இந்த கேள்விக்கு பதில் தர பெண்கள் ஏன் சங்கோஜப் படவேண்டும்? எவ்வளோ பார்த்துட்டோம். இது என்ன பெரிய விஷயமா?😀
ஆங்…என்ன கேட்டீர்கள்? பாராட்டும்போது பதில் சொல்லாமல் அதை ஏற்கும் பெண்கள்.
ஏன் பாராட்டினால் ஆண்கள் மட்டும் ஏற்கமாட்டார்களா என்ன?…இந்தாங்க சார் உங்க பாராட்டை நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்றாங்களோ🤓அப்புறமும் எதுக்கு பாஸ் இந்த ஒப்பீடு😆
குற்றம் குறைகளை சொல்லும் போது மட்டும் குமுறி கொந்தளித்து விடுகிறார்களே, என்ன காரணம்?
புரியாத மாதிரியே கேட்கிறீர்களே… 😀
குற்றம் குறைகளை சொல்லும்போது…பெண்கள் மட்டும் கோபப்படுறாங்களா..
.ஆண்கள் எல்லாம் கவுதம புத்தர் மாதிரி அமைதியா இருக்காங்க..இல்லையா.😂🤣😃😄 புளுகுறதுக்கு ஒரு அளவு வேணாம்?!☺️
பிரச்னைகளை புத்திசாலித்தனமாக தீர்ப்பது, நடத்தை மற்றும் குணம் இதிலெல்லாம் ஆண் பெண் ரெண்டு பேரும் எதிரெதிர் துருவங்கள்ன்னு உங்களுக்கு தெரியாதா?
இதை இன்னிக்கி அறிவியலும் நிரூபிச்சிருக்கு.. நரம்பியல் விஞ்ஞானியான டேனியல் ஜி ஏமன் எழுதிய Unleash the power of the female brain என்ற புத்தகத்தில் ஆண், பெண் இருவருக்கும் சமமான அறிவு இருந்தாலும், இரண்டு பேரும் பிரச்னைகளை தீர்க்கவும், இலக்குகளை அடையவும் மூளையின் வெவ்வேறு பகுதிகளை பயன்படுத்துறாங்க என்பதால் அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாறுபாடுகளைப் பற்றி சொல்லியிருக்கார்.என்னன்னு கொஞ்சம் பார்ப்போமா?….
ஆண்,பெண் மூளை அடிப்படை மூளைக் கட்டமைப்பிலேயே வித்தியாசம் இல்லே வித்தியாசங்கள் இருக்குன்னு சொல்றாரு....
அதனாலே என்னவா? .
- ஆண்கள், பெரும்பாலும் தன் மூளையின் இடது அரைக்கோளத்தை மட்டும் தான் தகவலை செயலாக்குவதில் பயன்படுத்துறாங்களாம்..
என்ன காரணம்?
பெண் கருக்கள் 26 வது வார கால கட்டத்திலேயே, மூளையின் பிணைப்புகளான இடது மற்றும் வலது அரைக்கோளங்களை இணைக்கும் தடிமனான கார்பஸ் காலசோமை(Corpus callosum) உருவாக்கம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. ஆனா ஆண் கருக்களில் மிக தாமதமாகத்தான் இந்த உருவாக்கம் நடைபெறுகிறதுகிறதுனாலே. இந்த தாமதமான செயல்பாடு தான் ஆண்கள் இடது அரைக்கோளத்தை மட்டும் உபயோகிக்க காரணமாகிறது.
சே..பாவம்…😶 முளையிலேயே ..இல்லையில்லை மூளையிலேயே பிரச்சினையா?☺️
படிமப்புரவு கூகிள்
ஆனால்.பெண்கள் இரண்டு அரைக்கோளங்களையும் பயன்படுத்துறதுனாலே
- கில்லாடிகளாக விளங்குவதால் மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.
2. பெண்கள் மூளையின் Pre-frontal cortex பகுதியில் இருக்கும் செல்கள், தீர்ப்பு, திட்டமிடல் மற்றும் விழிப்புநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பணியைச் செய்கின்றன. இதனால்தான் அவர்கள் பயணத்திற்காக பேக்கிங் செய்வதிலும், ஒருபொருளை தேடும்போது சரியான இடத்தை கண்டுபிடிப்பதிலும்
கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.
