பிள்ளை!!
இந்த ஏழாம் பொருத்தம் கொண்ட சனி சந்திரன். குணத்தை தன் இயல்பாக கொண்ட கணவன் மனைவி எப்படி பொருந்துவர்??
சனியின் இருள் காரகத்துவமும் ஒளி பொருந்திய சந்திரனும் சேர்ந்தால்..
பிளாக் அண்ட் ஒயிட் டிவி போல அல்லவா இருக்கும்..
மேலே உள்ளது ஒரு வித்தியாசமான ஜோடி. (ஒரு மாறுதலுக்கு)
வரனின் உத்யோகம், சம்பளம், சொத்து, அழகு, பிக்கல் பிடுங்கள் உள்ளதான்னு பத்து பொருத்தம் பார்ப்பவர்கள், இரண்டு பேரின் குணங்களும் ஒத்துப்போகுமானு பார்ப்பதில்லை..
திருமணமானால் சரியாகிவிடும் என்றோ, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும் என்பது தான் இருவருக்கும் சொல்லிக்கொடுக்கப்படுகிரது.
ஆனால் யார் முதலில் விட்டுக்கொடுப்பது என்ற ஈகோவினாவினாலேயே, சின்ன சின்ன விஷயங்களில் தொடங்கி "மன" முறிவு ஏற்பட்டு, நீதிமன்றத்தில் "மண" முறிவு கேட்கும் நிலைக்கு போகின்றணர் ..
2020 வருட புள்ளிவிவரப்படி, இந்தியாவில், நூற்றுக்கு ஒரு திருமணம் விவகாரத்தில் போய் முடிகிறதாம்..
அதுவும் இந்தியாவில், மும்பை தான் ஒரு நாளைக்கு சுமார் 25 விவாகரத்து மனுக்கள் நீதிமண்றத்தில் தாக்கல் செய்து முன்னணியில் இருக்கிரது..
"Happily Maried" என்பது போய் இப்போதெல்லாம் "happily divorced" என்று சிரித்துக்கொண்டே சொல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது!
ஜாதகப் பொருத்தம் பார்க்கும் சில ஜோசியர்கள்கள், வரனுக்கு இரண்டாம் திருமணம் செய்யும் தோஷம்(யோகம்) இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்துள்ளனர்!!
இப்படிப்பட்ட நிலையில், இந்த சந்திரணை இராசியதிபதியாக கொண்ட கடக இராசிக்காரர் ஆக அக்காவும் தம்பி மனைவியும் ஒத்து இருப்பதால் அதன் குணத்தை அப்படியே பிரதிபலித்து தாய் ஸ்தானத்தில் நின்று, குடும்பத்தை பிரிக்காமல் காப்பாற்றுவார்கள்.
ஆனால் இதற்கு நேரெதிர் குணம் கொண்ட சனியை அதிபதியாக கொண்ட மகர இராசிகாரர்களான அக்காவின் கணவரும் தம்பியும், தங்கள் மனைவியிடம் பிளவுபட்டு நிற்பார்கள்…
பாவம் அவர்கள் எனன செய்வார்கள். அவர்களை "ஆட்டிவைத்தால், யாரொருவர் ஆடாதாரோ கண்ணா.."!!
சனி என்ன செய்யும்?
.நமக்கு ஆகாததை செய்யும்.கடன், நோய், வம்பு, வழக்கு என்று நமக்கு ஏதெல்லாம் வேண்டாம் என்று மறுக்கிறோமோ, அதை "இந்தா புடி" என்று வம்படியாய் கொடுப்பவர்..
நல்லவனை கூட எதிர்த்து நிற்கலாம்..ஒரு பாபத்துவம் கொண்டவனை எதிர்க்க எல்லோரும் பயப்படுவர்.
பாம்பிலேயே கொடிய நஞ்சு கொண்டதற்கு நல்ல பாம்பு என்பார்களே அதுபோல முழு பாபரான சனிக்கு "ஈஸ்வர பட்டம்" கூட..!!
ஆனால் இல்லத்தரசிகள் ஒத்த குணம் கொண்டு இருப்பதால், அவர்களின் பருப்பு வேகாது 😁 ..வீட்டில் மனவருத்தங்கள் அவ்வப்போது வந்தாலும், நீங்கி விடும்..
ஆனாலும் இவர்களை ஆளும் சந்திரன் மட்டும் என்ன சுபத்துவமானதா.? அப்படியும் சொல்ல முடியாது. பவுர்ணமியை நோக்கி போகும் சந்திரன் சுபத்துவம் கொண்டவன் என்றால், அதுவே தேய்பிறையாக அமாவாசை நெருங்கும்போதும், அமாவாசையன்றும் அசுபர்..
அதனால் ஆண்கள் இருவரும், பெண்கள் இருவரையும் பார்த்து ஹேண்டில் செய்ய வேண்டும்🤣
அப்படியானால் இரண்டு பக்கமும் பிரச்சினையாகவே இருக்குமா?
பொதுவாக சனி சந்திரன் இணைவு நல்லது அல்ல தான்…
இது போன்ற சனி_ சந்திர சேர்க்கையை "புனர்பூ தோஷம்" என்கிறார்கள்..
ஆனாலும் அந்த தோஷம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், கீழே சொன்ன வழிமுறைகள் கடைப்பிடித்தால் ஆகாது!!
- சந்திரன் பிரகாசமாய் பவுர்ணமி நோக்கி போய்க் கொண்டு இருந்தால்…
புரியலையா..
மனைவிமார்கள் முகம் பிரகாசமாய் இருக்குமாறு செய்தல் 🤣
- நல்ல இடைவெளி விட்டு இருக்கவும்.அதாவது 15 டிகிரீயாவது..ஆமாங்க சோசியல் டிஸ்டன்ஸ் தான்.. மனசுக்கும் நல்லது..உடம்புக்கும்.🤣.
- அடிக்கடி சுபத்துவம் கொண்ட சுக்கிரன், குருவின் பார்வை படுவது போல இருக்கவும்..வேறு யார் இரண்டு.. இல்லை, மூன்று தரப்பு அப்பா அம்மாக்கள் தான்!!!
ஆனாலும் சனி போன்ற இருள் கிரகத்திற்கு ஒளி பொருந்திய சந்திரன் அருகிலோ பார்வையிலோ இருந்தால், அதன் ஒளியை இது பெற்று, வலு அடைகிறது..
அப்போது சனிக்கு இந்த இணைவு "யோகம்" தானே..
அதனால் தான் "மதி போல மனைவி"ன்னு சொல்றாங்க..
மதியிலாச்சோ..😀😃
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக