சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஜூன், 2021

சமையல் கலைஞர்களுக்குத் தெரிந்த சில நல்ல சமையல் குறிப்புகள் யாவை?

சில அடிப்படை விஷயங்கள் ஞாபகத்தில் கொண்டாலே, செய்தாலே, நாமும் சூப்பர் செஃப் தான்.,,,,☺️

  1. சினிமாவிலும் டி வி விளம்பரங்களில் வேணும்னா பொறிக்கும்போது எண்ணெய்"தகதகன்னு" டான்ஸ் ஆடலாம். ஆனால்..நம்ம கிச்சனில் மூச்…எந்த பதார்த்தங்களுக்கு எண்ணெய் எந்த கொதிநிலையில் இருக்கணும்னும், மிதமான தீயில் அடுப்பை வைத்து சமையல் செய்ய தெரிஞ்சிக்கிறது சாப்பாட்டோட சுவையை மட்டும் கூட்டாது..நம்ம பர்ஸ்சோட் கணத்தையும்…😁

. 2 அடுத்தது நம்ம சாப்பாட்டை சாப்பிடறவங்க எப்போதும் நம்மை நினைச்சுகிட்டே இருக்கணும்னு உப்பை கண்டபடி போட்டுடக் கூடாது😀

அதுக்காக டிஜிட்டல் ஸ்பூன்லே போடணும்னு தேவையில்லை.எவ்ளோ அருமையான சமையலும் இந்த உப்பு போடும் டெக்னீக் தெரியாம, கெட்டுப் போய்டுதில்லையா…எந்த உணவு பண்டத்துக்கு எப்போ, எவ்ளோ உப்பு போடணும்னு கூச்சமே படாம அடுத்த தடவை ஹோட்டலுக்கு சாப்பிடப்போகும்போது, அங்கிருக்கும் செஃப் கிட்டே கேட்டு பாருங்க..மறுக்காமல் உதவுவாங்க..

3. அதே போல காய்கறி வெட்டும் விதவிதமான முறைகளையும் தெரிஞ்சுக்கோங்க…

4. வெண்ணெய்..இதை சமைக்கும்போதுய மட்டுமில்லாமல் எப்படி எல்லாம் சரியா பயன்படுத்தணும்னு தெரிஞ்சிக்கோங்க…இதனோட பலவிதமான பயன் தெரிஞ்சா

"போய்யா வெண்ணெய்" ன்னு யாரையும் சொல்ல மாட்டோம் தானே!!😁

5.சிக்கனும் மட்டனும் சமைக்குறது பெரிசு இல்லீங்க..இதோ இதை கொண்டு என்னவெல்லாம் செய்வீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்?!😀

அது டூ மினிட்ஸ் நூடில்சாவே இருந்தாலும் நம்ம கை பட்டாலே தனி கதை சொல்லணும்..🤣. ராணி கையை வச்சா ராங்கா போனதில்லைன்னு…

7 அடுத்தது சமையல் அறை சுத்தம்.

சில வீட்டிலே சமையல் முடிச்சு பார்த்தா போர்க்களம் மாதிரி இருக்கும்!! இதோ இது போல.

படிமப்புரவு கூகிள்

எவ்ளோ கஷ்டம் இல்லையா சமையல் அறை பராமரிக்கிறது…

இதுலே வீட்டிலே இருக்கிற பெண்கள் செய்யிற வேலைக்கு மதிப்பே இருக்கிறதில்லை..

இப்ப பாருங்க..காலம்.எப்படி மாறிடுச்சுன்னு..இல்லாதரசிகளுக்கும் மாத வருமானம் கிடைக்கும்னு தேர்தல் அறிக்கையில் சொல்லும் அளவுக்கு மாறிடுச்சுல்லே!!

படித்ததற்கு நன்றி.

ஸ்ரீஜா.

ஞாயிறு, 30 மே, 2021

உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுகிறார்கள்?

 உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுறாங்கன்னு விஜய் மதுர படத்துல கலாய்ப்பார். ..😀

என்னங்க இது கூட தெரியாதா எனக்கு.

வடையை பிடிச்சுக்கிறதுக்கு தானே அந்த ஓட்டை,,,?☺️

எங்க பக்கத்து வீட்டு மாமி குடுக்கிற வடையிலே ஒட்டையே இருக்காது..🤣

எனக்கு ஓட்டை போடாத அந்த "வஸ்து"வை , வடைன்னு சொல்லவே மனசு வராது.

பின்னே என்னங்க. மெது வடையோட அழகே அந்த ஓட்டை தானே. அப்படி ஓட்டைக்குள்ளே கையை விட்டு தூக்கி நிற்கும்போது, ஏதோ சக்ராயுதத்தை கையிலே வச்சுக்கிட்டு நிற்கிற கிரிஷ்ணரே ஞாபகம் வரலை…😆

அதுவும் இல்லாம ஓட்டை இல்லாத அதை, வடையிலேயும் சேர்க்க முடியாம, போண்டாவிலும் சேர்க்க முடியாம பாவம் "அனாமிகா" மாதிரி நிக்கும்..😂

சரி சரி..கேள்விக்கு வருவோம்.

பருப்பு வடையில் ஏன் ஓட்டை போடலை, மெதுவடையில் ஓட்டை போடக் காரணம்.... உளுந்து மாவு பிசுபிசுப்பா இருக்குறதாலயும் கொஞ்சம் தடிமனா வடை பொறித்தால் சீக்கிரத்துல வேகாது. அதனால, சீக்கிரம் வேக வடை தட்டும்போது ஓட்டை போடுவாங்க. அது வழியாவும் எண்ணெய் உள்ள போய் சீரா வேகும்......

அந்த ஓட்டை போட்டு வடை சுடுறதுங்கிறது சாதாரணம் இல்லீங்க..அதுலே ஒரு டெக்னீக் இருக்கு..

  • வடைக்கு மாவு அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது.
  • அதிகமாக எண்ணெயும் இழுத்து விடும்.
  • மாவில் அதிகம் தண்ணீர் சேர்ந்து விட்டால் சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.
  • வடை தட்டும் போது ஒரு சின்ன வாழை இலை அல்லது ஒரு கவரை எடுத்து, அதில் மாவை வைத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.
  • கையில் மாவு ஒட்டாமல் இருக்க சிறிது தண்ணீரை தொட்டுக்கலாம்

இந்த ஓட்டை மெதுவடையிலே என்ன ஸ்பெஷல்னா…

ரசம், சாம்பார், தயிர்ன்னு எதுல போட்டாலும் அதோட ருசியை தனக்குள் இழுத்துக்கிட்டாலும் வடை, தன் ருசில இருந்து மாறாது.

நம்மை சுற்றி இருக்கும் எல்லாத்தையும் உறிஞ்சு எடுத்துக்கிட்டு பல ரோல் ப்ளே பண்ணினாலும் நம் தனித்தன்மையை மாத்திக்கக் கூடாதுன்னு சொல்லாம சொல்லுது இந்த வடை..

பாருங்க வடை வாய்க்குள்ளே போனவுடனே, எவ்ளோ அரிய தத்துவம்லாம் வருது😃

இப்பேர்ப்பட்ட மெதுவடைக்கு நான் மட்டும் ரசிகை இல்லேங்க..

கோயிலுக்கே காவல் காரர் அந்த பைரவரும் தான்.

தேய்பிறை அஷ்டமி திதி, அதிலும் செவ்வாய்க்கிழமை வரும் போது, செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, இந்த உளுந்து வடையோட பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டா அவரு குஷியாயிடுவாரு..

அப்புறம் என்ன.. மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி, கையில் காசு புரளும். . தடைபட்ட சுபகாரியங்கள் கூடிவரும்.

பாருங்க இந்த மெதுவடையோட பெருமையை !!

சொல்ல முடியாது..யாராவது இதை தேர்தலில் அவங்க சின்னமா வாங்கினாலும் வாங்குவாங்க😄

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

மாம்பழத்தை மரத்திலிருந்து பறித்து, ருசித்து சாப்பிட்ட அனுபவம் உண்டா?

 எங்கள் தோட்டத்தில் வருடா வருடம் விளையும் மாம்பழத்திற்கு தனி ருசியிருக்கும்.😃

பின்னே ..மாம்பழத்துக்காக கோவிச்சுக்கிட்டு முருகன் வந்து நின்ற பழனியே அங்கே தானிருக்கு!!

அதுவும் அங்கிருந்து அனுப்புவதற்கு ஆகும் போக்குவரத்து செலவு கணக்கு போட்டுப் பார்த்தால் …எங்கியோ போகும்.:) ஆனாலும் அதை வாங்கி அக்கம் பக்கத்தில் எல்லோருக்கும் கொடுக்கும் சுகம்இருக்கே :D

போன தடவை, ஊரிலிருந்தும் வந்து, இங்கே வீட்டு மாமரத்திலே பறிச்சுன்னு ஏகப்பட்டது ஆகிடுச்சு..எவ்ளோ தான் சாப்பிடுறது..ஒரே மாம்பழ ஸ்கவாஸ், மாம்பழ பச்சடி, னு வீடே மாம்பழ வாசனை தாங்க முடியலை.😃

அப்புறம் தான் மிச்சம் இருந்த மாங்காய் வச்சு வடஇந்திய மாங்காய் ஊறுகாய், மாங்காய் பொடி செஞ்சேன்.

மாங்காய் பொடி ரெசிபி கேட்ட திருவாளர் என் மதிப்பிற்குரியவர் ஸ்ரீநிவாஸராகவன் ஸ்ரீதரன் (Srinivasaraghavan Sridharan) அவர்களுக்காக..

  1. முதலில் நன்றாக புளிப்பான சதைப்பற்றுள்ள மாங்காய்களை எடுத்து கழுவி, ஈரம் போகத் துடைக்கவும்.

2. தோல் நீக்கவும்.

3. வாழக்காய் சீவலில் வைத்து சீவி எடுக்கவும்.

4. ஒரு பெரிய தட்டில் முடிந்த வரை தனித்தனியாக சீவலை வைத்து, வெயிலில் சுமார் 5 மணி நேரம் காய வைக்கவும். தூசி படாமல் இருக்க, மெல்லிய துணியை போர்த்தி வைக்கவும். காய்ந்த பிறகு எடுத்து சிறிது குலுக்கி வைக்கவும்.

5.அடுத்த நாளும் அதே போல்.

6.மூன்றாம் நாளும் அதே போல்.

இப்போது அவை சருகாக மாறியிருக்கும்.

7.எடுத்து மிக்சியில் அரைத்தால் பொடி ரெடி!!

நன்றி கூகிள்.

இந்த மாங்காய் பொடி வடஇந்திய உணவு வகைகள், கொண்டைக்கடலை மசாலா போன்றவற்றில் உபயோகிக்க நன்றாய் இருக்கும்..பல் கூச்சம் என்று புளி உபயோகம் வேண்டாம் என்பவருக்கு மாற்றாய் இருக்கும். ஒரு வருடம் கூட கெடாமல் இருக்கும்.

இதோடு செய்த வடஇந்திய மாங்காய் ஊறுகாயும் மாதக்கணக்கில் வருகிறது.😀

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா