உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 டிசம்பர், 2021

அசைவ உணவுகள் மூர்க்க குணத்தின் அடிப்படையா?

 என. செல்லக்குட்டி பையன் படு சமர்த்து. கலப்பினம் என்றாலும் தன் டாஷண்ட் அப்பாவின் மூர்க்கத்தனம் அதிகம் இருக்கும்

அவன் குட்டியாக இருந்ததிலிருந்து சைவ சாப்பாடு தான்..தயிர் சாதம் என்றால் ரொம்ப இஷ்டம்..அவனுக்கு இரண்டு வயதான போது, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள், அசைவம் கொடுக்காமல், அவன் இயற்கை உணவுப் பழக்கத்தை கெடுக்கிறேன் என்றார்கள்.அதனால் இரண்டு விதமாகவும் உணவு கொடுக்கப்பட்டது.

இதில் தெரிந்த வித்யாசம் என்னவென்றால், சைவ உணவு உண்டால் அமைதியாக இருக்கும் அவன், அதுவே அசைவம் என்றால் படுமூர்க்கமாகிவிடுவான்.கிட்டவே நெருங்க முடியாத அளவிற்கு அவன் உறுமல் இருக்கும்.

அசைவ உணவு உள்ளே இருக்கும் மிருக உணர்வை தூண்டுகிறது என்பது தான் உண்மை.

இது விலங்கிற்கு தானே பொருந்தும்.மனிதனுக்கில்லையே? என்கிறீர்களா?

மனிதனே ஒரு சமூக விலங்கு தானே?!! மிருகத் தன்மையும் , மனிதத்தன்மையும் கலந்த கலவை தானே நாம்? இதில் எது அதிகமாக வெளிப்படுகிறதோ, அதை கொண்டு அவன் குணம் தெரியும்.

அந்த குணத்தை மாற்றுவதில், அவன் உண்ணும் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.இதை மறுக்க முடியாது.

க்ஷத்திரிய அரசர்கள் சைவ உணவு உண்டு, போர்க்களம் புகுந்ததாய் வரலாறு உண்டா?

வீரத்திற்கு அசைவம் என்றால், விவேகத்திற்கு சைவம்!!

சைவ உணவு, உடலின் தினவை குறைத்து, மூளைத்திறனை கூட்டும்.

அப்படியானால் அசைவம் உண்பவர்கள் புத்தி மந்தம் என்று சொல்லமுடியுமா? எனக் கேட்கலாம்.

அசைவ உணவு உண்ட பின் ஏற்படும் கிறுகிறுப்பு சொல்லுமே பதிலை.அப்போது எதையும் யோசித்து செய்யக்கூடிய நிலையில் இருப்போமா?

அதனால் தான், சுகபோகத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்றார்கள்!! சுக்கிரன் உச்சமானால் அங்கு புதன் நீச்சமடைவது அதனாலேயே!!

அதே சமயம், அசைவ உணவு, மூர்க்க குணத்தின் அடிப்படையாகாது..அதன் தூண்டுகோலாக இருக்கும்.

வெள்ளி, 12 நவம்பர், 2021

புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய பெண் ஆபத்தானவள் என்று சொல்லப்படுவது சரியா?

 

இந்த புத்தகம் எழுதியது ஸ்டீபன் போல்ல்மன். புத்தகம் படிக்கும் பெண்களை பற்றிய வரலாற்றை சித்தரிக்கும் புத்தகம் இது.

பல நூற்றாண்டுகளாக,பெண்களிடம் எப்படி படிப்பறிவு, எதிர்ப்புகளுக்கிடையில் வளர்ந்து வந்தது என்று இந்த புத்தகத்தின் முன்னுரை, விளக்குகின்றது.

சிலர் அது பெண்களுக்கு நன்மை செய்வதாக பார்க்கும்போது மற்றவர்கள் பெண்களின் நடத்தை மற்றும் சமூக ஒழுங்கிலும் இறக்கம் ஏறப்பட்டதன் காரணமாக இதை பார்த்தனர்.

புத்தகம் படிப்பது என்பதே ஆழமான, தனிப்பட்ட ஒரு செயலாகும். அறிவை வளர்ப்பதோடல்லாமல், தனிப்பட்ட சந்தோஷத்தை அது ஏற்படுத்துகிறது. படிப்பவருக்கும் புத்தகத்திற்கும் இடையே ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தும். அவள மட்டுமே நுழையக்கூடிய ஒரு கற்பனை உலகம்.

படிப்பது என்பது அறிவை புத்திசாலித்தனத்தை வளர்க்கத்தான் . ஒருவர் புத்திசாலியாக மாறுவதே அதிகம் படிக்கும்போதுதான். அதுவும் அந்த மற்றொரு உலகிற்கு போகும்போது தான், அதனால் தான் வெளியிடங்களுக்கு செல்ல அதிக கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்ட அந்த காலத்தில் பெண்கள் அதிகம் நாவல்கள் படித்தனர். புத்தகம் படிப்பதில் அவள நாட்டம் கொண்டது அப்போதுதான்.

இப்படியும் கூட சொல்லலாம். கட்டுப்பாடுகளுக்கு எதிராக தன எதிர்ப்பை தெரிவிக்க அவள புத்தகம் படிப்பதன் மூலம், மற்றொரு உலகத்தை தனக்காக சிருஷ்டி செய்து கொண்டாள் என்று .

அது. பிடிக்குமா ஆணுக்கு? …….அதுதான் படிக்கும் பெண்களை ஆபத்தானவர்களாக பார்க்க வைப்பது.

ஏனென்றால், தன்னுடைய மனதில் கற்பனையாக ஒரு உலகத்தை உருவாக்கும் ஒரு பெண் அதனை நனவாக்க நினைப்பாள். பிறகு அதற்கு முயலுவாள். எவ்வளவு பெரிய ஆபத்து…..

இன்றும் பல நாடுகளில் பெண் கல்வி எப்படி ஒதுக்கப்படுகின்றது என்று நாம் கண்கூடாக பார்க்கிறோமே? வளர்ச்சியடையாத நாடுகளில் மட்டுமல்ல. வளர்ந்த நாடுகளிலும் பல இடங்களில் இன்றும் இந்த கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் ….. மனமுதிர்ச்சியுடன், ஒரு பெண் பேசினாலோ அல்லது எழுதினாலோ, அவர்கள் எதிர்கொள்ளுகின்ற எதிர்ப்புகளை தான் நாம் பார்க்கிறோமே?

இந்த புத்தகம் படிக்கும் போது மட்டுமல்ல, இந்த கேள்வி கேட்டதன் மூலமும் நாம் தெரிந்து கொள்ளலாம், பெண்கள் புத்தகம் படிப்பது என்பது எதிர்ப்பிற்குரிய விஷயம் என்று எண்ணுகின்ற மனிதர்களுக்கு இடையில் தான் நாமும் வாழந்துக் கொண்டிருகிறோம் என்று.


புதன், 3 நவம்பர், 2021

என் மாமனாருக்கு என்னை பிடிக்காது. என் மனைவியும் அவர் பேச்சை கேட்டு கொண்டு விவாகரத்து கேட்கிறார், நானோ அவள் மேல் அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். நான் என்ன செய்வது?

 மனைவிக்கு ஒரு துரோகம் செய்துவிட்டேன். மன்னிக்க முடியாத குற்றம். அவர் விவாகரத்து செய்யப்போகின்றார். இந்த குற்ற உணர்வில் இருந்து எப்படி வெளிவருவது? மனைவியின் மனதை எப்படி மாற்றுவது அல்லது நீதிபதியிடம் எப்படியான கேள்விகள் கேட்பது?

என் மாமனாரின் பேச்சை கேட்டு கொண்டு என் மனைவி விவாகரத்து கோரப் போவதாக சொல்கிறாள், எனக்கோ அவளை பிரிய மனமில்லை. இதில் சட்டம் யாருக்கு சாதகமாக அமையும்?

இது போன்ற கேள்விகளை அதிகம் பார்க்க நேர்ந்ததால் சற்று விளக்கமாக பதில் எழுதலாம் என்று நினைக்கிறன்.

முதலில் ஒன்று சொல்ல வேண்டும். கணவனாலும் சரி மனைவியானாலும் சரி ஒருவர் மீது உணமயான அன்பை வைத்தவர்களால், அவர்களின் மறுதலிப்பு தாங்க முடியாத வேதனை தரும். அது அனுபவவித்தவர்களுக்கே புரியும்.

அதே போல தவறு செய்ததற்கு மனம் வருந்தி ஒன்று சேர நினைப்பதிலேயே ஒருவரின் நல்ல குணம் தெரிகிறது. இப்போதெல்லாம் இந்த குற்ற உணர்ச்சி மனப்பான்மை அரிதாகத் தான் காணப்படுகிறது.

உங்களுக்கு முதலிலேயே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஆண்கள் ஒரு விஷயத்தை அணுகும் முறையும் பெண் அதை கையாள்வதும் வேறு வேறு வகை. அதனால் தான் ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள், பெண்கள் சுக்கிர கிரகத்திலிருந்து…Men are From Mars Women are from Venus. இது குறித்து ஏற்கெனவே ஒரு பதிவில் எழுதியுள்ளேன். இரண்டு தரப்பினரின் அடிப்படையான, முரண்பாடான குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சரி. இந்த கேள்விகள் அனைத்திலும் உள்ள பொதுவான அம்சம் மீண்டும் உங்கள் மனைவியை எப்படி திரும்ப காதல் வாழ்க்கைக்குள் கொண்டு வருவது என்று . அதைப் பார்ப்போம்.

பிரிவிற்கு பின் உங்கள் மனைவியை ஜெயிப்பது என்பது ஒவ்வொரு படியாக போகவேண்டிய அணுகுமுறையாகும்.

நீங்கள் முதலில் என்ன செய்திருப்பீர்கள்? கெஞ்சியிருப்பீர்கள். வாதாடி பார்த்திருப்பீர்கள். முடியாது என்று அவர் மறுத்த போது, உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும்.

யோசித்துப் பாருங்கள். எங்கு தவறு நடந்திருக்கும்? நீங்கள் அவர் மீது குறையை சுமத்தும்போது தான் பிரிவை அதிகப் படுத்தியிருக்கும். அவர் இன்னும் தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பார். நீங்கள் அவரை மேலும் கவரக்கூடிய நபராக இல்லாதவராக மாறிியிருப்பீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள் என்று அவரை நினைக்க வைக்கும். இப்போது நான் மாறுகிறேன் என்று நீங்கள் சொன்னாலும், அவரை அது மேலும் கோபப்படுத்தும். .தான் தற்போது செய்வது நியாயம் தான் என்று அவர் தன்னைக் தானே நினைக்க வைக்கும்.

இது தான் பெரும்பாலோரின் பிரச்சினையில் நடப்பது.

சரி மன்னிப்பு கேட்டும் ஏன் அவர் சமாதானம் ஆகவில்லை, என்ன தவறு நடந்தது. நான் சொல்லட்டுமா?

அவரை முன்னிலைப் படுத்தாமல் விட்டுவிட்டு, அவர் மனதை மாற்ற முயன்றீர்கள். இந்த உங்கள் செயல் தான் உங்களை சுயநலக்காரராக அவருக்கு காட்டியிருக்கிறது.

இங்கு உள்ள பல பதில்களிலும் உங்கள் மனைவியின் மனதை மாற்ற முயலுமாறு சொன்னதை தான் பார்த்தேன். அந்த யோசனை பலன் அளிக்காது. அதே போல இது ஒத்து வரவில்லை என்று மற்றதைத் தேட இது சட்டையும் அல்ல.

"தாய்க்குப் பின் தாரம்" தானே தவிர மற்றவர் அல்ல. மேலும், சரியில்லை என்று மனைவியை மாற்றி கொண்டே இருப்பவருக்கு சமூகத்தில் என்ன மதிப்பு என்பதும் சொல்லத் தேவையில்லை.

பெண்களின் உளவியல் ரகசியல் தெரிந்தவள் என்பதால் நான் உங்களுக்கு அந்த ரகசியம் சொல்லித தருகிறேன்.

உங்கள் மனைவி உங்களை பிரிவதாக சொன்னபோது, உங்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியமாகத் தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அது தான் அவர் எடுத்து வைத்த கடைசி அடி என்று. சாதரணமாக பெண்கள் பிரிவது என்று சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். அவர் பல காலம் உங்களுக்கு பிரியமானவராக இருக்க முயற்சி எடுத்திருப்பார் என்றே நினைக்கிறன். ஆனால் ஏதோ ஒரு குறை உங்கள் திருமனத்தில் அவருக்கு இருந்திருக்கிறது.

அவர் அதை சரி செய்ய முயற்சித்திருப்பார். அமைதியாக இருக்க முயற்சித்து இருப்பார், உங்கள் மீதான் அவர் அன்பு குறையும் வரை. இப்போது உங்களிடமிருந்து பிரிந்து நிறைய மாற்றங்களை தனக்குள் பார்த்து, அதுவே போதும் என நினைக்க துவங்கியிருப்பார்.

நீங்கள் எதையும் உணர்திருக்க மாட்டீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக போவதாகத் தான் எண்ணிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இப்போது நீங்கள் அவரிடம் பிரியம் காட்டினாலும் , அவருக்கு அந்த கடினமான நாட்கள் தான் ஞாபகத்திற்கு வரும். அதை மீண்டும்அனுபவிக்க அவர் தயாராய் இருக்க மாட்டார்.

நீங்கள் தொடர்து சமாதானம் செய்ய முயற்சிக்க அவர் மனது பிடிவாதமாக மாறி விடும். உங்கள் தேவைக்காகத் தான் அவரை நீகள் கூப்பிடுகிறீர்கள் என்று எண்ணத் தொடங்குவார். நானே பார்த்திருக்கிறேன், நிறைய கணவன்மார்கள் பிள்ளைகளை காட்டி கூபிடுவர். ஆனால் அதுவே, அவர் தன சுயநலலத்திற்காகத் தான் செய்கிறார் என்று அவரை எண்ண வைக்கும். அவர் மன வேதனை குறித்து நீங்கள் கவலைப் படவில்லை என எண்ணுவார்.

முதலில் அதை நிறுத்துங்கள்.

திரும்ப சேருவதற்கு தடையாக உள்ள விஷயங்கள் என்னென்ன ?:

  1. திருமண உறவை நீடிக்க அவரை சமாதானப்படுத்துவது அல்லது கவுன்சிலிங்கிற்கு கூப்பிடுவது.
  2. வாதாடுவது;
  3. பொறாமையின் காரணமாக மற்ற ஆணுடன் சேர்த்து பேசுவது. குழந்தைகளில் தேவைகளை அவர் முன் வைப்பது.
  4. அவர் குற்றவாளி போலோ அவமானப்படுவது போலோ உணர வைப்பது
  5. அவர் மத நம்பிக்கையை விமர்சனம் செய்வது'
  6. தான் மன உளைச்சலில் இருப்பது போலவும் அவர் தேவை இருப்பது போலவும் நடப்பது.
  7. பரிசுகள் கொடுக்க முனைவது.
  8. அவர் விரும்பாத நடவடிக்கையில் ஈடுபடுவது.

இவை எல்லாம் அவரை கவர உதவாமல் மேலும் உங்களிடம் மிருந்து அதிக தூரம் செல்ல வைக்கும்.

உங்கள் மேல் அவருக்கு உள்ள அன்பை அவர் உணர அவருக்கு உதவுவதே அவரை சமாதானப்படுத்துவதை விட சரியானதாகும்

நான் உங்கள் மனைவியிடம் உங்களை அவர் விரும்புகிறாரா என்று கேட்டால் உண்மையில் அவருக்கு சொல்லத் தெரியாது. விரும்புகிறேன் என்றும் சொல்லுவார். விரும்பவில்லை என்றும் சொல்லுவார். இதுவரை உங்களுக்குள் என்ன பிரச்சினை நடந்திருந்தாலும் இந்த எண்ணம் தான் உங்கள் இருவரையும் சேர்க்க தடை போடும் விஷயம்.

ஞாபகம் இருக்கிறதா? திருமணம் ஆன புதிதில் அவருக்கு உங்கள் மீதிருந்த பிரியத்தை எப்படி வெளிபடுத்தினார் என்று…அதே போன்ற உணர்வை தான் திரும்ப பெற முடியுமா என்று அவருக்கே தெரியாது. நீங்கள் பேசும் வார்த்தைகளால், அல்லது செயல்களால் திரும்ப அந்த உணர்வு கிடைக்குமா என்றும் தெரியாது.

நீங்கள் மன்னிப்பு கேட்பதாலோ அல்லது சமாதானப்படுத்த முனைவதாலோ, உங்களைப் பற்றி அவர் உணர்வது எதுவும் மாறாது. ஆனால் நீங்கள் முயன்றால் அவருக்கு அந்த பழைய காதல் அன்பை திரும்ப கொண்டு வர முடியும்.

உங்கள் உறவை முதலில் சீர் செய்ய முனையுங்கள். உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதை சற்று ஒத்துக்கி வையுங்கள். அவர் திருமணமாகதவர் என்றும் உங்களை விரும்பாதவர் என்றும் அவர் மீது உங்களுக்கு மட்டுமே ஒரு தலை காதல் உள்ளது என்று நினையுங்கள். அப்போது, என்ன செய்வீர்கள்? முதன் முதலில் அவர் மீது காதல் வந்த போது என்ன செய்தீர்கள்? அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள் அல்லவா. அதை செய்ய ஆரம்பியுங்கள்.

என்ன சினிமா போல நான் சொல்கிறேன் என்கிறீர்களா"? எல்லோருடைய வாழ்க்கையில் நடப்பதை தானே காட்டுகிறோம் என்கிறார்கள்?

உங்கள் மீது பிரியம் இல்லாத பெண்ணை பிரியம் கொள்ள வைப்பது எவ்வளவு கடினம் என்பது நிறைய ஆண்களுக்கு தெரியாது. ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள அந்த கலையில் வல்லவர்கள் ஆக இருப்பார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை மறைக்கத் தெரியாது. அதை மெதுவாக சரியான திசையில் அவள் உணர்வுகளை கொண்டு செல்ல வேண்டும். சில ஆண்கள் இதையும் அதிகமாக செய்து பாழடித்து விடுவார்கள்.

சரி எப்படி சரியான அளவில் செய்வது?

உங்களுடன் இருக்கும்போது, அவர் தற்காப்பில் ஈடுபடத்தேவையில்லை என்ற எண்ணத்தை உருவாக்குவது.

அவர் தேவைகளையும் ஆசைகளையும் உணர அவருக்கு உதவுவது. உங்கள் துணையோடு அதை அடைய முடியும் என்று அவரை எண்ண வைப்பது.

அவரை நீங்கள் மேலும் சமாதானப்படுத்த முனையவில்ல என்று அவர் நினைக்கத் துவங்கும்போது, அவரை எளிதில் அணுக முடியும். அவருக்கும் உங்களுக்கும் இடையேயான இடைவெளி குறையலாம். ஆனால் உங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு இன்னும் காலம் வரவில்லை. இந்த நேரத்தில் அவரிடம் சமாதானப் படுத்த முயலாதீர்கள். அது எப்படி இருக்கும் தெரியுமா?

பசியில்லாத நேரத்தில் சாப்பிட வற்புறுத்துவது போல அவருக்கு தோன்றும்.

உங்களை பற்றி மட்டுமே பேசாதீர்கள். நான் என்ற வார்த்தையை ஆண்கள் அதிகம் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். "நான் இதை செய்தேன்" " நான் அதை செய்தேன்"……………….அது அவருக்கு விருப்பமில்லாத விஷயங்கள்.

அவருக்கு அவர் வாழ்வின் மீதியில் தான், இப்போது விருப்பம் இருக்கும். அவர் எதிர்காலம்…அதுவும் முக்கியமாக நீங்கள் இல்லாத எதிர்காலம்…….

அவருடன் உரையாடலை ஆரம்பியுங்கள்.அவர் சொல்வதற்கு பதில் சொல்லுங்கள். அவருடைய யோசனைகளை நீங்கள் பரிகாசம் செய்தால், அவரை மேலும் பேச வைக்க முடியாது. உங்களுடன் பேசுவதற்கான ஆர்வத்தை தான் தூண்டவேண்டுமே, தவிர உங்களை பற்றிப் பேச அல்ல.

நேருக்கு நேர் பேசுவதை நீங்கள் அதிகப்படுத்துவதன் மூலம் அதிகபட்சமாக உங்களோடு பேசத் தடை இல்லாமல் இருப்பதை அவர் விரும்ப ஆரம்பிக்கலாம், அதற்கு மேல் இல்லை.

இங்கு நீங்கள் சக மரியாதை கொடுப்பது முக்கியமான அம்சம். அதேபோல அவருக்கு தேவைப்படுவதையேல்லாம் வாங்கி கொடுபதாலேயே உங்கள் மீது அவருக்கு விருப்பம் வராது. உங்களை அந்தத் தேவைக்காக மட்டும் எதிர்பார்க்க ஆரம்பிக்கலாம், அதனால் அது வேண்டாம்.

ஆனால் உங்களுடனான பழக்கத்தை அவர் புதுப்பித்த பிறகு உங்களை விட்டு பிரிய எடுத்த முடிவைக் குறித்து அவருக்கு சந்தேகம் தோன்றும். அவருக்குள் இது அமைதியின்மையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும். உங்களை மோசமாக நடத்தி உங்களை தூண்ட முயற்சிப்பார். ஏன் அப்படி? தான் எடுத்த முடிவு சரிதான என நிரூபிக்க முயலுவார்

உங்களை அவர் பழைய மாதிரி தாக்கி பேச ஆரம்பித்தால். சரியான பாதையில் தான் செல்லுகிறோம் என்று திருப்தி அடையுங்கள்., உங்களை விட்டு பிரிய நினைப்பவரின் மனது, அதை ஏற்று கொள்ள முரண்டு பிடிக்கும் . சற்று குழப்பமான நேரம் இது. அதனால் அடிக்கடி மனோ நிலை அவருக்கு மாறி கொண்டிருப்பது சரியான திசையில் செல்கிறோம் என்பதற்கான அறிகுறி.

ஆனால் ஒன்றே ஒன்று ……..அவர் செயலுக்கு எதிர் வினை ஆற்றாமல் இருங்கள், அதுவொன்றே உங்கள் மனைவியை திருமபக் கொண்டு தரும் .

இப்போது பாதி தூரம் வந்துள்ளோம். மீதி பாதி உங்களுக்குள் செய்ய வேண்டிய மாற்றம். முன்னர் இருந்ததை விட சிறந்தவராக மாறுவது. உங்கள் மனைவி நினைப்பது போல அல்ல.

நேற்றைய உங்களை விட இன்றைய நீங்கள் ரசிக்கத்தகுந்த ஆணாக மாற முயலுங்கள். வெற்றியடைந்த, சுய மரியாதையுள்ள வாழ்வில் எதன் மீதான ஆர்வம் கொண்ட ஆணை ஒரு பெண் விரும்புவாள்.

உங்கள் உறவு மேம்பட கவனம் செலுத்தி இருப்பது உங்கள் உறவைக் காப்பாற்றும்.

இதை எல்லாம் செய்தால் எவ்வளவு நாட்களுக்குள் வெற்றி கிட்டும் என்பது தானே?

உங்கள் உறவிற்குள் ஏற்கெனவே எவ்வளவு சேதம் எற்பட்டிருக்கிறது , எந்த அளவிற்கு நீங்களும் உங்கள் மனைவியும் திரும்ப பேசுகிறீர்கள், நேருக்கு நேர் உரையாடுவதை சேதமடையாமல் எவ்வளவு தடுக்கிறீர்கள் எனபதைப் பொறுத்தும் உள்ளது.

உங்களுடைய மனோ நிலை, தேவை மற்றும் பழைய நடத்தை ஆகிவை தாமதப்படுத்தலாம் அல்லது மொத்தமாக சேதப்படுத்தலாம்.

உங்களால் இதெல்லாம் முடியுமா? என்று மலைக்காதீர்கள். உங்கள் துணையின் மீதுள்ள உங்கள் அன்பு இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வைக்கும்.

உங்கள் சக்தி உங்களுக்கு தெரியாது.

அனுமனுக்கே அவர் சக்தியை அந்த ஜாம்பவான் தானே எடுத்து சொன்னது? வெற்றி பெற வாழ்த்துக்கள்.

செவ்வாய், 2 நவம்பர், 2021

எனக்கு போன வாரம் திடீர் என்று காசி அல்வா மீது ஆசை வந்தது. அதுவும் உடனே வேண்டும் போல தோன்றியது… கல்யாணம் ஆன புதுசா என்ன…அல்வாவும் மல்லிப்பூவும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல..😀 >அப்பவே இதை செய்யாதவரு இப்ப..போயி.. அப்ப அல்வா உடனே சாப்பிட என்ன வழி? வீட்டில் செய்ய முடியாது.அதற்கான பொருட்கள் இல்லை. காசி அல்வா என்ற உடனே கற்பகாம்பாள் மெஸ்ஸும் மனதுக்குள் வந்து விட்டது..🤣அங்கே தான் நல்லா இருக்கும்..😃 யாரை அனுப்பி வாங்கி வர சொல்வது? அங்கு தான் swiggy செல்லுபடி ஆகாதே…😀 அடுத்து, வேறென்ன…நான் தான் போக வேண்டும்… ஹும்மம்..கபாலியை பார்த்தும் நாளாகி விட்டது.. அப்புறம் மென்ன..போன சோம வாரம் மாலை நடை திறந்தவுடன், திவ்யமாய் கற்பகாம்பாளையும் அவள் நாதனையும் தரிசனம் செய்துவிட்டு, அப்படியே ராசி, அம்பிகா, கிரியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு😆, மெஸ்சுக்குள் நுழைந்து, காசி அல்வாவையும், காஃபியையும் கபளீகரம் செய்து விட்டு😀.. இதை எதுக்கு சொல்றேன்னா.. நம்ம மனசு இருக்கே. நாம நேசிக்கிற அல்லது விருப்படுறது எதுவானாலும் அதை அடைவது எப்படின்னு உடனே கணக்கு(☺️) போட ஆரம்பிச்சி, அதை செயல்படுத்த போயிடும்… அப்படியும் கிடைக்காம போனா.. . . "கிட்டாதாயின் வெட்டென மற" தான். கஷ்டம் தான்..அதை மறக்க நினைக்கும்போது ஏற்படும் மன உளைச்சல் தாங்க முடியாது தான். ஆனால் ஒரு விஷயம் தெரியுமா..நமக்கு சேர வேண்டிய பொருள் என்றால், நாம் எடுக்கும் முயற்சியில் அது நம்மை வந்து அடைந்து விடும். இந்த பிரபஞ்ச இயக்கமே அப்படி தான். … வரலைனா, "அது நமக்கானது இல்லை..நமக்கென்று இதை விட சிறப்பானது😂 வேறொன்று நம்மை வந்து அடைய உள்ளது" என்பது தான் உண்மை.. ஒரு மாதம் முன்பு ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..தன் நிறைவேறாத காதலை பற்றியும், சமீபத்தில் அந்த காதலியை சந்தித்தது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்… "உங்களுக்கு அவரை திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லையேன்னு இப்ப வருத்தமா இருக்கா?"ன்னு அவர்ட்ட கேட்டேன். "அய்யோ.. எண் மனைவி மாதிரி ஒரு பெண் கிடைத்தது என் அதிர்ஷ்டம்..என் காதலியின் இன்றைய நிலை பார்த்து அந்த நினைப்பு உறுதி தான் ஆச்சு" அது தாங்க.. கடவுள் நாம விரும்புற எல்லாத்தையும் நமக்கு குடுத்துடறதில்லை. நமக்கு வேண்டியதை தான் கொடுக்கிறார்.. >ஸ்ரீஜாக்கு மட்டும் எப்படி ஆசைப்பட்ட அல்வா உடனே கிடைக்குதுன்னு கேட்கக்கூடாது..அப்பா பொண்ணுக்கு இது கூட செய்யமாட்டாரா என்ன…😀

 எனக்கு போன வாரம் திடீர் என்று காசி அல்வா மீது ஆசை வந்தது. அதுவும் உடனே வேண்டும் போல தோன்றியது…

கல்யாணம் ஆன புதுசா என்ன…அல்வாவும் மல்லிப்பூவும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல..😀

அப்பவே இதை செய்யாதவரு இப்ப..போயி..

அப்ப அல்வா உடனே சாப்பிட என்ன வழி?

வீட்டில் செய்ய முடியாது.அதற்கான பொருட்கள் இல்லை.

காசி அல்வா என்ற உடனே கற்பகாம்பாள் மெஸ்ஸும் மனதுக்குள் வந்து விட்டது..🤣அங்கே தான் நல்லா இருக்கும்..😃

யாரை அனுப்பி வாங்கி வர சொல்வது? அங்கு தான் swiggy செல்லுபடி ஆகாதே…😀

அடுத்து, வேறென்ன…நான் தான் போக வேண்டும்…

ஹும்மம்..கபாலியை பார்த்தும் நாளாகி விட்டது..

அப்புறம் மென்ன..போன சோம வாரம் மாலை நடை திறந்தவுடன், திவ்யமாய் கற்பகாம்பாளையும் அவள் நாதனையும் தரிசனம் செய்துவிட்டு, அப்படியே ராசி, அம்பிகா, கிரியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு😆, மெஸ்சுக்குள் நுழைந்து, காசி அல்வாவையும், காஃபியையும் கபளீகரம் செய்து விட்டு😀..

இதை எதுக்கு சொல்றேன்னா..

நம்ம மனசு இருக்கே.

நாம நேசிக்கிற அல்லது விருப்படுறது எதுவானாலும் அதை அடைவது எப்படின்னு உடனே கணக்கு(☺️) போட ஆரம்பிச்சி, அதை செயல்படுத்த போயிடும்…

அப்படியும் கிடைக்காம போனா..

.

.

"கிட்டாதாயின் வெட்டென மற" தான்.

கஷ்டம் தான்..அதை மறக்க நினைக்கும்போது ஏற்படும் மன உளைச்சல் தாங்க முடியாது தான்.

ஆனால் ஒரு விஷயம் தெரியுமா..நமக்கு சேர வேண்டிய பொருள் என்றால், நாம் எடுக்கும் முயற்சியில் அது நம்மை வந்து அடைந்து விடும். இந்த பிரபஞ்ச இயக்கமே அப்படி தான்.

… வரலைனா, "அது நமக்கானது இல்லை..நமக்கென்று இதை விட சிறப்பானது😂 வேறொன்று நம்மை வந்து அடைய உள்ளது" என்பது தான் உண்மை..

ஒரு மாதம் முன்பு ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..தன் நிறைவேறாத காதலை பற்றியும், சமீபத்தில் அந்த காதலியை சந்தித்தது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்…

"உங்களுக்கு அவரை திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லையேன்னு இப்ப வருத்தமா இருக்கா?"ன்னு அவர்ட்ட கேட்டேன்.

"அய்யோ.. எண் மனைவி மாதிரி ஒரு பெண் கிடைத்தது என் அதிர்ஷ்டம்..என் காதலியின் இன்றைய நிலை பார்த்து அந்த நினைப்பு உறுதி தான் ஆச்சு"

அது தாங்க.. கடவுள் நாம விரும்புற எல்லாத்தையும் நமக்கு குடுத்துடறதில்லை. நமக்கு வேண்டியதை தான் கொடுக்கிறார்..

ஸ்ரீஜாக்கு மட்டும் எப்படி ஆசைப்பட்ட அல்வா உடனே கிடைக்குதுன்னு கேட்கக்கூடாது..அப்பா பொண்ணுக்கு இது கூட செய்யமாட்டாரா என்ன…😀

செவ்வாய், 19 அக்டோபர், 2021

உங்களுக்குத் தெரிந்த வாழ்க்கைக்கு உபயோகமான உளவியல் உண்மைகள் எவை?

 1.மத்தவங்க டான்ஸ் ஆடுறதைப் பார்க்கும்போது நமக்கேன் அத்தனை உற்சாகம் வருது தெரியுமா?

நாமே ஆடுறதுபோல நம்ம தசைகளும் முறுக்கிக்கொள்ளும். அதனால தான்.

2. ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமா பெண்கள் கண்கள் சிமிட்டுவார்கள்.(அதை தான் இவங்க கண்ணடிக்கிறாங்கன்னு தப்பா நினைகிராங்களோ)

3.மக்கள் ராத்திரியிலே அதிகமா அழக் காரணம் , தூக்கம் வராததனால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது.

4.ராட்டினத்தினலே ஏறப் பயமாயிருந்தாலும், நாம போறது ஏன் தெரியுமா?

நாம பயப்படுற விஷயத்தை செய்யும் போதுதான் நமக்கு உண்மையான சந்தோஷம் ஏற்படுதாம்.

5.கிண்டல், கேலியை புரிஞ்சவங்களாலே தான் மத்தவங்க மனசையும் படிக்க முடியும்.

6. நம்ம உடம்பு பலவீனமா இருக்கும் நேரம் விடியற்காலை 3–4 போது தான். அதனால தான் அந்த நேரம், நிறைய பேரின் மரணமும் நடக்குது.

7. மத்தவங்க நம்மை பாக்கிறாங்கனாதான் நிறைய பேர் ஒழுங்கா இருக்காங்க.(இதை ட்ராபிக் போலிசே சொல்லுவார் !!)

8. தன்னம்பிக்கை குறைவா இருகிறவங்க தான் அடுத்தவங்களை அவமானப்படுத்துவாங்க.

9. கற்பனை திறன் உள்ளவங்க எப்போவும் அமைதியாத்தான் இருப்பாங்க. அவங்க ஒய்வுன்னாக்கூட படிப்பு சம்பந்தப்பட்ட விளையாட்டு தான் விளையாடுவாங்க.

10. நிறைய பேர் பழையப் பாட்டை விரும்புறதுக்குக் காரணம். அதனோட தொடர்புள்ள தன்னோட பழைய நினைவுகளால தான்

11.தனக்கு பிடிச்சவஙகளுக்குனா மெசேஜ் வேகமா செய்வோம்.

12. உன் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும்ன்னு சொன்னவுடனே, 98% பேர், தான் சமீபத்திலே பண்ணின எல்லாக் கெட்டதையும் நினைப்பாங்க

13. சராசரியா ஒரு விஷயம் பழக்கமா மாற 66 நாள் ஆகுதாம்.

14. பொய் சொல்லும்போது தன்னையே அறியாம, இடது பக்கம் பார்க்க வைக்கும்

15 தொலைஞ்சு போன பர்சுல ஒரு குழந்தை போட்டோ இருந்தா, திரும்ப அது கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்காம்.

மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?

 

  1. நாம் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கியேறியப்பட்டோம் என்ற உணர்வு தான் உலகத்திலேயே கொடுமையான உணர்வு.
  2. நாம் உண்மையாக அன்பு செலுத்தும் ஒருவரிடம் வெகு நாட்கள் கோபத்துடன் இருக்க முடியாது.
  3. ஒருவர் மீது நம் கோபம் மூன்று நாட்களுக்கு மேல்தொடருமானால், அவர் மீது நமக்கு உண்மையான அன்பு இல்லை என்று அர்த்தம்.
  4. பொதுவாக எல்லோரிடமும் நன்றாக பழகுபவரே அதிக மனக் காயம் அடைகிறார்.
  5. ஒருவர் நம்மிடம் பொய் சொல்கிறார் என்று நம்பினால், நாம் ஒன்றுமே சொல்லாத தேவையில்லை. அவரே அதற்கான காரணங்களை பட்டியலிடுவார்.
  6. நமக்கு தெரிந்த ஒரு அறிவுரையை ஒருவர் சொல்லும்போது, எனக்குத் தெரியும் என்று சொல்லாமல் உண்மைதான் என்பது நாகரீகமானது.
  7. மனித மனது ஞாபகங்களை அசை போட்டுக்கொண்டு இருப்பதால் தான் அது உயிர்ப்புடன் இருக்கிறது.
  8. வாதிடும் நபர் பெரும்பாலும் தன் கட்டுப்பாட்டை இழந்து கத்தவே செய்வார்.பதிலுக்கு கத்துவது தான் மனித இயல்பு. அதை செய்ய வேண்டாம்.அமைதி காத்து மெதுவாக பதில் கொடுப்பதே வெற்றி கொடுக்கும்.
  9. எப்போதும் நம் உள்ளுனர்வு சரியாக தான் இருக்கும். ஏதோ இருக்கிறது என்று அது சொன்னால், கண்டிப்பாக ஏதோ இருக்கும்.
  10. கோபம், ஏமாற்றம், இப்படி நம் உணர்வுகளுக்கு ஞாபகம் என்னும் தீனியை போட்டுக்கொண்டு இருப்பதால் தான் , அதை விட்டு நம்மால் விலக முடியவில்லை.
  11. நம் நடத்தை மற்றும் தோற்றத்திலும் மற்றவர்கள் கவனிக்கும் அளவை விட அவர்கள் அவ்வாறு கவனிப்பதாக நாம் தான் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
  12. யாரேனும் நீங்கள் மாறி விட்டிர்கள் என்றால், அவர்கள் எதிர்பார்த்தது போல நீங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்பதற்கான 95% வாய்ப்பு உள்ளது.
  13. சோகப் பாடல்களை கேட்பது, தான் புரிந்துக் கொள்ளப்பட்டோம் என்ற நேர்மறையான எண்ணத்தை கொடுக்கும்.
  14. நம்முடன் சேர்ந்து வம்பு பேசுபவர் நம்மைப் பற்றியும் வம்பளப்பார் என்பதை மனதில் இருத்தவும்.
  15. அமைதியான நபரே உரத்த சிந்தனை கொண்டவராக இருப்பார்.
  16. தூங்கிக்கொண்டிருக்கும் போது கூட, மனித மூளை தன்னை சுற்றி பேசப்படும் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.
  17. எதிலும் ஒழுங்கு எதிர்ப்பாரப்பவர்கள், தன்னை அதனால் வருத்தி கொள்வதால், அதிக மன உளைச்சலுக்கு உள்ளாவர்.
  18. வாரம் ஒரு நாள், சோம்பேறித்தனமானதாக கொள்ளும்போது, ஸ்ட்ரெஸ், அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம்
  19. இன்டெர்வியூவுக்கு போபவர்கள் கவனிக்க…நீங்கள் அந்த அறையில் இருக்கும் அனைவரும் நம்மை விரும்புபவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைவது, தன்னபிக்கையை கூட்டும்.
  20. அதே போல சிகப்பு நிற ஆடை அணிபவர்களிடம் நாம் அதிகம் ஈர்க்கப்படுவோம்
  21. கடைசியாக முக்கியமான ஒன்று……ஒரு பேச்சு வார்த்தை நடக்கும்போது, ஒருவர் நம்மை 60% கண்ணோடு கண் நோக்கினால், …அவர் அலுப்படைந்து இருக்கிறார் என்று அர்த்தம்…. 80% என்றால்…..நம் பால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பது பொருள்.100% என்றால்……………..…நம்மை அவர் மிரட்டுகிறார் என்று தான் பொருள்.!!☺️

திருத்தம்

இந்த பதிவுக்கு கிடைத்த பார்வைகளை ஆதரவைப் பார்த்த பிறகு இதனோடு சில பின்னூட்டங்களை சேர்க்க தோன்றியது.

.எப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான சமயத்தில் செயல்படுவது என்று பார்ப்போம்…

  1. முதலில் சூழ்நிலையை படிப்போம்.
  2. பிறகு, நம்முடைய உணர்வுகளை சூழ்நிலையில் இருந்து பிரித்துக் பார்ப்போம்.இப்போது அந்த புரிதலோடு நம்மால் நன்றாக செயல்பட முடியும்.
  3. எது சொல்வதற்கு சரியான வார்த்தை, எது இல்லை என்று இப்போது உணர முடியும்.
  4. அதற்கு முன் நம் உள்ளுணர்வு சொல்வதை கேட்போம்.அது கிரீன் சிக்னல் காட்டினால் தொடரலாம்.இல்லை என்றால் அது நமக்கு வேண்டாம்.ஒருவர் நம்மை அவமானப்படுத்துவது போல உணர்கிறோமா? உண்மை அது தான்...ஒருவருடன் பாதுகாப்பு உணர்வு பெறுகிறோமா? அவர் நம்பத் தகுந்தவர் தான்.ஒருவருடைய ஆளுமைத் தன்மையையும் அவர் எதிர்செயல் ஆற்றுவதை மட்டுமே பார்க்க வேண்டாம்.நம்முள் உள்ள உள்ளுணர்வு என்னவிதமான சக்தியை , அது நேரிடையா அல்லது எதிரிடையா…எதைக் கொடுக்கிறது என்று பார்ப்போம்.என்றுமே நம் உள்ளுணர்வு…பொய்யே சொல்லாது…நம்புவோம் அதை மட்டுமே!!
  5. நம்மை சுய ஒழுங்குபடுத்தி கொள்வோம். அது நம்மை தீவிரமாக சிந்திக்க உதவும்.
  6. பச்சாதாபம் ரொம்ப பொல்லாதது..அதற்கு வேலி போடுவோம்.
  7. மற்றவர்களை காது கொடுத்து கேட்பது மட்டுமே, அவர்களின் மனம் திறந்து பேச வைப்பது.இந்தக் கலையை பயிலுவோம்!!
  8. நம் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டாம். அது எப்படி வெளியேறுகிறதோ அப்படியே இருக்கட்டும்.அவற்றை வெளியேற்றும் வழிமுறைகள் பற்றி மட்டும் பயிலுவோம்!!
  9. தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ள உணர்வுகளைக் கட்டுப்படுத்துபவர்கள் பகுத்தறிவு தொலைத்தவர்கள் ஆகிறார்கள்.அவர்கள் மற்றவரால் ஒதுக்கப்படுவார்கள்.
  10. இப்படி நம் உணர்வுகள் எங்கு எப்படி அடிவாங்குகிறது, சீறுகிறது. என்று ஆராயும்போது, அதை நமக்கு பயன் தரும் விதத்தில் மாற்ற முடியும். அப்படி செய்வோமேயானால் . நம் உணர்வுகளை எங்கு எப்போது வெளிப்படுத்தலாம் என்பதையும் அறிந்துக்கொள்வோம். அப்போது மட்டுமே அதை வெளிப்படுத்த ரிசர்வ் செய்து வைப்போம்…

இதில் நாம் ஜெயிக்கும் போது, நாமே சூப்பர் எமோஷனல் இண்டெலிஜெண்ட்ஆவோம்..

நாமே நம்முடைய புது அவதாரத்தை பார்ப்போம்!!

பார்க்கலாம் தானே?!👍👍

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

பெரிய புத்திசாலி என சொல்லப்படுபவர்கள் ஏன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை?

 ஆங்கில கோரவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ..

பெரிய புத்திசாலி என சொல்லப்படுபவர்கள் ஏன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை?

அதற்கு சீன கெர்மன் என்பவர் அளித்த பதிலை, அது வெகு ஜன பாராட்டை பெற்றதால், அதனை இங்கே மொழிபெயர்த்துள்ளேன்.

இந்த பூமியின் மிக புத்திசாலி நபராக அறியப்பட்ட கிம் உங் யாங் தன ஐந்து வயதிற்குள் ஐந்து மொழிகளைப் பேசவும் கால்குலஸ் போடும் திறனும் கொண்டவராக இருந்தார்.

எட்டு வயதில் நாசாவில் கணிதம் போடும் ஆற்றல் கொண்டிருந்தார். பதினைந்து வயதிற்குள்ளாகவே பி. எச் டி முடித்து விட்டார். இவை அனைத்தும் அவர் சொந்த முடிவு கிடையாது. அவருடைய ஐ க்யு 2௦௦ககு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கபட்டவுடன், அவர் வாழ்க்கைக்காக ஏற்பாடு செய்ப்பட்ட ஒரு அதிவேக சிறப்பு திட்டத்தின்படி, அவர் மனது நிரம்பிவழியும் அளவிற்கு கல்வி போதனைகள் ஏற்றப்பட்டது. எதுவுமே அவர் முடிவுக்கு விடப்படவில்லை. கல்வியை முடித்து அவர் நாசாவில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது அவர் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டார்.

உலகத்திலேயே அதீத புத்திசாலியான மனிதன், ஹார்வர்ட் பல்கலை மாணவர்களே வியக்கும் அளவிற்கு திறன் படைத்தவர், இவை அனைத்தும் வேண்டாம் என ஒதுக்கி தள்ளி விலகி சென்று விட்டார். ஏன்?

அவர் மகிழ்ச்சியாக இல்லை. தன்னை ஒரு இயந்திரம் போல உணரத் தொடங்கியதால், அவருக்கு இயல்பானவைகளே தேவைப்பட்டது. தற்போது ஒரு சாதாரணமான பல்கலைகழகத்தில் பேராசிரியாராக வேலை செய்கிறார். நாசாவில் வேலை என்பது கவுரவமானது என்று பலர் நினைக்கும்போது, அவருக்கு அப்படி இல்லை. இன்றும் கொரிய பத்திரிக்கைகள், அவரை ஒரு தோற்றுப்போன புத்திசாலி' என்று கிண்டல் செய்கிறது.

அவருக்கு உள்ள அறிவு திறன் கொண்டு அவர் உலகையே மாற்றக்கூடிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, அவர் அப்படி இல்லை.

அவ்வாறு உலகை மாற்றுவார் என்று யார் முடிவு செய்தது? நிச்சயமாக அவர் இல்லை.

நம்மில் பெரும்பான்மையோர் தொடர்புபடுத்தும் நபர் நிச்சயமாக கிம் இல்லை. ஒருவர் புத்திசாலியாக, கற்பனைத்திறனுடன் இருந்தால், அவர் இந்த உலகின் அரசனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள், சில சாதாரன பணிகளிலேயே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

மகிழ்ச்சி என்பது ஒரு மிகப் பெரிய சமன் செய்வதாகும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்முடைய எந்த எதிர்பார்ப்பும் பெரிதாக இருக்காது.

சனி, 5 ஜூன், 2021

உங்களுக்கு பிடித்தவர்களை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

 



காசியில் இரண்டு துறவிகள் சந்தித்துக் கொண்டார்கள்..

தமிழில் பேசியதால் இரண்டு பேரும் சீக்கிரம் நெருங்கி விட்டார்கள்.

இவர் அவரை பார்த்து கேட்டார்.."நீங்க ஏன் துறவியானீங்க?"

"எனக்கு ஒரு பெண்ணை ரொம்ப பிடிச்சிருந்தது..அவளை கல்யாணம் பண்ணிக்க முடியலை.

"வாழ்க்கை வெறுத்துருச்சு..அப்டியே கிளம்பி வந்துட்டேன்"

அவரோட சோக கதையை சொல்லி முடிச்சார்.

"என்னை கேட்டீங்களே..நீங்க ஏன் துறவியானீங்க?

"அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சதாலே!"