நாம் எல்லோரும் கதாநாயகர்கள் தானே !!
"உலகமே ஒரு நாடக மேடை..அதில் நாம் அனைவரும் நடிகர்கள் தானே. அதை கொண்டு நான் சொல்கிறேன்" என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
அதுவும் வெள்ளித்திரையில் நாம் காண்பவர்கள், கதாநாயகர்களாக நடிப்பவர்கள்..
ஆனால் நாம் யாரும் நடிப்பதில்லை.. ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் கதாநாயகர்கள்/கதாநாயகிகள் தான் ..
என்ன சொல்கிறேன் என்று குழப்பமாக இருக்கிறதா??
மறந்து விட்டீர்களா என்ன ?..
நாமெல்லாம் பிறக்கும் முன்னரே நம் தாயின் கருப்பையில் நுழைய நடந்த அந்த ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்து வந்தவர்கள் தானே...
ஒரே அச்சில் ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நம்முடைய தோற்றம் மட்டுமல்லாமல், நிறம், குணம், சுவை அனைத்தும் ஒன்றாய் ஒருவர் கூட இருக்க முடியாது...நம்முடைய கைரேகையை போல வேறு ஒருவருக்கு இருக்க வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை}::
அது மட்டுமா ...
நாம் பிறக்கும் சமயம், விண்வெளியில் அந்த தருணத்தில் இருந்த கோள்கள் நட்சத்திரங்கள் அதே நிலையில் மீண்டும் வர பலலாயிரக்கனக்கான் கோடி வருடங்கள் ஆகும் என்கின்றனர் வானவியலாளர்கள்.
இருக்கும் தான்...
நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகும் பிரபஞ்சத்தின் நாயகனான சூரியன் சுற்றும் வேகமோ மணிக்கு 8,28,000 கி. மீ. தலைதெறிக்கும் வேகத்துடன் சுற்றிககொண்டிருக்கும் சூரியனைய சுற்றி வந்து கொண்டிருக்கும் கோள்கலுள் நம் பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். பூமியோடு சேர்ந்து நாமும் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த வேக சுழற்சியில் நேற்று இருந்த நிலையிலா இன்று அனைத்தும் இருக்கும்?
ஒரு நாளையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை லக்கினம் மாறுகிறது. சூரியனின் கிழக்கு திசையில் நாம் பிறக்கும் நேரத்தில் தோன்றும் இராசியே நம் லக்கினமாகிறது. தான் ஒரு இராசியிலிருந்து மாற இரண்டரை நாட்கள் எடுத்துக்கொள்ளும் சந்திரன் நாம் பிறக்கும் நேரத்தில் இருக்கும் நிலையே நம் இராசியாகிறது. .
அப்படியோர் கூட்டணி பின்னர் அதே போல அமைய பல கோடி வருடங்கள் ஆகுமாம். அந்த கிரகங்களின் இணைவு, பார்வை ஆகியவற்றின் கூட்டுக்கலவையாக தான் நம் தோற்றம், குணம், வாழ்வு எல்லாம் அமைகிறது..
இட்லியை சட்னியுடன் சேர்த்து சாபிட்டால் ஏற்படும் சுவை வேறு..சாம்பாருடன் சேர்க்கும் போது உள்ள சுவை வேறு.
என்னை போன்ற சிலர், சட்னியும் சாம்பாரும் சேர்த்து இட்லியுடன் சேருங்கள் என்போம்.
சிலருக்கு இட்லியுடன் கறிக்குழம்பு தான் சரியான இணை என்பர்.
இன்னும் சிலர் குழந்தை மாதிரி. சர்க்கரையை தொட்டு சாப்பிட பிடிக்கும் என்பார்கள்.
இட்லி ஒன்று தான்..ஆனால் அது சேரும் இடத்திற்கேற்ப சுவை மாறுகிறது.
அது போலத் தான் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இராசி, அதனுடன் இணையும் மற்ற கிரகங்கள், அவற்றை பார்க்கும் மற்ற கிரகங்கள் அவற்றின் பகை, நட்பு, பலம், பலவீனம் போன்றவற்றை பொறுத்தே பிறக்கும் நபரின் குணம், தோற்றம் எல்லாம் அமையும்.
சிலர், ஒரு இராசி அல்லது நட்சத்திரத்தை சொல்லி இந்த இராசிக்காரர்களின் குணம் எப்படி என்று கேட்கும் வினாவை பார்க்கிறேன். அப்படி தனித்து சொல்லமுடியாது என்பதற்காக மேலே சொன்ன உதாரணம்!!
அதனால் தான், அந்த குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தில் பிறந்த நம்மின் ஒத்த ஜாதகம் கொண்ட இன்னொருவர் இந்த புவியில் இன்னொருமுறை பிறக்க இயலாது என்னும்போது நாம் தனித்தன்மை வாய்த்தவர் தானே....
இப்போது சொல்லுங்கள், தனித்தன்மை கொண்ட நாம் எல்லோரும் அவரவர் வரையில் கதா நாயகர்கள் தான்..
.அதனால் எப்போதாவது என்ன..எப்போதுமே நாம் ஒவ்வொருவரும் கதாநாயகர்கள்/கதாநாயகிகள் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக