ஜோதிடத்தின் ஜோதி.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடத்தின் ஜோதி.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 நவம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 30 இறுதி பகுதி... கணவனும் மனைவியும் எப்போதும் ஏன் எதிர்த்தன்மையுடன் இருக்கின்றனர்?

 Men are from Mars, Women are from Venus".

"ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள்.பெண்கள் சுக்கிர கிரகத்தில் இருந்து வந்தவர்கள்" என்றொரு கூற்று உண்டு..

செவ்வாய் கிரகத்தின் காரகத்துவம் என்று ஆண்களின் முக்கிய குணங்களான வேகம், வீரம் போன்றவற்றை சொல்லும் போது, சுக்கிரன், பெண்கள் அழகுணர்ச்சி, கலைகளில் காட்டும் ஈடுபாட்டை காரகத்துவமாக கொண்டது.

இத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் செவ்வாய் குரு அணியிலும் அதன் எதிர் அணியின் தலைவராக சுக்கிரன் இருந்தாலும் இரண்டும் பகைத்தன்மை கொண்டவை அல்ல. இரண்டும் சம தன்மையானது..அது தான் ஆண் பெண் உறவுக்கும் சொல்லப்படுகிறது!!

.ஆனாலும் ஒரே தாயின் வயிற்றில் பிரந்தவர் எண்றாலும் ஒரு பெண்ணின் மனதை ஆணால் உணர முடியாதது ஏன்?

மூளையின் வலது புறம் தான் கலைகளுக்கு தேவையான கற்பனை வளத்தை கொடுக்கிறது. என்றால் அதன் இடது புறம், எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மையை கொடுக்கிறது.

ஆனாலும் பாருங்களேன்..அங்கேயே ஒரு மாறுபட்ட தன்மையை மூளையின் வலது பக்க செயல்பாட்டை இடது கை தான் செயல்படுத்துகிறது. வலது கையின் செயல்பாடு, இடது மூளையின் கட்டுப்பாட்டில்..இதுவே எதிர் தன்மை தானே?

ஒளியினால் உயிர் வாழும் இந்த பிரபஞ்சத்தின் நாயகனாக இருக்கும் சூரியனும் அதன் ஒளியை பெற்று பிரதிபலிக்கும் சந்திரன் அம்மையப்பன் எனப்படுகின்றனர்.

அதாவது இந்த உலகத்தின் தலைவனான சூரியனின் தலைவி சந்திரன்…அவர்களின் வழியாகவே, , கணவன் மனைவிக்கு இடையே உள்ள தாத்பர்யம் சொல்லப்படுகிறது.

சித்திரை மாதத்தில், .சூரியன் மேஷ ராசியில் உச்சமடையம் போது, அதன் அடுத்த ராசியான ரிஷபத்தில் தான்,அதாவது அடுத்து வரும் தமிழ் மாதமான வைகாசியில் தான், சூரியனின் ஒளியை பெற்று பிரதிபலிக்கும் சந்திரன் உச்சமடையும். அதாவது தனி ஒளியுடன் பிரகாசமாக இருக்கும்.

கணவனும் மனைவியும் ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது?!!

நிறைய வீடுகளில், இப்போதெல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பொது அறையை ஒட்டியே, அவர்களுக்கு தனித்தனியறையம் உள்ளது!!

ஆனால் புதிதாக திருமணமானவர்களும் திருமணம் செய்ய இருப்பவர்களும், தன் வாழ்க்கைத்துணையான மனைவி தன்னை சார்ந்தே இருக்கவேண்டும், தன்னிடம் மட்டுமே வெகு நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கும் ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறார்கள்கள் அம்மையப்பர்.

அடூத்தடுத்த இராசியில் உச்சமான ஒளியை வெளிப்படுத்தும் சூரியனும் சந்திரனும்., ஒரே இராசியில் ஒன்று சேரும் போது இருளான “அமாவாசை”யாகிறது..

“நெருக்கம் அதிகமானால் புழுக்கம் அதிகமாகும்” என்று சொல்வதில்லையா? அது இதைத்தான்!!

ஆத்மகாரகன் என்னும் சூரியனிடம் ஆழ்மனோகாரகனான சந்திரன் சரணடையும் அந்த தருணத்தை, ஆண்மீகத்தில் சிறப்பாக சொல்லப்படுகிறது!!

.இல்லறம் சிறக்காதபோது மனம் ஆன்மீகத்தை தேடுகிரது இதனால் தான் போலும்!

அதனால் தான் தம்பதிகள் ஒன்றிணைவது என்றாலும், அவர்களுக்குள் சற்று இடைவெளியும் வேண்டும் என்கிறார்கள்.

சூரியன் உச்சமடையம் இராசிக்கு அடுத்துள்ள இராசியில் சந்திரன் உச்சமடைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அங்கு சூரியனின் கிருத்திகை நட்சத்திரக்கூட்டம் மட்டுமல்ல சந்திரனின் சொந்த நட்சத்திரக் கூட்டமான ரோஹிணியில் தான் நிற்கும் என்பதால்…

.எவ்வளவு பாசமான கணவனின் சொந்தங்கள் உடன் இருந்தாலும், பிறந்த வீட்டு உறவும் உடன் இருக்கும்போது பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேது!! மாதாகாரனாகிய சந்திரனும் இதை தான் உணர்த்துகிறது!!

உச்சத்தை போலவே சூரியன் துலாத்தில் நீச்சம் அடையும்போது, அடுத்த இராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசம் அடைவதும் இதன் அடிப்படையிலேயே!!

அதே போல, ,சூரியனை விட்டு எவ்வளவு தூரம் சந்திரன் விலகி இருக்கிரதோ அந்தளவிற்கு அதன் ஒளி பிரதிபலிக்கும் தன்மையும் அதிகம் இருக்கிறது. சூரியனுக்கு நேர் எதிரில் அதாவது ஏழாம். பாவத்தில் சந்திரன் இருக்கும் போது ஒளி வீசும் முழு நிலவான “பவுர்ணமி”யாகிறது.

அதாவது சூரியனுக்கு எதிரில் இருப்பதால் அது “எதிரி”அல்ல .அதன் ஒளியை முழுதாக பெற்று பிரதிபலிக்கத் தான்...

இதை தான் தம்பதிகளாக இருப்பவர் உணர்ந்துக்கொள்ள வேண்டியது..ஏனெனில், ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் ஜாதகரை குறிக்கும் என்றால், அதற்கு நேர் எதிரே உள்ள ஏழாம் பாவம் அவர் வாழ்கைத் துணையை குறிக்கிறது.

என்ன சொன்னாலும் முழுதாக உள்வாங்கிக்கொள்ள கொள்வதில்லை என் மனைவி என்று ஆண்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

அந்த பவுர்ணமி சந்திரனே சூரியனுக்கு நேரெதிராக நின்று சூரியனின் ஒளியை உள் வாங்கினாலும் வெளிப்படுத்துவதென்னவோ சூரியனின் பாதி அளவை தானாம்!!..இதை நான் சொல்லவில்லை. மகா புருதர் காளிதாசர் தனது “உத்தர கலா மருதம்”என்னும் நூலில் கிரகங்களின் ஒளி அளவை பதிவு செய்துள்ளார்.அதில் சூரியனுடையது 30 என்றவர் சந்திரனுக்கு ஒளி அளவு 16 என்றதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம்!!

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஜோதிடத்தில், ஒவ்வொரு லக்கினத்திற்கும் வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் பாவம், லக்கினத்திற்கு பகையான கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது! அதனால் தான் கணவன்/மனைவி எதிர் தன்மையுடன் இருப்பதும் நடக்கிறது.

இருந்தாலும், களத்திரகாரகனான சுக்கிரன் இருவரிடத்திலும் உள்ள ஈர்ப்புத் தன்மையை ஏற்படுத்தி, காமத்தீயை அணைக்காமல் இருவருக்கும் இடையே உள்ளே நெருக்கத்தை கூட்டி உறவை வளர்க்கிறார்..

இதைத் தான், கிரகங்களின் உறவுக்கு ஒளியம் அவற்றிற்கு இடையே உள்ள தூரம் மட்டுமல்லாமல் அவற்றிற்கு இடையே உள்ள ஈர்ப்புவிசை சுட்டிக்காட்டுகிறது. .

கிழக்கில் உள்ள சூரியன் சிம்மத்தில் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமாகவும் இருக்கும் போது, வட மேற்கில் உள்ள சந்திரன் கடகத்தில் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமாகவும் இருப்பது இப்படித் தான்!!,

ஆனால் இந்த ஈர்ப்பை ஏற்படுத்தும் சுக்கிரன் நீச்சமாக இருந்தாலோ, பாவக்கிரகங்களுடன் சேர்ந்தாலோ, இந்த காதல் உணர்வே அற்றுப் போய் விடும்.

இந்த ஏழாம் பாவத்தில் சுக்கிறனுடன் சனியும் இராகுவும் சேர்ந்தால் மனைவி கணவனை விடுத்து வேற்று ஆணுடன் நாட்டம் கொள்வதும், .அதுவே நீச்ச சுக்கிரன், சனி, செவ்வாய், இராகுவோடு சேரும் போது, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தன்மையை கொடுப்பதுமாய் இருக்கும். ஒரு பெண்ணை கதறக் கதற பாலியல் ரீதியான துன்பத்துக்கு ஆளாக்குபவனின் ஜாதகத்தில் இந்த அமைப்பே இருக்கும்.அதில் தான் அவனுக்கு காமக்கிளர்ச்சியே உண்டாகும்..மனைவியிடம் அளவுக்கு மீறிய காமக்களியாட்டடம் கொள்வதும் இது போன்ற அமைப்பினால் தான்.

ஆனால் குருவின் பார்வை இதை அப்படியே மாற்றிவிடும்..

அது போலவே, சுக்கிரன் சுபத்துவமாக தனித்திருக்கும் போது, அவன் பெண்களுக்கு பிரியமானவனாய் அவன் அருகாமைமை பாதுகாப்பாய் பெண்கள் உணரும் விதமாய் இருப்பான்..

பெண் தன் கணவனிடம் எதிர்பார்ப்பதே இதைத் தானே…காதலுடன் கூடிய காமத்தை தரும் கணவனுக்கு என்றுமே அவள் சரணாகதி தான்..அவன் அவளுடைய ஆத்மாவாக இருக்கும் போது, இவள் அவனுடைய ஆழ்மனதாகிறாள்!!

இதைத் தான் ஜோதிடம் நமக்கு வாழ்க்கை தத்துவமாக உணர்த்துகிறது!

புதன், 6 அக்டோபர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 27...யாரும் உணராத, கணிதத்தில் உள்ள அழகான மற்றும் ஆச்சரியமான ஒன்று என்ன?

 "கணக்கு எனக்கு பிணக்கு" என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர்கள் இப்போது அதிகம்.

அதனாலெல்லாம் பாரதியாராக ஆகி விட முடியாது !!😆

அதுவும் இந்த கால்குலேட்டர் வந்த காலத்திலிருந்து மனக்கணக்கு என்பதே எல்லோருக்கும் மறந்த கணக்கு ஆகி போனது!!

ஆனாலும் இந்த கணக்கி்ற்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பும் இருக்கிறதே அது மிக அற்புதம் .!!

அதுவும் இந்த எண் 120 இருக்கிறதே , அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பை பாருங்களேன் அசந்து தான் போவோம் .!!.

  • மனித மூளையில் மொத்தம் 1,200 கோடி நரம்பு செல்கள் இருக்கிறதாம். !!
  • இரத்த அழுத்தம் 120 க்கு கீழ் என்றால் நார்மல் என்கிறார்கள் .
  • அது மட்டுமா …இந்த உடலுக்கு இருக்கும் ஆயுள் காலமும் 120 வருடங்கள் என்று பராசர மகரிஷி .கணித்தார்.
    • இதை எப்படி கணித்தார் என்று எந்த குறிப்பும் இல்லை.மூல நூல்கள் ஒரு அஸ்திவாரத்தை தான் காட்டும். அதற்கு மேல் கட்டிடடம் எழுப்பும் பணியை நாம் தான் செய்யவேண்டும்…அந்த பரம்பொருள் அனுமதித்தால்,...

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்,நாழிகை ஒன்றுக்கு 360 (15X24) மூச்சும் ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டது.

இந்த மூச்சுகளுக்கும் தமிழ் எழுத்துககளான உயிர் எழுத்துகள்12ம் மெய் எழுத்துகளான 18 எழுத்துகளையும் ஒன்று சேர்த்து கிடைக்கும் உயிர் மெய் எழுத்துக்கள் 216, இவற்றுக்கும் இந்த 21,600 மூச்சுகளுடன் உள்ள தொடர்பை கவனியுங்கள்.

இந்த ஒவ்வொரு உயிர்மெய் எழுத்தையும் சொல்லும்போது அத்தோடு பத்து ஆத்ம சக்திமூச்சும் வெளிப்படுகிறது என்று கண்டுகொண்டார்கள் நம் ஞானிகள். .

ஓம் என்ற எழுத்தில் உள்ள அ, உ, ம என்பதில், 8 =அ, 2= ௨காரமாகவும் ம் = 6 தமிழ் எழுத்துக்களில் குறிக்கபடுவது நமக்கு தெரியும். இந்த எண்களை கூட்டினால் அ =8 உ=2 மொத்தம் 10 , ,இவற்றை ம் = 6 உடன் பெருக்கும்போது கிடைப்பது 60 என்பதை ஒட்டியே காலக்கணிதம் அறுபது நாழிகை என்று கணக்கிடப்பட்டது

அதனால் தான் ஒவ்வொரு உயிர் மெய் எழுத்தினுடைய உச்சரிப்பும் 100 மூச்சு பலன்களை தரக்கூடியது என்றும் மொத்த தமிழ் எழுத்தும் 216 *100 = 21600 மூச்சுகள் கொண்டது என்றும் மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். என்றனர்.

மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

அதே போல 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை சொல்லுவதால் வாழும் காலம் நீடிக்கிறதாம் !!

இதை ஒப்புநோக்கியே, , இந்த பிரம்மம் எனக்கு அளித்துள்ள ஆசியின் படி, உயிர் எழுத்துகள உச்சரிக்கும் போது வெளிவரும் 180 உயிர் ஆத்ம சக்தி மூச்சு மற்றும் மெய் எழுத்துகளை உச்சரிக்கும் போது வெளிவரும் 120 மெய் ஆத்ம சக்தி மூச்சு யையும் கணக்கிட்டு பார்த்தே, இந்த ;மெய்' என்னும் உடல் வாழக்கூடிய ஆயுள் காலம 120 வருடங்கள் என்று கணக்கிட்டார் மகாபுருஷர் பராசரர் என்று ஊகிக்கிறேன்.

இப்படி 21,600 மூச்சுகளை வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். என்று கணித்தனர் நம் வேத கால ரிஷிகள் ..

நந்தனார் கீர்த்தனையில் "எட்டும் இரண்டுமறியாத மூடன் " என்கிறார்.

.8 =அ, 2= ௨ இல்லையா? 8 X 2 = 16 இடது புற மூக்குத்துவாரதிலிருந்து வரும் சந்திர கலையை தான் குறிப்பிடுகிறார்.

அந்த சந்திர கலையை சுருக்க சுருக்க ஆயுள் கூடுமாம் !!!

அண்டமும் பிண்டமும் ஒன்று என்று முன் காலத்து ரிஷிகள் சும்மா சொல்லவில்லை. அதனுடன் இணைந்த கணக்கு தான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது!!

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று சும்மாவா சொன்னார்கள் சான்றோர்!!

  • நவக்கிரகங்கள் வான மண்டலத்தில் வலம் வருவதாக சொல்லப்படும் நீள் வட்டபாதையின் அளவு 360 பாகைகள் அல்லது டிகிரி என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை மேலும் 12 இராசிககட்டங்களாக கற்பனையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு இராசிக்கும் 30 பாகைகள் என்றும் வகுப்பட்டுள்ளது இல்லையா? இதில் அஸ்வினி முதல் ஆயில்யம் நட்சத்திரம் வரை இந்த நவக்கிரகங்களின் ஆளுகை கொண்ட ஒரு பகுதியின் அளவும் இந்த 120
    • . இது போன்ற மூன்று பகுதிகளை ஒட்டுமொத்தமாக சேர்த்த நம் இராசி சக்கரத்தின் மொத்த அளவு தான் 360 டிகிரி
  • இன்னோன்று பார்த்தீர்களா? பூமி சூரியனை சுற்றி வரும் சுற்று பாதையின் அளவான 360 மற்றும் ஒன்பது நவக்கிரகங்களையும் பெருக்கி இந்த 27 நட்சத்திரங்களுடன் வகுத்தால் கிடைப்பது இதே 120 .தான் . (360x9)/27=120.
  • நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை மிக துல்லியமாக கணித்து காட்டக்கூடிய தசா காலத்திற்கும் இந்த எண் 120 என்பதை தான் மகரிஷி பராசர ர் பயன்படுத்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு கிரகமும் நம் மேல் செலுத்தும் ஆட்சியின் காலத்தையும் மிக துல்லியமாக கணக்கிட்டுள்ளார்!!

சூரியன் 6 ஆண்டுகள்

சந்திரன் 10 ஆண்டுகள்

செவ்வாய் (குஜன்) 7 ஆண்டுகள்

புதன் 17 ஆண்டுகள்

வியாழன் (குரு) 16 ஆண்டுகள்

சுக்கிரன் 20 ஆண்டுகள்

சனி 19 ஆண்டுகள்

ராகு 18 ஆண்டுகள்

கேது 7 ஆண்டுகள்

மொத்தம் 120 வருடங்கள் .

ஆனால் இவை எப்படி கணக்கிடப்பட்டன என்று இதுவரை நமக்கு தெரியாது!!.

  • மகா புருஷர் காளிதாசர் தமது "உத்தர கலா ம்ருதம்" என்னும் நூலில் "கிரக களா பரிணாமம்" என்ற தலைப்பில் மற்ற கிரகங்களில் இருந்து பூமிக்கு கிடைக்கும் ஒளியின் அளவை கணக்கிட்டு கொடுத்துள்ளதாக ஆதித்ய குருஜி அய்யா அவர்கள் குறிபிட்டுள்ளார்,

இதில் சூரியன் 30, சந்திரன் 16, புதன் 8, சுக்கிரன் 12 , செவ்வாய் 6 , குரு 10, சனி 1 .

    • இந்த கிரகங்கள் சூரியனிலிருந்து எத்தனையோ கோடி லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்போது, எந்த வித தொலைநோக்கியும் இல்லாத வேத காலத்தில், கிரகங்களின் கதிர் வீச்சு அளவை அவர்கள் அளவிட்டு சொல்லியுள்ளது அவர்களின் அளப்பறியா ஞானத்தை காட்டுகிறது!!
    • இந்த கதிர் வீச்சுளவில், ஒரு ஆதிபத்தியம் கொண்ட சூரியன் சந்திரனை விட்டுவிட்டு மற்ற இரு ஆதிபத்தியம் கொண்ட "குஜாதி குஜர்கள்" எனப்படும் ஐந்து கிரகங்களின் ஒளி வீச்சு அளவை இரட்டிப்பாக மாற்றி மொத்தமாக கூட்டும்போது வருவதும 120 தான் !!

நம் பிறப்பும் இறப்பும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவை தான் என்பதும் இடைப்பட்ட காலத்தில் அவரவர் கர்மாவிற்கேற்ப அவரவர் வாழ்வு நடக்கின்றது என்பதும் எல்லாமே ஒரு கணக்குப்படியே இயங்குகின்றன, இயக்கப்படுகின்றன என்பதை அறியும் போது ஆச்சரியம் மட்டுமல்ல மெல்லிய திகைப்பும் ஏற்படுவதை மறைக்க முடியாது!!

திங்கள், 6 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 20 ...தனுசு ராசியின் சிறப்பு என்ன?

நான் பார்த்த வரையில்,  பன்னிரண்டு  ராசிகளில்,  "எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே.  ரொம்ப நல்லவனப்பா " என்று  சொல்லக்கூடிய நபர்கள் எல்லாம் இந்த இலக்கின/ ராசிக்காரர்களாகத தான்  இருப்பார்கள் !!


  • எவ்வளவு கெடுதல் மற்றவர் செய்தாலும், கடவுள் இருக்கார்,பார்த்துக்  கொள்வார்"  என்பவர்கள்.  ஆனால் பாருங்கள் , இந்த ராசி பஞ்ச பூதங்களில் முக்கியமானதான நெருப்பு ராசி.
நெருப்பு ராசி என்றால்  வீரம், தைரியம், வேகம் என்றெல்லாம் பார்த்த நமக்கு இவ்வளவு அமைதியான  குணம் படைத்தவர்கள் நெருப்பு ராசி என்பதே ஆச்சரியம் அளிக்கும்.  ஆனால் மற்ற நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம் இவற்றோடு ஒப்பிடும்போது மேஷத்தின் நெருப்பு காட்டு தீ போல  என்றால் சிம்மத்தினுடையது  சமையலுக்கு பயன்படும் நெருப்பு என்று சொல்லலாம். .  ஆனால் தனுசுவின் நெருப்பு என்பது கோவிலில் உள்ள  விளக்கில் உள்ள நெருப்பு போல குளுமையானது, மனதுக்கு இதம் கொடுக்க கூடியது!!

  • புத்திசாலித்தனம், ஒழுக்கம், தவறு செய்ய அஞ்சுதல், இன்னொருவர் தனக்கு தீங்கு  செய்தாலும், பழி வாங்க நினைக்காமல், கடவுளிடம் விட்டுவிட்டு நகர்பவர்கள் எல்லாம் இந்த இலக்கினத்தை சேர்ந்தவர்கள் தான்.  கால புருஷனின் ஒன்பதாவது வீடு. சர ராசி,  ஆண் ராசி என்று எவ்வளவு இந்த இலக்கினத்தின் குணம் பற்றி சொன்னாலும் முக்கியமாக சொல்ல வேண்டியது இவர்கள் மென்மையான தன்மை கொண்டவர்கள் என்பது தான். 

  • வேத சாஸ்திரம்,  உலக ஞானம், அறிந்தவர்கள்.    குருவின் இரண்டு வீடுகளில் இதற்கு மட்டும் என்ன தனி சிறப்பு என்றால்,  இன்னொரு வீடான மீனத்தில்  சுக்கிரன் உச்சத்தில் இருப்பார் என்பதாலும்,  கால புருஷனின் இறுதி இடமான படுக்கை அறையை குறிப்பது மீனம் என்றால் தனுசு இராசி/இலக்கினத்தை  கோயில் என்று சொல்லலாம்!!  
 


  • அதே போல இரவில் வலுப்பெற்றிருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்ததாக கருதப்படுவார்கள்.  அதனால் தானோ என்னவோ இரவில் வெகு நேரம் விழித்து வேலை செய்யக்  கூடியவர்கள். 
  • எந்த ஒளிவு மறைவின்றி மற்றவரை மனம் திறந்து பாராட்டக் கூடிய மனம் படைத்தவர்கள். 
  • முகத்தில் அமைதியும் பிரியமும்,  கனிவும் நிரம்பிய தோற்றம் கொண்டவர்கள்.  சமயோசித புத்திக்  கூர்மை உள்ளவர்கள். ஆத்மார்த்தமாக பழகக் கூடியவர்கள். அன்புக்கு மட்டுமே அடிபணிய கூடியவர்கள். தனக்கு பிரியமானவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் தன மதிநுட்பத்தால்  அவர்களுக்கு உதவி செய்து கைதூக்கி விடக்கூடியவர்கள். மற்றவருக்கு வழிகாட்டக்\கூடிய தொழிலில் தனுசு இலக்கினக்காரர்களை அதிகம் பார்க்கலாம்.   
  • தெய்வ பக்தி கொண்டவர்கள். மனமறிந்து தவறு செய்ய அஞ்சுபவர்கள்.  மற்றவர் தன்னை பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சுபவர்கள். 
  • குருவை அதிபதியாக கொண்ட இவர்களுக்கு வசதி வாய்ப்பிற்கு குறைவு இருக்காது என்றாலும், சொகுசு வாழ்க்கைக்கு காரகனான சுக்கிரன் இந்த லக்கினத்திற்கு பகை என்பதால் அந்த கிரகம் 3, 11 போன்ற மறைவு ஸ்தானங்களில் நட்பு நிலையில் இருந்தால் யோகம் தரக்கூடியது .
  •  பூர்வீக சொத்து ஏதும் இல்லையென்றாலும், தன்னுடைய உழைப்பினாலேயே வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள கூடியவர்கள்.  அதற்காக முனைபவர்கள். சுதந்திரம், சாகசம் மற்றும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டே இருப்பார்கள். தனுசுவின் சின்னமே சொல்லுமே அதை பற்றி!!
  • இயற்கையாகவே உற்சாகம், ஆர்வம், நேர்மறை சிந்தனை மற்றும் ஆற்றல் மிக்கவர்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத, மகிழ்ச்சிக்கான தொடர் தேடலில் இருப்பவர்கள். அமைதியான, நம்பிக்கையான மனநிலையில் இருப்பது இவர்களின் குணம். நகைச்சுவையான   இயல்புடன் இருப்பார்கள். தங்களை பற்றி ஒரு இமேஜ் வைத்திருப்பதால், மிகவும் நெருங்கியவர்களிடமே தங்களின் மனம் திறந்து பேசுவார்கள். உள்ளுணர்வு திறன் கொண்டவர்கள்.  
இந்த இலக்கினத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கை, பார்வை மற்றும் வர்கோத்தமம் அடைந்த கிரகங்களின் தன்மையை கொண்டு இவர்களின் குணத்தில் மாற்றம் ஏற்படலாம்.  

  • எந்த சுக்கிரன் தசை நடந்தால் யோகம் என்பார்களோ, அந்த சுக்கிரன் இந்த இலக்கினக்காரர்களுக்கு அவயோகர்.  அதே போல புத்திக்காரகனான புதனும்.  சனி  தேய்பிறை சந்திரன், ஆகிய பாபர்களும் இவர்களுக்கு  அவயோகர்கள் தான் என்றாலும் எல்லோரையும் கெடுக்கும் சனி சற்று சாந்தமடைவது குருவோடு இருக்கும்போது  அல்லது  பார்க்கும்போது!! 
  • இந்த லக்கினத்தில் உள்ள எந்த கிரகத்திற்கும், பகை, நீச்சம் என்ற அமைப்பு இல்லை. 
அதுவே மிதுன லக்கினக்காரர்களுக்கும். 
  • இந்த லக்கினத்தில் உள்ள இராகுவிற்கு தான் "கோதண்ட இராகு" என்ற பெயர். ஏன்  தெரியுமா? "தனுசு " என்றால் வில்", " கோதண்டம்" . அதைக் கொண்டு இராமர் இராவணனை வதம் செய்ய போர் புரிந்தபோது அந்த தனுசில் இருந்த இராகு தான் இராமர் வெற்றி பெற்ற உதவினார் என்பதால் அந்த பெயர் வந்தது.
பொதுவாக ராகு எந்த வீட்டில் நிற்கிறாரோ அந்த வீட்டின் பலனை வழங்குவார் இல்லையா?? லக்னம் எதுவானாலும் தனுசுவில் உள்ள ராகுவால் கெடுபலன் அதிகமில்லை, நற்பலனே அதிகம் தருவார், அதுவும் குரு நல்ல நிலையில் இருந்துவிட்டால் யோகப்பலனைக்கூட வாரி தந்துவிடும், அதுவும் கோதண்ட ராகு இழந்ததையெல்லாம் திரும்ப பெற வைத்து விடும்!!

 இதற்கு நேர் எதிர்..சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்தில் உள்ள இராகு. சுக்கிரனின் ஆதிபத்தியத்தை அப்படியே எடுத்து தனுசு லக்கினக்காரர்களுக்கு வைத்து செய்து விடுவார்!!!😀😀😀😀

  •  ஆனால் ஒன்று ..ஒரு கெட்டவன் நல்லது செய்யும் ஒரேயொரு - சந்தர்ப்பம் கிடைத்து செய்தால் அவன் நல்லவனாக மாறிவிடுவானா என்று சொல்லமுடியாது.  ஆனால், ஒரு நல்லவன் தவறு செய்யும் ஒரேயொரு சூழல் அமைந்து, அவனும் அதை செய்துவிட்டால், பிறகு திருத்தவே முடியாத குற்றம் செய்யக்கூடியவனாகிறான். 

"ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல "!!.    வழிதவறி போன நிறைய நேர்மையான அரசு அதிகாரிகளை இது போல பார்த்திருக்கிறேன். 

என்ன..தாங்கள் செய்யும் தவறுக்கு நியாயம் கற்பிக்கவும், தப்பை  திருத்தமாக செய்யவும் பழகிப் போவார்கள்!!  அவர்கள் ஜாதகத்தை பார்த்தால் தெரியும் பாபத்துவமான சனி இருப்பதை!!

  • உபய  இராசிக்காரர்களாகிய இவர்களுக்கு மாரகாதிபதியாக 7 ம் பாவ அதிபதியும்  11 பாவ அதிபதியும்  வருவார்கள். அதுவும் இதே 7ம பாவ அதிபதிதான் பாதகாதிபதியும் கூட.   ஏழாம் பாவம் என்பது இவருடைய வாழ்க்கை துனையை, நண்பர்களை குறிப்பது. அதனால் தன்னுடைய வாழ்க்கை துணையால் துன்பமும் தொல்லையும் அனுபவிப்பவர்கள்.  அதுவும் இவர்களின் துணைக்கும் ஆண் ராசியாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்!! இவர்களை அத்காரம் செய்ய அவர்கள் முயல்வதும், அதற்கு அடிபணிய மறுக்கும் இவர்களுக்கும் ஒரு பனிப்போர் நடுவில் இருந்துக் கொண்டே இருக்கும். 
ஆனால் தனுசு இலக்கின ஆண்கள் . பெண்களை மதிப்பவர்களாகவும் , பொதுவாகவே யார் இவர்களுக்கு தீங்கு செய்தாலும், ஒதுங்கிப்  போபவர்கள் என்பதால், இவர்கள் இல் வாழ்க்கையில் பெரிதாக பிரச்சினை ஏதும் இருக்காது. வெகு அரிதாகத்  தான் இவர்கள் மணவிலக்கு பெறுபவர்களாக இருப்பார்கள். இரண்டு தனுசு ராசியினர் அல்லது ததுசு-சிம்ம ராசியினர்,  அற்புதமான  காதல் ஜோடிகள். இருப்பினும், இந்த இரட்டையர்கள் ஒருவர் மற்றொருவர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் உரசல்கள் அதிகம் ஏற்படும்!!

  • ஊருக்கே குளுமை தரும் நிலவு இவர்களுக்கு எட்டாம் பாவ அதிபதியாக வருகிறார்.  அதுவும் சந்திரன் இவருக்கு நண்பர்!!  இருந்தாலும் கடமையை செய்யாமல் விட்டுவிடுவாரா??  அவரிடம் என்ன உள்ளதோ அதை தப்பாமல் தனுசு இலக்கினக்காரகளுக்கு செய்வார். ஆனாலும் கடவுள் எவ்வளவு கருணை உள்ளவர் பாருங்கள்..குரு உச்சம் அடைவது  சந்திரன் ஆட்சி செய்யும் கடகத்தில் தான்!! 
இன்றும்  நீதிடா, நேர்மை டா, நியாயம்டா என்று பேசும் தனுசு லக்கினக்காரர்கள் என்றும் என் மனம் கவர்நதவர்கள்!




 





ஞாயிறு, 25 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி] 02............ விதி என்றால் என்ன? நடப்பது எல்லாம் நம் விதிப்படித்தான் நடக்கும் என்றால் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதுதானே நடக்கும். நம்மால் நடக்க போவதை தடுக்க அல்லது மாற்ற முடியுமா?

 விதி என்றால் என்ன? நடப்பது எல்லாம் நம் விதிப்படித்தான் நடக்கும் என்றால் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதுதானே நடக்கும். நம்மால் நடக்க போவதை தடுக்க அல்லது மாற்ற முடியுமா?

எனக்கு ஒரு விபத்து நடக்க இருந்ததை தவிர்க்க நினைத்தும் நடந்ததை நான் குறிப்பிட்டு எழுதியிருதபோது, ஒருவர் கேட்டார். “அது தான் ஏற்கெனவே விதித்திருந்தது என்றீர்களே... பின்னர் ஏன் அதை மாற்ற முயல  வேண்டும்?” என்று.

 

இதே போன்ற ஒரு கேள்வியை இஸ்லாமியர்களின்  மதிப்பு வாய்ந்தவரும், முஹம்மது நபி பெருமானாரின் மருமகனாரும் ஆகிய அலி ரசூல்  அவர்களிடம் கேட்டபோது, அவர் கேட்டவரை நோக்கி அவருடைய கால் ஒன்றை தூக்க சொன்னார்.  அவரும் தன வலது காலை தூக்கினார். அந்த காலை   மடித்துகொண்டே, இப்போது அந்த இன்னொரு காலால் ஊன்றி நில்லுங்கள்"   என்றார்.  கேள்வி கேட்டவரால் சிறிது நேரத்திற்கு மேல் அவ்வாறு நிற்க முடியவில்லை.


அவர் சொன்னார், “இதுவே நான் இடத்து காலை தூக்கி மடித்துக்கொண்டு நிற்பதானால் இன்னும் சிறிது நேரம் கூட நின்றிருப்பேன்” என்றார்.


“அப்படியானால், நான் முதலில் சொன்னபோதே இடது காலை தூககியிருப்பது தானே?’ என்றார் அலி ரசூலுல்லாஹ் அவர்கள்.

 

" அது சரி. நான் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்றார் அவர்.


“நான் முதலில் ஒரு காலை தூக்குங்கள் என்று  சொன்னபோது உங்களுக்கு இரண்டு வித தேர்வுகள் இருந்தன.. வலது காலையோ அல்லது இடது காலையோ நீங்கள் தூக்கலாம்.  ஆனால் எப்போது நீங்கள் அதில் ஒன்றை தேர்வு செய்து விட்டீர்களோ, பின்னர் அதை தொடர்ந்து விதிக்கபட்டபடி நடக்கிறது. வாழ்க்கையிலும் அப்படித்தான். பிரபஞ்சம் தன்னிடம் உள்ள எல்லாவற்றிலும் தேர்வு செய்யும்  பொறுப்பை உங்களிடம் விட்டுவிடுகிறது. அங்கு தான் உங்கள் "மதி " இயங்குகிறந்து. பின்னர் நடப்பவை அனைத்தும்  உங்கள் தேர்வில் அடிப்படையில் தான். எனவே நடப்பவை விதிப்படியே ஆனாலும், ஆரம்பம் உங்கள் மதிப்படி  தான்” என்றார்.


நம் பிறப்பின் பொது கணிக்கப்பட்ட கிரகங்களின் அமைப்பு கொண்ட ஜாதகத்தையும் கோச்சாரத்தில் நம் செயல்களையும் கொண்டே நம் வாழ்வு தீர்மாணிக்கப்படுகிறது. 

ஜோதிடம் அல்லது "ஜோதிஷம்" என்ற சொல்லுக்கு ஜோதியைஅதாவது "ஒளியைப் பற்றிச் சொல்லுவது" என்று பொருள். இன்னமும் நிறைய பேர் ஜோதிடம் என்பது ஒரு கட்டுககதை, மூட நம்பிக்கை என்ற எண்ணத்திலேயே உள்ளனர்.  உண்மையில் வேத காலத்திய நம் மகா ரிஷிகள் எழுதிய இந்த தெய்வீக சாஸ்திரத்தில் அறிவிற்கு எதிரான மூட நம்பிக்கைகள் கிடையவே  கிடையாது.  அதனால், ஜோதிடத்தை “அறிவின் ஒளியை பற்றி .” என்றும் சொல்லலாம்.

இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிப்பதை என்னால் உணர முடிகிறது.  ஆனால் எப்போது இதை படிக்க ஆரம்பித்தீர்களோ அது கூட விதியின் பயனாய் ஆனது என்றே நான் சொல்ல முடியும். 

 

இந்த பிரபஞ்சத்தில் நடப்பது அனைத்தும் அட்சரம் பிசகாமல் ஏற்கெனவே விதித்த படியே தான் நடக்கிறது என்று சொல்வது தான் ஜோதிடம்.

 

உலகமே பொய் என்றும் மாயை என்பார்கள் சிலர். அதன் தாத்பர்யம் என்ன என்று ஒரு மகானை கேட்டார்கள்.  அதற்கு அவர் “உலகம் உண்மை என்பது தான் அதன் அர்த்தம்” என்றார்.  கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை.  அதற்கு ஒரு சமஸ்கிரித ஸ்லோகத்தை எடுத்து சொல்லி, “நம் அறிவீனத்தின் காரணமாக உலகமாக பார்த்தல் இது பொய்.  அதையே அறிவு மூலம் பிரம்மமாக பார்த்தால் அது சத்தியம்” என்றார் . 

 


அதையே தான் நம் முன்னோர்களும் சொல்கின்றனர். நம் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், இந்த பிறவி கர்மாக்களும் தான் நம் வாழ்வின் தொடர் ஓட்டத்தை தீர்மானிககின்றன. அந்த பயணத்தின் மீது ஒரு டார்ச் லைட் போல நாம் கடந்து வந்த பாதையையும் போகப போகும் பாதையையும் காட்டுவது ஜோதிடம் தான்.

 

விதியை மதியால் வெல்லலாம்  என்பர் ஆனால் என் அனுபவத்தில் நான் உணர்ந்த வரையில், அந்த காலக்கட்டத்தில், நம் மதியை அதாவது மனம், மற்றும் புத்தியை  கோச்சாரததில்,  அதாவது நடப்பில் அந்தந்த இராசிக் கட்டததினுள் நுழையும் கிரகங்களின் ஒளிவீச்சை பெறும் இந்த பூமி அதற்கேற்றார்போல வினை புரிவது  போல, அதன் துனுக்களில் ஒன்றான நாமும்  மாறுகிறோம்.  இதுவே உண்மை ...

 

இதை நிரூபிக்க பூமியின் அருகில் உள்ள சந்திரனின் ஒளியை  முழு உச்சமாக பவுர்னமி நாளில் பெறுகின்றபோதும்,  முற்றிலும் அதன் ஒளி பெற வழியின்றி இருக்கும் அமாவாசையின் போது, மனிதர்களின் மனதை எப்படி பாதிககின்றது என்பதை அனுபவபூர்வமாக நாம் உணர்ந்த உண்மை.

 

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தின் தந்தை எனப்படும் சூரியனை சுற்றி தான் அனைத்து கோள்களும் வலம் வருகின்றன.  அப்போது அவை பெறும் ஒளியை பூமியின்ஏனைய கிரகங்களின்  மீது பிரதிபலித்தும், அவற்றிடம் இருந்து அதன் ஒளியை பெற்றும் ஏற்பாடு இந்த ஒளி கலவையை மையமாகக்கொண்டே உயிர்கள் தோன்றின என்று அறிவியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.  

 

இதைத்தான் ஜோதிடமும் சொல்கிறது....மனிதன் உட்பட உலகில்
உள்ளஅனைத்து உயிர்களையும், அதன் செயல், சிந்தனையை
சூரியனும், அதன் ஒளியை பெறும் ஏனைய  கிரகங்கள் ,
நட்சத்திரங்களும் எந்த அளவிற்கு கட்டுபபடுத்துகின்றன,
இயக்குகின்றன என்பதே.

 
( இந்த ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

புகைப்படத்தில் தெரிவது ரிஷப  விண்மீன்
தொகுப்பில் மிக இளம் நட்சத்திரம்).

 

அவைகளுக்கு அத்தனை சக்தியா....என்று வினவுபவர்களுக்கு அறிவியலே “இந்த பிரபஞ்சத்தை ஆளுவது ஒரு சக்தி தான் “ என்று ஒத்துக்கொள்ளும்போது அதையே நம் ஞானிகள் பிரம்மம் என்றும் கடவுள் என்றும் சொல்லி, நமக்கு அதை எளிமையாக புரிய வைக்கும் பொருட்டு,  அதற்கு மனித உருவமும் அவற்றிற்கிடையே மனிதர்போன்ற உறவுமுறையையும் கொடுத்தனர்.

 

இந்த பிரபஞ்சத்தில் இருந்து தனக்கு  இன்னமும்  தீர்க்க முடியாத கணித சூத்திரங்கள் கிடைக்க பெற்றது  என்று நம் கணித மேதை  இராமானுஜர் சொல்லவில்லையா? 


எதை குறித்து அல்லும் பகலும் சிந்திகிறோமோ அதுவாகமே மாரிபோகிறோம் என்கிறார்களே.  அதுவும் இதை ஒட்டியே.   நம் மனம் மூலம் வேண்டுவதையே நமக்கு கொடுக்கிறது இந்த பிரபன்சம், அதனாலேயே எண்ணுவது  அதையே 


"எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். "

இதற்கு நம் தமிழறிஞர் சாலமன் பைபையா எழுதியா தமிழ் உரையில் “ ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

 

அந்த எண்ணத்தை உறுதிப்படுத்த கூடிய மன வலிமையை தரும் மாதரூகாருகன் சந்திரனையும், அது ஒளியை பெறும் இந்த பிரபஞ்சத்தின் ஆதி நாயகனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடல் உறுதி அளிக்க கூடிய சூரியனையும் இந்த பிரபஞ்சத்தின் தாய் தந்தை என்று வரையறுத்தனர் நம் ரிஷிகள். தாய் தந்தைக்கு தானே, அவர்களின் பிள்ளைகளின்  உடல் மற்றும் உள்ள வலிமையில் அக்கறை இருக்கும்? 

 

பகலில் நமக்கு ஒளியை தரும் சூரியனையும், அதன் ஒளியை பெற்று, இருளில் இருந்து நமை காக்கும் சந்திரனையும் ஜோதிடத்தில் முதன்மை கிரகங்கள் என்று வைத்ததும் எவ்வளவு சரியானது. 


 அது மட்டுமா, சூரியன் உச்சத்த்தில் இருக்கும் சித்திரை மாதத்தை தான் மேஷம் என்னும் முதன்மை கட்டம் ஆக்கப்பட்டது. அதே போலவே மேகமூட்டத்துடன் இருக்கும் கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியை தான் விமரிசையாக கொண்டாடும் வழக்கும் தொன்று தொட்டு நமக்கு உள்ளது.  அன்று தான் சந்திரன் முழு ஒளி பொருந்தியதாக இருப்பதை கணக்கிட்டே இரண்டாவது இராசி கட்டமாக ரிஷபம் நம் மகா ரிஷிகளால் வைக்கப்பட்டுள்ளது.


 இப்படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இராசிக்கட்டதில் நுழையும்போது, அது சூரியனிடம் இருந்து பெரும் ஒழி கேற்ப, வலு இல்ழக்கவோ, உச்சம் அடையவோ செய்கிறது. அதே போல தான் நுழையும் இராசி கட்டத்திற்கும் அதற்கும் உள்ள உறவுமுறை அதாவது நட்பு, பகை, சமம் நீச்சம்  போன்றவை கொண்டும், அது மற்ற கிரகங்களுடன் அங்கு இணையும் போதோ மற்ற இராசிகளையும் அதிலுல் கிரகங்களை பார்க்கும் பார்வையை கொண்டு தான் அனைத்தும் தீர்மானிக்கபடுகின்றன என்கிறது வேத ஜோதிடம்.


விளங்க முடியா ரகசியத்தை தன்னிடம் வைத்திருக்கும் பிரபஞ்சத்தை பற்றியும் அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாகத்தையும் உணர வைப்பது ஜோதிடமே..


போகும் பாதையில், பள்ளங்கள் வர இருக்கிறது என்று ஜோதிடம் உணர்த்தும்போது, நம் மதியால் செப்பனிட்டு கொள்ள லாம் தானே?


அதை கணிக்கும்போதும் ஜோதிடர்கள் தவறு செய்யலாம். ஆனால் ஜோதிடம் என்றுமே பொய்தததில்லை.



 



புதன், 21 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி ௦1 ....கடவுள் இருக்கிறாரா?

விண்வெளி எப்படி ஒரு அற்புதமான இடமாக இருக்கலாம் என்று மீண்டும் ஆதாரபூர்வமாக நிரூபித்தது  இன்றைய தலைப்பு செய்தி!!

(பட உதவி:  ப்ளூ ஆர்ஜினின் முதல் குழு விண்வெளியில் உள்ள  ஈர்ப்பு விசை இல்லாத தருனைத்தை அனுபவிக்கும் தருணம் )



இதோ முதல் படத்தில் பார்ப்பது பூமியிலிருந்து சுமார் 297 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, இது தெற்கு வானத்தில் காணப்படுகிறது.

வலது புறத்தில் உள்ள படம் 490 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய சுழல் விண்மீன் ARP-MADORE0002-503 ஐக் காட்டுகிறது. விண்மீனின் நீண்ட சுழல் ஆயுதங்கள்... பால்வீதியை விட மூன்று மடங்கு, 163,000 லைட்இயர்களின் ஆரம் கொண்டது. மறுபுறம், ARP-MADORE0002-503 இல் மூன்று சுழல் ஆயுதங்கள் மட்டுமே உள்ளன,

அதே நேரத்தில் பெரும்பாலான சுழல் விண்மீன் திரள்கள் இன்னும் பல ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன.

இப்படி இந்த பிரபஞ்சம் சொல்ல முடியாத ஆச்சரியமான அம்சங்களை தன்னுள்ளே புதைத்து வைத்துள்ளது.

இப்போது இந்த பூமிப்பந்தின் ஒட்டிய வானவெளியை 16 நிமிடங்களில் சென்று திரும்பிவிடலாம் என்ற ஆச்சரியமான தருணத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருகிறோம்.

இந்த நேரத்தில் தான் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீநின் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாடு, நினைத்துப் பார்க்கக் கூடியது. 


அதன்படி, நினைத்து பார்க்கவே முடியாத வேகத்தில் ஒரு மனிதன் பயணம் செய்ய முடியுமானால் அவனது வேகத்தைப் பொருத்து, அவன் செல்லும் வாகனத்தினுள் நேரம் சுருங்கும் என்றும,   நீளம், அகலம், உயரம் என்ற மூன்று நிலைகளை அடுத்து “காலம்” என்பதையும் சேர்த்து  நான்கு பரிமாணங்கள் உள்ளதாக  சொன்னார்

அதிக வேகத்தில், ஏறக்குறைய ஒளி செல்லும் வேகமான ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்திற்கு அருகில், ஒரு மனிதனால் பயணம் செல்ல முடியுமானால், அவனுக்கு ஒரு மணிநேரம் என்பது ஒரு நிமிடமாகச் சுருங்கும் என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்துக் காட்டினார்.

இதோ இன்று அதைக்  கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 

இதைத்தானே அன்றே நம் வேத கால முனிவர்கள், நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்,  நம்முடைய ஆறு மாதம் அவர்களுக்கு ஒரு பகல், இன்னொரு ஆறு மாதம் அவர்களுக்கு ஒரு இரவு என்றும் சொன்னார்கள்!!

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவக் கோட்பாட்டின் படி, அதிக எடையுள்ள ஒரு பொருளின் அருகில் வரும் ஒளி, அந்தப் பொருளின் ஈர்ப்பு விசையால் நேராகச் செல்லாமல் வளைந்து செல்லும் என்றார். 

அதன்படியே இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி நாயகனான சூரியனை சுற்றி தான் அனைத்து கோள்களும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகின்றன என்பதும  நிரூபிக்கப்பட்ட உண்மை.


ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வேதத்தை அடிப்படையாக கொண்டு வானவியல் சாஸ்திரம் வகுத்த முனிவர்கள், சூரியன், பூமி, மற்றும் கோள்களின் அமைப்பையும் முன்னரே கணித்து சொல்லியுள்ளனர்!!.

 கடவுளைப் பற்றிய புதிர்களை அவிழ்க்கும் அவரது இன்னொரு பிரபலமான கோட்பாடு தான்  “தியரி ஆப் எவ்ரிதிங்”  இந்த விதி தான்  “பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சத்திற்கும், ஒரு மிகச் சிறிய அணுவிற்கும் அடிப்படையாக இருப்பவைகள் ஒரே கணிதச் சமன்பாட்டில் அடங்கும்” 

 இதைத்தான் "அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது" என்றனர் ரிஷிகள்!!. 

இப்படிப்பட்ட பல கோடி பால்வெளிகளை தன்னகத்தே கொண்டு ஒரு சீராக இயங்கி கொண்டு இருக்கும் ஒழுங்கு  இந்த பிரபஞ்சத்திற்கு எப்படி ஏற்பட்டது?

தெரியவில்லை...

இந்த பிரபஞ்சத்தை ஏற்படுத்தியது யார்?  அல்லது  ஏற்படுத்தியது எது?

தெரியவில்லை...

நம் ரிஷிகள் அதைத் தான் பிரம்மம் என்றும்  அதன் சக்தி தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே இயக்குகிறது என்றும், அது இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிருள் உள்ளது என்று !!

சமஸ்கிரிதத்தில் ஒரு வரி உள்ளது :தெய்வம் மனுஷ்ய ரூபனா" இதற்கு "தெய்வம் மனித உருவத்தில் உள்ளது" என்று பொருள்.  

நமது சம காலத்து விஞ்ஞானியான ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் உட்பட இந்த பிரபஞ்சம் ஏற்பட்டது ஒரு பெருவெடிப்பினால் தான் என்று ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ள போதும், இன்னமும் , அந்த பெருவெடிப்பு துவங்கிய அந்த முதல் மூன்று நிமிடங்களில் நடந்தது என்ன என்று இன்னமும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள்!!. 


ஒரு வேளை நம்முடைய காலத்திலேயே  அந்த சில மணித்துளிகளை குறித்து அவர்கள் கண்டு பிடித்துவிட்டார்களானால், நாம் கடவுளின் அரூகினில் சென்று விட்டோம் எனலாம்.!! 

விஞ்ஞானிகளிலேயே அற்புதமான மூளைத்திறன் கொண்டவர   ஐன்ஸ்டீன்.  அவரை ஒருமுறை  "கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? என்ற  கேள்வியை கேட்டபோது "கடவுள் தேவைப்படுகிறார்" என்று தான் சொல்லியிருக்கிறார். 

கவனியுங்கள்..அவர் மறுக்கவில்லை. ..

அண்டத்திற்கும் இந்த பிண்டத்திற்கும் உள்ள தொடர்பும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து வேத காலத்து ரிஷிகள் கணித்த இந்த 'ஜோதிடம்"  என்பதில் உள்ள "ஜோதி"  என்ற வார்த்தையே சொல்லுமே "ஒளி பொருந்திய" 

 இந்த அறிவியல் பூர்வமான ஜோதிடத்தை  மற்ற மதங்கள் ஜோதிடம் குறித்து அங்கீகரிக்கவில்லை  என்பர்.  ஆனால் இதை சொல்லவதற்காக யாரும் கோபப்பட வேண்டாம். இஸ்லாம் மதத்திலும் சரி திருத்துவத்திலும் சரி,  கெட்ட ஆவிகள், பரிசுத்த ஆவிகள், சைத்தான்கள் இந்த பிரபஞ்சத்தில் உலாவுவதை ஏற்றுக்  கொள்கின்றனன்ர்.  இவற்றிற்கு  மேற்பட்ட சக்தியாக  ஏசுவும்  முஹம்மது நபியும் கடவுள் அனுப்பிவி\ட்ட இறைதூதர்கள் என்பர் இஸ்லாமியர்.  ஆனால் ஏசு இறை தூதர் அல்ல, அவரே கடவுள் என்பர் கிறித்துவர்கள். அந்த கெட்ட ஆத்மாக்களை விரட்டுவதற்காக ஜெபக்கூட்டங்களும்,  தர்காக்களில் மவுலிசாபுகள்  ஓதுவதும் நடக்கின்றன.

இந்த இறந்து போன ஆத்மாக்கள்  தான் ஆவிகளாக, ஒரு உலகத்தில் உள்ளனர் என்றும் இந்த பூமிக்கு அவர்கள் சூட்சும வடிவில் வருகின்றனர், நம மால் அவர்களை பார்க்க முடியவில்லை என்றாலும், அவர்களால் நம்மை பார்க்க முடியும்,  சில சமயத்தில் அவர்கள் நம் கண்ணில் தெரிவதே, (ஐன்ஸ்டீன் சொன்ன இந்த நான்கு வகையான பரிமாணத்தில் எப்போதேனும்)  நாம் குறிக்கிடும் போது  என்பதும் எல்லோராலும்  ஏற்றுக் கொள்ளப்ப்பட்ட உண்மை தானே !!  

இதைத்தானே நம் ரிஷிகளும், தேவர்களுக்கு, அசுரர்களுக்கு, இறைவனுக்கு என்று ஒவ்வொரு அடுக்கு உலகம் உள்ளது என்றனர்.!!

இறப்பிற்கு பிறகு நாம் எங்கு செல்கிறோம் என்பது குறித்த தேடலில் இருக்கும் நாம்  செய்யும் கர்மவினைக்கேற்ப, சொர்க்கம், நரகம் சிவலோகப்பதவி, வைகுண்டம் செல்வதாக சொல்வதும், அதன் தலைவர்களாக இருப்பவர்களை நாம் கடவுளாக வழிபடுவதும் அதன்பொருட்டே.  

அத்தோடு, இந்த பிரபஞ்சத்தை  கட்டி ஆளும் பஞ்சபூதங்களை தெய்வங்களாக நாம் வழிபடுவதும  நம் முன்னோர் காட்டிய இதே வழியினாலேயே. 

இதோ இந்த கடவுள் குறித்த தேடலை எனக்குள் கொண்டு வந்ததும் , மெய்யுணர்வையும்  விஞ்ஞானத்தையும் என்னை  பொருத்தி பார்க்க வைத்ததும், உங்களை படிக்க வைப்பதும் ஞானக்காரகனான கேதுவின் சுபத்துவதுதாலேயே!!!

குரு வாழ்க!!