- ஆணுக்கு தன்னுடைய பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியாது. பல நேரங்களில் தன்னுடைய பொருட்களை தொலைத்துவிட்டு தேடுபவர்களாக இருக்கிறார்கள்.
3. ஆண்களுக்கு, பெண்களைக்காட்டிலும் மிக மிருதுவான, மெல்லிய பரப்பு மண்டலம் மூளையில் இருப்பதாலேயே, அவர்களால், பொருட்களை முப்பரிணாம சுழற்சியில் கற்பனை செய்து பார்ப்பது சுலபமாக இருக்கிறது. அதனாலே , ஒரு இடத்திற்கு செல்லும் வழியை எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது. வழியை மறந்துவிட்டால், திசைகள் மற்றும் பயணத்தின் தூர அளவுகளை நினைவில் கொண்டுவந்து கண்டுபிடித்துவிடுவான்.
வீட்டிலே வச்ச பொருளை கண்டுபிடிக்க முடியாதாம். ஆனா?😂.
- ஆனால், பெண்கள் வழியை சுலபமாக மறந்துவிடுவார்கள். அந்த சாலையில் இருக்கும் கடைகள், மற்றும் பிற அடையாளங்களை நினைவில் வைத்துக் கொள்வாள்.
எப்படியோ கண்டுபிடிக்கிறோமில்லே?😂
4. சராசரியாக ஆண்களின் மூளை, பெண்களின் மூளையைவிட 10 % பெரியதாக இருக்கிறதாம். 😁 இதனால் தர்க்கரீதியாக சிந்திக்கக் கூடியவர்களாகவும் கணக்குப் பாடத்தில் ஆண்கள் கில்லாடிகளாகவும், இருக்குறாங்களாம்
கணக்குலே மக்கா இருக்கிறவங்களை எந்த கணக்கில் சேர்க்கிறது?😂
- பெண்கள் மொழியில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
5. புத்திசாலித்தனத்தை நிர்வகிக்கும் மூளையின் சிறுபகுதியில் ஆண்கள் அதிக சாம்பல் பொருளை (Grey matter) கொண்டுள்ளதால்,
- மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட தகவலைப்பற்றி மட்டும் செயலாற்ற முடிகிறது.அவர்கள் ஒரு பணியில் அல்லது வேலையில் ஆழமாக ஈடுபடும்போது, மற்றவர்களின் பேச்சையோ அல்லது சுற்றுப்புறத்தையோ கவனிப்பதில்லை.
- ஒருநேரத்தில், ஒரு செயலில் மட்டும்தான் அவர்களால் கவனம் செலுத்த முடியும். இதனால்தான் வில்வித்தை, Puzzle solving போன்ற கவனக்குவிப்புத்திறன் தேவைப்படும் விளையாட்டுகள், கணிதம் மற்றும் கடினமான வேலைகளை விரைவில் முடிப்பதில் ஆண்கள் திறமையாக இருக்கிறார்கள்.
- ஆண்கள் எந்த ஒரு விஷயத்தையும் சட்டென்று கிரகித்துக் கொண்டுவிடுவார்கள்.
அதே நேரத்தில், பெண்கள் மூளையின் பகுதியில் அதிக வெள்ளைப் பொருட்கள் (White matter) இருப்பது அவர்களது பன்முகத்தன்மையை அதிகரிக்கிறது.
- ஒரு விஷயத்தை 360 டிகிரி கோணங்களில் சிந்திக்கவும், ஒரே நேரத்தில் பலவிஷயங்களில் கவனம் செலுத்தவும் பெண்களால் முடிகிறது. ஒரே நேரத்தில் 2, 3 வேலையை முடிக்கச் சொல்லி ஆண்களிடம் கொடுத்தால், எரிச்சலாகி விடுவார்கள்.😂
- பெண்களின் மூளையில், ஆண்களை விட பெரிய ஹிப்போகாம்பஸ் மற்றும் ஆழ்ந்த லிம்பிக் அமைப்புகளைக் கொண்டுள்ள நிலை, அவர்களை உணர்ச்சிகரமான சூழலில் முழு ஆழத்தை உணர அனுமதிக்கிறது. இதனால்,
- மற்றவர்களின் துயரத்தை அனுபவிப்பவர்களாகவும், கோபமான நேரத்தில், அந்த கோபத்தை அழுகையாக வெளிப்படுத்துபவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்.
- துயரங்களை மனதில் பூட்டி, வெளியே சிரித்துக் கொண்டு இருப்பவர்கள் பெண்கள். தன்னுடைய தனிப்பட்ட பிரச்னைகளை வெளியே அவ்வளவாக சொல்ல மாட்டார்கள். ஆண்களுக்கு தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளியே கொட்டிவிட வேண்டும்.
- பெண்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படையாக காட்டுவார்கள். ஆண்களுக்கு பாசத்தை வெளியே காட்டத் தெரியாது.
- பெண்களுக்கே தனித்துவமாக இருக்கும் உள்ளுணர்வுக்கு பெண்ணின் மூளை கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டில் இருக்கும் சிறப்பான அம்சமே காரணம். இதனால் பிறர் நினைப்பதை நிமிடத்தில் கணித்து, அதற்கேற்ப விரைவான முடிவுகளை எடுக்க பெண்களால் முடியும்.
6. வலியை அனுபவிக்கும்போது ஆண்களுக்கு மூளையினுள் வலது Amygdla பகுதியும், பெண்களுக்கு இடது Amygdla பகுதியும் செயல்படுகிறது. இது மூளையின் உட்புற செயல்பாடுகளை மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருப்பதால், பெண்கள், ஆண்களை விட வலியை மிகவும் வலுவாக அனுபவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
7. ஆண்களின் மூளையில் செரட்டோனின் சுரப்பு பெண்களைவிட, அதிவேகமாக சுரக்கிறது. பெண்களுக்கு செரட்டோனின் சுரப்பு மெதுவாக இருப்பதால், எளிதில் மன அழுத்தம் அடைபவர்களாகவும், அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்குப் பின்னரான Post traumatic Disorder பிரச்னைக்கு அதிக அளவில் பாதிக்கப் படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
8. உணர்ச்சிகளுக்கு காரணமான மூளையின் பகுதி, ஆண்களைவிட பெண்களுக்கு பெரிதாக இருப்பது அவர்களுக்கு கூடுதல் நன்மை
செய்வதாய் இருக்கிறது. இதன் காரணமாக சிந்தனையில் இருக்கும் பெண்கள் மூளையின் வலது புறத்தில் மூழ்குவதால், உணர்ச்சிகரமானவர்கள் ஆகவும், உடல்மொழி, அடுத்தவர் பேச்சின் தொனி போன்றவற்றை எளிதில் அவர்கள் கிரகித்துக் கொள்வர்களாக இருக்கிறார்கள்
தொடர்ந்து எரிச்சல் உண்டு பண்ணுகிற விதத்தில் பேசினால்
மட்டுமே பெண் கோபமடைகிறாள் மிக ஆக்ரோஷமாக இருக்கும்போது வாய்மொழி தாக்குதல் நடத்துபவர்களாகவும், இருக்கிறார்கள்.
அதுவே, ஆண் சிறு விஷயத்திற்கும் ஆக்ரோஷமடைந்து, எதிரில் இருப்பவர்களை தாக்கிவிடுகிறான். தனக்கு பிடிக்காத விஷயத்தை கேட்டாலோ, பார்த்தாலோ உடனே ஆணுக்கு கோபம் வந்துவிடும். .உடல்ரீதியான தாக்குதல் நடத்துபவர்களாகவும் இருப்பதை இருபாலரின் மூளை ஸ்கேன் ரிப்போர்ட் உறுதிப்படுத்துகிறது!
ஆண்கள் அப்படி இருக்குறாங்கங்கிறதுக்கு அவங்க எக்ஸ்_ரே ரிப்போர்ட் சொல்லுமே🤣.
9. ஆண், பெண் இருபாலருக்கும் இறுக்கமான நிகழ்வுகளில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் வெளிப்பட்டாலும், பெண்ணிடம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆக்ஸிடோசினுடன் இணைந்து, எளிதில் அமைதிப்படுத்தி விடுகிறது. ஆனால், ஆணில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரோன் ஆணை மேலும் ஆக்ரோஷமடையச் செய்துவிடுகிறது. இதனால் இறுக்கமான சந்தர்ப்பங்களை கையாள்வதில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.
10. உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்னையில் பெண்களைப் பொருத்தவரையில் சின்ன விஷயமும் பெரிதாகத் தெரியும். ஆண்களுக்கோ, பூதாகரமான பிரச்னையாக இருந்தாலும் மிகச்சாதாரணமாகத் தெரியும்.
11. பெண்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க மாட்டார்கள். ஆண்கள் இதற்கு நேரெதிர்.
12. பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய விலையுயர்ந்த ஆடைகளையோ, நகைகள் மற்ற பிற பொருட்களையோ, தன் உயிர்த்தோழியாக இருந்தாலும் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். ஆண்களுக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை.
13. தாங்கள் செய்யும் செலவுகளை கணக்கு வைத்துக் கொள்வதிலும், மற்றவர்களுக்குத் தெரியாமல் சேமித்து வைப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். பெரும்பாலான ஆண்கள் கணக்குப் பார்க்காமல் செலவு செய்பவர்களாகவும், சேமிக்கத் தெரியாமல் கடன் வாங்குபவர்களாகவும்தான் இருப்பார்கள்.
அதனாலே தான் மனைவி ஒரு மதி மந்திரின்னு சொல்லியிருக்காங்க!!☺️
14. ஆண்கள் தன்னுடைய இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மறந்துவிடுவார்கள். திருமணமான ஆண்கள்கூட, மனைவி சொன்னால்தான் வீட்டு வேலைகளை செய்வார்கள். தானாக எந்த வேலையையும் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு தோன்றாது.
15. பெண்களால் எந்த ஒரு தகவலையும் ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி பார்க்க முடியும். ஒவ்வொரு விஷயத்தையுமே விரிவாக அலசி ஆராய்கிறார்கள்.
- அதனால் பிறந்தவீட்டு பந்தங்கள் மட்டுமல்ல புகுந்தவீட்டு சொந்தங்களின் பிறந்தநாள், மணநாள் போன்ற முக்கிய நாட்களையும், சின்னச்சின்ன நிகழ்வுகளையும் அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது.
16. பெண்கள் பெரும்பாலும், ‘அறிமுகம்-விவரம்-முடிவு’ என்ற வடிவத்தில்தான் பேச்சைத் தொடங்குவார்கள். குறிப்பிட்ட தலைப்பைப்பற்றி, பேசுவதற்குமுன் அதற்கான தளத்தை அமைத்துக் கொண்டு தான் பேசவே ஆரம்பிப்பார்கள்.
17. தனியாக இருக்கும் பெண்ணை பார்ப்பது அரிது. எப்போதும் தன்னுடன் யாராவது இருக்க வேண்டும். ஆண்களுக்கு கூட்டாளியெல்லாம் தேவையில்லை.
18. தனியே இருக்கும் ஒரு ஆணால் ஒரு மணிநேரம் வரைகூட எந்தவித சிந்தனையும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க முடியும். ஆனால், பெண்ணுக்கோ ஒரு நொடியில் கோடிக்கணக்கான சிந்தனைகள் அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும
19. பெண்ணால் வண்ணங்களை மிகத் துல்லியமாக பிரித்துப் பார்க்க முடியும். அதனால்தான் ஆடை தேர்வு செய்யும்போது, பெண் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாள். ஆண்களுக்கு பொதுவான வண்ணங்கள் மட்டுமே தெரியும்.
20. கடைசியா. பெண்கள் எடுக்கும் முடிவு பெரும்பான்மையா உணர்வு சார்ந்ததாக இருக்கும். ஆனால், ஒரு ஆண் எடுக்கும் முடிவு தர்க்கரீதியில் இருக்கும்.
இப்ப சொல்லுங்க யாரின் குற்றம் குறைகளை யார் எடுத்து சொல்வது?🤣 😂
படித்தமைக்கு நன்றி..
ஸ்ரீஜா.