சனி, 29 மே, 2021

எனக்கு தெரிந்த ஒரு நபர் (ஆண்) பெண்களுடனேப் பேசுகிறார், ஆண்களிடம் பேசுவதே கிடையாது. இது ஏதேனும் வியாதியா?

 உங்களின் கேள்விக்குள்ளே ஒரு பொறாமை தெரிகிறது😀

சரி சரி..கூல்..எல்லா ஆண்களுக்கும் உள்ள உணர்வு தான்..உங்களை மகிழ்ச்சிப்படுத்த ஒரு உண்மை சொல்லட்டுமா?

பெண்கள் பொதுவாக ஆண்களிடம் தங்குதடையில்லாமல் பேச யோசிப்பவர்கள். அவர்களே , உங்களுக்கு தெரிந்த அந்த ஆணுடன் சகஜமாக பேசுகிறார்கள் என்றால்,

ஒன்று .அந்த பெண்கள் அனைவருக்கும் வயதாகியிருக்க வேண்டும். உங்கள் கேள்விக்குள் பொதிந்து இருக்கும் பொறாமை, அப்படியில்லை என்கிறது.

அப்படியெனில், அந்த ஆணுக்கு வயதாகி இருக்க வேண்டும்…😁

இப்போது சொல்லுங்கள்…உங்களுக்கும் அதே போல பெண்கள் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா?..😁

நான் படித்த ஒரு சம்பவம் சொல்கிறேன்…

இரண்டு இளம் துறவிகள் ஆற்றங்கறையோரம் நடந்து சென்றுக கொண்டிருத்தார்கள்கள். ஆற்றில் புது வெள்ளம் பாய்ந்து, கரை புரண்டோடுகிறது.. அப்போது திடீரென கூக்குரல்..வேடிக்கை பார்த்து நின்றுக கொண்டிருந்தவர்கள் சத்தம் போட்டு, ஆற்றின் மைப்பகுதியை காட்டுகிறார்கள். பார்த்தால்…

ஒரு பெண் அடித்துச்செல்லப்பட்டு போய்க் கொண்டிருக்கிறாள்….யோசிக்க நேரமில்லை. இந்த துறவிகளில் ஒருவனுக்கு நீச்சல் தெரியும்.. சட்டென்று ஆற்றில் குதித்து, போய் லாவகமாக, அந்த சுழியில் மாட்டிக்கொண்டிருந்த பென்னைத் தூக்கி கொண்டு வந்து கரையில் கிடத்துகிறான்…

அங்கிருந்த மக்கள், சூழ்ந்துகொண்டு, அந்த பெண்ணிற்கு முதல் உதவி சிகிச்சை கொடுக்க ஆரம்பிக்கின்றனர்.இவர்கள் அங்கிருந்து கிளம்பிவிடுகின்றனர்.

சிறிது தூரம் சென்றிருக்கும்.அந்த மற்ற துறவி, இவனை கேட்டான். "என்ன இருந்தாலும், துறவியாகிய நீ, அந்த பெண்ணை தொட்டு தூக்கிக் கொண்டு வந்தது சரியில்லை"

அதற்கு இவன் சொன்னான்.."அவளை நான் எப்போதோ இறக்கிவிட்டு விட்டேன்.நீ தான் அவளை இன்னும் சுமந்து கொண்டு வருகிறாய்"

பாவம் அது போன்ற நிலை தான்... பெண்களிடம் சகஜமாக பேசும் ஆண்களை (அவர்கள் பெரியவர்கள்/சிறியவர்கள் என்ற வித்யாசம் இன்றி) பற்றி குறை காணும் மனோநிலை..

அதுவும் அது மன நோயா என்றுக கேட்கும் அளவிற்கு உள்ளது..இது தான், மன நோயின் ஆரம்பம் என்று நினைக்கிறேன்.

இந்த கோராவில் கூட, அது போன்ற மனோவியாதி கொண்டவர்களை அதிகம் பார்க்கிறேன். நீங்கள் ஏன் பிரபலமாகவில்லை என்றதற்கு ஒரு பயனர் எழுதுகிறார்….இங்கு பெண்கள் என்றால் தான், ஆண்கள் போய் ஆதரவை அள்ளி கொடுப்பார்கள்..ஆனால் நான் யாருடைய பதிலையும் படிக்க மாட்டேன்.பின்னூட்டம் இட மாட்டேன். அது எனக்கு தேவையுமல்ல என்கிறார்.அப்படியெனில், இவருடைய பதிலுக்கு மட்டும் ஆதரவு கொடுத்து, பின் தொடர மற்றவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அதிலும் பெண்களை பற்றி மட்டமான கருத்து கொண்டவரை பெண்கள் பின்தொடர்வதும் சரியாமோ?

என்ன படித்து என்ன பிரயோஜனம்? எதிர் பாலினத்தை சேர்ந்தவர்கள் நம் குடும்பத்திலும் உள்ளனர் என்று உணராத உன்மத்தம் கொண்டவருக்கு ஊமத்தம் பூச்சாறு கொடுத்தால் சரியாகுமோ?

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக