சிவப்பு நிறத்தின் குணங்கள் என்ன?
என் இரத்தம் கொதிக்கிறது" என்று மீசை முறுக்கி சொல்லக்கூடிய வீரம், கோபம், சட்டென்று எதையும் யோசியாமல் செய்துவிடும் தன்மை இதெல்லாம் தானே...உடலில் ஓடும் ரத்தம மட்டுமா சிவப்பு??
காதலின் அடையாளமாக சொல்வதும்.. அதையே...
மென்மையும் கடினமும் இணைந்த முரண்பாடான உணர்ச்சிகளை வெள்ளமாக காட்டுவது இந்த தன்மை கொண்டவர்கள்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா??
அதிக கோபம் ஒருவருக்கு வீரத்தை ஊட்டும் என்றால் அதன் எதிர் விளைவாக அவரை நாகரிகமான ரவுடியாகவும் இருக்க வைக்கும். அடியாட்களின் தலைவன் என்று சொல்லத் தக்க வகையில் ஒரு கும்பலை வைத்துக் கொண்டு மிரட்டி கட்டைப் பஞ்சாயத்து செய்ய வைப்பவராக இருப்பவர்களும் இவ்வகையினர் தான்.
அதே போல , தன்னை காதலிக்கவைக்கவில்லை என்பதற்காக ஆசிட் ஊற்றவும் வைக்கும் !!
ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய் சுபத்துவமான பார்வையைப் பெறாமல், வேறுவகையில் சூட்சும வலுவும் பெறாமல், லக்னத்தில் அமர்ந்தோ, லக்னத்தைப் பார்த்தோ இருந்தால் அவர் பெரிய கோபக்காரராக இருப்பார். செவ்வாய் வலுப் பெற்று பாபத்துவம் பெற்றிருந்தால் மேற்சொன்ன கெட்டகுணங்களை கொண்டவராக, சமூகத்தால் ஏற்று கொள்ளமுடியாத மேற்சொன்ன குற்றங்களை செய்யக் கூடியவராக இருக்க வைக்கும் என்றால், சுபத்துவமான செவ்வாய் அதே தன்மையினரை சீருடை அணியும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட பணியில் அமர்த்தும். காவல் துறை, இராணுவம் போன்றவற்றில் இருப்போரின் ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவ ஆதிக்கம் இருப்பதை பார்க்கலாம்.
சிவப்பு வர்ணத்திற்கு நடுநடுவே வெள்ளைக கோடுகள் உள்ளன அல்லவா? அது எதற்கு?? யோசித்துக கொண்டே இருங்கள். கடைசியில் சொல்கிறேன்!!
அதுவே கருப்பு என்றால்... இருட்டு என்று சொல்வதை விட..ஒளியில்லாத தன்மை.. எனலாம்.
எதையெல்லாம் மனிதன் தன வாழ்வில் நடப்பதை விரும்ப மாட்டானோ அதையெல்லாம் தருவது ...
நயவஞ்சகம், திருட்டு, பொய், பொறாமை, குள்ளநரித்தனம் இவற்றை எல்லாம காட்டக்கூடிய குணத்தை உள்ளவன் மனது இருளடைந்தது இல்லையா? அவன் சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளவன். என்று உறுதியாக சொல்லலாம்.
ஏன்?
இதோ சனியின் காரகத்துவத்தை பார்த்தாலே தெரியும்...
மரணம் அல்லது ஆயுள், பொய் சொல்லுதல், வயதானவர்கள், இரவு, கோபம், தோல் பொருட்கள், உடல் உழைப்பால் பிழைத்தல், சட்டத்துறை, சட்டத்திற்கு புறம்பான செய்கை, கருப்பு நிறம், துக்கம், வேலைக்காரர், மேற்குத் திசை, தாழ்வு மனப்பான்மை, விவசாயம் செய்தல், கழுதை, அடிமை, கெட்ட நடத்தை, திடீர் சரிவு, முரட்டுப் பிடிவாதம், ஆண்மைக் குறைவு, அருவருப்பான இடங்கள், முறையற்ற காமம், எமன், திருட்டு.
அழுக்கான இடங்களில் பணி, போதைப் பழக்கம், திரவமான நீசப் பொருட்கள், வேஸ்ட் பேப்பர் மற்றும் குப்பைகள், சாராயம், மது, பெட்ரோல், தார், சாலை போடும் பணி, பழைய கிழிந்த துணிகள், எண்ணெய், எருமை மாடு, நயவஞ்சகம், இரும்பு, இடிந்த கட்டிடம், குட்டிச் சுவர்கள், கல்மண் சுமப்போர், ஆலைத் தொழிலாளர், எடுபிடி வேலை, துப்புரவுப் பணிகள், விறகுக் கடை, கலப்படம் செய்யும் தொழில், நீலம், விமான நிலையம், மூட்டை சுமத்தல், கூலி வேலை, சுரங்கம், கல் குவாரிகள், பிளாஸ்டிக், சிறைச்சாலைப் பணி, தண்டனை அனுபவித்தல், மக்கள் தொடர்பு, குற்றவாளிகளின் சேர்க்கை, செவிலியர், மருத்துவமனையின் நெடி,
பொதுப்பணத்தை மோசடி செய்தல், ஊராட்சி மன்றம், உடல் ஊனம், நடக்க இயலாத நிலை, அநாதை விடுதிகள், கருப்பு நிறப் பொருட்கள், மை, வெட்டியான் பணி, புரோகிதம், பிணத்துடன் இருத்தல், மரணத்திற்குப் பின் என்ன என்கிற தேடல், சித்து நிலை, ஆன்மிகம், தவம், கூடு விட்டு கூடு பாய்தல், சிறுதெய்வ வழிபாடு, ஈஸ்வரப் பற்று, சந்தேகம், நடைபாதை வியாபாரம், வளவளவென்ற விஷயமற்ற பேச்சு, குள்ளம், முட்டாள்தனம், கழிப்பிடத்தைப் பராமரித்தல், கடன், பசியுடன் இருத்தல், வறுமை, தீராத நோய், ஏமாற்றுதல் போன்ற அனைத்துக்கும் சனியே காரகன் ஆவார்.
சனிக்கு பிடித்த நிறம் கருப்பு. நீதியை நிலைநாட்டுவதில் பெரும் கடுமை காட்டும் சனி பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட சட்டத் துறையினர் ...வழக்கறிஞர்கள், நீதிபதிகள் , சட்டத்துறையினரின் சீருடையின் நிறமும் கருமை தான்.
வழக்கறிஞர்களின் கருப்பு நிற கவுனை குறித்து ஏற்கெனவே இந்தே ப்ளாக்கில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.
சனி பாபததுவமாக இருக்கும்போது மேற்சொன்ன கெடுகுணங்களை பிரதிபலிப்பவராகவும் சுபத்துவமாக இருக்கும்போது நீதிமானாகவும் ஒருவர் இருப்பார்...
சனியை முழு பாபர் என்று வரிசைப்படுத்தினால், செவ்வாயை முக்கால் பாபர் என்கின்றனர் வேத கால ரிஷிகள். அதாவது செவ்வாயிடம் கால் வாசி சுபத்துவமாவது இருக்கிறது என்று இதன் பின்னே ஒரு சூட்சமம் உள்ளது.
இந்த இரு பாபர்களும் ஒன்றினைந்தால் ...
பொதுவாக இயற்கை சுபர்கள் ஒன்று சேர்ந்தால், நல்லது செய்வார்கள். ஆனால் இயற்கை பாபர்கள் ஒன்று சேர்ந்தால், என்ன ஆகும்?
கெட்டவன் இன்னொரு கெட்டவனோடு சேர்ந்தால் என்ன ஆகும்...எந்த அளவிற்கு கெடுதல் செய்யலாம் என்று பார்ப்பார்கள். அடுத்து சில கணத்தில், கட்டிப் புரண்டு சண்டையும் போடுவார்கள். ஆக்ரோஷமான சண்டை யாரும் தலையிடமுடியாத அளவில்..
அதனால் நஷ்டப்படப்போவது சுற்றிலும் இருப்பவர்களும் தான்....
ஆனாலும் இவர்களையும் கட்டுப்படுத்த கூடிய சுபர்கள் உண்டு.
சூரிய சந்திரர்கள் சனியை பகைவனாக பார்க்கும்போது, அதிக சுபத்துவம் கொண்டு குருவுக்கு சனி மீது ஒரு பரிவு உண்டு. பூமியின் சூரியனை நோக்கிய நீள் வட்டப பாதைக்கு அடுத்து உள்ளவர்கள் அல்லவா இவர்கள் இருவரும்!!
யாருக்கும் கட்டுப்படாத சனி, தனக்கு அரூகே உள்ள குருவின் பார்வைக்கும் இணைவுக்கும் கட்டுப்படுவார்.
செவ்வாய் கிரகத்திற்கு அருகில் உள்ள சுபர் என்றால் ஒளி பொருந்திய சந்திரன் தானே ...சந்திரனின் இணைவிற்கு பார்வைக்கும் கட்டுப்படுவார் செவ்வாய்..
அந்த சந்திரனின் பால் போன்ற வெண்மை நிறத்திற்கும் சிவப்பு நிறத்திற்கும் உள்ள இணைவு இது தான்!!
ஆனாலும், சனி செவ்வாய் இருவரும் இணைந்]துள்ளபோது, யாருக்கு முதல் மரியாதை ? குருவுக்கா சந்திரனுக்கா?
குரு மட்டுமே அனைத்து கிரகத்திலும் முழு சுபர்.......எந்த காலத்திலும், அவர் நீச்சத்தில் இருந்தாலும்....
அப்படிப்பட்ட குரு வந்தால் தான், இந்த சனி செவ்வாய் ஆட்டத்தை நிறுத்த முடியும்!!
நாமும் அந்த 'குரு'விற்காக காத்திருப்போம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக