கிரிக்கெட் என்று வரும் போது, நம் ஆட்கள் காட்டும் வெறித்தனமான இரசனை இருக்கே..சொல்லி மாளாது!!
ஸ்கோர் தெரியாதவர் விரோதி போல தெரிவர்!!.😀
சாதாரணமாகவே எனக்கு விளையாட்டு போட்டிகளை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் கிடையாது..
நான் பெர்னாட்ஷாவின் கட்சி. ."பதினோரு முட்டாள்கள் விளையாட பதினோரு நூறு முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு" என்பார்..😃
நன்றி கூகிள்
.ஆனால் இப்போதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டின் சிறப்பு எனக்கு தெரிந்து விட்டது..என்னை கேட்டால் எல்லோரும் அதை கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
என்ன..அப்படி பிளேட்டை மாற்றி போடுறேன்னு பார்கிறீங்களா.
உண்மை தான்
கிரிக்கெட் கற்று கொடுக்கும் வாழ்க்கை பாடம் அது!!
இதை சொல்லிக்கொடுத்தவர் சொல்வேந்தர் சுகி சிவம் அய்யா அவர்கள் தான் !!
1.ஒருத்தர் பந்து போட வர்றார்..இன்னொருத்தர் பேட்டிங் பண்ண வர்றார்..எல்லாம் சரி..அதுக்கு எதுக்கு கூட பத்து பேர்?
ஏன்னா…உன்னை தோற்கடிக்கணும்னே ஒரு கூட்டம் இருக்கும்!!
2. சரி .அவங்க விளையாடுறங்க...இதை வேடிக்கை பார்க்க இத்தனை லட்சம் பேர் எதுக்கு? அதுவும் அவுட்டானாலும் கத்துறது..ஃபோர், சிக்சர்னாலும் கத்தல்..😀
இதுலே தெரிஞ்சுக்க வேண்டுயது…வாழ்க்கையிலே நீ ஜெயிச்சாலும் சரி தோற்றாலும் சரி..கூட்டமா விமர்சனம் இருந்துக்கிட்டே இருக்கும்.
3. அடுத்து இவர் கூட விளையாடிக்கிட்டு இருக்காரே இன்னொரு பேட்ஸ்மன்..அவரு எப்போ ஓடக் கூடாதோ,, அப்ப ஓடி போய்..தான் போய் சரியான இடத்தில் நின்னுக்கிட்டு நாம "அவுட்"ஆக காரணமாயிடுவார்..😆
.பாடம்….: எதிரியை விட நம் கூட இருக்கிறவர் கிட்டே தான் கவனமா இருக்கணும்.!!
4.ஒவ்வொரு பந்தையும் விளையாடுபவர் அவுட்டாக போட்டாலும், அதை வைத்து தான் ஃபோர், சிக்ஸர் எடுக்கிறாங்க.
வாழ்க்கையிலும் நமக்கு வர்ற சந்தர்ப்பங்கள் தான் நம்மை கீழ் தள்ளவும் செய்யும். சாதிக்கவும் வைக்கும். நம்மை வீழ்த்த வருவதைக் கொண்டு தான் நாம் ஜெயிக்கணும்.😃
5.பேட்டிங் பண்ணியவுடன் கூட்டமே அவுட்ன்னு கத்தும்..ஆனால் கடைசியில் அம்பையர் சொல்வது தானே இறுதியாகிறது!!
இப்போது சொல்லுங்கள்..கிரிக்கெட் விளையாட்டு சிறப்பானதா இல்லையா?!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக