வெள்ளி, 28 மே, 2021

என்னால் வெகு நேரம் படிக்க முடியவில்லை, ஏன்?

 

Why can't I study for long hours?

கிரேக்கர்களின் பயிற்சியை பின் தொடருங்கள்.

இவர் தான் மைலோ.பண்டைய மிகப் பெரிய கிரேக்க ஒலிம்பிக் வீரர்.

அவர் கிரேக்கத்தின் மிகச் சிறந்த மல்யுத்த வீரர். கிரேக்க ஒலிபிக் பந்தயத்தில் தொடர்ந்து ஆறு முறை பதக்கம் வாங்கியவர்.

ஹுசைன் போல்ட் கூட மூன்று முறை தான் பதக்கம் பெற்றார். ஆனால் இவர் ஆறு முறை.

அவர் எப்படி இவ்வளவு வலிமை பெற்றார்?

அவர் தன பயிற்சியை எப்படி தொடங்கினார் தெரியுமா> புதிதாகப் பிறந்த ஒரு சிறு காளைக் கன்றை தூக்க ஆரம்பித்தார்.

ரொம்ப சுலபம் இல்லையா ?!!

நான் கூட கன்று குட்டியைத் தூக்கி விடுவேன். நீங்கள் கூடத் தான்.

ஒரு சின்னஞ் சிறுக் குட்டியைத் தூக்குவதில் என்ன விஷயம் உள்ளது? அவருடையப் போட்டியோ ஒரு காளை மாட்டைத தூக்குவதில் இருந்தது. .இவர் கன்றுக்குட்டியைத தூக்கி பயிற்சி செய்வதையைக் கண்டு எல்லோரும் சிரித்தனர். முட்டாள் மைலோ என்று !

ஆனால் மைலோ அந்த காளைக்குட்டியை எந்த நேரமும் தூக்கிக் கொண்டே திரிந்தார்.மெது மெதுவாக அது வளர் ஆரம்பித்தது. அதே போல் தான் மைலோவின் சக்தியும். கடைசியில் மைலோவால் ஒரு பெரிய காளை மாட்டை எந்த வித சிரமும் இல்லாமல் தூக்க முடிந்தது.

மற்றவர்களெல்லாம் காளை மாட்டைத் தூக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கலாம். ஆனால் மைலோவைப் போல் சிறப்பாக அல்ல.

https://www.bodybuilding.com/images/2016/december/how-to-build-muscle-strength-lessons-from-milo-of-croton-header-v2-830x467.jpg

இதைத் தான் மைலோவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படி?

உடன் ஒரு காளைக் குட்டியை வாங்குங்கள்.தினமும் தூக்கிப் பழகுங்கள்.?!

இருங்கள். தொடர்ந்து படியுங்கள். இதிலுள்ள சூட்சமத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

சமயத்தில் முடியவில்ல என்று அதனை கீழே வைத்து விடலாம். ஆனால் ரொம்ப காலததிற்கில்லை. திரும்பவும் தூக்குங்கள். மெது மெதுவாக அதை வளர விடுங்கள். ஒரு நாள் உங்களாலும் ஒரு பெரிய காளை மாட்டைத் தூக்க முடியும். மைலோப் போல.

முடியும் தானே?.

நன்றி மோனிகா ஆங்கில கோராவின் மொழிபெயர்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக