ஜோதிடத்தின் ஜோதி 22 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடத்தின் ஜோதி 22 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 22...குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை ஜாதக ரீதியாக கண்டுபிடிப்பது எப்படி?

 

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை ஜாதக ரீதியாக கண்டுபிடிப்பது எப்படி?

இப்போதெல்லாம் குடிக்கு அடிமையானவர்கள் ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் உள்ளது.

டாஸ்மாக் முன்னால் கிடப்பவர்களை விட இது போல சோஷியல் ட்ரிங்கிங் என்று வார இறுதியில் இவர்கள் அடிக்கும் கொட்டம் சொல்லிமாளாது!!

போன புத்தாண்டு நள்ளிரவு கொண்டாடத்திற்கு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு போயிருந்தோம். அங்கு கூட்டம் கூட்டமாக ஆண் பெண் வித்யாசம் இன்றி இவர்கள் அடித்த லூட்டிகள் இருக்கே..சொல்லிமாளாது! எல்லாம் ஐ.டி.உபயம்..அப்படி தான் இருக்கும்.

இத்தனைக்கும் இவர்களில் நிறைய பேர் திருமணம் ஆனவர்கள்!!

சாதாரண சமயத்தில், இது போன்று குடி பழக்கத்திற்கு அடிமையானவரை கண்டுபிடிக்க முடியாது..ஏனெனில், இவர்கள் வளையம் அப்படிப்பட்டோரையே கொண்டிருக்கும்.. கமுக்கமாக செயல்படுவாரகள்.

"க்ளாஸ்மேட்டை" விட இந்த "கிளாஸ் மேட்" ரொம்ப திக் பிரெண்ட்ஸ் ஆக இருப்பார்கள்..

அந்த பழக்கம் இல்லாதவரை உளளே சேர்த்து கொள்ள மாட்டார்கள்..இவர்கள் மதுவால் மதி மயங்கும் நேரம் கொட்டும் ரகசியம் எல்லாம் வெளியே போய் விடுமே!

ஆனால் இவர்களை வெளியே காட்டிக்கொடுக்கும் ஒருவரும் இருக்கிறார்.அவர் தான் இவர்கள் ஜாதகதத்தில் இருக்கும் இராகு!

இராகுவை போகக்காரகன் என்றே சொல்கிறார்கள். இந்த உலகின் வாழ்வியல் இன்பங்களை அனுபவிக்க தூண்டுபவர். சனியோ கர்மகாரகன்.. வெளியே சொல்ல முடியாத போதையோடு தொடர்புடையவன்.

லக்கினம், லக்கினாதிபதி அல்லது சூரியன சந்திரனுடன் சனி இராகு, சேர்க்கை அல்லது பார்வை இருந்தாலோ இந்த குடி போதை மீது விருப்பு உண்டாகும். அந்த கிரகங்களின் தசா காலத்தில் இந்த போதையின் ஆக்கிரமிப்பு அதிகமிருப்பதை காணலாம். இராகு மற்றும் சனியின் தசா காலங்கள் மிக நீண்டவை என்பதால், அது அந்த மனிதனின் வாழக்கையையே தடம் புரட்டி போட்டு விடுகிறது.

பாபத்துவமான இராகு கெடுக்க நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது என்பர். அவருடன் பாபத்துவமான சனி மற்றும் சுக்கிரன் ஆகியோரின் இணைவு மற்றும் பார்வை போதும் அந்த மனிதனை போதையில் திளைத்து இருத்தி வைக்க.

இதை அவரின் ஜாதகத்தின் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்பதால், " வரு முன் காப்போம்" என்பது போல அதை தவிர்த்து விடுவது நலம்..