அதாவது புத்தி வேலை செய்யாத போது...
"எனக்கு கையும் ஓடலை... காலும் ஓடலை" என்னும் தருணம் அது...
அமைதியாய் இருக்கலாம் என்பார்கள்...ஆனால் ஆர்ப்பரிக்கும் மனது...அமைதியாய் இருக்க விடுமா?...
எண்ண அலைகள் அடித்துக்கொண்டே இருக்கும் மனதை ஆளும் சந்திரன் ஒரு நீர் கிரகம அல்லவா?!
கையும் காலும் துரு துருவென்று இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா. ..
'ஏதாவது செய்கிறேன் பேர்வழி ' என்று கையை நீட்டி விடுவார்கள்...'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' .என்பது இதைத் தான் ...எதையும் யோசிக்காமல் முரட்டுத் தனமாக செய்யும் தன்மை என்பது செவ்வாய கிரகத்தின் குணங்களில் அதாவது காரகத்துவங்களில் ஒன்று.. செவ்வாய் வலுவாய் ஜாதகத்தில் கொண்டவர்கள், அந்தக் காலத்தில் கட்டுக்கடங்காத கோபம் கொண்டு 'வெட்டு ஒன்று துண்டு ரெண்டு' என்று முன் பின் யோசியாமல் செய்வதைத் தான் 'வீரம்' என்றனர்!! இன்று சட்டத்தின் துணையோடு அதையே செய்யும் அவர்கள் கடமை வீரர்கள்!! இல்லாதவர்கள் குற்றவாளியாகிறார்கள்!!
பின் விளைவுகளை யோசியாமல் செய்யும் இந்த அவசரக்குடுக்கைத்தனம் கொண்ட செவ்வாய் ஆட்சி கொள்ளும் மேஷமும் விருச்சிகமும் நெருப்பு ராசிகள்..நெருப்பின் நிறமு ம் செவ்வாயின் சிவப்பு நிற கதிர் வீச்சுக்கும் ஒத்துப் போகிறதா ?
காவல் நிலையமும் நீதிமன்றமும் ஏன் சிவப்பு நிற கட்டிடங்களாக இருக்கின்றன என்று இப்போது புரிந்திருக்கும்!!
ஆனால் இதுவே மனதின் ஆளுமை கொண்டவர்களால், அதை அடக்கி வைக்க முடியும். அதனால் ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனோடு இணைந்து இருப்பதோ அல்லது பார்வை பெறுவதோ நல்லது ..முரட்டு பையனை தட்டிக் கொடுத்து கொஞ்சம் சூட்டை குறைப்பார்!! தண்ணீர் ராசியான சந்திரன் நெருப்பு ராசியான செவ்வாயுடன் இணைந்தால் செவ்வாய் கட்டுக்கோப்பாக இருப்பார். திரைப்படங்களில் காட்டப்படும் முரட்டு ஹீரோ தன அன்பான் தாயிடம் கட்டுண்டு கிடப்பது போல!!
ஆனால் அங்கு புத்தியும் செயல்பட்டால் நன்றாகத் தான் இருக்கும்.. என்ன பிரச்சினை என்றால், புத்தியை அருளும் புதனுக்கு தன் அம்மாவான சந்திரனுடன் பகை. புதனின் நட்சத்திரமான கேட்டையில் சாரம் கொண்ட சந்திரனின் நிலையை, அந்த ஜாதகனே சொல்லுவார்..
இந்தப் பக்கம் செவ்வாயையும் அவருக்கு பிடிக்காது. "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்பார்களே.. அது ஏன் தெரியுமா ? இந்த பன்னிரண்டு கிரகங்களிலும் சுக்கிரன் அனைத்து ராசிகளுக்கும் யோகம் தரக்கூடியவர்.. மனித வாழ்வுக்கு தேவையான காமத்தை கொடுத்து உயிர் சங்கிலி தொடரச் செய்பவர் அவர் தானே!!
அதே போல, குரு, செவ்வாய் சர, ஸ்திர லக்கினங்களான எட்டு இலக்கினங்களுக்கு மட்டுமே யோகம் செய்வார்கள்...அந்த விட்டுப் போன நான்கு உபய லக்கினங்களுக்கு மட்டுமே புதன் யோகத்தை தருவார்!! அதுவும் இரண்டு இவரின் ஆட்சிக்குட்பட்டவை. மற்ற இரண்டு அறிவுக்கு அடையாளமான குருவின் ஆட்சியில் உள்ளவை.. இதிலிருந்தே இவரின் பெருமையை, தெரிந்து கொள்ளலாம். ஆனால் செவ்வாய் பார்த்தாலே இந்த யோகம் பங்கமாகிவிடும்!!
அதனால் தான் பாபத்துவமான செவ்வாய், புதன், சந்திரன் மூன்றின் இணைவோ தொடர்போ பெற்றவர் கோழையாகிப் போகிறார்..அம்மாவையும் மனைவியையும் ஒரு சேர சமாளிக்க முடியாத ஆணின் நிலை போல!!
ஆனாலும் பரிகாரம் உண்டு ..அறிவை தரும் குருவோ அல்லது வசதியை தரும் சுக்கிரனின் தொடர்பு இருந்தால்!!😀
ஜாதகத்தில் புதன் வலுத்து வளர் பிறை சந்திரனுடன் இணைவு பெற்றிருந்தால் புதன் நன்றாக தன பலனை செய்வார். ஆனால் எந்த நிலையிலும் அமாவாசையை நெருங்கும் சந்திரன் இருந்தால், தானும் கெட்டு, தன்னுடன தொடர்பில் உள்ள புதனையும் கெடுப்பார்!!
அதாவது புத்தி வேலை செய்வது மனதை பொறுத்து உள்ளது !!
மீனத்தில் புதன் நீசம் ஆனால் சந்திரன் வளர்பிறையாக இருந்தால், தன வலிமையை கொடுத்து புதனின் நீச்சத்தை பங்கம் செய்து தான் வலிமை இழப்பார்.
அதாவது ஓரளவிற்கு புத்தியும் மனதும் வேலை செய்யும்!!
இப்படி இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும்போது என்ன செய்வது ?
புதனையே அப்படி தானே சொல்வார்கள்..ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி ராசி என்று!!
புத்தி வேலை செய்யாத நேரத்தில் என்ன செய்வது?
அமைதியாக இருப்பது நல்லதா அல்லது ஏதாவது செய்வது நல்லதா என்றால் அது சூழ்நிலையை பொறுத்து என்று தான் சொல்ல வேண்டும்.
https://youtu.be/hyJHRTArYTE
இந்த வீடியோவை பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும. சிங்கம் முன்னால் மாட்டிக் கொண்டவர் அமைதியாக இருக்கிறார். அவர் செய்யும் எந்த செயலும் சிங்கத்தை கோபமூட்டிவிடும் அபாயம் உள்ளது. . அவர் தன்னை தாகக முயற்சிப்\பதாக நினைத்து தாக்க தொடங்கி விடும் ஆனால், அந்த இடத்தின் பொருப்பாளிகளோ அப்படி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. அவரை காப்பாற்ற த்வையான நடவடிக்கை எடுத்து வெற்றியும் பெற்று விட்டார்கள்!!
பொதுவாக புத்தியை, குரங்கு புத்தி என்றும் பூனை புத்தி என்றும் இரண்டு விதமாக சொல்வார்கள்.. அதாவது பூனை குட்டிகளை பிறந்தவுடன் பார்த்திருக்கிறீர்களா? கண்ணை மூடிக்கொண்டு ஒரே இடத்தில் அசையாமல் கிடக்கும். அவற்றை தாய் பூனை அவற்றை இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்த்த வேண்டுமாயின், தாய் பூனை தான் அவற்றை கவ்வி கொண்டு போய் விட வேண்டும்... பூனைக்குட்டிகள் அமைதியாய் அப்படியே இருந்த இடத்தில் இருக்கும்.
ஆனால் குரங்கு குட்டிகள்? அவை தன தாயை பற்றிக் கொள்ள, தாய் ஒரு மரத்திலிருந்தோ அல்லது இடத்திலிருந்து நகர்ந்து வேறொரு இடம் சென்றவுடன் தாயிடம் இருந்து இறங்கிக் கொள்ளும்..
இங்கு ஒரு அமைப்பை பார்த்தோமேயானால், பூனைக்குட்டிகள் தாயைப் பிடித்து கொள்ளாது!! தாய் தான் அவற்றை கவ்விப் பிடிக்கும். ஆனால் குரங்கு குட்டிகள் தான், தன் தாயை இறுகப் பற்றி கொள்ளும்!!..
எனவே, என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் எப்படி நடந்து கொள்வது..... பூனை குட்டிகள் போலவா அல்லது குரங்கு குட்டிகள் போலவா என்பதை சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யலாம்.
ஆனால் அமைதியாய் இருப்பது என்பது தான் உண்மையில் கடினமானது.
நாம் குரங்கின் வழி வந்தவர் என்பதாலோ என்னவோ, எதையாவது பற்றிக்கொண்டு இருக்க பழகிப்போனவர்கள்.!!
நன்றி https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/07/25151409/Where-did-man-come-from-new-study.vpf
அதனால் என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலையில், நம்முள்ளே உறைந்திருக்கும் இறைவனை பற்றுவோம்!! நம் உள்ளுணர்வே நமக்கு வழிகாட்டும்!!
நம் மூதாதையர் வழியை பின்பற்றுவோம்!!😁