அறிவியலும் நம் இந்து தெய்வ நம்பிக்கையும் பின்னிப்பினைந்தது.
அது குறித்து தனியே எழுதலாம்.😀
ஆனால் தற்போதைய நிகழ்வுகளை பார்க்கும்போது..இரண்டிற்கும் இடையே விரிசல் பெரிதாகிறதோ?
சமீபத்தில் நடந்த கும்பமேளாவையே எடுத்துக் கொள்ளுங்கள்.
சாதாரணமாக கும்ப மேளாக்கள் ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும். இல்லையா?
கடைசி ஹரித்வார் கும்பமேளா 2010 இல் நடைபெற்றது எனில், அங்கு தற்போது நடந்த ‘கும்பமேளா உண்மையில் நடக்க வேண்டியது 2022 தானே...2021 ல் அல்லவே.
அப்படியானால்…இந்தியாவின் இரண்டாவது கோவிட் அலை அதுவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நேரத்தில் எப்படி ஒரு ஆண்டிற்கு முன்பாக நடத்தப்பட்டது? அதுவும் தொற்றுநோயின் ஆய்வுகள், இரண்டாவது அலைகள் முதல் அலையை விட மோசமாக இருக்கும் என்பதை சொல்லியும் கூட..?
.அதற்கான காரணத்தைச் சொல்கிறேன்.
2021ல் தான் ஜோதிடப்படி “சூரியன் மேஷ ராசியிலும் குரு கும்ப ராசிக்குள்ளும் நுழைகிறது.. இது ஒவ்வொரு 83 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது, அப்போது தான் இந்த ஜோதிட உள்ளமைப்பு அட்டவணையை நடப்பு காலண்டர் ஆண்டுகளுடன் சரி செய்யவும் முடியும்.
அதனால் தான் கும்ப மேளா நடத்துவதால், கோவிட் -19 மூலம் மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது என்று , இந்திய அரசாங்கமும், உத்தரகண்ட் அரசும் தெரிந்துக கொண்டும், எளிதாக ரத்து செய்யவில்லை.
ஹரித்வாரில் நடந்த கடைசி கும்ப மேளாவிலிருந்து இது 11 ஆவது வருடம் தான்., 12 வது ஆண்டு அல்ல என்பதால், இந்த ஆண்டு இது நடக்க அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. கும்பமேளா போன்ற ஒரு நிகழ்வை 2022 ஆம் ஆண்டில் நடத்த சொல்லிவிட்டு, ஒரு வித அர்த்தத்தை கொடுக்கக்கூடிய நிலைமைகளை உருவாக்க இந்த நேரத்தை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
மாறாக, அவர்கள் 2022 ஆண்டு நடத்த வேண்டியதை 2021 லேயே நடத்த முடிவு செய்தனர் - தொற்றுநோயின் ஆபத்துக்களை முழுமையாக அறிந்திருந்தும், - சில ஜம்போ ஜோதிடர்கள் விரும்பியதால், இந்த மாபாதகத்தை செய்தனர்..
நீங்கள் கேட்கலாம்... ஜோதிடம் ஏன் பொது சுகாதாரத்தை கணக்கில் கொள்ள வேண்டும்?
பிரிட்டிஷ் இந்தியாவில் காலரா, அலஹாபாத்தின் 1765 கும்பமேளா, ஏன் 1895ல் ஹரித்வாரில் வந்த காலரா நோயின் வீரியம் குறித்து இந்திய மருத்துவ கேஜெட்டில் வந்த கட்டுரை என்று, கும்பமேளா என்பது தொற்று பரவுவதை வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்திய தளமாகும்.
Haridwar Kumbh Mela, 1844. Artist: J.M.W. Turner/Wikimedia
ஏன்…2013 மகா கும்பமேளா வரலாற்றில் மிகப் பெரிய கூட்டமாக இருந்ததேன்னு கேட்கலாம்.. ஆனால் எந்தவொரு பாதகமான நிகழ்வும் இல்லாமல் அது கடந்து சென்றது, அதுவும் இது போன்ற தொற்றுநோய் பிரச்சினைகள் இல்லாத சமயம் அது.
அதுவும் 2020ல் இருந்து இந்த கோவிட தொற்றுநோய் இருக்கும்போது, இந்த கும்பமேளா நடத்துவது, ஒரு நோய் சுனாமியையே கொண்டு வரும் என்று அறிந்துக்கொள்ள பி.எச்.டி.படிப்பா படித்துருக்கணும்?
இந்த முட்டாள்தனமான செயலால் ஒட்டுமொத்த இந்தியரும் பாதிப்பிற்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளனர்.
COVID-19 தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் உண்மையான புள்ளிவிவரங்களை குறைத்து மதிப்பிடுவதற்கு சீன அரசாங்கம் காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள். அதைப் பெருக்க எதுவும் செய்யவில்லை..
ஆனால், , இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள், நோய்த்தொற்றுகள் பெருமளவில் உயர வழிவகுத்தனர். இதைத் தவிர்த்திருக்கலாம். சீன ஆட்சியைப் போலல்லாமல், இந்த முறை, ஒரு நோய் வெடித்ததே தெரியாமல் போய்விட்டது என்று கூட இந்திய அரசு நடிக்க முடியாது.
இரண்டாவது அலை இருக்கக்கூடும் என்பதை அறிந்துக் கொண்டும், கும்பமேளாவை நடக்க அனுமதித்ததன் மூலம் -
உண்மையில் அது நடக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு காலகட்டத்தில் அதைச் செய்வதன் மூலம் -
இரண்டாவது அலைக்கான மோசமான நிலைமைகளை உருவாக்க இது தீவிரமாக அமைந்தது.இந்திய அரசாங்கமும், உத்தரகண்ட் அரசும் இதை மிகப் பெரிய அளவில் குழப்பிவிட்டன. வேறு எதையாவது அவர்கள் செய்திருக்கலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம்,
கடந்த ‘ஆஃப்-சைக்கிள் கும்பமேளாவிலிருந்து 83 ஆண்டுகள் கடந்துவிட்டனவா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த நிகழ்வை ஒரு வருடத்திற்கு முன்னெடுத்ததில் எந்த நியாயமும் இல்லை.
,அதுவும் தடுப்பூசி திட்டம் நடந்து கொண்டிருக்கும்போது.
கும்பமேளாவில் வெகுஜன கூட்டங்களை சேர்ப்பதை நியாயப்படுத்த எந்த வழியும் இல்லை.
இதே தான் தேர்தல்களுக்கும்.
தேர்தல் ஆணையம் தேர்தலை எளிதில் ஒத்திவைத்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் பெரிய கூட்டங்களையும் பேரணிகளையும் தடை செய்திருக்க வேண்டும்.
இதற்கு முன் கும்பமேளா ஒரு வருடத்திற்கு முன்பே நடந்துள்ளதா?
1938 இல், 1855 ஆம் ஆண்டில், இதேபோன்ற ‘ஜோதிட உள்ளமைவுகள்’ நடைமுறையில் இருந்தபோது. நடந்துள்ளது.
ஆனால்…நாம் 1938 இல் வாழ்கிறோமா, அல்லது 1855 லா?
1938 ஆம் ஆண்டில் வான்வழி வைரஸ் தொற்றுநோய் இருந்ததா?
1855 ஆம் ஆண்டில் உண்மையில் ஒரு காலரா தொற்றுநோய் இருந்தது, அந்த ஆண்டு கும்பமேளா இந்த நோயை பெரிதும் அதிகரித்தது. எல்லாம் சரி தான்.
தொற்றுநோய்களைப் பற்றிய புரிதல், இன்றைய நிலையை விட மிகக் குறைவாகத் தானே மக்கள் அப்போது அறிந்திருந்தனர். இது குறித்து, . இஸ்தான்புல்லில் 1866 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சுகாதார மாநாடு, கும்பமேளா இடத்திலிருந்து நோய் பரவுவதைப் பற்றிய அறிக்கையை பதிவு செய்துள்ளது..
1866 ஆம் ஆண்டில் இந்திய யாத்திரைத் தளங்களான கங்கை ஆற்றங்கரையில் காலரா வளர்ந்த இடங்களாகவும், அது அங்கிருந்து முக்கிய ஐரோப்பிய நகரங்களுக்குள் நுழைவதற்கு முன்பு, முதலில் மக்கா, பின்னர் எகிப்து மற்றும் ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் துறைமுகங்கள் ஆகியவைக்கு சென்றது என்பதிலும் ஏற்பட்ட சர்வதேச ஒருமித்த கருத்து, ஒட்டோமான் பேரரசின் அப்போதைய தலைநகரான கான்ஸ்டான்டினோபில் / இஸ்தான்புல்லில் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் 1866 க்கு இடையில் ஏழு மாதங்கள் நடைபெற்ற சர்வதேச சுகாதார மாநாட்டின் பிரதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படியெல்லாம் இருக்கும்போது, 1938 அல்லது 1855 ஆம் ஆண்டுகளை விட நோயைப் பற்றி 2021 ஆம் ஆண்டில், நாம் அதிகம் அறிந்திருக்கும்போது, ஒரு பகுத்தறிவு, விவேகமான, அரசாங்கம் என்ன செய்திருக்கலாம்?
தன்னுடைய அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி , தானே நியமித்துக்கொண்ட இந்த 'புனித மனிதர்களை' சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். 'ஜோதிடத்தை' சிறிது காலம் ஒத்தி வைத்து விட்டு, தொடர்ச்சியாக இரண்டு கும்ப மேளங்களுக்கு இடையில் 12 ஆண்டு இடைவெளியின் காலண்டர் கணக்கீட்டை தொடர்ச்சியாக வைத்திருக்கலாம்..
இன்னும் கூட, இந்தியாவின் அனைத்து ஜோதிடர்களால் இந்த தொற்றுநோய் எப்படி, ஏன் ஏற்பட்டது? என்று ஒரு விளக்கத்தைக் கொண்டு வர முடியவில்லை, அப்படியிருக்கும் போது, ஜோதிடம்' ஒரு பின் இருக்கைக்கு நகர்ந்துகொண்டு , ஒரு சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வுக்கு அரசாங்கத்தின் ஆதரவை வழங்கலாமா வேண்டாமா போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும்போது.துணை நிற்கலாம்.
அப்படியும் மறுத்து, கும்பமேளா நடத்துவோம் என்று பிடிவாதம் பிடித்திருந்தால், அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்திருக்கலாம். 1942: கும்பமேளாவின் போது செய்தது போல.
1942 இல் அலகாபாத்தில் நடைபெற்ற கும்பமேளா-க்கு வசதியாக இந்திய அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அந்த காலத்திற்கு அலகாபாத்துக்கு ரயில் டிக்கெட்டுகள் எதுவும்,அதற்கு முந்தைய நாட்களில். விற்கப்படவில்லை, இது தானாகவே அலகாபாத்திற்கு பயணிக்கக்கூடிய யாத்ரீகர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது.
ஜப்பானிய விமானப்படையின் குண்டுவெடிப்புத் தாக்குதலை மேற்கோள் காட்டி இது செய்யப்பட்டது - ஏனென்றால் 1940 செப்டம்பரில் ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்குள் நுழைந்தது. மேலும், மேளாவின் இடத்தில் கூட்டத்திற்கு இடமளிக்க எந்த தளவாட ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. 1942 இல் கும்பமேளாவின் மக்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. அந்த ஆண்டு கும்பமேளாவிற்கு அரசாங்கத்தின் ஆதரவு வாபஸ் பெற்றதற்கு , எந்தவொரு அமைப்பும் பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேறுபட்ட சூழ்நிலைகளின் அவசியத்தை ஆணையிட்டன என்பதுஎல்லா தரப்பினராலும் புரிந்து கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த முறை,
- ரயில்களை ரத்து செய்வதற்கு பதிலாக, ஹரித்வாரில் உள்ள கும்பமேளாவிற்கு யாத்ரீகர்களுக்காக இந்திய ரயில்வே டெஹ்ராடூன் / ரிஷிகேஷுக்கு சிறப்பு ரயில்களை ஓட்டியது.
- அரசு செய்தித்தாள்களிலும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களை கொடுத்து யாத்ரீகர்களை அதிக அளவில் திரட்டுமாறு அறிவுறுத்தியது.
வெறுமனே இந்த ரயில்களை இயக்க வேண்டாம் என்று முடிவு செய்வது அல்லது நிகழ்வை விளம்பரப்படுத்தாமல் இருப்பது எவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
ஆனால் ஏன் செய்யவில்லை?
- தேர்தல்களில் வெற்றிபெற வேண்டி உள்ளது.
- மேலும் பல "புனித மனிதர்களின்" ஆதரவு எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது,
- மில்லியன் கணக்கானவர்களை நோய்க்குள் சிறைபிடிக்கக்கூடிய ஒரு நிகழ்விற்கான ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பர வருவாயிலிருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, இந்திய அரசு மற்றும் உத்தரகண்ட் அரசாங்கங்களின் தலைமையில் இருந்தவர்கள் மக்களுக்கு ஒரு மரண பொறியை வைத்தனர். என்று தான் சொல்லவேண்டும்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ‘புனித மனிதர்கள்’ கூட என்ன நடக்கிறது என்பதை முழுமையாக அறிந்திருந்தனர்.
"மரணம் தவிர்க்க முடியாதது, ஆனால் நம் மரபுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்'" என்று சில "புனிதர்கள்" சொல்லவில்லையா?
மரணத்திற்கான இந்த திறந்த அழைப்பை ஏன் யாரும் தீவிரமாக கண்டிக்கவில்லை? அதுவும் .குறிப்பாக தப்லிகி ஜமாஅத் பற்றி மிகவும் மோசமாக கூறியவர்கள்..
கர்மா மற்றும் மறுபிறவி கோட்பாட்டு. கொண்ட நல்ல இந்துக்களுக்கு தெரியும் . .மரணம் தவிர்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால் புனிதர்களுக்கு இது மீளமுடியாதது. அறிந்து செய்த கர்மக் கடன்,. இன்று இறந்தாலும், அதிலிருந்து மீள முடியாது
நம்முடைய ஆன்மிக நம்பிக்கையின்படியோ அல்லது, நம்முடைய நாத்திக நம்பிக்கை படியோ, நமக்கு தெரியும்…
இந்த வாழ்க்கை ஒரு முறை மட்டுமே. அதன்படி, நமக்கு வழங்கப்பட்ட நேரத்தை நீடிக்கவும், நம் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் பாதுகாக்க முயற்சிக்கவும், விடாமுயற்சியுடன், நம் முகமூடிகளை அணிந்துகொள்வதன் மூலமும், கூட்டங்களைத் தவிர்ப்பதன் மூலமாகவும், முடிந்தவரை ஒரு சமூக தூரத்தை பராமரிப்பதன் மூலமும், மதவாதம், மற்றும் அரசாங்க ரீதியாக, உயிரையும் மரணத்தையும் சாதாரணமாக.எடுக்கும் இந்த நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
ஆனால் நம் தலைவர்களும் புனித மனிதர்களும். நாம் கொலுவேற்றி வைத்தவர்கள் அல்லவா. அவர்கள் நம்மை தானே பிரதிபலிக்க வேண்டும்… ஒரு கண்ணாடியை போல.? ஆனால் நம் மரணத்தின் மீது ஆசை கொண்டது போலல்லவா தெரிகிறது? எங்கு பிசகு நேர்ந்தது?
சந்தேகமில்லாமல் நம்மிடம் தான்…
ஒன்று தெரியுமா?
பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் இந்த மத நம்பிக்கை பற்றியும், அதில் அவர்கள் "அடிபடுவது" பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. !! இந்த நேரத்தில் இந்த சடங்குகளை செய்யாமல் போனால்..என்ன ஆகும் தெரியுமா ? என்று அலட்டிக்கொள்வதில்லை..
புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று நாம் தீர்மானிததாலேயே அது சுற்றுவதை நிறுத்திக்கொண்டதா என்ன?
நன்றி. தி வயர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக