செவ்வாய், 19 அக்டோபர், 2021

மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?

 

  1. நாம் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கியேறியப்பட்டோம் என்ற உணர்வு தான் உலகத்திலேயே கொடுமையான உணர்வு.
  2. நாம் உண்மையாக அன்பு செலுத்தும் ஒருவரிடம் வெகு நாட்கள் கோபத்துடன் இருக்க முடியாது.
  3. ஒருவர் மீது நம் கோபம் மூன்று நாட்களுக்கு மேல்தொடருமானால், அவர் மீது நமக்கு உண்மையான அன்பு இல்லை என்று அர்த்தம்.
  4. பொதுவாக எல்லோரிடமும் நன்றாக பழகுபவரே அதிக மனக் காயம் அடைகிறார்.
  5. ஒருவர் நம்மிடம் பொய் சொல்கிறார் என்று நம்பினால், நாம் ஒன்றுமே சொல்லாத தேவையில்லை. அவரே அதற்கான காரணங்களை பட்டியலிடுவார்.
  6. நமக்கு தெரிந்த ஒரு அறிவுரையை ஒருவர் சொல்லும்போது, எனக்குத் தெரியும் என்று சொல்லாமல் உண்மைதான் என்பது நாகரீகமானது.
  7. மனித மனது ஞாபகங்களை அசை போட்டுக்கொண்டு இருப்பதால் தான் அது உயிர்ப்புடன் இருக்கிறது.
  8. வாதிடும் நபர் பெரும்பாலும் தன் கட்டுப்பாட்டை இழந்து கத்தவே செய்வார்.பதிலுக்கு கத்துவது தான் மனித இயல்பு. அதை செய்ய வேண்டாம்.அமைதி காத்து மெதுவாக பதில் கொடுப்பதே வெற்றி கொடுக்கும்.
  9. எப்போதும் நம் உள்ளுனர்வு சரியாக தான் இருக்கும். ஏதோ இருக்கிறது என்று அது சொன்னால், கண்டிப்பாக ஏதோ இருக்கும்.
  10. கோபம், ஏமாற்றம், இப்படி நம் உணர்வுகளுக்கு ஞாபகம் என்னும் தீனியை போட்டுக்கொண்டு இருப்பதால் தான் , அதை விட்டு நம்மால் விலக முடியவில்லை.
  11. நம் நடத்தை மற்றும் தோற்றத்திலும் மற்றவர்கள் கவனிக்கும் அளவை விட அவர்கள் அவ்வாறு கவனிப்பதாக நாம் தான் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
  12. யாரேனும் நீங்கள் மாறி விட்டிர்கள் என்றால், அவர்கள் எதிர்பார்த்தது போல நீங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்பதற்கான 95% வாய்ப்பு உள்ளது.
  13. சோகப் பாடல்களை கேட்பது, தான் புரிந்துக் கொள்ளப்பட்டோம் என்ற நேர்மறையான எண்ணத்தை கொடுக்கும்.
  14. நம்முடன் சேர்ந்து வம்பு பேசுபவர் நம்மைப் பற்றியும் வம்பளப்பார் என்பதை மனதில் இருத்தவும்.
  15. அமைதியான நபரே உரத்த சிந்தனை கொண்டவராக இருப்பார்.
  16. தூங்கிக்கொண்டிருக்கும் போது கூட, மனித மூளை தன்னை சுற்றி பேசப்படும் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.
  17. எதிலும் ஒழுங்கு எதிர்ப்பாரப்பவர்கள், தன்னை அதனால் வருத்தி கொள்வதால், அதிக மன உளைச்சலுக்கு உள்ளாவர்.
  18. வாரம் ஒரு நாள், சோம்பேறித்தனமானதாக கொள்ளும்போது, ஸ்ட்ரெஸ், அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம்
  19. இன்டெர்வியூவுக்கு போபவர்கள் கவனிக்க…நீங்கள் அந்த அறையில் இருக்கும் அனைவரும் நம்மை விரும்புபவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைவது, தன்னபிக்கையை கூட்டும்.
  20. அதே போல சிகப்பு நிற ஆடை அணிபவர்களிடம் நாம் அதிகம் ஈர்க்கப்படுவோம்
  21. கடைசியாக முக்கியமான ஒன்று……ஒரு பேச்சு வார்த்தை நடக்கும்போது, ஒருவர் நம்மை 60% கண்ணோடு கண் நோக்கினால், …அவர் அலுப்படைந்து இருக்கிறார் என்று அர்த்தம்…. 80% என்றால்…..நம் பால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பது பொருள்.100% என்றால்……………..…நம்மை அவர் மிரட்டுகிறார் என்று தான் பொருள்.!!☺️

திருத்தம்

இந்த பதிவுக்கு கிடைத்த பார்வைகளை ஆதரவைப் பார்த்த பிறகு இதனோடு சில பின்னூட்டங்களை சேர்க்க தோன்றியது.

.எப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான சமயத்தில் செயல்படுவது என்று பார்ப்போம்…

  1. முதலில் சூழ்நிலையை படிப்போம்.
  2. பிறகு, நம்முடைய உணர்வுகளை சூழ்நிலையில் இருந்து பிரித்துக் பார்ப்போம்.இப்போது அந்த புரிதலோடு நம்மால் நன்றாக செயல்பட முடியும்.
  3. எது சொல்வதற்கு சரியான வார்த்தை, எது இல்லை என்று இப்போது உணர முடியும்.
  4. அதற்கு முன் நம் உள்ளுணர்வு சொல்வதை கேட்போம்.அது கிரீன் சிக்னல் காட்டினால் தொடரலாம்.இல்லை என்றால் அது நமக்கு வேண்டாம்.ஒருவர் நம்மை அவமானப்படுத்துவது போல உணர்கிறோமா? உண்மை அது தான்...ஒருவருடன் பாதுகாப்பு உணர்வு பெறுகிறோமா? அவர் நம்பத் தகுந்தவர் தான்.ஒருவருடைய ஆளுமைத் தன்மையையும் அவர் எதிர்செயல் ஆற்றுவதை மட்டுமே பார்க்க வேண்டாம்.நம்முள் உள்ள உள்ளுணர்வு என்னவிதமான சக்தியை , அது நேரிடையா அல்லது எதிரிடையா…எதைக் கொடுக்கிறது என்று பார்ப்போம்.என்றுமே நம் உள்ளுணர்வு…பொய்யே சொல்லாது…நம்புவோம் அதை மட்டுமே!!
  5. நம்மை சுய ஒழுங்குபடுத்தி கொள்வோம். அது நம்மை தீவிரமாக சிந்திக்க உதவும்.
  6. பச்சாதாபம் ரொம்ப பொல்லாதது..அதற்கு வேலி போடுவோம்.
  7. மற்றவர்களை காது கொடுத்து கேட்பது மட்டுமே, அவர்களின் மனம் திறந்து பேச வைப்பது.இந்தக் கலையை பயிலுவோம்!!
  8. நம் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டாம். அது எப்படி வெளியேறுகிறதோ அப்படியே இருக்கட்டும்.அவற்றை வெளியேற்றும் வழிமுறைகள் பற்றி மட்டும் பயிலுவோம்!!
  9. தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ள உணர்வுகளைக் கட்டுப்படுத்துபவர்கள் பகுத்தறிவு தொலைத்தவர்கள் ஆகிறார்கள்.அவர்கள் மற்றவரால் ஒதுக்கப்படுவார்கள்.
  10. இப்படி நம் உணர்வுகள் எங்கு எப்படி அடிவாங்குகிறது, சீறுகிறது. என்று ஆராயும்போது, அதை நமக்கு பயன் தரும் விதத்தில் மாற்ற முடியும். அப்படி செய்வோமேயானால் . நம் உணர்வுகளை எங்கு எப்போது வெளிப்படுத்தலாம் என்பதையும் அறிந்துக்கொள்வோம். அப்போது மட்டுமே அதை வெளிப்படுத்த ரிசர்வ் செய்து வைப்போம்…

இதில் நாம் ஜெயிக்கும் போது, நாமே சூப்பர் எமோஷனல் இண்டெலிஜெண்ட்ஆவோம்..

நாமே நம்முடைய புது அவதாரத்தை பார்ப்போம்!!

பார்க்கலாம் தானே?!👍👍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக