காமமும் கோபமும் உயிர் குணங்கள் என்றார்கள் முன்னோர். ஏனெனில் மற்றவை எல்லாம் வெளி இருந்து வருபவை. ஆனால் காமமும் கோபமும் உள்ளிருந்து வருவது. காமம் என்பதை அன்பு என்று கொண்டால் அது கிடைக்காத, எதிர்பார்த்து ஏமாந்த இடத்தில் கோபம் வரும்..அதனால் தான் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை
அதை கடந்தவரோ நீக்கியவரோ இருக்க முடியாது.. வேண்டுமானால் அதை அடக்க முடியும்…ஆனால் அது எத்தனை கடின வேலை ..நமக்கு தெரியுமே…😁
இதை அடக்குவது குறித்து வள்ளுவர் சொல்லாததையா நான் சொல்லப்போகிறேன்..
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்லி அதை அடக்க முடியாமல் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்..😃
இது குறித்து ஓஷோ சொல்கிறார்
"நீங்கள் உங்களது கோபத்தோடு, உங்களது பேராசையோடு, உங்களது பாலுணர்வோடு போராட வேண்டியுள்ளது.. ஏனெனில், நீங்கள் பலவீனர்களாக இருக்கிறீர்கள். எனவே, உண்மையில் கோபம், பேராசை, பாலுணர்வு இவைகள் எல்லாம் பிரச்சனைகள் அல்ல; உங்களின் பலவீனம் தான் பிரச்சனை. நீங்க உங்களுக்குள் இருப்பதை - நான் இருக்கிறே என்று உணர ஆரம்பித்துவிட்டால், உங்களது சக்திகள் எல்லாம் ஒரே புள்ளியை நோக்கி ஒருமுகப்படுகின்றன. கெட்டிப்படுகின்றன.
மேலும், அப்போது உங்களுக்குள் ஒரு 'ஆணவம் பிறக்கிறது. இது, நான் என்னும் தன்முனைப்புஅல்ல என்றும், ஆனால், இது ஆன்மா என்றும் நினைவில் கொள்ளுங்கள். நான் என்னும் தன்முனைப்பு என்பது ஆன்மாவின் பொய்யான உணர்வாகும். ஆன்மாவைப் பெறாமலேயே, நீங்கள் ஆன்மாவைப் பெற்றிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் ஆணவம், நான் என்னும் தன்முனைப்பு. ஆணவம் என்பது பொய்யான ஆன்மா - நீங்கள், ஆன்மாவாக ஆகவில்லை, என்றாலும்கூட, நீங்கள் ஒரு ஆன்மா என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்."
பாரதி கூட "ரவுத்திரம் பழகு" என்று தான் சொல்கிறார்..
கோபம் என்பதற்கு பதில் ரவுத்திரம் என்ற வார்த்தை ஏன்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் .அதாவது தனக்கோ அல்லது பிறருக்கோ தவறு/அநீதி இழைக்கப்படும் போது அதைத் துணிவுடன் எதிர்த்துத் தட்டிக் கேட்கும் ஆத்திரம்தான் ரௌத்திரம்.
அதை கூட அப்படியே வெளிப்படுத்தக்கூடாது என்கிறார். அதனால் தான் "பழகு" என்கிறார். எங்கே தொடங்க வேண்டும் எங்கே முடிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். பழக பழக, அது கை வந்த கலையாக மாறவேண்டும். அப்படி செய்யும்போது ரவுத்திரம் என்பது நம்முடைய நல்ல குணமாக மாறும்.
நல்ல குணங்கள் எப்போதுமே ஒரு தொற்று நோய் போன்றது. 🤣
.இந்த தொற்று நோய் நமக்கு வேண்டும் தானே?😃
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக