பிரம்ம ஹத்தி தோஷத்தை பற்றி நான் புராணங்களில் நிறைய படித்திருக்கிறேன். . இராவணன் என்ற பிராமணனை கொன்றதாலேயே இராமனுக்கு அந்த தோஷம் ஏற்பட்டது என்றும் ஏன் சிவனுக்கே அந்தணனான பிரம்மனின் தலையை கிள்ளி எரிந்ததால் தோஷம் ஏற்பட்டு அவர் பிராயசித்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்பர். அதேபோல , வரகுண பாண்டிய மன்னன் ஒரு அந்தணனை கொன்றதால் ஏற்பட்ட அந்த தோஷத்தை நீக்க , திருவிடைமருதூர் வந்து சாபம் நீங்கியதாகவும் கதைகள் கூறுகின்றன.
ஆம்.. கதைகள் தான்…..புராணங்கள் என்றாலே கதைகள் தானே..
இவற்றை படிக்கும் போது, நான் கூட நினைத்திருக்கிறேன்...இராமன் போர் புரிந்த போது எண்ணற்ற பேர் மாண்டனர்..அப்படியிருக்க இராவணன் என்ற ஒரு பிராமணனை வீழ்த்தியதாலேயே அவருக்கு தோஷம் ஏற்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளதக்கதல்லவே என்று!! யோசித்து பார்த்து தேடியபோது, சமீபத்தில் தான் எனக்கு பிரம்மம் அனுமதித்த அளவில் , சிலவற்றை புரிந்துக் கொள்ள முடிந்தது.
இது போன்ற புராணக் கதைகள் சொல்ல வருவதன் அர்த்தம் என்ன? ஒரு பிராமணனை இம்சித்தால் குற்றம் ஏற்பட்டுவிடும் என்று அச்சுறுத்தி அது போன்ற ஒரு நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்வது தானே?
ஏன் அப்படி புணைய வேண்டும்?
இத்தனைக்கும் 'ஒற்றை பிராமணன் எதிரில் வந்தாலே சகுன தோஷம்' என்று சொல்லும் போது?
அதற்கு காரணம் இருக்கிறது…..
முன்னர் அந்தணர் குலத்தை சேர்ந்தோரே அரசனுக்கு மதி மந்திரியாகவும், இந்த ஜோதிட சாஷ்திரங்கள் உட்பட அறிந்திவராய் அவனுக்கு அறிவுரை சொல்லும் இடத்தில் இருந்தனர். அரசனோ சத்திரியன்…எப்போது அவனுக்கு கோபம் ஏற்படும்? அப்போது என்ன செய்வான் என்று தெரியாது!! வேளை கெட்ட வேளையில், இவன் அறிவுரை சொல்லப் போக, அவன் அறிவுரை சொல்லிய பிராமணனுக்கு ஏதேனும் உயிர் சேதம் ஏற்படுத்தினால் என்ன ஆவது?
அதை தடுக்கவே, இது போன்ற புணை கதைகள்… புராணங்களை கையாளும் இடத்தில் அவர்களே இருந்ததால் இதுவே எளிதானது.
இதை எப்படி சொல்ல முடியும்? என்று நீங்கள் கேட்பதும் தெரிகிறது..
ஜோதிட மூல நூல்களை ஆராயும்போது வேத கால ரிஷிகள் இது போன்ற பிரம்மஹத்தி தோஷம், களத்திர தோஷம் என்றெல்லாம் குறிப்பிடவில்லை!என்பது நம் கூற்றுக்கு ஆதாரமாக இருக்கிறது. இதை தான் குருஜியும் சொல்கிறார்!!
இன்னும் சிலரோ, இது உயிர் உடலை பிரியும்போது படும் கடுமையான அவஸ்தையை பார்ப்பதால் ஏற்படும் தோஷம் என்கின்றனர். அப்படியானால் மருத்துவர்கள் எல்லாம் இந்த குற்றத்துக்கு ஆளாக வேண்டியது தான்!!
கூடவே, வருடம்தோறும் லட்சக்கனக்கான சாலை விபத்தினை காணும் ஆட்களுக்கும ஏற்பட வேண்டியது தான்....!!
எதுவும் லாஜிக்காக இல்லையே என்றால்… முன் ஜென்மத்தில் செய்த பாவத்தினால் இந்த ஜென்மத்தில் இப்படி கஷ்டப்படுகிறோம் என்பர்..
ஒரு விதத்தில் ஒன்பதாம் பாவம் நம் பூர்வ ஜென்ம புண்ணிய, பாவத்தை காட்டுகிறது என்றும், அதை கொண்டே நமக்கு புத்திரர் கிடைப்பதும், பதினொன்னாம் பாவமான லாபஸ்தானமும் சொல்லும் என்பது சரி தான்.
ஆனால் இவர்கள் சொல்லும் பிரம்மா ஹத்தி தோஷம் எப்படி ஏற்படுகிறதாம்?
லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 - ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம். என்கின்றனர்.
ஜோதிடத்தில் சுபர் என்று எல்லா கால நிலையிலும் சொல்லப்படுபவர் "குரு" தான். அவரை தான் அந்தணர் குலத்தை சேர்ந்தவர் என்று வேத கால ரிஷிகள் வகுத்துள்ளனர்.இப்போது போல பிறப்பால் நிர்னயிக்கபடுவதல்ல குலம் அப்போது. அவர் தம் செய்யும் தொழில் கொண்டு நிர்ணயிக்கபடுவது. அதன் படி 'குரு' அந்தணர் எனப்படும் போது, சனி சூத்திர குலத்தை சேர்ந்தவராக வகைப்படுத்தபடுகிறார்.
இந்த உயர் குலத்தை சேர்ந்த குருவும் கீழ்குடியை சேர்ந்த சனியும் இணைவதோ பார்ப்பதோ, அல்லது ஒருவர் ஆட்சிக்குட்பட்ட பாவத்தில் இன்னொருவர் இருப்பதோ 'குற்றம்' என்று பார்க்கப்பட்டது. தோஷம் என்ற வார்த்தைக்கு குற்றம் என்ற பொருள் உண்டு என்று ஏற்கெனவே சொல்லியுள்ளேன். எனவே இந்த முரண்பாடான இணைவை பெருமைக்கு ஏற்பட்ட இழுக்காக, அது தான் "பிரம்மஹத்தி தோஷம்" என்று சொல்லப்படுகிறது!!
குருஜி சொல்வது போல, சனியும் குருவும் பொருந்துவதே குற்றம் என்றால், வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து இடம் பெயரும் குருவும் இரண்டரை வருடத்திற்கொருமுறை இடம் மாறும் சனியும் ஏதேனும் ஒரு கட்டத்தில் இணைவு, பார்வை பெறத்தான் வேண்டும். அப்படியாயின், அந்த ஒரு வருட காலத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்த தோஷத்திற்கு உட்பட்டவர்களா??/ என்றால் கேட்கும் போதே சொல்கின்ற விடை 'ஏற்புடையதாக இல்லை 'என்று நாம் அறிய முடியும்!!.
அப்படியானால் இது குற்றம், அதாவது தோஷம் இல்லையா என்பவருக்கு, ஒரு குறிப்பிட்ட கால நொடியில், இடத்தில் பிறக்கும் ஜாதகரை ஒத்த இன்னொருவர் பிறக்க சில ஆயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் நம் வேத கால முனிவர்கள்!!அவரின் ஜாதகமும் இன்னொருவரின் ஜாதகத்தில் இருந்து மாறுபட்டது அப்படி பார்க்கையில் பூவுலகில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவரே!!
அவர்கள் ஜாதகத்தில் செயல்பாட்டில் இருக்கும் நவக்கிரகங்கள் எல்லோருக்கும் ஒரேவிதமான ஆதிபத்தியத்தையோ காரகத்துவத்தையோ செய்து விடுவதில்லை!!.
அவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு தோஷம் உள்ளது என்பது ஏற்புடையது ஆகாது.
நவக்கிரகங்களிலேயே, குரு தான் அதிக சுபத்துவமான கிரகம் . அவரின் ஒளிவீச்சு பற்றி ஏற்கெனவே முந்திய கட்டுரையில் எழுதியுள்ளேன்.
சனியோ இருள் கிரகம்.
இரண்டும் இணையும் போது, என்ன ஆகும்?
சாதாரண நிலையில் பார்க்கும் போது, ஆழமான இருள், எத்தனை பெருவெள்ளமான ஒளிவீச்சையும் விழுங்கிவிடும் தான்!
நவக்கிரங்களின் தலைவனான சூரியனே ராகுவிடம் சரணடைந்து தானே போகிறார், கிரகணம் பிடித்தால்!!
அப்படியிருக்க, குருவும் சனியும் இணைவு பெறுவது குருவுக்கு நல்லதல்ல தான்!!
ஆனால் சனிக்கு??
சனி பாபா கிரகம் தான்...ஆனால் ரிஷப லக்னத்திற்கும் துலாம் லக்னத்திற்கும். சனி தான் யோகம் கொடுக்கக கூடியவர் அல்லவா?
இந்த இரண்டு இலக்கின காரர்களுக்கும, சனி குரு இணைவு பெறுமானால், சனி தசையில் அதிக நன்மையை செய்வார். அங்கு குரு நீச்சமடைந்து தன காரகத்துவத்தை செய்ய முடியாமல் போகும் போதும, சனியின் இணைவு, அதை தடுத்து, அவரை செய்ய வைப்பது அந்த இலக்கின காரர்களுக்கு யோகம் தானே?!!.
அதே போல குருவோடு சனி இணைவதால சனி புனிதப்படுத்தப்பட்டு அதன் பாபத்துவம் நீங்கப் பெறுகின்றது.
இப்போது சொல்லுங்கள், இது அவர்களுக்கு யோகமா தோஷமா என்று?!!!
அதே சமயத்தில் ஒன்றில் ஏற்றம் என்றால், எதிர்புறம் இறக்கம் இருக்கும் தானே?!!
சனியை புனிதப்படுத்திய குரு தன ஒளியை இழந்து வலு குறைந்தவர் ஆகிவிடுவார் என்பது உண்மை தான். அதனால் உடனே தீங்கு நடந்து விடும் என்றும் சொல்லமுடியாது.. குரு தசை ஜாதகருக்கு வரும்போதே, அவர் தரவேண்டிய பலன்களை தராமல் போவார். அதனால் ஜாதகருக்கு குரு தசை வரக்கூடியதா என்று பார்ப்பதும் அவசியம்.
இன்னொன்றும் சொல்ல வேண்டும்....குருவுடன் இணைவு பெறுவதாலேயே. அதாவது ஒரே வீட்டில் குருவுடன் சனி அமர்ந்தாலே அல்லது பார்வை பட்டாலே, உடன் கெடுதல் என்றும் கொள்ள முடியாது. இரண்டு கிரகங்களின் இணைவு எத்தனை டிகிரியில் உள்ளது என்றும் பார்க்க வேண்டும். இரண்டிற்கும் இடையில் ௨௨ டிகிரி மேற்பட்ட இடைவெளி இருந்தால் அது இணைவே அல்ல என்றும் எந்த கெடுதலும் கொடுக்க வாய்பில்லை என்றும் தான் ஜோதிட மூல நூல்கள் சொல்கின்றன. எனவே ஒவ்வொருவரின் ஜாதகத்தை தனித் தனியே பாராமலேயே சனியும் குருவும் இணைவு பெற்றாலே தோஷம் என்று சொல்லி விட முடியாது.
இன்றைய தேதியில் , ஜோதிடம் என்பதும் ஆன்மிகமும் நல்ல வியாபார தளங்களாக மாறிவிட்ட நிலையில் இது குறித்த தெளிவான அணுகுமுறை நமக்கு தேவை.
அப்படியும் இந்த தோஷ நிலை பெற்றவர்கள் இந்த தோஷ நிவர்த்திக்கென கும்பகோணம் அருகில் உள்ள இந்த திருவிடைமருதூர் சிவன் கோயில் செல்லலாம்.
நானும் சென்றுள்ளேன்...இது என் ஐயனின் தளம் என்ற முறையில் ...பரிகார தலம் என்று அறியாமலேயே!!
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. நான் நுழைந்த வழி இது தான்.
போன பிறகு தான் தெரிந்தது /காசிக்கு சமமானதாம்!!
காவிரிக் கரையில் உள்ள இதனோடு சேர்த்து மொத்தம் ஆறு சிவஸ்தலங்கள் உள்ளனவாம்!! மற்றவை இருப்பது திருவையாறு, திருசாய்க்காடு (சாயாவனம்), திருவெண்காடு, திருவாஞ்சியம் மயிலாடுதுறை . இவை எல்லாமுமே காசிக்கு சமானதாம்!!
மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலம் வடமருதூர்; தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூர். இவை இரண்டுக்கும் இடையே உள்ள இத்தலம் இடைமருதூர் எனப்படுகிறது!!
திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையானது.
வாருங்கள் மகாலிங்கேஸ்வறரை தரிசிக்க போவோம்!!
பெயருக்கேற்றபடி மகா....லிங்கம் தான்!!
சந்நிதியில் இருந்து பாருங்கள்..உண்மையில் உடலில் அதிர்வுகளை உணரலாம்!!
நந்திபகவானை தரிசிக்காமல் இருக்க முடியுமா!!
இதோ இது தான் அஸ்வமேதப் பிராகாரம்...இந்த வெளிப் பிராகாரத்தில் கோவிலை வலம் வந்தால், அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்குமாம்!!
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள கொடுமுடி பிராகாரம். இதை வலம் வந்தால், சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமமாம்!!
இங்குள்ள தல விருட்சமான புன்னை மரத்தின் அருகில் நிற்கும் போது தான் நினைவுக்கு வருகிறது,.
இதே போன்ற ஒரு புன்னை மரத்தின் கீழ் நின்று , மாணிக்கவாசகரை சிவபெருமானார் அழைத்தார் இல்லையா!!
என்ன ஒரு பெரும் பேறு!! என்று நினைத்தபடியே நகரும் போது தான் தெரிகிறது ...
மூன்றாவதாகவும், உள்ளே உள்ள இந்த பிரணவப் பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்குமாம்!!
பிரம்மஹத்தி தோஷம் தீக்கும் மஹாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் படங்கள் நன்றி தினமணி ..
பிறகென்ன ..மோட்சமே கிடைத்து விடும்போது, சாதாரண தோஷம் தான், நம்மை என்ன செய்து விடமுடியும்!!
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக