திங்கள், 31 மே, 2021

ஒரு திருநங்கை செய்த உங்களை வியக்க வைத்த செயல் என்ன?

 திருநங்கை அஞ்சலி குரு சஞ்சனா ஜான் செய்த செயல் ஆச்சர்யமாக உள்ளது.

பெண்கள் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பஞ்சாயத்து வார்டு தேர்தலில் பெண் வேட்பாளராக மனு செய்து நிரகரித்ததை எதிர்த்து வழக்கு போட்டுள்ளார் இவர்..…இது இங்கல்ல மும்பையில்..

அதில் தான், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 கீழ் ஒரு திருநங்கைக்கு அங்கீகாரம் பெற உரிமை உண்டு என்பதையும், அத்தகைய திருநங்கைகளுக்கு சுயமாக உணரக்கூடிய பாலின அடையாளத்திற்கான உரிமை இருப்பதையும் குறிப்பிட்டு, மாண்புமிகு மும்பை உயர் நீதிமன்றம் (அவுரங்காபாத் பெஞ்ச்) கடந்த சனிக்கிழமை ( ஜனவரி 02) அன்று, தீர்ப்பு வழங்கியது.

என்ன நடந்தது?

அஞ்சலி

இனி அவரை அப்படியே குறிப்பிடுவோம்😀

  • பெண்கள் பிரிவின் கீழ் ஜல்கான் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
  • அதை நிராகரித்த திருப்பிய அதிகாரியின் உத்தரவை எதிர்த்து ரிட் மனுவை[1] மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்
  • விசாரணையின் போது, :அவர், பெண் பாலினத்தை தனது சுய-உணரப்பட்ட பாலின அடையாளமாகத் தேர்ந்தெடுத்தும், பொது வாழ்க்கையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் தவிர, இனிமேல் தனது வாழ்நாளில் தான் சந்தர்ப்பவாதத்தால் தான் ஆண் இனத்திற்கு மாறமாட்டேன் என்றும் ஒரு முழுமையான அறிக்கையை நீதிமன்றத்திற்கு அளித்தள்ளார.
  • அவருடைய வேட்புமனு படிவத்தை நிராகரித்ததற்கான காரணம், மனுதாரர் ஒரு திருநங்கை, மற்றும் வார்டு பெண்கள்-பொது வகைக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. என்றும் கிராம பஞ்சாயத்து தேர்தலில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதாகும்.

நீதிமன்றத்தின் முன் மனுதாரர் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் பிரிவு 4 (2)யையும், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் இந்திய யூனியன் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை [2] யம் சுட்டிக்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நீதிமன்றம் கணக்கில் கொண்டவை

  • இனிமேல், மனுதாரர் தனது வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் ஆண் பாலினத்திற்கு மாறமாட்டார் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது
  • வேறு எந்த வேட்பாளரும் மனுதாரருக்கு எதிராக எந்தவொரு ஆட்சேபனையும் எடுக்கவில்லை
  • வார்டு பெண்கள் பொது வகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் மனுதாரர் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க முடியாது என்று நம்பிய ரிட்டர்னிங் அதிகாரி போதிய சட்ட அறிவை கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பெஞ்ச் குறிப்பிட்டது.

கடைசியாக, ரிட் மனுவை அனுமதித்த நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்து, மனுதாரரின் நியமன படிவத்தை ஏற்றுக்கொண்டு, அவர் தேர்ந்தெடுத்த பிரிவின் (பெண் பிரிவு) கீழ் வார்டில் இருந்து தேர்தலில் போட்டியிட அனுமதித்தது.

எவ்வளவு பெரிய வெற்றி இது…பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்..😀👍👍

இதை படிக்கும் திருநங்கைகள் நம் மாநிலத்திலும் பின்பற்றுவர் என்று நம்புவோம்

சரி..ஆண்கள் தான் பெண்களாக மாறுகிறார்களா என்ன.பெண்களும் ஆண்களாக மாறுகின்றனர்.இதோ இவர் தான் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த

ஜைமி

This Transgender Man's Before And After Pictures Are Leaving People Speechless

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக