எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ, இப்போ எந்த எட்டில் நீயும் இருக்கே தெரிஞ்சிக்கோ" பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது…
வாழ்க்கையை எட்டு எட்டா பிரிக்கிறோமோ இல்லையோ நம்ம உடம்பை எண் சான் உடம்புன்னு தான் சொல்றாங்க. அதற்கு தேவையான பயிற்சி கூட பாருங்க ….எப்படியிருக்குன்னு…
ஆனாலும் இந்த எட்டாம் நம்பர் நம்மை ரொம்பத் தான் பயமுறுத்துது இல்லே?!
நம்ம பெயர், குடியிருக்கிற வீடு, வண்டி எண் இப்படி முடிஞ்ச வரைக்கும் இந்த எண் வர்றதை தவிர்துக்கிட்டு தான் வர்றோம்…
ஏன்?
அது ஒரு ராசியில்ல்லாத நம்பர்ன்னு மனசிலே பதிஞ்சுடுச்சு…இல்லையா?!
இந்த ஜாதகத்தில் இருக்கும் எட்டாம் பாவமும், அதாவது கட்டம், சாதரணமானது இல்லீங்க.
அது ஜாதகரின் ஆயுளை குறிக்கிறது. அதனால் தான் அதை ஆயுர் பாவம் என்கின்றனர். அதை துர்ஸ்தானம் என்று சொல்ல முடியாது.. ஏனென்றால் அவரவரின் கர்மவினைகேற்பவே அவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்கப்பட்டு பிறக்கிறார்..
உண்மை தான் நம்முடைய எக்ஸ்பையரி தேதியுடன் தான் பிறக்கிறோம்.. அது புதிராக இருக்கும் வரை நமக்கு கவலை இருக்காது. தெரிஞ்சா..அப்புறம் நிம்மதி இருக்குமா?
ஆனாலும் ஒரு புதிர்னு வந்துட்டா அதுக்கு விடை தேடாம விட மனசு வருமா?
ஒருவருக்கு அல்பாயிசா, மத்திய ஆயிசா அல்லது பூரண ஆயுசான்னு அவரோட ஜாதகத்தை பார்த்தே சொல்ல முடியும்…அதாவது கணித்து சொல்ல முடியும்..
நிறைய ஜோதிடர்கள் இந்த 'கணிப்பு'லே தான் தவறிடுறாங்க. ஜோதிடம் ஒரு கணக்கும் அறிவியலும் கலந்த கலை. 'கணக்கு என்றால் பிணக்கு 'ன்னு சொல்பவர்கள் ஜோதிடத்தை கணிப்பதை விட்டு சற்று அப்பால் நகர்வது நல்லது!!
இப்போ நமக்கு சக்தி இல்லே. அல்லது சக்தி குறைஞ்சு போயிருக்கு. அல்லது பிடிக்காத, எதிரின்னு நினைக்க கூடிய வீட்டுக்கு கட்டாயமா போக வேண்டியிருக்கு. இல்லே அவரோட பார்வை படுற இடத்திலே இருககிறோம்னு வையுங்க. அப்பநம்ம வலிமை குறையும் இல்லையா ..
அது போத் தான், எட்டாம் பாவத்தின் அதிபதி, எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறாரோ அதன் அதிபதி, பகை வீட்டில் இருந்தாலோ, பார்வை பெற்றோலாலோ,அல்லது நீச்சம் அடைந்தாலோ, ஜாதகருக்கு அற்பாயிசு என்கிறது நாடி ஜோதிடம்.
அதுவும் அந்த பாவத்தில் பாவக்கிரகங்கள் எனப்படும், செவ்வாய், சனி, இராகு, கேது இருந்தால், பூர்வ ஜென்ம பாவம் இருக்கும் எனப்படுகிறது. நிற்கும் கிரகத்திற்கு ஏற்றார்போல இறப்பு ஏற்படும். உதாரணமாக இராகு அந்த ௮ம் பாவத்தில் இருந்தால், இறப்பிற்கு முன்னால்இறப்பு உடலில் வலியுடன் ஏற்படும்.
இந்த அற்ப ஆயுசு என்று எப்படி கணக்கு போடுவது என்றால், வேத கால ஜோதிடத்தின் படி ஒருவரின் ஆயுள் காலம் 12௦வருடங்கள்.என்று கணக்கிட்டுள்ளார்கள். . அதை வைத்து கணக்கு போடுங்க..
இதுவே அந்த அதிபதி நட்பு வீட்டில் இருந்தால், ஜாதகர் 66 வயது வரை வாழ்வார் என்பர். அதே சமயம், லக்னத்திர்கான பாப கிரகங்களில் ஏதேனும் ஒன்று, பார்த்தாலோ, கஇணைவு பெற்றாலோ, அந்த 66 வயது முடியும் முன்னே இறப்பு ஏற்படும்.
அந்த அதிபதி உச்சமும் இல்லாத நீச்சமும் இல்லாத மத்தியமான வீட்டில் இருக்கிறார் என்றால், அதாவது உதாரனத்திற்க்கு குரு, புதன் லக்கின கேந்திரத்திலும், சந்திரன், சுக்கிரன் ௪ம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கும் மத்திய ஆயுள்.
பொதுவா இந்த அதிபதி சர ராசிகளில் இருந்தால், ஆயுள் காலம் கூடும். மாறாக உபய ராசிகலிலோ சத்திர ராசிகழிலோ இருந்தால் ஆயுள் குறையும்.
மேலே சொன்னது எதுவும் பாலரிஷ்ட ஜாதகத்துக்கு பொருந்தாது.
பாலரிஷ்டா தோஷம் தெரியுமில்லையா? பால கண்டம் எனப்படும் இது பொதுவாக, சந்திரன் எட்டாம் வீட்டிலோ , ஜென்ம ஜாதகத்தில் இருந்தால் 12 வயதுக்கு முன்னர் இறப்பு நிகழும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் சுப கிரகங்களின் பார்வை பெறும்போது, அந்த கண்டதிலிருந்து மீண்டு வருவர்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சின்ன வயதில் , டைபாய்டு காய்ச்சல் வந்து நான் படுத்த படுக்கையாய் கிடந்தது. நான் பிழைக்கமாட்டேன் என்று டாக்டர்கள் கை விரித்துவிட்டார்களாம். வீட்டிற்கு வெளியே ஐஸ் வண்டி போகும்போது, அந்த ஜுரத்திலும், குச்சி ஐஸ் வேண்டும் என்று அழுதிருக்கிறேன். என்ன செய்ய என்று தெரியாமல் அம்மா முழிக்க, அப்போது வீட்டிற்கு வந்த டாக்டர்,போற குழந்தை கேட்பதை வாங்கி கொடுக்க" சொல்லியிருக்கிறார்!!
ஆனாலும் பிழைத்துவிட்டேன். !!
இப்படி எழுதியே உங்களையெல்லாம் சாகடிக்கவா"ன்னு கேட்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது ):
சரி சரி…..ரொம்ப கொடுமையா போயிட்டு இருக்கில்லே..
இப்போ பூர்ண ஆயுசை பத்தியும் பாப்போம்..
அந்த அதிபதி தான் உச்சம் பெறக் கூடிய வீட்டில் இருந்தாலோ அலது சொந்த வீட்டில் இருந்தாலோ …கேட்கவே வேண்டாம். பூரணாயுசு தான்…!!
ஆனாலும், அவர் உச்சம் பெறும் வீட்டில் இருந்தால் கிடைக்கும் ஆயுளை விட, சொந்த வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் ஆயுள் சற்று குறைவு தான்.. . என்ன. அங்கே இருந்தா அவர் 77 வருடம் மேலே கூட வாழவார்கள். ஒரே கண்டிஷன் எந்த பாவ கிரகங்களும் அவரோடு தொடர்பில் இருக்க கூடாது…அதாவது ஒரே வீட்டில் கூட இருப்பது, பார்வை பெறுவது…இப்படி..
இந்த பார்வைக்கு இருக்கிற மதிப்பை பாருங்களேன்….பின்னே…சைட் அடிக்கிறது என்ன சும்மாவா?! ):
ஆனாலும்…ஏழாம் வீட்டிலிருந்து இந்த 'ராகு' பார்த்தாலும் வீட்டிலே ஒத்துக்குருவாங்க… நம்ம வீட்டுக்கு ஏழாம் வீட்டில் இருக்கும் 'ரகு' பார்த்தா தான்…….. !!! )::
நிறைய பேருக்கு மரணம் என்ற வார்த்தையை கேட்டாலே பயம் வந்துரும்.
ஆனா..அதை மறைச்சு வச்சுக்கிட்டு இருப் பதாலேயே அது இல்லாம போகுமா என்ன?
'நமக்கு இரண்டு வாழ்க்கை உண்டு. எப்போது நமக்கு ஒரு வாழ்க்கை தான் உள்ளது என்று உணர்கிறோமோ அப்போது தான் அந்த இரண்டாம் வாழ்க்கை தொடங்குகிறது' என்றார் கண்புயுசியஸ்.
உண்மை தான் இந்த வாழ்க்கை இப்படித் தான் முடியும், நமக்கு நேரம் அதிகம இல்லை என்று உணரும்போது தான், இருக்கும் காலத்திற்குள் எல்லோருடனும் அன்பு பாராட்டவும், விருப்பு வெறுப்புகளை அகற்றவும் கற்று கொள்வோம். அந்த விதத்தில் எட்டாம் பாவம் நமக்கு காட்டுவது ஞான ஒளி தான்!!
வலியை உணர்பவர் தான் உயிருடன் இருக்கிறார்….அடுத்தவர் வலியை உணர்பவர் தான் மனிதன் ஆகிறார்…என்றார் லியோ டால்ஸ்டாய்.
நாமும் அதையனர்ந்து நடக்கும்போது, சொர்க்கம் நம் கண் முன்னே விரியும்!!
அருமையான விளக்கம்
பதிலளிநீக்கு