இந்தக் கேள்வியைப் பார்த்ததும் உண்மையில் என் மனம் மகிழ்சியிலும் நிம்மதியிலும் உள்ளது, நம் மக்கள் எதை எடுத்தாலும் ஏனோ தானோவென்று செய்வதில்லை. அதனுடைய பொருள் அறிய கேள்விகள் கேட்டு, அதன் பதிலால் திருப்தியுற்று, பின் அதனை பின்தொடர முயற்சிப்பது. இது நல்ல ஒரு சித்தாந்தமல்லவா. திருவிளையாடல் தருமியை போல எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் என்று இல்லாமல்…….(யாரது அங்கே சிரிக்கிறது?….)
முதலில் ஒரு நாட்டிற்கு தேசிய கீதம், தேசிய விலங்கு, தேசியக் கொடி எதற்கு ? இதெல்லாம் எதை காட்டுது? ஒரு நாட்டின் அடையாளமாக.
அப்படின்னா அந்த நாடு, சுதந்திரமானதாக இருக்க வேண்டும். அப்புறம் அந்த அடையாளங்கள், அந்த நாட்டின் தனித்துவத்தை, பாரமபரியத்தை, காட்டுவதாக இருக்க வேண்டும்.
இவை எல்லாம் தான் ஒரு நாட்டின் குறியீடுகள்…..ஒரு பள்ளிக்கு, சர்ச்சுக்கு என்று தனி பாடல்கள் உள்ளதை கேட்டதில்லையா …அதை போல …
மூலம் கோத்திரம் எல்லாமே நம்ம கூகிள் அண்ணன் தான்………..
நம் தேசியக் கீதத்தை பற்றி சில தகவல்கள்:
- அதை எழுதினது…. யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும். உங்க பேரை ஒரு தரம் சொன்னா ……அய்யோ அந்த பாட்டு ஞாபகம் வந்திருச்சு)): சரி இரபிந்த்ரநாத் தாகூர் தன்னோட பிறந்த மண்ணான பங்களாதேசத்திற்கும் ஒரு தேசிய கீதம் எழுதியது தெரியுமா? என்ன ஒரு மண் பற்று அவருக்கு ):
- அதிகாரப் பூர்வமாக இது 1950 ல் ஜனவரி 24ல் தான் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டாலும், அது ஒன்னும் அப்ப புதுசு இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியோட மாநாட்டிலே 1911 டிசம்பர் 16 லே, பாடப்பட்டு, அப்புறம், 1942 லே ஹம்பெர்கில் செப்டம்பர் மாதம் 11ல், முதல் தடவையாக…………ஜன கன மன என்று பாடப்பட்டது.
- இந்தியாவிற்கு பல வேறுபாடுகள் உள்ள ஒட்டு மொத்த நாட்டிற்கும் அடையாளம் இந்த தேசியக்கொடி என்றால் பிரச்சினை இல்லாமல் போகுமா? நாலாவதோ ஐந்தாவது ஜார்ஜ் வந்தபோது, அவரை புகழ்ந்து பாடப்பட்டதுன்னு வதந்தி கிளப்புனாங்க. ஆனால் இதை மறுத்து தாகூரே 1939 மார்ச் 19 லே , கடிதம் எழுதி இருக்கார்.
- 2005ல் , தேசிய கீதத்தில் வரும் 'சிந்து ' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அது உள்ளடங்கியுள்ள 'காஷ்மீர்' என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- அடுத்து 2015ல் கொடி பிடித்தவர் ராஜஸ்தான் கவர்னர். 'அதிநாயக' என்ற வார்த்தைக்கு பதிலாக 'மங்கள்' என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்றார். அதற்கு அவர் சொன்ன காரணம், தாகூரே அதை 1939ல் மாற்றவேண்டும் என்று
- சமஸ்கிருத வங்காள மொழியிலே இருந்த அந்த பாட்டை மொழி பெயர்த்தது யாரு தெரியுமில்லே? கரெக்ட் சுபாஷ் சந்திர போஸ் தான்.
- இந்த தேசிய கீதத்தோட சரியான கால அளவு 52 நொடிகள் தான். 54 நொடிகள் கிடையாது.
- யாருக்கு தேசிய கீதம் இசைக்கப்படனும்னு கூட மரபு இருக்கு. ஜனாதிபதிக்கு தான். பிரதமருக்கு அல்ல, அதே போல எப்போது மக்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பாடணும்னு கூட விதி இருக்கு.
- சரி இந்த தேசிய கீதம் பாடுவது கட்டாயமா என்றால் அதுவும் கிடையாது. அது பாடப்படும்போது, மரியாதையாக எழுந்து நின்று அமைதியா நிற்கணும். அவ்வளவே. உடனே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ஏன் சிலர் உட்கார்ந்து இருந்தாங்கன்னு கேட்கக்கூடாது….
சரி …..கேள்விக்கு வருவோம்…..ஏன் நாம தேசிய கீதம் பாடனும்னு ஒரு முறை வந்தது?
இதை பத்தி நம்ம உச்ச நீதிமன்றம் என்ன சொல்லிச்சு பாருங்கள்.…………".மக்கள் தாங்கள் ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து, அதற்குரிய கீதத்திற்கும், கொடிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் "
சினிமா தியேட்]டர்களிலே படம் போடுறதுக்கு முன்னாடி இந்த தேசிய கீதத்தை பாடணும்னு ஒரு உத்தரவு மகாராஷ்டிரா சட்டசபை ௨௦௦3 ல் போட்டுச்சு. ஏன் நம்ம உயர்நீதிமன்றம் கூட இதே போல உத்தரவு போட்டுச்சு. இதுவாவது பரவாயில்லை. சினிமா ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போடணும்னு …நாமே தியேட்டர் போய் சேர லேட்டா ஆனாலும் கவலைப்படாம இருக்கலாம்.))::
ஆனால் அதுக்கு முன்னாடி 1960 களிலே சினிமா முடிஞ்சவுடனே தேசிய கீதம் இசைக்கப்படனும்னு உத்தரவு இருந்துச்சு…ஆனால் நம்ம ஆளுங்க படம் முடிஞ்சவுடனே, எழுந்து இடிச்சு தள்ளி ஓடுரதிலேயே குறியா இருந்ததாலே, தேசிய கீதம் இசைக்கப்பட்டாலும், அதை கண்டுக்கவே இல்லை. அதனால் அந்த பழக்கம் நிறுத்தப்பட்டது.
கடைசியா 2௦15 லே, மத்திய உள்துறை ஒரு உத்தரவு போட்டது….தனியா தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நின்னு மரியாதை செய்யனும். ஆனால், அதே ஒரு டாக்குமெண்டரி படத்தோட சேர்ந்து வந்தா, திடீருனே எழுந்து நிற்ரதுனால ஏற்படுற குழப்பத்தை ஏற்படுத்தி அது மரியாதையை கொடுக்றதை விட அவமரியாதை கொடுக்றதை தவிர்க்க, அது தேவையில்லைன்னு சொல்லி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சது.
இது சம்பதமா ஒரு பிரபலமான வழக்கு இந்நேரத்துக்கு எல்லாம் நமக்கு ஞாபகம் வந்திருக்கணுமே? கரெக்ட். அதேதான்.
தேசிய கீதத்தை பாடலைன்னு சொல்லி பள்ளி குழந்தைகள் மூணு பேரு கேரளாவிலே உள்ள அவங்க படிக்கிற பள்ளியாலே தண்டிக்கப் பட்டாங்க. அவங்க தேசிய கீதம் பாடும்போது, எழுந்து நின்னாங்களே தவிர, பாடமாட்டேனுட்டாங்க. அது தங்களோட மத உணர்வுகளுக்கு எதிரானதுன்னு சொல்லிட்டாங்க. அதுனால அந்த மூன்று மாணவர்களும் பள்ளியிலே இருந்து நீக்கப்பட்டாங்க. அதை எதிர்த்து தொடரப்பட்ட அந்த புகழ் பெற்ற கேசுலே நம்ம சுப்ரீம் கோர்ட்டு சொல்லுச்சு " யாரையும் தேசிய கீதம் பாடணும்னுனோ, அப்படி செய்ய மறுத்தா அது அவமரியாதைன்னு நம்ம சட்டம் கண்டிப்பா சொல்லல. சேர்ந்து பாடலைன்னாலும் பாடும்போது கூட சேர்ந்து எழுந்து நின்று, தன மரியாதையை காட்டினாலே போதும்"
உண்மைதாங்க. இப்ப இருக்கிற சட்டம் எதுவும் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்கவோ அல்லது பாடவோ மறுப்பதை தண்டிக்றது போல இல்லை. தேசிய மரியாதைகளுக்கு அவமரியாதை செய்வதை தடுக்கும் சட்டம்,1971 என்று ஒரு சட்டம் உள்ளது. அதன்படி, யாரும் ஜன கண மன பாடுவதை உள்நோக்கத்துடன் தடுத்தாலோ, இடைஞ்சல் எற்படுத்தினாலோ, அவ்வாறு பாடுவதற்கு கூடியுள்ள கூட்டத்தை தடுத்தாலோ, அவருக்கு மூன்று வருடம் வரை நீளக்கூடிய சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும் என்று மட்டும் தான் சொல்லுது..
ஆனால் தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்படாமல் அவரவர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்படுமாறு உச்ச நீதிமன்றம் சொல்லியும், அதே போல விதிகளும் அது குறித்து தெளிவில்லாமல் இருப்பதும் தான் உண்மை
கட்டுரை முடிஞ்சிருச்சுன்னுலாம் ஜன கண மன பாட வேணாம்……