ஆங்கில கோரவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ..
பெரிய புத்திசாலி என சொல்லப்படுபவர்கள் ஏன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை?
அதற்கு சீன கெர்மன் என்பவர் அளித்த பதிலை, அது வெகு ஜன பாராட்டை பெற்றதால், அதனை இங்கே மொழிபெயர்த்துள்ளேன்.
இந்த பூமியின் மிக புத்திசாலி நபராக அறியப்பட்ட கிம் உங் யாங் தன ஐந்து வயதிற்குள் ஐந்து மொழிகளைப் பேசவும் கால்குலஸ் போடும் திறனும் கொண்டவராக இருந்தார்.
எட்டு வயதில் நாசாவில் கணிதம் போடும் ஆற்றல் கொண்டிருந்தார். பதினைந்து வயதிற்குள்ளாகவே பி. எச் டி முடித்து விட்டார். இவை அனைத்தும் அவர் சொந்த முடிவு கிடையாது. அவருடைய ஐ க்யு 2௦௦ககு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கபட்டவுடன், அவர் வாழ்க்கைக்காக ஏற்பாடு செய்ப்பட்ட ஒரு அதிவேக சிறப்பு திட்டத்தின்படி, அவர் மனது நிரம்பிவழியும் அளவிற்கு கல்வி போதனைகள் ஏற்றப்பட்டது. எதுவுமே அவர் முடிவுக்கு விடப்படவில்லை. கல்வியை முடித்து அவர் நாசாவில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது அவர் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டார்.
உலகத்திலேயே அதீத புத்திசாலியான மனிதன், ஹார்வர்ட் பல்கலை மாணவர்களே வியக்கும் அளவிற்கு திறன் படைத்தவர், இவை அனைத்தும் வேண்டாம் என ஒதுக்கி தள்ளி விலகி சென்று விட்டார். ஏன்?
அவர் மகிழ்ச்சியாக இல்லை. தன்னை ஒரு இயந்திரம் போல உணரத் தொடங்கியதால், அவருக்கு இயல்பானவைகளே தேவைப்பட்டது. தற்போது ஒரு சாதாரணமான பல்கலைகழகத்தில் பேராசிரியாராக வேலை செய்கிறார். நாசாவில் வேலை என்பது கவுரவமானது என்று பலர் நினைக்கும்போது, அவருக்கு அப்படி இல்லை. இன்றும் கொரிய பத்திரிக்கைகள், அவரை ஒரு தோற்றுப்போன புத்திசாலி' என்று கிண்டல் செய்கிறது.
அவருக்கு உள்ள அறிவு திறன் கொண்டு அவர் உலகையே மாற்றக்கூடிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, அவர் அப்படி இல்லை.
அவ்வாறு உலகை மாற்றுவார் என்று யார் முடிவு செய்தது? நிச்சயமாக அவர் இல்லை.
நம்மில் பெரும்பான்மையோர் தொடர்புபடுத்தும் நபர் நிச்சயமாக கிம் இல்லை. ஒருவர் புத்திசாலியாக, கற்பனைத்திறனுடன் இருந்தால், அவர் இந்த உலகின் அரசனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள், சில சாதாரன பணிகளிலேயே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.
மகிழ்ச்சி என்பது ஒரு மிகப் பெரிய சமன் செய்வதாகும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்முடைய எந்த எதிர்பார்ப்பும் பெரிதாக இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக