விண்வெளி எப்படி ஒரு அற்புதமான இடமாக இருக்கலாம் என்று மீண்டும் ஆதாரபூர்வமாக நிரூபித்தது இன்றைய தலைப்பு செய்தி!!
(பட உதவி: ப்ளூ ஆர்ஜினின் முதல் குழு விண்வெளியில் உள்ள ஈர்ப்பு விசை இல்லாத தருனைத்தை அனுபவிக்கும் தருணம் )
இதோ முதல் படத்தில் பார்ப்பது பூமியிலிருந்து சுமார் 297 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, இது தெற்கு வானத்தில் காணப்படுகிறது.
வலது புறத்தில் உள்ள படம் 490 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய சுழல் விண்மீன் ARP-MADORE0002-503 ஐக் காட்டுகிறது. விண்மீனின் நீண்ட சுழல் ஆயுதங்கள்... பால்வீதியை விட மூன்று மடங்கு, 163,000 லைட்இயர்களின் ஆரம் கொண்டது. மறுபுறம், ARP-MADORE0002-503 இல் மூன்று சுழல் ஆயுதங்கள் மட்டுமே உள்ளன,
அதே நேரத்தில் பெரும்பாலான சுழல் விண்மீன் திரள்கள் இன்னும் பல ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன.
இப்படி இந்த பிரபஞ்சம் சொல்ல முடியாத ஆச்சரியமான அம்சங்களை தன்னுள்ளே புதைத்து வைத்துள்ளது.
இப்போது இந்த பூமிப்பந்தின் ஒட்டிய வானவெளியை 16 நிமிடங்களில் சென்று திரும்பிவிடலாம் என்ற ஆச்சரியமான தருணத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருகிறோம்.
இந்த நேரத்தில் தான் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீநின் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாடு, நினைத்துப் பார்க்கக் கூடியது.
இதோ இன்று அதைக் கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இதைத்தானே அன்றே நம் வேத கால முனிவர்கள், நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள், நம்முடைய ஆறு மாதம் அவர்களுக்கு ஒரு பகல், இன்னொரு ஆறு மாதம் அவர்களுக்கு ஒரு இரவு என்றும் சொன்னார்கள்!!
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவக் கோட்பாட்டின் படி, அதிக எடையுள்ள ஒரு பொருளின் அருகில் வரும் ஒளி, அந்தப் பொருளின் ஈர்ப்பு விசையால் நேராகச் செல்லாமல் வளைந்து செல்லும் என்றார்.
அதன்படியே இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி நாயகனான சூரியனை சுற்றி தான் அனைத்து கோள்களும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகின்றன என்பதும நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வேதத்தை அடிப்படையாக கொண்டு வானவியல் சாஸ்திரம் வகுத்த முனிவர்கள், சூரியன், பூமி, மற்றும் கோள்களின் அமைப்பையும் முன்னரே கணித்து சொல்லியுள்ளனர்!!.
கடவுளைப் பற்றிய புதிர்களை அவிழ்க்கும் அவரது இன்னொரு பிரபலமான கோட்பாடு தான் “தியரி ஆப் எவ்ரிதிங்” இந்த விதி தான் “பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சத்திற்கும், ஒரு மிகச் சிறிய அணுவிற்கும் அடிப்படையாக இருப்பவைகள் ஒரே கணிதச் சமன்பாட்டில் அடங்கும்”
ஒரு வேளை நம்முடைய காலத்திலேயே அந்த சில மணித்துளிகளை குறித்து அவர்கள் கண்டு பிடித்துவிட்டார்களானால், நாம் கடவுளின் அரூகினில் சென்று விட்டோம் எனலாம்.!!
விஞ்ஞானிகளிலேயே அற்புதமான மூளைத்திறன் கொண்டவர ஐன்ஸ்டீன். அவரை ஒருமுறை "கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? என்ற கேள்வியை கேட்டபோது "கடவுள் தேவைப்படுகிறார்" என்று தான் சொல்லியிருக்கிறார்.
கவனியுங்கள்..அவர் மறுக்கவில்லை. ..
அண்டத்திற்கும் இந்த பிண்டத்திற்கும் உள்ள தொடர்பும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து வேத காலத்து ரிஷிகள் கணித்த இந்த 'ஜோதிடம்" என்பதில் உள்ள "ஜோதி" என்ற வார்த்தையே சொல்லுமே "ஒளி பொருந்திய"
இந்த அறிவியல் பூர்வமான ஜோதிடத்தை மற்ற மதங்கள் ஜோதிடம் குறித்து அங்கீகரிக்கவில்லை என்பர். ஆனால் இதை சொல்லவதற்காக யாரும் கோபப்பட வேண்டாம். இஸ்லாம் மதத்திலும் சரி திருத்துவத்திலும் சரி, கெட்ட ஆவிகள், பரிசுத்த ஆவிகள், சைத்தான்கள் இந்த பிரபஞ்சத்தில் உலாவுவதை ஏற்றுக் கொள்கின்றனன்ர். இவற்றிற்கு மேற்பட்ட சக்தியாக ஏசுவும் முஹம்மது நபியும் கடவுள் அனுப்பிவி\ட்ட இறைதூதர்கள் என்பர் இஸ்லாமியர். ஆனால் ஏசு இறை தூதர் அல்ல, அவரே கடவுள் என்பர் கிறித்துவர்கள். அந்த கெட்ட ஆத்மாக்களை விரட்டுவதற்காக ஜெபக்கூட்டங்களும், தர்காக்களில் மவுலிசாபுகள் ஓதுவதும் நடக்கின்றன.
இந்த இறந்து போன ஆத்மாக்கள் தான் ஆவிகளாக, ஒரு உலகத்தில் உள்ளனர் என்றும் இந்த பூமிக்கு அவர்கள் சூட்சும வடிவில் வருகின்றனர், நம மால் அவர்களை பார்க்க முடியவில்லை என்றாலும், அவர்களால் நம்மை பார்க்க முடியும், சில சமயத்தில் அவர்கள் நம் கண்ணில் தெரிவதே, (ஐன்ஸ்டீன் சொன்ன இந்த நான்கு வகையான பரிமாணத்தில் எப்போதேனும்) நாம் குறிக்கிடும் போது என்பதும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்ப்பட்ட உண்மை தானே !!
இதைத்தானே நம் ரிஷிகளும், தேவர்களுக்கு, அசுரர்களுக்கு, இறைவனுக்கு என்று ஒவ்வொரு அடுக்கு உலகம் உள்ளது என்றனர்.!!
இறப்பிற்கு பிறகு நாம் எங்கு செல்கிறோம் என்பது குறித்த தேடலில் இருக்கும் நாம் செய்யும் கர்மவினைக்கேற்ப, சொர்க்கம், நரகம் சிவலோகப்பதவி, வைகுண்டம் செல்வதாக சொல்வதும், அதன் தலைவர்களாக இருப்பவர்களை நாம் கடவுளாக வழிபடுவதும் அதன்பொருட்டே.
அத்தோடு, இந்த பிரபஞ்சத்தை கட்டி ஆளும் பஞ்சபூதங்களை தெய்வங்களாக நாம் வழிபடுவதும நம் முன்னோர் காட்டிய இதே வழியினாலேயே.
இதோ இந்த கடவுள் குறித்த தேடலை எனக்குள் கொண்டு வந்ததும் , மெய்யுணர்வையும் விஞ்ஞானத்தையும் என்னை பொருத்தி பார்க்க வைத்ததும், உங்களை படிக்க வைப்பதும் ஞானக்காரகனான கேதுவின் சுபத்துவதுதாலேயே!!!
குரு வாழ்க!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக