எந்த நேரத்தில் இந்த வினா என் கண்ணில் பட்டதோ, அதே சமயம் விபத்துகள் அதிகரித்து வருவது அதுவும் அதில் குழந்தைகள் அதிசம் இறப்பது பற்றிய செய்தியும் கூடவே வந்துள்ளது.
2019ல் நடந்த சாலை விபத்துகளில் 1168 குழந்தைகள், அதாவது ஒரு நாளைக்கு 31 குழந்தை இறப்புகள் நடந்துள்ளனவாம். இது முந்தைய வருடத்தை விட 12 சதவீதம் அதிகம் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.
அப்படியென்றால் 2020ம் 2021ளில் ? கொரனா ஊரடங்கு வந்து விபத்தை தடுத்துள்ளது!!
கெட்டதிலும் ஒரு நல்லது பாருங்க!!
நாமே அதிகம் பார்த்திருக்கிறோம்..ஒரு இரண்டு சக்கர வாகனத்தில், கணவன் வண்டியோட்ட, மனைவி எந்தவித பாதுகாப்பு இல்லாமல் கைக்குழந்தையுடன் உட்கார்ந்திருக்கும் காட்சி
இதற்கு உடனடி தீர்வு காண வேண்டி, நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சரியான பாதுகாப்பு இல்லாமல் இப்படி வாகனத்தில் கூட்டி செல்பவருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது..
இதன்படி சரியான ஹெல்மெட் போடாமல் குழந்தையை வண்டியில் கூட்டி சென்றால்,ஆயிரம் ரூபாய் அபாராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதம் வரை சஸ்பெண்ட் செய்துவைப்பது போன்ற தண்டனைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இத்தனைக்கும் இந்த மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019லேயே வந்துவிட்டது. ஆனால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதும், அதிலும் குறிப்பாக குழந்தைகள் சிக்குவதும் அதிகமானதால் இந்த அவசர தேவையாக மத்திய அரசு மாதிரி விதிகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஏதாவது ஆட்சேபனை அல்லது யோசனை சொல்ல நினைப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கலாம்.குறித்த காலக்கெடுவுக்கு பிறகு , இந்த விதிகள் நாடு முழுதும் அமுல்படுத்தப்படும்..
உடனே வீட்டில் உள்ள குட்டீசுக்கும் ஹெல்மெட் வாங்கிடுங்க!!
ஒருவரின் வாழ்க்கை பற்றியே துல்லியமாக கணிக்க முடியும் போது, வாகன விபத்துக்களை ஜாதக ரீதியாக அறிய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும்.
ஜாதகத்தில் மறைவிட ஸ்தானங்கள் எனப்படும் 6,8,12 பாவங்களில் அதிகமான மோசமான தாக்கத்தை கொடுக்கக்கூடியது ஆறாம் பாவகம்.
எதெல்லாம் நமக்கு தேவையில்லையோ அதைக் கொடுக்கும்.நோய், விபத்து, கடன், எதிரி, வம்பு வழக்கு..இப்படி.
பொதுவாக எந்த லக்கினத்திற்கும் கடும் பகையான கிரகம் தான் ஆறாம் பாவகாதிபதியாக வருவார். அத்தோடு அவர் பாவக் கிரகங்களான செவ்வாய், சனி, இராகு ஆகியோரின் தொடர்பையும் பெற்றால் கேட்கவே வேண்டாம்..
இதில் ரிஷப லக்கினதாரர்கள் பாவம்..லக்கினாதிபதியே ஆறாம் பாவதிபதியாக வருவார்..தன் கையைக் கொண்டே தன் கண்ணை குத்திக்கொள்ளும் நிலைமை!!
இந்த விபத்தினால் ஆயுளே முடிவுக்கு வரக்கூடும் என்னும் நிலையில், எட்டாம் பாவம் என்னும் ஆயுள் ஸ்தானத்தின் அதிபதி நிலையையம் பார்க்க வேண்டும்.
அதே போல ஒவ்வொரு லக்கினத்திற்கும் மாரக, பாதக அதிபதிகளாக சில கிரகங்கள் வரும். இறப்போ அல்லது இறப்பிற்கு இணையான துன்பதை தருவது இந்த மாரகாதிபதிகள்..சர இராசிகளுக்கு 2,7, ஸ்திர இராசிகளுக்கு 3,8 மற்றும் உபசய இராசிகளுக்கு 7.11 பாவ அதிபதிகள் மாரக அதிபதிகளாக வருவர்.
"அய்யோ பாவம்" என்று மற்றவர் பரிதாபப்படும் அளவிற்கு பாதகம் செய்யக்கூடியவர் பாதகாதிபதி. சர இராசிக்கு 11 ஸ்திர இராசிக்கு 9, உபசய இராசிக்கு 7ம் பாவ அதிபதிகள், இந்த பணியை "சிறப்பாக" செய்வர்..
இவர்களை தவிர்த்து செவ்வாய் விபத்தை ஏற்படுத்துவார்.ஏன்?
செவ்வாய் குணமே முன்பின் யோசியாத வேகம் இல்லையா?
அதை தொடர்ந்து வரும் நோயை சனி கொடுப்பார்..
இவர்கள் எல்லாம் இணைவு/தொடர்பு பெறக் கூடிய தசாபுத்தி, அந்தரம் வருகிறதோ, அப்போது விபத்து நடப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் நடக்கும்.
அதே போல ஆறாம் பாவ அதிபதி பலமாக இருக்கிறாரா? நீச்சமாக இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டும்..
நீச்சமாக இருந்தால் நோய்,கடன், விபத்து, எதிரி இருக்காது. நல்லது..ஆனால் அவர் தரவேண்டிய நல்ல காரகத்துவங்களை தரமுடியாதே? நல்ல வேலை கிடைக்காது..நல்ல வேலைக்காரர்கள் கிடைக்க மாட்டார்கள்..
அதனால் நீச்சமானாலும் நீச்ச பங்கம் அடையவேண்டும்..அதே சமயம் நீச்ச பங்க ராஜயோகம் அடைந்து விட்டால் , அதிக சுபத்துவம் அடைந்துவிடுகிறாரே அ வர் ஆறாம் பாவ ஆதிபத்தியங்களை வலுவாக செய்யப்போகிறார் என்று அர்த்தம்.
அவர் எந்த வீட்டில் இருக்கிறார்? பகை வீட்டிலா நட்பு வீட்டிலா? . அவர் வலுவாக இருக்கிறாரா?..அதை பொறுத்தும் பலன் மாறும்.
அதை தவிற்க வேண்டுமானால், அவர், குரு, சுக்கிரன், வளர்பிறைச்சந்தரன், தனித்த புதன், போன்ற இயற்கை சுப கிரகங்களுடன் இணைந்தோ பார்வையிலோ இருந்து அவர் பாவ கிரகம் என்றால், சூட்சம வலுவும் பெறவேண்டும்.
அதே சமயம் குரு பார்வையால் கெட்டு போவதும் இங்கு தான். "குரு பார்த்தால் கோடி நன்மை" என்பார்களே என்கிறீர்களா?
ஆறாம் பாவத்தை பார்க்கும் குருவால், அந்த பாவத்தின் ஆதிபத்தியம் வலுப் பெறும். தானே?
ஆறாம் பாவாதிபதி பாவக்கிரகம் என்றால் சுபத்துவம் பெற்று சூட்சம வலுப்பெற்றாலும், தன் வீட்டைத் தானே பார்த்தாலும் கெடுக்கவே செய்வார்..
ஆனால் நோய், விபத்து, வம்பு வழக்கு ஏற்பட்டு, பின்னர் தீர்ப்பார்.
தசா புத்திகளில் சஷ்டாஸ்கமாக மாரக பாதகாதிபதிகள் தொடர்பு கொள்ளும் போது, விபத்துகள் ஏற்பட்டு இறப்புக்கு வழி வகுக்கும்
இதற்கு தான்ஜோதிடத்தில் "விதி, மதி கதி" என்பர்.
இங்கு பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உரியது ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் என்பது "விதி".அதை "மதி"யால் வெல்லலாம் என்பர்.அவ்வாறு வெல்வதற்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கும் என்பது தான் உண்மை.
ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஒன்றை மாற்றக்கூடிய சக்தி அந்த பரம்பொருளுக்கே உண்டு என்பதால் தான் அனைத்து கர்மாவிலிருந்தும் விடுபட அவனே "கதி" என்று சரண் புக சொல்லிக்கொடுத்தனர்.
எது மாற்றக் கூடியது?
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என்னுடைய ஜாதகத்தில் கோச்சாரப்படி இந்த நேரம் சரியில்லை என்றால், விபத்து ஏற்படுத்தக் கூடிய செயலில் இருந்து விலகி இருப்பது.
அதாவது சாலை விபத்துகள் ஏற்பட முக்கிட காரணங்கள் என்று உலகளாவில் அறியப்பட்ட காரணங்களை தவிர்த்தல்.
என்னென்ன?- வண்டியோட்டுபவராய் இருந்தால்
- போக்குவரத்து விதிகளை மீறுவது
- அதிக வேகம்.
- குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
- கவனச்சிதறல்கள்
- சிவப்பு விளக்கு இருந்தாலும் சட்டை செய்யாமல் தாண்டிப்போதல்
- சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகாரம்களைத் தவிர்த்தல்
- வாகனங்களுக்கு என வகுக்கப்பட்ட முறையான பாதையில் ஒட்டாமல் தவறான முறையில் முந்தி செல்வது
வண்டிகளில் ஸ்டியரிங், பிரேக் வேலை செய்யாமல் இருப்பது
டயர் வெடிப்பது
போதுமான வெளிச்சம் இல்லாமல் ஹெட் லைட் இருப்பது
அதிக எடை கொண்ட சரக்கு வண்டி
வெளியே பொருட்கள் நீட்டிக் கொண்டிருக்கும் சரக்கு வண்டி
- பாதசாரி என்றால்
- .கவனக்குறைவு
- கல்வியறிவு இல்லாததால், போக்குவரத்து விதிகள் தெரியாமல் இருத்தல், எங்கு சாலையை கடக்க கூடாதோ அங்கு சாலையை கடத்தல்,
பயணி என்றால்,
- "கரம் சிரம் வெளியே நீட்ட வேண்டாம் என்ற அறிவிப்பை மிதித்தல்!!
- வண்டியோட்டுபவரை கவனம் சிதற வைப்பது
- ஓடும் பஸ்ஸில் போய் ஏறுவது
- புட் போர்டில் தொங்கிக்கொண்டு பயணிப்பது, அல்லது இறங்குவது
இது போல நம்முடைய செயல்களில் உள்ள இந்த தவறுகளை திருத்திக்கொள்வது
அடுத்து, நம்மை ஆட்டுவிக்கும் கிரகங்களுக்கு செயயம் பரிகாரம் .
இந்த பரிகாரங்கள் பலன் தருமா ? என்ற சந்தேகம் இல்லையா? ஜோசியர்கள் பொய் சொல்லலாம்.ஆனால் ஜோதிடம் பொய் சொல்லாது.
ஜோதிடம் என்பது என்ன?
இந்த பிரபஞ்சத்தை இயக்கும் கோள்களும் நட்சத்திரங்களின் தாக்கம், நம் வாழ்வில் எந்த அளவிலான மாற்றத்தை கொடுக்கும் என்பதையம் தீய மாற்றம் ஏற்படும் என்றால், அதற்கான பரிகாரத்தை சொல்வதும் தானே?
மனிதனின் வாழ்வில் கோள்களின் ஆதிக்கத்தை நொடிக் கணக்காக கணித்து கொடுத்த மஹா ரிஷி பராசரர் கூட, பராசர ஹோரையிலும் பரிகாரம் செய்வது குறித்து சொல்லப்பட்டிருக்கிர்்அதே
இந்த கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் அதிபதிகளாக உள்ள கடவுள்களையும் அவற்றிற்கெண்றே உள்ள கோவில்கள் உள்ள தலங்களை குறிப்பிட்டு அங்கு சென்று செய்யும் பரிகாரங்களுக்கு அந்த வினையை மாற்றும் வல்லமை உண்டு என்பதால் தானே அவை சொல்லப்பட்டுள்ளன.?
எதற்காக பரிகாரங்கள் செய்யப்படுகிண்றன?
ஒவ்வொரு லக்கின, இராசிக்கும் யோகம் தர வேண்டிய கிரகங்கள் வலு குன்றி இருந்தாலோ, அல்லது நல்லது செய்ய முடியா சூழலில் இருக்கும்போது, இந்த கிரகங்கள், நட்சத்திரங்களின் குணம், சுவை, நிறம், வாகனம் ஸ்தலம் இராசி கல், ஆகியவற்றை குறிப்பிட்டு, அங்கு, அந்த வலு குறைந்த கிரகத்தின் வலுவை கூட்ட நாம் எடுக்கும் முயற்சி தானே பரிகாரம்.!!
ஆனால் அதே சமயம் அவயோக கிரகத்திற்கு அதை செய்தால் அதன் வலு கூடி, இன்னமும் அதிக கெடு பலன் கூடும்.
நவரத்தின மோதிரம் போடுவதும் நவக்கிரக கோயில்களுக்கு டூர் போவதும், இது போன்ற தவறே!!
ஆனால் வெறும் பரிகாரம் பலனளிக்குமா என்றால் "இல்லை " என்று தான் சொல்வேன்.
எதற்கு ஜாதகத்தை பாக்கிறோம்? .ஒரு துன்பம் வர இரூக்கிறது அல்லது வந்துவிட்டது.அதை நீக்க தஞ்சம் புக வேண்டியது அந்த பரம்பொருளிடம் . அனைத்தும் அவன் செயல் என்றும் சரணாகதி அடைந்து செய்யும் போது தான் முழு பலன் கிட்டும்.
ஆனால் எல்லா பரிகாரமும் விதியை மாற்றி விடுமா என்றால் இல்லை
.விதி என்றால் என்ன?
நடக்கப்போவது தெரியும் அதை தடுக்கும் ஆற்றலும் இருக்கும் ஆனாலும் தடுக்க முடியாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததும் பாதகாதிபதி தசை மாரகாதிபதி புத்தியில் தானே..கீழே விழுந்து அடிப்பட்டார் என்றார்கள்..
அவர் பார்க்காத ஜோதிடமா? அவர் செய்யாத பரிகாரமா? இருந்தும் அவரால் ஏன் தப்பிக்க முடியவில்லை?
வெஞ்சின விதியை வெல்ல வல்லாமோ?
மாற்ற முடியாதவையும் உண்டு.எது மாற்றக் கூடியது என்று உணர்ந்து கொண்டு, அதை மாற்ற முயல்வதும், எது மாற்ற முடியாததோ அதை ஏற்றுக்கொள்வதும் இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்யாசத்தை உணர்ந்துக்கொள்வதே ஞானம் என்று அதை அளிக்கும் வரத்தை இறைவனை கேட்பதே சரியான பிரார்த்தனை.
.