ஆலோசனையெல்லாம் கிடையாது…ஒன்லி
யோசனைகள் தான்!!☺️😊
1.இப்போது தான் சமூக வாழ்க்கைக்கு தயாராகிறீர்கள்..பந்தயம் ஆரம்பிக்கும் போதே நாலு கால் பாய்ச்சலை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்…சோ be cool!!
2.தேநீர் கோப்பையில் அதிகமா ஊத்தினா, என்ன ஆகும்? கீழே தான் வழிஞ்சோடும்..
அதனாலே ரொம்ப மோடிவேசன் உடம்புக்கு நல்லதல்ல 😁
3. புது சூழ்நிலை..எல்லாமே புதுசா..ஏதோ இருட்டில் இருக்கிற மாதிரி கொஞ்சம பயமாயிருக்கா? உங்களை கொண்டு வந்து இந்த இடத்திலே நட்டு வச்சிருக்காங்கன்னு நினைங்க..நல்லாவே வளர்வோம்!!☺️
4. கல்லூரிக் காலம், உங்க வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் மட்டும் தான்.ஆனா அதை சாய்ஸ்லே விட நினைக்காதீங்க !!
5. வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்…அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லாயிருக்கலாம்…😉
.6.. காலேஜுக்கு ஏற்கெனவே லேட்…
இது மாதிரி நம்ம காலேஜில் இருந்தால் எவ்ளோ சீக்கிரம் கிளாஸுக்கு போகலாம்…
7. நல்லா படிக்கிற பசங்க முதல் பெஞ்சிலே மட்டுமே உட்காருவங்கன்னு நினைச்சா…😆
8.முதல் மார்க் எடுக்குறதோ, பெயிலாரதோ வாழ்க்கையை புரட்டி போடாது..அங்கே கத்துக்கிற வாழ்க்கை பாடங்கள், அனுபவங்கள் தான் முக்கியம்…
9. யாருடைய வார்த்தைகளும் நம்மை காயப் படுத்த விடக்கூடாது.
10. இன்னிக்கு உங்க பெஸ்ட் பிரெண்டுன்னு இருக்கவங்க வாழ்க்கை முழுதும் வருவாங்களான்னு தெரியாது.
11.ஒருத்தரை பற்றி பார்த்தவுடனோ, கேட்டவுடனோ ஒரு முடிவுக்கு வராதீங்க. அவங்களோட குறைந்தது ஆறு மாசமாவது பழக்கத்துக்கு பிறகு முடிவு செய்யுங்க.
12. ஒருத்தர் என்ன சொல்றார்ன்னு இல்லாம என்ன செய்யுறார்னு கவனிச்சு பிறகு அவரை பத்தி முடிவு செய்யுங்க.
13. இந்த காலக் கட்டம் தான் கற்பதற்கு உகந்த காலம்.வண்டி ஓட்டுவது, நீச்சல், வாத்திய கருவி இசைப்பது , சமையல், எலெக்டிரிக்கல் மற்றும் கட்டிட பழுது பார்ப்பது இவையும் வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள்.எவ்வளவு முடியுமோ கற்றுக்கொள்ளுங்கள். இன்று முடியாதது என்றுமே முடியாது 😃
14. ரொம்ப அதிகமா பாட்டு கேட்டா, எண்ஜாயமெண்ட இல்லே…சொல்லிட்டேன்..பார்த்துக்கோங்க…
15.அம்மா குடுக்கிற லஞ்ச பாக்ஸை எடுத்துட்டு போனா அசிஙகம்னு நினைச்சு காலேஜ் கான்டீன்லே பிஸ்ஸாவும் கோலாவும் குடிக்கிறவங்க கவனிக்க..
16. கூகிள் அசிஸ்டெண்ட கிட்டே போயி கேட்டா..
17.விடுப்பா…அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா…
18. வீட்டு உறவுகளும் தேவையப்பா..
19.எத்தனை ஆயிரம் லைக்குகள், பிரெண்ட்ஸ் சமூக வலைத்தளங்களில் இருந்தா தான் என்ன, ..உன் கவலை உனக்கு மட்டுமே…
20…விளம்பரம் இருந்தா தான் எதுக்கும் மதிப்பு!!
21. உங்க கிட்டே சிரிச்சு பேசுரவங்களோ உங்களுக்கு ஜால்ரா அடிக்கிறவங்களோ எப்பவும் உங்களுக்கு உண்மையா இருப்பங்கன்னு சொல்லமுடியாது..
22. உனக்கு கீழிருப்பவனை நீ நசுக்கினால், உனக்கு மேல் இருப்பவன்…
23. பேராசை பெரு நஷ்டம்!!😊
24. அந்த பயம் இருக்கட்டும்!!☺️
இதோ ஐன்ஸ்டீன் சொல்வதை கேளுங்கள்…
25..ஏட்டுக் கல்வி மட்டுமே அறிவை வளர்க்காது.
கடைசியாக..
நாம் திரும்ப திரும்ப மனதில் கொள்ள வேண்டியது கல்வி வேறு..அறிவு வேறு..கல்லூரியில் படித்து பட்டம் பெற்றாலேயே அறிவு வளர்ந்துவிட்டதுன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க..அது தவறு.
ஒரு உதாரணம் சொல்லனும்னா ஒரு அடி பம்ப்பில் தண்ணீர் இறைக்கணும்னா வெறுமனே அதை அடிச்சீங்கன்னா வெறும் காற்று தான் வரும்😋 அதுவே கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடித்தால் தான், பம்பில் இருந்து தண்ணீர் வரும்.அது போல தான் இந்த கல்வியும். கல்வி பயில பயிலத் தான், நம் அறிவு விருத்தியாகும்.அது ஏட்டுக் கல்வி மட்டுமில்லே. அனுபவக் கல்வியும் சேர்த்து தான்.
அது அனைத்தையும் பெற்றுத் தரும் இந்த கல்லூரி காலம், போனால் திரும்ப வராது..அதனால் அதை ஆனந்தமாக அனுபவியுங்கள்!!👍👍
படித்ததற்கு நன்றி.
ஸ்ரீஜா.