சனி, 8 மே, 2021

கவிஞர்கள் பெண்களை தேன், இனிப்பு, பழரசம் நறுமணம் என்றெல்லாம் சொல்கிறார்களே. உண்மையில் அப்படி எதாவது சிறப்பு பெண்களிடம் இருக்கிறதா இல்லை பட்டிணத்தார் சொன்னது போல பருவவெறி தான் அப்படியெல்லாம் பிதற்ற வைக்கிறதா?

 லலிதா சஹஸ்ரநாமத்தில் , "மதுப்ரீதா" என்ற நாமம், ..தேனில் நாட்டம் உள்ளவள்" என்ற பொருளில் வரும்.

"தேன்" இனிமையானது…

இனிப்பிற்கும் மனதிற்கும் சம்பந்தம் உண்டு என்று நமக்கு தெரியும் தானே!!

எப்படி என்கிறீர்களா?

இனிப்பு எப்போது எடுத்து கொள்வோம்?

ஏதேனும் ஒரு சந்தோஷம் அனுபவிக்கும் போது..

ஒரு மகிழ்ச்சியான செய்தியை இனிப்புடன் தானே கொண்டாடுகிறோம்.!!.

குழந்தை பிறந்தவுடன் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவதில்லையா?!

திருமண விருந்துகளில் மூன்று வகை இனிப்பு, பாயசம்i, ஐஸ் க்ரீம் என்று இனிப்பிலேயே எத்தனை வகையில் இடம்பெறுகிறது?

அதில் ஒன்று நம் இலையில் வைக்கவில்லையென்றால், மற்றவை எவை இருந்தாலும், அது 42 வகை விருந்தென்றாலும், நமக்கு கிடைக்காத அந்த ஐஸ் க்ரீமில் மட்டும் ஏங்குவதில்லையா?

ஒன்றும் வேண்டாம்…

சர்க்கரை அளவு உடலில் குறைந்தால், உடலும் மனதும் எப்படி தள்ளாட்டம் போடுகிறது!!

உடனே, ஒரு சாக்லெட்டை எடுத்து வாயில் திணித்துக்கொண்டால், மனது பழைய உற்சாகத்திற்கு திரும்புகிறது அல்லவா?

இது எதை காட்டுகிறது?

மனதிற்கும் இனிப்பிற்கும் உள்ள சம்பந்தம்..!!

இந்த விற்பனை பிரதிநிதிசுளை கேட்டால் சொல்வார்கள்..

ஒரு கிளையன்டை பார்த்து எந்த பலனும் இல்லை என்றால் எழும் மனசோர்வை தடுக்க ஒரு சாக்லெட்டை வைத்துக்கொள்ள சொல்லி அவர்களுக்கு பயிலரங்கத்தில் சொல்லித்தரப்படுவதை..!!..

இவையெல்லாம் எதை சொல்கிறது?

மனது மகிழ்ச்சியை இனிப்புடன், அது தரும் நறுமணத்துடன் தொடர்பு படுத்திக் கொள்கிறது..

அது போலவே அந்த இனிப்பு கிடைக்கும்போது, மகிழ்ச்சி அடைகிறது..

பெண்ணும் மனதிற்கு இன்பம் கொடுப்பவள்.இல்லையா?!!

அதனால் தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணமான இனிப்ப்பை பெண்ணுடன் ஒப்பிடுகின்றனர் கவிஞர்கள்.

அன்னை லலிதையை கையில் கரும்பு கொண்டு காட்சி தருபவளாக காட்டுவதும் அதன் பொருட்டே…

அவளே ஒவ்வொரு பெண்ணிலும் அடக்கம்.என்பதால் தான் பக்தி இலக்கியங்களும் இனிப்பை கடவுளுக்கு ப்ரீதியானதாகக் காட்டுகின்றன.

பட்டினத்தாராகட்டும் அருணாகிரிநாதர் ஆகட்டும்…இருவரும் தேர்ந்தெடுத்த பாதை வேறு, அந்த அனுபவத்தால் தான் அதனை மடை மாற்றி இனிமையான பாடசலகளை கொடுத்தனர்..அதுவும் அருணகிரிநாதர் பாடல்களில் வரும் வர்ணனையும் தாள லயமும் வேறு எதிலும் இல்லை எனலாம்.

கவிஞர் கண்ணதாசனின் ரசனையினால் தானே அந்த "கவியரச" பட்டத்தை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்!!

ஒவ்வொன்றுக்கும் அளவு உண்டு..அது அதிகமானால் 'வெறி' என்று தான் சொல்ல வேண்டும்..வெறி அதிகமாகும் போது பிதற்றுதலும் இருக்கும் தஸ்ன்!!

அது சரி..

லட்டுவிலேயே காலம் முழுதும் நாட்டம் கொண்டிருந்தால், அமிர்தத்தை அடைவது எப்படி?

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக