எங்கள் தோட்டத்தில் வருடா வருடம் விளையும் மாம்பழத்திற்கு தனி ருசியிருக்கும்.😃
பின்னே ..மாம்பழத்துக்காக கோவிச்சுக்கிட்டு முருகன் வந்து நின்ற பழனியே அங்கே தானிருக்கு!!
அதுவும் அங்கிருந்து அனுப்புவதற்கு ஆகும் போக்குவரத்து செலவு கணக்கு போட்டுப் பார்த்தால் …எங்கியோ போகும்.:) ஆனாலும் அதை வாங்கி அக்கம் பக்கத்தில் எல்லோருக்கும் கொடுக்கும் சுகம்இருக்கே :D
போன தடவை, ஊரிலிருந்தும் வந்து, இங்கே வீட்டு மாமரத்திலே பறிச்சுன்னு ஏகப்பட்டது ஆகிடுச்சு..எவ்ளோ தான் சாப்பிடுறது..ஒரே மாம்பழ ஸ்கவாஸ், மாம்பழ பச்சடி, னு வீடே மாம்பழ வாசனை தாங்க முடியலை.😃
அப்புறம் தான் மிச்சம் இருந்த மாங்காய் வச்சு வடஇந்திய மாங்காய் ஊறுகாய், மாங்காய் பொடி செஞ்சேன்.
மாங்காய் பொடி ரெசிபி கேட்ட திருவாளர் என் மதிப்பிற்குரியவர் ஸ்ரீநிவாஸராகவன் ஸ்ரீதரன் (Srinivasaraghavan Sridharan) அவர்களுக்காக..
- முதலில் நன்றாக புளிப்பான சதைப்பற்றுள்ள மாங்காய்களை எடுத்து கழுவி, ஈரம் போகத் துடைக்கவும்.
2. தோல் நீக்கவும்.
3. வாழக்காய் சீவலில் வைத்து சீவி எடுக்கவும்.
4. ஒரு பெரிய தட்டில் முடிந்த வரை தனித்தனியாக சீவலை வைத்து, வெயிலில் சுமார் 5 மணி நேரம் காய வைக்கவும். தூசி படாமல் இருக்க, மெல்லிய துணியை போர்த்தி வைக்கவும். காய்ந்த பிறகு எடுத்து சிறிது குலுக்கி வைக்கவும்.
5.அடுத்த நாளும் அதே போல்.
6.மூன்றாம் நாளும் அதே போல்.
இப்போது அவை சருகாக மாறியிருக்கும்.
7.எடுத்து மிக்சியில் அரைத்தால் பொடி ரெடி!!
நன்றி கூகிள்.
இந்த மாங்காய் பொடி வடஇந்திய உணவு வகைகள், கொண்டைக்கடலை மசாலா போன்றவற்றில் உபயோகிக்க நன்றாய் இருக்கும்..பல் கூச்சம் என்று புளி உபயோகம் வேண்டாம் என்பவருக்கு மாற்றாய் இருக்கும். ஒரு வருடம் கூட கெடாமல் இருக்கும்.
இதோடு செய்த வடஇந்திய மாங்காய் ஊறுகாயும் மாதக்கணக்கில் வருகிறது.😀
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக