சனி, 29 மே, 2021

மனிதனுக்கு உள்ள ஐந்து விரல்களின் பயன்கள் என்னவென்று கூறமுடியுமா?

 ஒரு நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு..திடீரென்று என் விரல் நகம் பட்டுப் போக ஆரம்பித்தது.என்ன ஆனதென்றே தெரியாது.முழுதுமாக நகமே இல்லாமல் போனது..சோதனை மேல் சோதனையாக…அடுத்து இருந்த விரல்களுக்கும் அதே நிலை.பத்து விரல்களிலும் நகம் இல்லாமல் .நினைத்து பாருங்கள்..

கொடுமையான காலம் அது. .

கீழே ஒரு பேப்பர் விழுந்தால் கூட எடுக்க முடியாது.அதுவாவது பரவாயில்லை.. யார் முன்னிலையிலும் கைகளை தெரியும்படி காட்டிவிட முடியாது..பரிதாபம் காட்டும் முகத்தோற்றம், உச்சு கொட்டுதல், விளக்கம் கேட்பது எண்ற போர்வையில் வரும் கேள்வி அம்புகள்…நொந்து போன தருணம் அது.

அதன் பிறகு பட்டுப்போன நகங்கள் புதிதாக முளைத்து, ..

வெறும் நகம் தானே என்றில்லாமல், இப்போது அவற்றை ஆசை ஆசையாக பார்த்துக்கொள்கிறேன்.😀

ஏன் சொல்கிறேன் என்றால் , ஒன்றின் இழப்பின் போதே அதன் அருமை தெரிகிறது!!

விரல் மட்டுமல்ல விரலின் நகமும் பயனுள்ளது என்பதையும் தெரிந்துக்கொள்வோம்!!

இதோ இந்த விரல்களையே எடுத்து கொள்ளுங்களேன்..

ஆண்களை விட பெண்களின் விரல்கள் மிகவும் அழகானது..ஒரு காய்கறிக்கே அதன் பெயர் வைக்கும் அளவிற்கு..😀

உங்களுக்கு தெரியுமா கைரேகை சாஸ்திரப்படி,

பொதுவாக இந்த நான்கு விரல்களும் சற்று நீளமானவையாக இருந்தால்,

அந்த விரல்களுக்கு உடையவர்

  • நல்ல பொறுமைசாலியாக இருப்பார்..
  • தூய்மையான பழக்கம் கொண்டவர்.
  • எதையும் பதற்றம் இன்றி நிதானமாக செயல்படுபவர்
  • அதனால் நீண்ட காலம் உயிர் வாழக்கூடியவர்
  • எதையும் நுணுக்கமாக கவனிப்பவர்
  • முன்னெச்சரிகையுடன், எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்.
  • தனிமை விரும்பி
  • லேட்டானாலும் லேடஸ்ட்டா செய்யனும்னு நினைக்கிறவர்
  • கடமை கண்ணியம், அப்புறம் அந்த இன்னொன்னு என்ன…ஆங்..அதென்ன …கட்டுப்பாடு (..அதையும் சேர்த்துக்கோங்கா).கொண்டவர்கள்
  • பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பவர்
  • தோல்வியுற்றவருக்கு பரிவு காட்டுபவர்.
  1. செக் பண்ணி பாருங்க.கரெக்ட்டா பொருந்தும்..ஏன் சொல்றேன்னா..எனக்கு பொருந்துதே...🤣 

ஒவ்வொரு விரலுக்கும் ஒரு பெயர் உள்ளதே…முதலில் கட்டை விரல் என்னும் பெருவிரல்..அதை அடுத்து ஆட்காட்டி விரல் என்னும் சுட்டு விரல், நடு விரல், அதை அடுத்து மோதிர விரல், அடுத்து சுண்டு விரல் எனப்படும் சிறு விரல்..இவை தான் அந்த ஐந்து விரல்கள்..

ஆனால் கை ரேகை சாஸ்திரத்தில், இந்த சுட்டு விரல் எனப்படும் "குரு"விரல் நடு விரல் எனப்படும் "சனி"விரல் அல்லது 'பாம்பு" விரல், "சூரிய" விரல் என்னும் மோதிர விரல், "புதன்" விரல் என்னும் சுண்டு விரல் ஆகியவற்றின் தன்மை கொண்டே ஒருவரின் குணநலன்கள், எதிர்காலம் குறித்தும் கணிக்கலாம்..

உதாரணமாக இந்த குரு விரல், சூரிய விரலை காட்டிலும் நீளமாக இருந்தால், அவர் தன்மானம் உள்ளவர், ஒழுக்க சீலர், எவ்வளவு பெரிய பொறுப்பையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக்கொள்பவர்,.

அதேபோல சனிவிரல் , மற்ற விரல்களை விட சற்று நீளமாக இருக்கும். அதை விட கூடுதலாக இருந்தால், அவர் தன் நலன் பெரிதும் பார்ப்பவராக இருப்பார்.

இதே போல் ஒவ்வொரு விரலும், அதன் அங்குலாஸ்திகளும் அவர் வரலாறையே சொல்லக்கூடியவை.

இந்த விரல்கள் ஒவ்வொன்றின் பயனும் தனித்தன்மையானது…கட்டை விரலை பற்றி தனி கட்டுரையே எழுதலாம்..

அதனால இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்…நண்பர்களே..😁

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக