நான் உசிலம்பட்டியில் வாக்கப்பட்ட பெண் என்பதால் இந்த கேள்வியின் தாக்கம், வீச்சு அறிந்தவள். இந்த கேள்வியின் பின்னே உள்ள ஏச்சு பேச்சுகள், வலி, வேதனை அறியாதவர்களின் பதில்களாகத் தான் மற்றவற்றை பார்க்கிறேன்.
நாம் என்ன ஒரு நவ நாகரீக உலகில் இருந்தாலும், பழமையும் சில மூடப்பழக்கஙகளும் உள்ள பத்தாம்பசலிகள் இடத்தில், நாம் தான் வித்தியாசமாக பார்க்கப்படுவோம். அது போன்றதுதான் ஆண் குழந்தை இல்லாதவரின் நிலை…
"எவனோ ஒருத்தன் வந்து உட்கார்ந்து திங்கப் போறதுக்கு, எதுக்கு இப்படி ஓடியோடி வேலை செய்ற"
"உனக்கு பொட்டைப் புள்ளை தானே.அந்த வீட்டை அவனுக்கு விட்டுக் குடுத்துடு.அவன் தான் ஆம்பிளை புள்ளை வச்சிருக்கான்.."
"..தப்பா நினைக்காதேடி யம்மா…அவங்கல்லாம் சந்தனம் வக்கட்டும்.நீ கொஞ்சம் கூடமாட இங்க வந்து ஒத்தாசை பண்றியா?"
சொந்தக்கார புள்ளைதாச்சிக்கு வளைக்காப்புலே சந்தனம் வைக்கப் போன, பொண்ணை பெத்தவளை, தடுத்துக் கூப்பிடும் வயதான பெரிய மனுஷி!!
எத்தனை காலம் போனால் என்ன..மேல்தட்டு, கீழ்தட்டு மாறினால் என்னா…
பழம் பெருமை பேசுவதில் இதுவும் சேர்த்தி தான்…
விஞ்ஞானம் முன்னேறி விட்டது..ஆனால் அதை கொண்டு பிறக்கும் குழந்தை பாலினம் தெரிந்து "முடித்து" வைப்பதால்..தடை சட்டமும் பின்னாடியே வந்தது.
அதனாலென்ன…"அண்டத்தில் உள்ளது தானே பிண்டத்தில் உள்ளது" என்று,
ஜோதிடம் என்பதே, வானியல் ரீதியாக கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கணித்துக் கூறும் விஞ்ஞானம் தானே.
அதனால் தான் விண்வெளியை ஆராய்பவர்கள், Astronomy Astrology என்று சேர்த்து பார்த்துள்ளனர்.
ஜோதிடம்/ ஜாதகம் நம்முடைய வாழ்க்கை துணையை மட்டுமா காட்டுகிறது…. நம் சந்தானத்தையும் சேர்த்து தான்.
ஜாதகத்தில் 5ம் இடம் புத்திர பாவம் என்பர். அதுவே ஜாதகரின் மூன்றாம் இடம் இளைய சகோதரர்களை காட்டும்..அதாவது 7 ம் இடம் மற்றும் 9 ம் இடம். பிறக்கப்போகும் குழந்தை எத்தனையாவது என்பதை பொறுத்து கணக்கிடுவர். அதே போல கிரகங்களில் ஆண் தன்மையுள்ளவை உண்டு…அவை அந்த கட்டத்தில் எத்தனை உள்ளன , அதே போல குருவை புத்திர காரகன் என்பர்.அது இருக்கும் இடமும், அதன் அதிபதி யார் ,என்பதும் பார்க்கப்படும் . அது நட்பு கிரகமா என்பதும் சனி இருக்கும் இடங்களை பொறுத்தும், ஆண் குழந்தை ஜாதகருக்கு உண்டா இல்லையா என்று தெளிவாக சொல்ல முடியும்.
ஆனாலும் ஏன் சிலருக்கு ஜாதகத்தில் கணிப்பு தவறுகிறது என்றால்…அந்த கணக்கு போடுவதும் அதற்கு கொடுக்கப்படும் தகவல்கள் சரியில்லாமல் இருப்பதும் ஒன்று.
சிலருக்கு ஆண் குழந்தை பிறப்பது என்பது அவர்கள் மண வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும். என் நாத்தனாருக்கு ஆண் குழந்தை பிறந்த இரண்டாம் வருடம் அவர் கணவர் தவறி விட்டார்.பின்னால் பையனின் ஜாதகம் கணித்த போது, அவனுக்கு 9ம் இடம் தகப்பன் பாக்கியம் இல்லாமல் போவான் என்று இருந்தது.
..ஆனால் எல்லாமே கணித்து விட முடியுமா?
அதிலும் இறைவன் ஒரு சூட்சசம. வைத்துள்ளான்.
புகழ்பெற்ற வானவியலார் பாஸ்கராச்சியாரை தெரியும் அல்லவா?
படிமப்புரவு கூகிள்
அவர் எத்தகைய மேதை…அவருடைய ஒரே மகள் லீலாவதி. அவளுக்கு ஜாதகம் அவர் கணிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட முகூர்த்த நாழிகையில், அவள் திருமணம் நடந்தால் மட்டுமே உண்டு..இல்லையென்றால் வாழ்க்கை முழுதும் கிடையாது என்று அறிகிறார்.
பெற்றவர் இல்லையா…அவளுக்கு அந்தக் காலம் வரும்போது, திருமண ஏற்பாடு செய்கிறார்..குறித்த நாழிகை வரும்போது, திருமணம் நடக்க வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்த மணல் குடுவை வழியாக நேரம் கண்டுபிடிக்க வைக்கிறார். எல்லாம் தயாராகிக்கொண்டு இருக்கிறது.
சிறுமி லீலாவதி ஒரு ஆரவத்தில், அந்த கடிகார குடுவைக்குள் எட்டி பார்க்கிறாள்.அவளின் மூக்குத்தியில் இருந்த கல் ஒன்று குடுவைக்குள் விழுந்து விடுகிறது.பயந்து போய் யாரிடிடமும் சொல்லாமல் விடுகிறாள்.இங்கு திருமணத்திற்கு எல்லாம் தயார்.குறித்த நேரத்தில் முடிக்க காத்திருக்கின்றனர். நேரம் போனதே தவிர குடுவை குறித்த நேரம் காட்டவில்லை. முகூர்த்த நேரமும் போய்விட்டது தெரிகிறது. என்ன நடந்தது என்று பார்த்தால், லீலாவதியின் மூக்குத்தியில் இருந்து விழுந்த கல், குடுவையில் மண் விழும் பாதையை அடைத்திருக்கிறது..!!☺️
விதியை மதியால் வெல்ல பார்த்தார்…முடியவில்லை.
தன் .மகள் மேல் கொண்ட அளப்பரிய பாசத்தால், தான் எழுதிய கணித நூலுக்கு "லீலாவதி" என்றே பெயர் வைத்தார்.
இது சொல்வது எதற்கு என்றால்,
கடமையை செய். பலனை ஏதிர்பாராதே..
எல்லாம் விதிப்படி தான் நடக்கும்.
மேலே உள்ள அட்டவணையில் பெண்ணின் வயது மற்றும் கர்பமடைந்த மாதம் ஆகியவற்றில் இருந்து பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம். இது சரியா எனபார்த்தபொழுது 100% சரியாக இருந்தது. இந்த அட்டவணையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அவரவர்க்கு உரிய பிராப்தம் உரிய காலத்தில், வந்து சேரும்.
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
👍🙏
பதிலளிநீக்கு