வெள்ளி, 3 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 18...நமது ராசி நட்சத்திரங்களை ஒருவர் தெரிந்து கொண்டு நமக்கு தீங்கு விளைவிக்க ஏதேனும் வழிகள் உள்ளனவா? (தெரிந்து கொண்டவர் ஒரு பிராமணர்)

 

நமது ராசி நட்சத்திரங்களை ஒருவர் தெரிந்து கொண்டு நமக்கு தீங்கு விளைவிக்க ஏதேனும் வழிகள் உள்ளனவா? (தெரிந்து கொண்டவர் ஒரு பிராமணர்)

கோவிலுக்கு போகிறோம்.நம்முடைய பெயர் இராசி, நட்சத்திரம் எல்லோர் முன்னிலையிலும் தான் கோவில் ஐயர் கேட்கிறார்..நாம் சொல்லத் தானே செய்கிறோம்?

அத்தோடு இராசி நட்சத்திரத்தை விடவும் இலக்கினம் தான் வலிமையானது..அது தான் ஒருவரின் குணத்தை, செயல், நடத்தையை பற்றி சொல்லக்கூடியது. அது மட்டுமல்ல அந்த லக்கினத்தில் உள்ள கிரகங்களும், கூடவே வர்கோத்தமம் அடைந்த கிரகங்களும் அவரின் குனைத்தை நிர்ணயிக்கும்.

பொதுவாக வானவியல் சாஸ்திரம் தெரிந்த ஒருவர் இன்னொருவரிடம் அவர் இராசி, நட்சத்திரம் கேட்பது இயல்பானது தான். அதை கொண்டு அன்னாரின் குணாதிசயங்கள் தெரிந்துக் கொள்ளத் தான்

.நம்மை அடிக்கடி பார்க்கக்கூடிய நிலையில் உள்ள ஒருவர் தான் இதை தெரிந்து கொள்ள நினைப்பார்..ஏன்?

அவரின் குணத்தோடு இவர் ஒத்துப்போக கூடியவரா? இல்லை ஒதுங்கி இருந்துக் கொள்ளலாமா என்ற எண்ணத்திலேயே இருக்கும்.

அதனால் கவலை விடுங்கள். அப்படியே ஒருவர் நமக்கு கெடுதல் செய்ய எண்ணினாலும், நம் எண்ணங்கள் பாசிட்டிவாக இருக்கும்போது, நமக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. அதனால் தான் நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

இன்னொருவரின் எண்ணங்களை கவர்ந்து, தன் விருப்பப்படி செயல் பட வைக்கும் ஹிப்னாடிசம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்களே? ஆனால் தன் நேர்மறை எண்ணங்கள் வலுப்பெற்ற ஒருவரை அதன் மூலமாக ஒன்றும் செய்ய முடியாது.

பொதுவாக இரண்டு புருவங்களின் மத்தியில் தான் வெளிப்புற எதிர்மறை க்தி உடலினுள் நுழையும் இடம் என்பதால் தான் திருமணம் ஆன பெண்கள், தங்களை அந்நியரின் எதிர்மறை எண்ணங்களுக்கு ஆளாக இடமளிக்க கூடாது என்ற எண்ணத்தில் அங்கு குங்குமம் வைத்து மறைக்க செய்வதை ஒரு பழக்கமாக செய்ய வைத்தனர்...இதன் உட்பொருள் புரிந்த ஆடவரும் அதே போல குங்குமம் இட்டுக்கொள்தை பார்க்கலாம்.. தெரியாதவர் தான் ஸ்டிக்கர் பொட்டு நாடுகிறார்கள்.

இன்னொருவர் நமக்கு தீங்கு செய்ய நினைத்தாலும், அதை கோள்சாரப்படி நம் வினை மூலமே நிறைவேற்ற முடியும்..

அதனால் தான் "தீதும் நன்றும்.பிறர் தர வாரா" என்றார்கள்.

அதை நாம் நம் நேர்மறையான எண்ணங்களால் தடுக்கும் போது, "கெடுவான் கேடு நினைப்பான்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக