நாள்தோறும் எத்தனையோ மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்துக்கொண்டே தான் உள்ளார்கள். ஆனாலும் அவர்களால அவிழ்க்க முடியாத முடிச்சுகள், புரியாத புதிர்கள் எத்தனையோ உண்டு.
ஏன் இந்த கொரானா நோய் தொற்றுக கிருமிகள் தான் ஒவ்வொரு விதமான அலைகளாக படையெடுத்து வந்துக் கொண்டிருக்கவில்லையா? இன்றுI வரை அதந பிண்ணனி அறியமுடியாமல் தான் திணறி வருகிறோம்..
இதோ இன்று வானவெளியின் விளிம்பிற்கு போய்விட்டு திரும்பி வருகிறோம். இருந்தாலும், அதை முழுதாக அறிந்து விட்டோமா என்றால் எதிர்மறையாக தான் சொல்லவேண்டும். நாளுக்கு நாள் விரிந்து கொண்டே போகும் பிரபஞ்சம் எங்கு போய் முடியும்?
தெரியாது... இது எங்கிருந்து எப்படி ஆரம்பித்தது ? அதுவும் தெரியாது.
இருக்கிறது ஆனால் இல்லை.. என்று 'வெங்காயத்தை' சொல்வார்களே அது போல தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் இருப்பது தானே இந்த பிரபஞ்சம். இந்த பிரம்பஞ்சம என்னும் அண்டவெளி ஒன்றுமில்லாதது என்றும் கொள்ளலாம். அனைத்தும் உள்ளது என்றும் கொள்ளலாம்.
அதன் கணக்கை அறிந்துக கொள்ளும் விதமாக தான் நாம் பார்க்கும் இந்த வானவெளியை 360 டிகிரியாக கொண்ட ஒரு நீள் வட்டப் பாதையாகவும், சூரிய சந்திரர்களை மையமாகக் கொண்ட,
30 டிகிரி கொண்ட பன்னிரண்டு ராசிக்கட்டங்களாக பிரித்து, அதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட காலவெளியில் உள்ள ஆதிக்கத்தை உணர்ந்து, அந்த காலத்திற்குண்டான இரண்டு ராசிக்கட்டங்களை அதற்கு ஒதுக்கி, அவர்களின் ஆளுகைக்கு கீழே அந்த ராசிக கட்டங்களும் 27 நட்சத்திர கூட்டங்களும் உள்ளதை உறுதி செய்து, காலத்தை ஐந்து அங்கங்களாக தினம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என பிரித்து பஞ்சாங்கம் தயாரித்து, இந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அந்த கால வெளியில் செலுத்தும் ஆதிக்கத்தை கணித்து, அவற்றின் நல்ல தீய பலன்களை குறித்து வைத்து, அதனால் மனிதனுக்கு ஏற்படும் தீய பலன்களை முன்கூட்டியே அறிந்து அதை கணித்து சொன்ன கலை அல்லவா இந்த ஜோதிடக் கலை ?
இத்தனை ஒழுங்கோடு இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருப்பதன் காரணமே ஒரு மகா சக்தி என்றும் அந்த பிரம்மமே இறைவன் என்றும், உருவமற்ற அதை பாமரனும் புரிந்துக கொள்ளும் பொருட்டு அதற்கு ஒரு உருவமும் இட்டனர். அன்றைய வேத கால ரிஷிகள் கணித்துக கொடுத்த இந்த பஞ்சாகம், மற்றும் ஜோதிட நுணுக்கங்ளின் அஸ்திவாரத்தில் தானே இன்றைய நவீன அறிவியலே இருக்கிறது...
வேதஜோதிடம் என்பது ஒரு மகா சூட்சுமமான அமைப்பு. ஒரு மனிதனின் எதிர்காலத்தை நாம் அத்தனை சுலபமாக தெரிந்து கொள்ள முடியாது. அப்படி முடியும் என்றால், பிண்டத்தில் உள்ளது தானே அண்டத்தில் உள்ளது என்று பிரபஞ்சம் எப்போது, எப்படித் தோன்றியது என்ற உண்மையை என்றைக்கோ கண்டு பிடித்திருக்க முடியும்.
நம் மனித மனிதை மூளையின் கணிப்பிற்கும் அப்பாற்பட்டும் கணிக்க முடியாதவற்றிற்கு விஞ்ஞானிகளே ஒத்துக கொண்டது தான்...
நமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று, இந்த பிரபஞ்சம் முழுதும் வியாபித்திருக்கிறது . என்றும நம்மை அது தான் ஆட்கொள்ளுகிறது என்றும்....
நம்மை மிஞ்சிய சக்தி உள்ளது என்பதை தான் அத்தனை மதங்களும் சொல்கின்றன.
ஒரு மதம் அனைத்தும் அந்த கடவுளே...அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்கிறது... ,இன்னொரு மதமோ அந்த சக்தி சூனியமானது என்கிறது...அதாவது ஒன்றும் இல்லாதது என்கிறது...அதாவது அருவமும் உருவமும் இல்லாதது என்கிறது..
உண்மை தானே ...
நேற்று இருந்த நான் இன்று இல்லை .....நேற்றைய எண்ணஅலைகள் செயல்கள் இன்று இருக்காது... எனக்குள் ஒரு மாற்றம் நிச்சயம்இருக்கும். அந்த செயல்களும் எத்தனை உண்மையோ அத்தனை உண்மையானது தானே இந்த பிரபஞ்சமும்?
தன்னைத் தானே சுற்றி கொண்டும், இந்த வானவெளியின் நாயகனான சூரியனை மையமாக கொண்டு சுற்றி வரும் கோள்கள், நேற்று இருந்த இடத்திலா இன்று உள்ளன?
"எல்லாம் மாறிக கொண்டே வரும்போது,
எது தான் நிரந்தரம்....? எதுவும் இல்லை... எல்லாம் மாறக்கூடியது..யாரும் நிலையற்றவர்கள் இல்லை. எல்லாம் அழியக்கூடியது. "
|நமக்குள் இருக்கும் உயிர் என்னும் மூச்சு காற்று, நீர், மண், வெற்றிடம், உள்ளுக்குள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை போன்ற அமிலம்....எல்லாம் இந்த வானவெளியிலிருந்து வந்ததது. இந்த பஞ்ச பூதங்கள் உடலை விட்டு நீங்குவதை நாம் 'இறப்பு' என்கிறோம். ஆனால் அந்த ஆன்மாவிற்கு அழிவில்லை. அது இன்னொரு கூட்டிற்குள் போய் ஒடுங்குகிறது"
என்ற தத்துவத்தை உணர்த்தும் மதங்கள் சொல்வதைத் தான் அறிவியலும் சொல்கிறது...
"சக்தி உருவாக்கப்படுவதும் இல்லை. அழிக்கப்படுவதும் இல்லை . எங்கிருந்து வந்ததோ அங்கேயே செல்கிறது" என்கிறது அறிவியல்.
இந்த புள்ளியில் தான் அறிவியலும் ஆன்மிகமும் அதை மதம் என்று சொன்னாலும் சரி ஒன்று சேர்கிறது..
அறிவியல் மாமேதை சர் ஐசக் நியுடன் கூட வானவியல் சாஸ்திரத்தை அறிந்திருந்தார். அதோடு கூட மதங்களின் தொடர்பையும் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை, டாக்டர் ஹாலே மதத்தை அவமரியாதையாக பேச முனைந்தபோது, அவர் குறுக்கிட்டு தடுத்து, " நான் இதை பற்றி படித்திருக்கிறேன். நீங்கள் படிக்கவில்லை. அதனால் இப்படி பேசுகிறீர்கள்" என்றிருக்கிறார்.
லிங்க் இங்கே
ஜோதிடம் குறித்த அறிவு முன்னர் அதிகம் இருந்ததாலேயே அரசர்கள் 'நிமித்தகாரர்' என்று ஜோதிடக் கலையில் தேர்ந்த ஒருவரை தன அரசவையில் வைத்திருந்தனர்...அவர் நாட்டின் பாதுகாப்பு குறித்து, வரும் முன் உரைப்பதும், அதை தவிர்ப்பதும், குறித்த ஆலோசனையை அரசனுக்கு கொடுத்து , நாட்டின் நலன் பேணினார்.
சமீபத்தில் எனக்கு கண்ணில் சிறு கோளாறு ஏற்பட்டு, கண்ணெல்லாம் சிவந்து இருந்தபோது தான், கோச் செங்கட் சோழனை பற்றி நான் படித்த நினைவுக்கு வந்தது. அவனை பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். அவனுடைய கண்கள் என்றும் சிவந்தே இருக்குமாம.. அதனால் தான 'செங்கண் சோழன்' என்றே அவன் அழைக்கப்பட்டான்.
அவன் கண்கள் ஏன் அப்படியாயின என்று உங்களை போலவே எனக்கும் ஆவல் மேலிட, அவன் கதையை படித்தேன்..
அவன் தந்தையும் சோழ மன்னனுமான சுபதேவனுக்கு குழந்தை இல்லாத குறை நெடுங்காலம் இருந்தது.. அவனும் அவன் பட்டத்து ராணி கமலாவதி தில்லை நாயகனை வேண்டியிருக்க, அதனால் கருவுற்றாள்.
குழந்தை பெறும் தருவாய் , மன்னனிடம் சோதிடர்கள் "இன்னும் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறந்தால் இந்த குழந்தை மூன்றுலகும் ஆளும்" என்றார்கள். இந்த செய்தி ராணிக்கு சென்று சேர்ந்தது.. 'என் கால்களை கட்டி தலை கீழாக தொங்கவிடுங்கள்' என்று அவள் சொல்ல, அவள் வற்புறுத்தலை தாங்க முடியாமல் அப்படியே செய்தார்களாம். கிட்டத்தட்ட ஒரு நாழிகை கழித்தே குழந்தையை பெற்ரேடுத்தாளாம். பிரசவ வேதனையை பற்றி என் போன்ற பெண்களுக்கே அதன் வேதனையை பற்றி தெரியும்...அதை ஒரு நாட்டின் நல்ல எதிர்காலத்திற்காக செய்வதென்றால்? அதுவும் அதில் உள்ள ஆபத்துகளை பற்றி தெரிந்திருந்தும்? இப்படியும் வரலாற்றில் முகம் தெரியா வீராங்கனைகள் இருந்திருக்கிறார்கள்!!
அவ்வளவு காலதாமதாமாக பிறந்த குழந்தைக்கு கண்கள் சிவந்து விட்டுருந்தனவாம். குழந்தையை கையில் ஏந்திப் பார்த்துவிட்டு ‘என் கோச் செங்கணானனே’ என்றுவிட்டு அரசி உயிர் நீங்கினாள். பின்னாளில், தலை சிறந்த மன்னனாகவும், கிட்டத்தட்ட எழுவது சிவன் கோயில்களை கட்டி கோயில்களுக்கு உண்டான தல விருட்சகங்கள் என காஞ்சிக்கு மா, தில்லைக்கு தில்லை, குற்றாலத்திற்கு குறும்பலா என்று நிர்ணயித்து சிவத் தொண்டாற்றி அறுபத்தி நாயன்மார்களில் ஒருவரானவர் இவர்....
ஜோதிடம் பற்றி பேசும்போதே அது குறிப்பிட்ட இந்து மதத்தோடு மட்டும் தொடர்பு கொண்டது என்று நினைப்பவர் தான் அதிகம்..
ஆனால் ராகு கேது எனனும் சாயா கிரகங்கள் அந்நிய மதத்தினரை பற்றியும் அவரோடு கொள்ளும் தொடர்புகளையும் காட்டுகிறது...
இந்த ராகுவை தன தலையில் வைத்திருக்கும் அந்த பரமேஸ்வரனே, 'என்னாட்டவரும் போற்றும் இறைவா' போற்றி' என்று தான் பாடப்படுகிறார். என்பது, அவனின் அடியவர்களான அற்பத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனார் சாக்கிய மதத்தை சேர்ந்தவர். இலங்கைக் காரர். அவரையே தன அடியவராக இறைவன் ஏற்றுக் கொண்டாரே...
அதுமட்டுமா தான் தன அடியவருக்கு மட்டுமல்லாமல், மற்ற ஏனையோருக்கும் அடியேன் என்று சைவ வழியல்லாது மற்ற வழியை பின்பற்றுவோருக்கும் அடியேன் என்றான் அந்த பரம் பொருள்....
அவனுக்கு தெரியாதா இந்த பிரம்பஞ்சமே அவன் என்னும் போது அதன் ஓவ்வொரு உயிரினுள்ளும் உறைபவன் அவனே' என்று!
இதோ அந்த சர்வேஸ்வரன் அடி எடுத்து கொடுக்க சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய இந்த பாடல்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே".
தாங்கள் கூறிய கருத்துகளும் சிவாலயம் குறித்த தகவல்களும் சோழ மன்னன் வரலாற்று உண்மைகளும் மிகச் சிறப்பாக இருந்தது நன்றி.
பதிலளிநீக்கு